9
மாலை மங்கி மயங்க காலையில் இருந்து ஓடி ஓடி அனைவர்க்கும் தன் ஒளியை தந்து உருகிய கதிரவன் களைத்து தன் தாய்மடியாம் கடலவளின் மடியில் தஞ்சமடைந்திட நிலவவனும் தன் காதல் மனைவியாம் கடலைவளை ரசித்திடவே ஆவலோடு மேலெழும்பிட தன்னை வீழ்த்திடும் அழகோடு அருகே அமர்ந்திருந்த ஏந்திழையவளை இரு கண் கொண்டு ரசித்துக் கொண்டே ஊர்தியில் ஊர்ந்து சென்றான் விக்ரம் .
அவனின் தொடர்பார்வையில் அச்சிவந்த வானத்தை போலே கன்னம் சிவந்தவள் தப்பி தவறியும் அவன் புறம் பார்வையை செலுத்தாது சாலையில் தன் கண்ணை பதித்து அமர்ந்திருந்தாள் சிறு புன்னகையுடன் .ஒரு வழியாய் இருவரின் காதல் கண்ணாமூச்சியுடன் அப்பயணமும் முடிவுற கீழே இறங்கியவள் என்றும் போல் ஒரு நிமிர்வுடன் நேர் கொண்ட பார்வையோடு அவன் அருகில் வந்து நிற்க என்றும் போல் இன்றும் அவளது இந்நேரணடையையும் நிமிர் பார்வையையும் கண்டு வியந்தவன் ஆவலுடன் உள்ளே சென்றான்.
உள்ளே சென்றதும் அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களுடன் அவன் சென்று உரையாட நாகரிகம் கருதி அவனை விட்டு தொலைவாய் வந்தவள் அங்கே பணியாளர்களிடம் சென்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டால் .கவனம் வேலையில் இருப்பினும் இருவரின் கடைக்கண் பார்வையும் தன் இணையின் மீது இடைவிடாது இருந்துகொண்டே இருந்தது அதை மற்றவர் அறியாது .அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டதை உறுதி செய்து கொண்டவள் திரும்ப அங்கோ விக்ரமை சுற்றி ஐந்தாறு பெண்கள் இழைந்து கொண்டே நிற்க இது வரை பொறாமை என்றால் என்ன என்று கேட்பவள் நவதுவாரங்களிலிருந்தும் புகை வருமளவிற்கு பொறாமை தீயில் எறிந்தாள் .
இவள் இப்படி இருக்க அங்கோ விக்ரம் எதையும் கவனியாது என்றும் போல் கையில் ஒரு மதுக் கோப்பையுடன் இயல்பாய் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது.அவள் அவன் அருகில் செல்லப் போக மூளை அவள் செய்யவிருக்கும் செயலை பற்றி கொடுத்த எச்சரிக்கையில் தன்னை சமன் செய்து கொண்டவள் விக்ரமிடம் சென்றால் .
விக்ரமின் அருகில் வந்தவள் "விக்ரம் arrangements ரெடி நீங்க இப்போ பேசலாம் "என்று விட்டு அவள் நகர அவனும் அங்கே நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேடையில் ஏறி தன் உரையை ஆற்றினான் .
பின் பலத்த சத்தத்துடன் பாட்டுகள் போடப்பட அனைவரும் ஆடத்துவங்கினர் .அறைபோதையில் ஐம்பது வயதிருப்பவரும் 20 வயது பெண்களுடன் நெருக்கமாய் ஆடுவதும் அப்பெண்களும் பல்லைக்காட்டிக்கொண்டு நிற்பதும் நவ்யாவிற்கு அருவருப்பை ஏற்படுத்தியது .முகத்தை சுளித்தவள் ஏனடா இங்கே வந்தோம் என்று என்னும் அளவிற்கு வெறுத்துவிட்டால் இவ்விடத்தை .
அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த இரு அரை போதை ஆசாமிகள் அவளிடம் "ஹே பியூட்டி what 's யுவர் ரேட்?"என்று கேட்க
அவளோ அவர்களை ஒரு தீ பார்வை பார்த்தவள் "i am not such a girl "என்று விட்டு செல்ல போக அவள் கையை பிடித்த
ஒருவன் "ஹே கூல் கூல் நீ எவ்ளோ கேட்டாலும் கொடுக்குறோம் பட் அதுக்காக விக்ரமோட வந்துட்டு கால் கேர்ள் இல்லனு சொன்னா எப்படி ?" என்க அவளோ கண்களில் வலியுடன் விக்ரமைப் பார்த்தவள் தன் கையை உதறிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி அந்த ரெசார்ட்டில் கால் போன போக்கில் நடக்கத் துவங்கினால்.இங்கு நடந்ததை இரு ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.
.இங்கே என்றும் அவனது வழக்கத்தை போல் நடனமாடிக்கொண்டிருந்த விக்ரமை அவனது கைபேசி சிணுங்கல் தன் இருப்பை உணர்த்த அதை எடுத்து காதில் வைத்தவன் "ஹலோ "என்க
அப்புறம்"வெள் டன் விக்ரம் "என்க அக்குரலிலேயே அது யாரென்று உணர்ந்து கொண்ட விக்ரம் ஒரு ஏளனச் சிரிப்புடன் "thank யு மிஸ்டர் x "என்க
அவ்வுருவம் " you are far more intelligent than i expected .பட் don't be சோ ஹாப்பி விக்ரம் "என்க
விக்ரம் சிறு சிரிப்பை உதிர்க்க
அதுவோ"you will lose one to gain one "என்று விட்டு வைத்து விட அவனும் சிறு ஏளனச்சிரிப்புடன் கண்பார்வையை சுழலவிட அவன் பார்வை வட்டத்தில் எங்குமே நவ்யா இல்லாமல் போனால் .
அவன் முதலில் சற்றே நிதானமாக அவ்வறையின் ஒவ்வொரு இடத்திலும் ஆராய்ந்தவன் அவள் இல்லாது போகவும் பதட்டம் தொற்றிக்கொள்ள அவளிற்கு போன் அடித்தவன் அது சுவிட்ச் ஆப் என்று வர .அதை கண்டு மேலும் பதறியவன் அந்த ரெசார்ட்டில் ஒவ்வோர் இடத்திற்கும் சென்று தேட அவள் எங்கும் இருப்பதற்கான தடயமே இல்லாமல் இருந்தது .
ஓட்டமும் நடையுமாய் ஒவ்வோர் நொடியும் தன் உயிர் உரியும் வலியோடு அவளைத் தேடினான் .எங்கு தேடியும் அவள் கிடைக்காமல் போக அந்த ரெசார்ட்டை ஒட்டி உள்ள கடற்கரைக்கு சென்றவன் அங்கிருந்த ஒரு பெஞ்சில் இடிந்து போய் அமர்ந்தான் .கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது .முதல் முதலில் அவளை ஆறு வருடத்திற்கு முன் கண்டத்திலிருந்து இன்று வரை அவளின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு பேச்சும் ஞாபகம் வர இது நாள் வரை என்னென்றே அறியாத உணர்வுடன் அவளை கண்டவன் இன்று அவளை பிரிந்துவிடுவோமோ என்ற எண்ணமே மரண வலியை கொடுப்பதில் உணர்ந்து கொண்டான் தான் அவள் மேல் கொண்ட உணர்வின் பெயர் காதல் என்று .
எனில் காதலை உணர்ந்த தருணம் அவனிற்கு சந்தோஷத்திற்கு பதில் வலியை அல்லவா தந்தது.
பின் தன் தலையை அப்புறமாய் திருப்பியவன் கண்களில் ஒரு நிழல் அமர்ந்திருப்பதை போன்று தோன்ற அந்நிழலை நோக்கி நடக்க துவங்கினான் .அங்கே சென்றவன் மனதில் தனக்கு தெரிந்த அத்தனை கடவுளையும் வேண்டிக்கொண்டான் அது நவ்யாவாக இருக்கவேண்டுமென்று.அவ்வுருவத்தின் அருகில் செல்ல செல்ல அது நவ்யாவென்று புரிந்து கொண்டவன் பாய்ந்து சென்று அமர்ந்திருந்தவளை அமர்ந்திருந்தவாக்கிலேயே தன்னோடு அணைத்துக் கொண்டான் .
திடீரென்று யாரோ தன்னை அணைக்க பதறிய நவ்யா அவனது வாசம் சுவாசத்தில் நுழைந்து அது விக்ரம் என்பதை உணர்த்த அவன் மேல் ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவனை விளக்கப் போராட அவனோ அவள் விட்டால் காற்றில் கரைந்து போய்விடுவாள் என்பதைப் போல் தன்னோடு மேலும் சேர்த்தனைக்க கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்றே உணராதவள் "விடுங்க விக்ரம் நீங்க நெனைக்குற மாறி பொண்ணு நா இல்ல "என்க
அவள் உதிர்த்த வார்த்தைகள் ஈட்டியாய் மனதை தைக்க தீயை தொட்டவனாய் அவளை விளக்கியவன் அவள் கையை பிடித்து "என்ன சொன்ன ?"என்று கேட்க
அவளும் சரிக்கு சமமாய் அவன் கண்ணைப் பார்த்தவள் "கைய விடு விக்ரம் "என்று
அவனை ஒருமையில் அழைக்க தன் பிடியை மேலும் இறுக்கியவன் "என் கண்ண பாத்து சொல்லுடி என்ன சொன்ன ?"என்க
அவனை பார்த்தவள் "நீ தொடுறதுக்கெல்லாம் பல்ல காட்டிட்டு நீ கூப்டுற எடத்துக்குலாம் வர்ற பொண்ணு நா இல்ல கைய விடு " என்க
அவளை மேலும் தன்னருகில் இழுத்தவன் "வார்த்தையை அளந்து பேசு நவ்யா எப்போவும் இதே மாறி பொறுமையா இருக்க மாட்டேன் .இவ்ளோ நேரம் எங்கடி போன என் கிட்ட சொல்லாம போனையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு எவ்ளோ பயந்தேன்னு தெரியுமா " என்க
அவளோ "யாரு நீங்க உங்கட்ட நா எதுக்கு எங்க போறேன் எங்க வரேன்னு சொல்லணும் its my wish நா எங்க வேணா போவேன் you don 't have any rights to question me " என்று கூறிமுடிக்கும்முன் அவனோ அவள் கையை உதறி விட்டிருந்தான்.இனியும் அவள் அருகில் இருந்தால் அவளை காயப்படுத்திவிடுவோம் என்று உணர்ந்தவன் தலையை அழுத்தி கொதி தன்னை சமன் செய்து கொண்டு அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாது கையை பற்றி இழுத்துக் கொண்டு காரிர்கு சென்றான் .
உள்ளே அமர்ந்தவன் தன் கோபத்தை முழுவதுமாய் காரை ஓட்டுவதில் காட்ட அவளோ இதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை போல் ஜன்னலிற்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தால் .அவளை வீட்டில் இறக்கி விட அவளோ அப்படி ஒருவன் அருகில் அமர்ந்து வந்தான் என்பதே நினைவில்லாததை போல் பட்டென்று இறங்கி வீட்டிற்குள் சென்று விட்டால்.அவள் செல்வதையே பார்த்தவன் திமிரு என்று முணுமுணுக்க அடுத்த நிமிடம் அவனது கைபேசி ஒளிர அதை எடுத்து காதில் வைத்தவன் "ம்ம் சொல்லுடா என்ன திடீர்னு கால் பண்ணிருக்க "என்க
அப்புறம் ஏதோ சொல்லப்பட
இவனோ "ஹே அதெல்லாம் வேணாம் நா தான் நம்மளுக்குள்ள இருக்குற சம்மந்தம் வேற யாருக்கும் தெரிய வேணான்னு சொல்லிருக்கேன்ல "என்க
அப்புறம் ஏதோ சொல்லப்பட விக்ரமின் நெற்றி சிந்தனையில் சுருங்க பின் சிறிது இடைவெளி விட்டவன் "நாளைக்கு வீட்ல மீட் பண்ணலாம் நாம மிச்சம் வச்சது தான் இப்போ என்ன எதிர்த்து நிக்குதுனு நினைக்குறேன்.யாருக்கும் தெரிய வேணாம் "
என்று விட்டு phoneai வைத்தவன் சற்று நேரம் யோசனை செய்தவன் பின் அவ்விடத்திலிருந்து தனது காரை கிளப்பினான் ஒரு முறை அவனது கண்கள் நவ்யாவின் அறையை ஏக்கத்தோடு நோக்கியது காதலை உணர்ந்த அன்றே காதலியின் வாய் மொழியால் சவுக்கடி பெற்ற வலி அவன் கண்களில் பிரதிபலித்தது .
இங்கு இவன் இப்படி இருக்க நவ்யாவோ நெடு நேரமாய் ஷோவெரிற்கு அடியில் நின்றவள் குளித்து விட்டு வெளியே வந்து கண்ணாடிக்கு முன் அமர்ந்தாள் .
அவளது மனம் "என் கண்ணு முன்னாடியே இப்டி பொண்ணுங்க கூட நெருக்கமா இருக்கானே "என்க
அவளது மூளையோ "ஏன் உன் முன்னாடி இருந்தா என்ன தப்பு யார் நீ அவனுக்கு ?"என்க
அவளது மனமோ "நா நா அவனோட ..... "என்று தடுமாற
அவளது மூளை " நீ அவனோட பர்சனல் அசிஸ்டன்ட் அவன் உன்னோட பாஸ் அவ்ளோ தான் "என்க
அவளது மனமோ "இல்ல நா அவனோட friend "என்க
அவளது மூளையோ "friendunaa அவன் மத்த பொண்ணோட closeaah இருக்குறதுக்கு ஏன் கோவம் வருது ?" என்க
அவளது மனதிடமோ பதிலில்லை அதை பார்த்து சிரித்த மூளை "நீ தடுமாறுற நவ்யா .அவன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா உன்னையே அறியாம நீ சாயுற "என்க
அவளது மனமோ மௌனம் சாதித்தது உண்மையும் அது தானே மூளையே தொடர்ந்தது "அவன் charactereh அது தான்னு உனக்கு தெரியும் அது மட்டுமில்லாம எந்த உரிமைல நீ அவன் மேல கோவப்படுற?இந்த எண்ணம் உனக்கு நல்லதில்லை நவ்யா.இதை வளர விடறது சரி இல்ல .இப்டி ஒரு எண்ணம் உனக்கிருக்குன்னு அவனுக்கு தெரிய வந்தா உன்ன பத்தி என்ன நெனப்பான் ?"என்க
அவளது மனமும் அதை ஒப்பொக்கொண்டது பின் "அப்போ நா என்ன தான் பண்றது "என்று கேட்க
அவள் மூளையோ "நாளைக்கு போய் சாரி கேட்டுட்டு உனக்கு எந்த வேலைக்காக சம்பளம் குடுக்குறானோ அந்த வேலைய மட்டும் பாரு "என்று விட்டு மறைய அவளிற்குமே தனது மூளை கூறுவதே சேரி எனது தோன்ற தெளிவு பிறக்க படுக்கையில் சென்று விழுந்தாள் இனி தான் எவ்வாறு இருக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு.
இங்கு அவன் காதலை உணர அவளோ காதலை தன்னுள்ளே புதைத்தாள் .காலம் பதில் கூறுமோ இவர்களின் இக்கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவை ?
விக்ரமிடம் போனில் பேசிய அந்த நபர் யார்?
அவ்வுருவம் விக்ரமை பழிவாங்கத்துடிப்பதன் காரணம் தான் என்ன?விக்ரம் செய்த பழி தான் என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro