Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😍பகுதி 21😍

தாராவோட வீட்ல எல்லாரும் சீக்கரம் ரெடி ஆகி 8மணிக்கே மலை மேல இருக்க முருகார் கோயில்ல வெயிட் பண்ணீட்டு இருந்தாங்க தாரா மனசுல பயத்த தவர வேற எதுமே இல்ல காதலுச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்க போறன்னு சந்தோச பட்றதா இல்ல அவன் கோவத்துல வெறுத்துறுவான்னு பயப்பட்றதா இல்ல இந்த கல்யாணத்துநால கயல்நால எதாவ்து பிரட்சண வருனு அழுகறதானு கொழப்பத்துல இருந்தா, ஆனா இன்னைக்கு கண்ணன பாக்க போறோம் ஒரு சின்ன சந்தோசம் மட்டு இருந்துது.

கண்ணனுக்கு மனசுமுழுக்க காதல் இருந்தாலு "அவ என்ன பிடிக்காமதா என்ன விட்டுட்டு போய்ட்ட அவள கட்டாய படுத்திதா இந்த கல்யாணம் நடக்க போகுது.என்மேல கொஞ்சம்கூட காதல் இல்ல அவளுக்கு,👿 அப்டி காதல் இருந்தா என்ன விட்டு போயிருக்க மாட்டா, இந்த கல்யாணத்த எப்டியாவ்து நிறுத்தனு. தாராவோட அப்பா,அம்மா கிட்ட போய் உங்க பொன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிறலாம்" நெனச்சுட்டு போறா. அங்க கோயில்ல...

கொஞ்சம்கூட கூட்டம் இல்லாம ரொம்ப அமைதியா அழகா ஏற்பாடு நடந்துட்டு இருக்கு.மாப்ல வீட்டு ஆளுக வந்ததும் மாப்பிளை அழைப்புகு ராம்,கார்த்தி(அத்த பையன்தா ஆனாலும் தாராக்கு நான்தா தம்பி மொறைக்கு சீர் பண்ணுவனு அடம்பிடுச்சு பண்றா) சகோதரன் மொறைக்கு சீர் பண்றாங்க.

மாப்பிளை அழைப்பு முடுஞ்சு நேரா மணவறைக்கு கண்ணன கூப்டு போறாங்க அப்போ கண்ணன் கிருஷ்ணராசு கிட்ட

கண்ணன்: மாமா உங்க கிட்ட கொஞ்ச பேசனு.
கண்ணன் மாமானு உரிமையா கூப்டது கிருஷ்ணராசுக்கு மனசு ரொம்ப சந்தோசம் ஆகிருச்சு.

கிருஷ்ணராசு: சொல்லு பா😊

கண்ணன்: அது வந்து உங்க பொன்ன எனக்கு...
னு ஆரமிக்கும்போது சரியா தேவராசு வந்துட்டாறு.

தேவராசு: உங்க பொன்ன எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதமானு கேக்கறா சமந்தி.

கண்ணன்: (மொறைக்கறா தேவராசு பாத்து)

கிருஷ்ணராசு: சம்மதம் பா 😁😁 இத கேக்க ஏன் தயங்கறீங்க..... எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு.

கண்ணன்: இல்ல மாமா அது வந்து... (மனதிற்க்குள்- உங்க பொன்னுக்கு என்ன பிடிக்கலையே மாமா)
தேவராசு இடைல வந்து....

தேவராசு: டேய் 8.30 கு நல்ல நேரம், நம்ம வந்ததே லேட்... போ போயி உட்காரு....

கிருஷ்ணராசு: ஆமா பா 8.20 ஆகிருச்சு போங்க,,,, அப்றம் வந்து என்கிட்ட பேசிக்கலா....

கண்ணன மணவறைக்கு இழுத்துட்டு வராத கொறையா தேவராசு கூப்டு வராறு.கடுப்போட மணவறைல உட்காந்து இருந்த கண்ணன இன்னும் கடுப்பு ஏத்த கார்த்தியும்,ராமும் நல்லா ஓட்டியே சாகடுச்சுட்டாங்க.

ஐயர் "பொன்ன அழச்சுட்டு வாங்கோ..." னு சொன்னது கீர்த்தி,லட்சுமி அப்றம் கொஞ்சம் பேரு தாராவ கூப்டு வராங்க. ( மொறையா முகூர்த்த பொடவை வாங்கதா பொன்ன கூப்டு வரனு ஆனா கோயில்ல துணி மாத்தற வசதி இல்ல அதுநால வீட்லயே முகூர்த்த பொடவை கட்டி மேக்கப் போட்டு கூட்டீட்டு வந்துட்டாங்க).

தாரா வரா...... பயபட கூடாது,அழுக கூடாதுனு தலைய குனுஞ்சுட்டே "முருகா... முருகா.... முருகா..." னு சொல்லீட்டே வரா "என்ன அவமானம் நடந்தாலு தாங்கிக்கோ தாரா,, அவ உன்மேல கொலவெறி ல இருப்பா" னு தனக்குள்ள பேசிட்டேவரா..

கண்ணன் மணவறைல இருந்து தாராவர பக்கம் பாத்தா 😊 (அதா அவ பண்ண பெரிய தப்பு 😁😂😊😍) பாத்த அந்த நொடி மொதல்லயே தாரா பேர எழுதி வெசுருக்க இதயத்துல 🏹 அம்பு வந்து ஏறிறுச்சு

கண்ணுனக்கு என்ன ஆச்சூனே தெறியல தாரா மேல இருந்த கோவம்ல பறந்து போய்ருச்சு. அவள பாத்து வர்நிக்க ஆரமுச்சுட்டா

"அடேங்கப்பா....... எவ்லோ அழகு 😍.... நடிகை மாதிரி இருக்காலே😍😍...... ஐய்யய்யோ என்ன கலரு டா😘 சாமி....ஒரு வேல மேக்கப்போ... சே..சே.. என்தாரா கலரு தா மொதல்லயே... ஆனா லிப்ஷ்டிக் ஓவரா😜 இருக்கு..சரி பரவால எதாவ்து சாப்டா போயிரு😊..எங்க 🤔 கன்னத்துல மட்சம் இருக்குமே காணோ🤔🤔🤔.......ஐஐஐ😍 இருக்கு பவுடர் அதிகம் போல அதா தெறியல... ஆனா ஏன்டி இப்டி ஒல்லி ஆகிட்ட👿....சரி பரவால போனாபோகட்டு... அப்றம் பூ ஓகே👌..சேரி சூப்பர்👌... ஆனா👿 இடுப்பு தெறியுது லைட்டா👿 ஏன் ஒழுக்கமா சேரி கட்ட தெறியாதா? உனக்கு ஒவ்வொரு டைம்மு நா வந்து சொல்லனுமா எரும எரும....."""

இவனா? கல்யாணம் வேண்டானு சொல்லற அளவுக்கு நல்லா சைட்😁 அடுச்சா.... ஆனா தாரா அவன பாக்கவே இல்ல(ஏன்னா பயம்😞).... கண்ணன் தாராவ பாக்கறா ஆனா அவ பாக்கவே இல்ல கண்ணனுக்கு அப்போ தா ஞாபம் வந்துச்சு "இவளுக்கு நம்மல புடிக்கல அதா பாக்ககூட மாட்டீறா😭... இந்த கல்யாணத்த நிறுத்துங்க வேண்டா,,, தாராக்கு என்ன புடிக்கல""" லைட்டா அழுக வருது கண்ணனுக்கு.

தாரா கண்ணன் பக்கத்துல வந்து உட்காந்தா ..... அப்போ கண்ணன் தாராவ பாக்கறா அவ கழுத்துல நெரையா நகைக்கு நடுவுல அவ போட்டுவிட்ட ஓம் டாலர் போட்ட அதே ச்சேயின். கண்ணனுக்கு ரொம்ப அதிர்ச்சி....

கண்ணன்: நீ இந்த ச்சேயின இன்னுமா போட்டுறுக்க? (தாராக்கு மட்டு கேக்கற மாதிரி சொல்லற)

தாரா: 👿👿👿👿 (மனதிற்க்குள்- இது என் தாலி டா லூசூ)
கண்ணன் தாரா மொறச்சதுல கடுப்பு ஆகி..

கண்ணன்:👿👿👿 அது சரி,, கோல்டு லல எப்டி கழட்டுவ.... (மனதிற்க்குள்- சே நா கூட இது என் தாலி னு சொல்லுவனு நெனச்ச டி.... ஆனா மொறைக்கற 😞)

தாரா:😭😭(மனதிற்க்குள்- ஆமா டா கோல்டுனுதா கலட்டல போதுமா.. சே உனக்கெல்லா இதுவே புரியல அப்றம் இப்டி என் லவ் புறுஞ்சு, என்னோட பிரட்சணய கண்டுபுடிப்ப)..
ரெண்டு பேறும் இப்டி மொறச்சுட்டு இருக்கும் போது ஒரு சத்தம் கேக்குது

ஐயர்: மாப்ல பொன்னுக்கு மாங்கல்யதானம் பண்ணுங்கோ... இந்தாங்கோ...

அந்த சத்தத்துலதா ரெண்டு பேறும் சண்ட போட்ற பார்ம்ல இருந்து தெழுஞ்சாங்க.ஐயர் தாலிய நீட்டுரார் கண்ணன் யோசிக்கறா "ஐயோ கல்யாணத்த நிறுத்தனுமே???

தேவராசு: டேய் என்ன டா முளிக்கற தாலிய வாங்கி கட்டு....

கண்ணன்:............

கிருஷ்ணராசு: மாப்ள உங்க அம்மா ஞாபம் வந்துருச்சா பா.....

கண்ணன்:...........(மனதிற்க்குள்-யோவ் மாமா கல்யாணம் வேண்டா யா)

ஐயர்: நாடி ஆகர்து இந்தாங்கோ.
ன்னு தாலிய கண்ணன் கைல குடுத்துட்டாரு.

கண்ணன்:(தாராவோட முகத்த பாக்கறா )"கட்டட்டா"""

தாரா: (கண்ணன பாக்காம) "ம்ம்ம்ம்"

ஐயர் அதுக்குல்ல கெட்டிமேளம்!!!!!! கெட்டிமேளம்!!!!!!

"மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்"

கண்ணன்: (மனதிற்க்குள்- ஐயோ டேய் லூசூ தாலி கட்டிட்ட டா நீ,,, அறிவே இல்லையா டா,,, கல்யாணத்த நிறுத்தரன்னு வந்துட்டு தாலிய வாங்கி 'கட்டட்டா' னு கேக்கற,,, அடத்தூ அறிவுகெட்டவனே...)

தாரா:(மனதிற்க்குள்-ஐயோ தாரா லூசா நீ அவ கட்டட்டா னு கேட்டா 'ம்ம்ம்ம்' னு சிக்னல் குடுக்கற ரேனூ பத்தி யோசுச்சயா,கண்ணன பத்தி நெனச்சயா,,,போசு என்னால எல்லாரு லைப்பும் போசு)

ராம்: மாப்ள என் கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கற அதுல இருந்து ஆனந்த கண்ணீரத்தா பாக்கனு (வேணும்னே பாசமலர் சீன் அஅஅ நடிக்கறா எல்லாருக்கு சிரிப்பு வந்துருச்சு)
பொன்னுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு அப்பா,அம்மா கண்கலங்க,இவ்லா நாள் அக்கா,அக்கா னு இருந்த கார்த்தி கொழந்த மாதிரி தேம்பி தேம்பி அழுகறா,,

கீர்த்தி: அண்ணா தாரானா எல்லாருக்கு ரொம்ப பிடிக்கு,அவ எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனு,,, அவளுக்கு கோவம்கூட பட தெறியாது,கோவம்வந்தா அழுவா உண்மையா அவ என்ன வீட வயசுலதா பெரிய பொன்னு ஆனா அவ ரொம்ப கொழந்ததனமா பண்ணுவா,,எதுநாலு கோவபடாம பாத்துக்கோங்க அண்ணா, இனிமேலும் அவ அழுக கூடாது.

கீர்த்தி சொன்ன அந்த "இனிமேலும் அவ அழுக கூடாது" அதமட்டு கண்ணன் மனசுல ஏத்திகிட்டா. அக்னிய சுத்தி வரும் போது. கண்ணன் முன்னாடி போறா தாரா பின்னாடி வரா

கண்ணன்: (மனதிற்க்குள்- எல்லாருக்கு லவ் பண்ற பொன்ன கல்யாணம் பண்ற பாக்கியம் கெடைக்காது டி, ஆனா நா ரொம்ப லக்கி. நீயும் என்ன லவ் பண்ண ஆனா என்னமோ ஒரு காரணத்துக்காக என்ன விட்டுட்டு போய்ட்ட,, உன்வாயால அந்த காரணத்த சொல்ல வெச்சு,உன்மனசுல நான்தா இருக்கனு சொல்ல வெச்சு, உன்ன வாழ்க்க முழுக்க சந்தோசமா பாத்துக்குவ இது என் காதல் மேல சத்தியம்)

தாரா:(மனதிற்க்குள்-எல்லாருக்கு லவ் பண்ற பையன கல்யாணம் பண்ற பாக்கியம் கெடைக்காது டா ஆனா நா ரொம்ப லக்கி டா நீ எனக்கு கெடச்சு இருக்க,,, உன்ன ரொம்ப லவ் பண்ணனு உன் கூட ரொம்ப நாள்😭 வாழனும்னு ஆசையா இருக்கு டா, கண்டிப்பா நா அந்த காரணத்த சொன்னா ரேனுக்கு மட்டு பிரட்சண இல்லடா,,உனக்கு வர கோவத்துக்கு நீ கயல எதாவ்து பண்ணீட்டு ஜெயிலுக்கு போய்ருவ டா,,,கயலும் பாவம் டா அவளுக்கு ஒரு கொழந்த இருக்கு,, எனக்கு அந்த விஷயத்த உன்கிட்ட எப்டி சொல்லறதுனு தெறியல டா, நீயா கண்டுபுடுச்சுரு டா என்னால சொல்ல முடியாத சூல்நிலை டா,,,நீயா கண்டுபுடிக்கற வரைக்கு என்னால உன்கிட்ட வர முடியாது கண்ணா... மணுச்சுறு டா)

3 சுத்து முடுஞ்சு இப்போ தாரா முன்னாடி போறா கண்ணன் பின்னாடி வரா

தாரா: (மனதிற்க்குள்- ஒரு பொன்னா நா பெரிய தப்பு பண்ணிட்ட ரேனூவ பத்தி யோசிக்காம நீ கட்டட்டா னு கேட்டதூ ம்ம்ம்ம் னு சொல்லீட்ட. நா ஒரு சுயநலவாதி)

கண்ணன்: (மனதிற்க்குள்- நீ என்ன வேண்டானு சொன்னது நா போயிருக்க கூடாது,,, நீ ஏன் என்ன விட்டுட்டு போறன்னு கேட்டுறுக்கனு,, பொன்னுகளுக்கு நெரையா கஷ்டம் இருந்துருக்கு நா தா கேட்டு தெருஞ்சுருக்கனு.சாரி தாரா...)
நல்லபடியா கல்யாணம் முடுஞ்சுது.

மலைல இருந்து கீழ இறங்க எல்லாரும் "ரோப்கார்ல" இறங்கலாம்னு போறாங்க அப்போ ராம் வேணும்னே கண்ண கிட்ட..

ராம்: மாப்ள இந்த கோயில்ல கல்யாணம் பண்ணா பொன்னு மாப்ள படில தா இறங்கனுமாமா. அப்போ தா வாழ்க்கைல படி படியா முன்னேற முடியுமாமா 😁😁😁😁

கண்ணன்: இல்லையே அப்டிலா இல்ல.... நா கேள்வி பட்டதே இல்ல இது மாதிரி.

கீர்த்தி: ஆமா அண்ணா,,, ராம் சொன்னது உண்ம தா... அதும் பொன்னு மாப்ள மட்டு தனியா இறங்கனுமாமா 😁😁😁😁

கண்ணன்: நோ நோ அதெல்லா இல்ல.

ராம்: கண்ணா ஒரு பெட் வெக்கலாமா?? உனக்கு எனக்கு?

கண்ணன்: என்ன பெட் (கண்ணன் பெட் கட்டி தோத்ததே இல்ல)

ராம்: நானு கீர்த்தியும் முதல்ல படில இறங்கறமா இல்ல நீயும் தாராவும் இறங்கறீங்கலானு பாக்கலா,,, பெட் ஒரு dairy milk silk

தாரா: அண்ணா நா இந்த வெளையாட்டுக்கு வரல ஆள விடு 🙏

கீர்த்தி: வா டி சூப்பரா இருக்கு....

கண்ணன்: இல்ல வேண்டா...

ராம்: சரியானா சோம்பேறி கண்ணா நீ

கண்ணனுக்கு கடுப்பு ஆகி.....

கண்ணன்: சரி பெட் 👍,,, நா ரெடி

ராம்: நானூ ரெடி👍

கீர்த்தி: நானூ ரெடி👍

கார்த்தி: அப்போ நா 🤔

ராம்: நீ சோலோவா ஓட்றயா?

கார்த்தி: ஆமா..... நானூ வரட்டா please...

கண்ணன்: சரி வா டா...

தாரா: என்ன எல்லாரு காமெடி பண்றீங்கலா,,, கல்யாண மேக்கப்ல ஓடுநா அசிங்கமா இருக்கு....😞

ராம்: வெளையாட்டு தா ..... வா தாரா please.....

கீர்த்தி: please டி

கார்த்தி: please கா

கண்ணன்:..........( திரும்பி நின்னுட்டா)
பெரியவங்கல எல்லாம் ரோப்கார்ல ஏத்தி விட்டுட்டு 5 பேறும் ஓட ரெடி ஆனாங்க...

1........2......3........ Go....

கார்த்தி 🏃வேகமா ஓடிட்டீட்டா 😂😂😂😂
ராமும்,கீர்த்தியும் ஓடி போயி ஒரு மரத்துக்கீழ உட்காந்து பேசிட்டு இருக்காங்க

ராம்: இவங்கல தனியா பேச வெக்க எவ்லோ கஷ்டபட வேண்டியதா இருக்கு...

கீர்த்தி: ஆமா டா... ப்ளான் ஒர்க் ஆச்சானு தெறியலயே??🤔🤔
அங்கு கண்ணனும் தாராவும்
"ரெண்டு பேறும் ஓடவே இல்ல"😂😂😂😂
கண்ணன் மெதுவா முன்னாடி நடக்கறா தாரா அவன் பின்னாடி மனசுக்குள்ள திட்டீட்டே வரா "ஐயோ முருகா இப்டி நடக்க விட்டுட்டுயே,,,பசிக்குதே,,, இந்த எரும வேற முன்னாடி போகுது.. அது கிட்ட பேசவும் பயமா இருக்கு... பசீல நடக்க முடியலயே"

கண்ணன்:👿👿👿 (மனதிற்க்குள்-உனக்குதா வெயில் சேறாதுல்ல,, கொஞ்சம் சீக்கரம் நடந்தா சீக்கரம் கீழ போயி உட்காந்துக்கலாம்ல)

தாரா:😞😞😞(மனதிற்க்குள்- பசிக்குது,, இவ வேற மொறைக்கறா,,, நடக்கவே முடியல.. எல்லாரும் சாப்டப்பவே கொஞ்சம் சாப்டு இருக்கலாமோ)

கண்ணன்:👿👿👿(மனதிற்க்குள்-இப்டி இறங்குனா நாளைக்கு தா கீழ போவோ)
தாரா எதிர் பாக்காத நேரம் தாரா கைய புடுச்சு இழுத்துட்டு இறங்கறா

தாரா: 😭😭😭 (மனதிற்க்குள்- மொதல்லயே பசி வேற,, இந்த பக்கி இப்டி இழுத்துட்டு போகுது. கை வலிக்குது😭😭)

கண்ணன்:👿👿(மனதிற்க்குள்-உனக்கு வெயில் சேறாதூ சீக்கரம் வா.. மயக்கம் போட்டுறுவயோனு பயமா இருக்கு அதா கைய இருக்கமா புடுச்சுகிட்ட 😍😍😍)

தாரா:😭😭😭😭😭😭

கண்ணன்: இப்போ எதுக்கு அழுகற நா உன் கைய புடிக்ககூடாதா👿👿

தாரா: கை வலிக்குது😭😭😭

கண்ணன்: புடிக்கலனு இப்டி சொல்லறயா 👿

தாரா: 😭😭 நீங்க கைய இருக்கமா புடுச்சுட்டீங்க,, கண்ணாடி வளையல் ஒடஞ்சு கைல ஏறி இரத்தம் வருது விடுங்க please 😭😭😭

கண்ணன்: சாரி 👿👿👿(மனதிற்க்குள்- ஐயோ சாரி டா மயக்கம் போட்டுறுவயோனு தா இருக்கமா புடுச்ச,,, ஏன் தாரா மரியாதை குடுக்கற எப்பவும் போல டா னு சொல்லு உரிமையா,,)

அதுக்கு அப்றம் ரெண்டு பேறும் பேசிக்காம இறங்கி வந்துட்டாங்க.பாவம் கார்த்தி தனியா ஓடிட்டு இருந்தா 😂😂😂. அப்றம் எல்லாரும் சாப்டுட்டு வீட்டுக்கு போயிட்டாங்க. சாயங்காலம் வரவேற்பு நல்ல படியா முடுஞ்சுது ஆனா தாரா கண்ணன் கிட்ட ஒரு வார்த்த கூட பேசல. கண்ணனும் எதூமே பேசல.

-----------------------------------------------------------
எப்டி அந்த பிரச்சணய ரெண்டு பேறும் சால்வ் பண்ண போறாங்க. கண்ணன் கண்டுபிடிப்பானா இல்ல தாரா சொல்லுவாலா.... இல்ல ரெண்டு பேறும் பிருஞ்சுருவாங்கலா??????

Next part la pakkala bye👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro