5
அடுத்த நாள்
வேலைக்கு கிளம்பிய நவ்யா அலுவலகம் வந்தடைய அங்கோ அவளிற்கு முன்பே வந்திருந்த விக்ரம் வாடி இருந்த பூக்களை மாற்றிக் கொண்டிருந்தான் .அவள் நெற்றியை சுருக்கி தோல் பையை சரி செய்து கொண்டே ஒரு சிறு புன்னகையுடன் "குட் மோர்னிங்" என்க
அவனோ அப்பொழுதே அவளை கவனித்தவன் சிறு புன்னகையுடன் "குட் மோர்னிங் மிஸ்.perfectionist " என்றவன் அறையை ஒரு முறை பார்த்து விட்டு "இப்போ இந்த எடத்துல உக்காந்தா வேலை பார்க்க தோணுமா?"என்க
அவளோ அசடு வழிந்தால் அது நவ்யா இல்லையே அறையை நோட்ட மிட்டவள் "நோட் பேட் இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடுத்தா போதும் "என்று கூற
அவனோ "அது சரி வாங்க மேடம் வேலைய பாக்கலாம் "என்று விட்டு அன்றைய வேலைகளை பார்க்க
இவ்வாறே ஒரு மாதமும் பற்பல பிரெச்சனைகளுடனும் சீண்டல்களுடனும் புதியதாய் இருவருக்குள்ளும் மலர்ந்த நட்புடனும்(?)செல்ல என்றும் போல் அன்றும் தன் வேலைக்கு கிளம்பிய நவ்யா கீழே வர சைந்தவியோ பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவள் தடுமாறி விழிப் போக இவள் "அண்ணி " என்று சென்று பிடிப்பதற்குள் வித்யுத் வந்து "சது"என்று அவளை பிடித்துக் கொண்டான் .
அவள் மீண்டும் நிலை தடுமாற அவளை வித்யுத் ஒரு புறமும் அதிதி மற்றொரு புறமும் பிடித்துக் கொண்டு கீழே அதிதியின் அறைக்குள் அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தனர் .அவள் அருகில் அமர்ந்த வித்யுத் அவள் தலையை வருட அதிதி"அண்ணா இந்த தண்ணிய குடு அண்ணிக்கு"என்று தண்ணீரை கொடுக்க
அதை சைந்தவிக்கு புகட்டியவன் "என்னாச்சுடி இப்டி தடுமாறுற பார்க்க வேற இவ்ளோ weakaah இருக்க ?"என்க
சைந்தவி "தெரிலடா 1 வாரமா இப்டி தான் இருக்கு வாமிட் வேற வருது நாள் வேற ..... "என்றவளுக்கு ஏதோ தோன்ற அவனிற்கும் அது தோன்றியதோ என்னவோ அவர்கள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய இருவரும் அங்கு இரண்டு ஜீவன்கள் நிற்பதை கூட கவனிக்காது கத்தி கொண்டே கண்ணீருடன் கட்டிப் பிடித்துக் கொள்ள அதிதிக்கும் நவ்யாவிற்கும் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
வித்யுத் சைந்தவியின் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து" லவ் யு லவ் யு லவ் யோ சோ muchdi என் வாழ்க்கையிலேயே நா இவ்ளோ சந்தோஷமா இருந்ததில்லை thank யு சோ muchdi gulfi "என்று அவளை மீண்டும் அணைத்துக் கொள்ள
நவ்யாவிற்கு அனைத்தும் புரிய ஒன்றும் புரியாமல் கடுப்பான அதிதி "டேய்ய் அண்ணா korean படம் subtitles இல்லாம பாக்குற மாறி இருக்குடா சின்ன புள்ளைங்கள வச்சுட்டு ரொமான்ஸ் பண்றத நிறுத்திட்டு என்ன ஆச்சுன்னு சொல்லுடா"
என்க
அவனோ வெக்கத்தில் "அது வந்து அதி வந்துடா"என்று உலர சைந்தவியோ அதற்கும் மேல் வாயை திறந்தாள் உஷா fanai போல் காற்றை மற்றும் வெளியேற்ற மேலும் கடுப்பானவள் "இப்போ சொல்..."என்று ஆரம்பிக்க
அவள் வாயை போற்றிய நவ்யா வித்யுத் சந்தவியிடம் "congrats அண்ணா அண்ணி "என்று விட்டு அவளை வெளியே அழைத்து(இழுத்து ) செல்ல
அவளோ திமிரிக் கொண்டே இருந்தவள் வெளியே வந்ததும் "ஏண்டி என்ன இழுத்துட்டு வந்த "என்க
நவ்யாவோ அவளை மண்டையிலேயே கொட்டியவள்"நீலாம் எப்படி தான் லவ் பன்றியோ ?"என்க
அதிதியோ முகத்தை பாவமாய் வைத்தவள் "அதுக்கும் இதுக்கும் என்னடி சம்மந்தம் "என்றவள் மரமண்டையில் ஏதோ சிறு மின்னல் வெட்ட முகத்தில் சந்தோஷம் குடியேற ஹே உண்மையாவாடி "என்க
நவ்யா "இப்போவாச்சும் புருஞ்சுதே "என்று அவள் தலையில் தட்ட
அதிதியோ சிரித்தவள் "இந்த சின்ன வயசுல நம்ம ரெண்டு பேரையும் அத்தை ஆக்கிட்டானேடி "என்று விட்டு சிரித்தவள் சமயலறைக்குள் செல்ல அவள் பின்னோடே சென்ற நவ்யா அவளுடன் இணைந்து கேசரியை செய்தால் தங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்க தித்திக்கும் கேசரியை அந்த அத்தை மார்கள் இருவரும் செய்து தங்கள் அண்ணன் அண்ணிக்கு ஊட்டிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் .
நவ்யாவுக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி .அவளது மகிழ்ச்சி கரை புரண்டு அவள் இதழையும் மனதையும் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ச்சி அடையச் செய்ய அதே சந்தோஷமான மனநிலையுடன் அலுவலகம் கிளம்பி சென்றால் நவ்யா .
உள்ளே வந்து தன் laptoppil கண்ணை பதித்திருந்தவன் ஏதோ ஓர் உந்துதலில் மேலே கண்களை உயற்றி வாசலில் பார்க்க அங்கோ
கருப்பு நிறத்தில் கோல்டன் பார்டர் வைத்த காட்டன் குர்தியும் கருநீல ஜெங்ஸும் தூக்கி போடப்பட்ட highponyudanum மொடேர்ன் ட்ரெஸ்ஸில் விக்ரம் கண்ணிற்கு விருந்தாய் அமைந்தவள் எந்த வித பெரும் ஆபரணம் இன்றியும் தனது புன்னகை என்னும் பொன் ஆபரணத்தாலும் நடந்து வரும் பொழுது அவளது நேர்கொண்ட பார்வையிலும் நிமிர் நடையிலும் அவனது நெஞ்சில் நங்கூரமாய் பதிய அவளது எல்லையற்ற சந்தோஷத்தைக் கண்டவன் அவள் இடத்தில அமர்ந்ததும்
"என்ன மேடம் முகத்துல ஒரு மூவாயிரம் வாட்ஸ் புல்புஹ் எரியுது ?"என்க
அவளோ "ரொம்ப சந்தோஷமா இருக்கேன் விக்ரம் இன்னிக்கு எனக்கு புது அங்கீகாரம் கெடச்சுருக்கு "என்க
அவனோ புரியாமல் பார்க்க அவளோ தலையில் அடித்துக் கொண்டவள் தன் பையிலிருந்து கேசரி டப்பாவை எடுத்து அவன் முன் நீட்டியவள் "அண்ணி pregnentaah இருக்காங்க "என்க
அவனிற்கும் அந்த சந்தோஷம் ஒட்டிக் கொண்டது .பின் வித்யுத்தை அழைத்து தன் வாழ்த்தை தெரிவித்தவன் வேலையில் மூழ்க அவ்வப்போது அவளது மலர்ச்சியான முகத்தில் நிலை குத்திய அவனது பார்வை "அத்தை ஆனதற்கே இத்தனை ஆனந்தம் படுகிறாள் தனக்கென ஓர் உயிர் வருகையில் எத்தனை ஆனந்தம் கொள்வாள் என்றவன் மனது அவன் அனுமதியே இன்றி அவள் கையில் குழந்தையுடன் தன் அருகில் நிற்பதைப் போன்று நினைத்து பார்த்தது .அதை அவன் மூளை ப்ரோஸ்ஸ்ஸ் செய்யும் முன்பே அவனது மனது அதை சென்சார் செய்து விட பின் தனது வேலைகளில் மூழ்கினான் விக்ரம்.
பின் விக்ரம் "நவ்யா எனி அதர் ஒர்க் "என்று அவன் கேட்க
அவளோ "ஹான் விக்ரம் இன்னிக்கு ecrla நடக்குற அபார்ட்மெண்ட்ஸ் கன்ஸ்டருக்ஷன்க்கு போய் பாக்கணும் "என்க
அவனோ "பட் நவ்யா இன்னிக்கு நாம வரத இன்போர்ம் பண்ணலையே"என்க
அவளோ சிறிதாய் முறுவலித்தவள் "surprise visits reveals real work "என்க
அவனோ அவள் கூறியதும் சரியாய் பட "ஓகே தென் லெட்ஸ் கோ "என்று தனது கோட்டை கையில் எடுத்துக் கொண்டு கிளம்ப அவளும் தனது fileai எடுத்து கொண்டு கிளம்பினாள் .
கீழே சென்றதும் அவள் scootyai நோக்கி செல்ல
அவனோ "ஹலோ மேடம் "என்று அழைக்க
அவளோ திரும்பி என்ன என்பதை போல் பார்க்க அவனோ "ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தான போறோம் சேர்ந்தே போலாம் "என்க
அவளோ சற்று தயங்க அவனோ தன் ஒற்றை புருவத்தை ஏற்றியவன் "மேடம் நா நல்லா தான் டிரைவ் பண்ணுவேன் நம்பி வரலாம் "என்க அவளோ சிரித்தவள் முன் இருக்கையில் சென்று அவனுடன் அமர்ந்தாள் .
அவள் பின் இருக்கைக்கு செல்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ முன் இருக்கையில் வந்து அமர்ந்ததில் அவன் மனது சந்திராயனைப் போல் அதி வேகத்தில் அடிக்க அவன் பாட்டை போட அதிலும் அவனிற்கேற்றார் போல்" நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே "பாடல் ஒலிக்க அவளிற்கு அப்பயணம் எப்படி அமைந்ததோ எனில் விக்ரமிற்கோ ஏக போக விருந்தாய் அமைந்தது .
பின் இருவரும் siteirku வந்தவர்கள் தம் வேலையை பார்க்க அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு தான் அவனது அறிவிப்பில்லாத வரவு கிலியை ஏற்படுத்தியது .
விக்ரம் அந்த இடத்தின் கட்டிட அமைப்பை பிளானோடு ஒப்பிட்டு பார்த்து அதன் managers engineersudan பேசிக் கொண்டிருந்தான் .இங்கு நவ்யாவும் அந்த இடத்தை சுற்றி நோட்டமிட்டுக்கொண்டிருக்க ஒரு இடத்தில் அவளது கவனம் நிலைக் குத்தி நின்றது .
அங்கு செங்கல் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தது.அங்கே சென்றவள் இரு செங்கலை எடுத்து லேசாய் தட்ட அது சுக்கு சுக்காய் நொறுங்கியது .அதிர்ந்தவள் அடுத்து இரு செங்கல்களை எடுக்க அதுவும் அவ்வாறே உடைய .ஆத்திரமடைந்தவள் "யாரு இங்க material மேனேஜர் ?"என்று கத்த
அவள் சத்தம் கேட்டு அங்கே வந்த விக்ரம் "நவ்யா என்னாச்சு ?ஏன் இப்டி கத்துற?"என்று கேட்க
அவளோ இரு செங்கலை எடுத்தவள் விக்ரம் முன் அதை தட்டிக் காட்ட அது சுக்கு சுக்காய் உடைந்ததை பார்த்தவன் தனது குளிர் கண்ணாடியை அதிர்ச்சியில் கழற்றி உட்சபட்ச கோவத்தில் கத்தினான் "material மேனேஜர்? "என்க
அவர் பம்மிக் கொண்டே வர அவரை க்ரோதமாய் முறைத்தவன் "என்ன இது ?"என்று கேட்க
அவரோ நடுங்கிக் கொண்டே "சே.... சே..... செங்கல் சார் "என்க
அவனோ நக்கலாய் ஒரு புருவத்தை தூக்கியவன் "எது இதுவா "என்று ஒரு செங்கலை எடுத்து ஒரே கையால் உடைத்து சுக்கு நூறாக்க அவருக்கோ பயத்தில் தொண்டைக்குழி அடைத்தது "இந்த வேகாத செங்கலை வச்சு வீடு கட்டுனா building என்னாகும் ?"என்று
அவன் பொறுமையாய் அவர் தோளில் கையை போட்டு கேட்க அவரோ "அது... அது..... சார் "என்க
அவனோ தோளில் அழுத்தத்தை கூடியவன் "எது.... எது.....சார் இடுஞ்சு தரைமட்டமாயிடும் ஒரு சின்ன அதிர்வுக்கே .அறிவில்லை எத்தனை familiesoda உயிரு இப்படியா இருப்பீங்க ஒரு பொறுப்பை உங்கள நம்பி ஒப்படைச்சா இப்டி தான் பொறுப்பில்லாம எல்லாத்தையும் பண்ணுவீங்களா ?"என்று கத்த அவன் கத்தல் எட்டு திக்கிலும் ஒலிக்க அவனின் ரௌத்திர ரூபத்தை பார்த்த நவ்யாவே "எம்மா" என்று விழிகள் விரிய சிலையாகி நின்றிருந்தாள் .
பின் தன் தலையை கோதி தன் கோபத்தை சமன்படுத்திக் கொண்டவன் "நவ்யா "என்று அழைத்தான் அவன் அழைப்பில் சிலையாய் இருந்தவளுக்கு உயிர் வர அவனருகில் ஓடி வந்தவள் அவன் உத்தரவிற்காக நிற்க
அவனோ "இங்க இருக்குற அத்தனை பேருக்கும் செட்டில் பண்ணி அனுப்புங்க "என்று ஒரு பெரிய குண்டை அசால்டாக தூக்கி போட
அவளோ "பட் விக்..." என்று ஏதோ கூற வர அவனோ அவளை நோக்கி க்ரோதமாய் திரும்பியவன் "டூ வாட் ஐ say " என்றுவிட்டு அவர்கள் கெஞ்சியதையோ கத்தியதையோ காதிலேயே வாங்காமல் அங்கிருந்து சென்றான் .
.பின் அவள் வேலையே முடித்து விட்டு வர அவனோ காரில் சாய்ந்து நின்றுக் கொண்டு சிகரட் அடித்துக் கொண்டிருந்தான் .அவள் வருவதைப் பார்த்தவன் cigarette பிடித்துக் கொண்டே சொன்னதை" செஞ்சுட்டியா நவ்யா ?"என்க
அவளோ "செஞ்சாச்சு விக்ரம் பட் இந்த அபார்ட்மெண்ட்ஸ் இன்னும் ௪ மாசத்துல handover பண்ணனும் இப்போ போய் எல்லாரையும் டிஸ்ஸ்மிஸ் பண்ணா எப்படி விக்ரம் ?"என்க
அவனோ சற்று நேரம் யோசித்தவன் "வேலை இல்லாத சிவில் என்ஜினீர்ஸ் கண்டிப்பா facebookla ஒரு குரூப் வச்சிருப்பாங்க அவுங்களோட குரூப்ல job vacancy அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் போடுங்க நாளைக்கு வாக் இன் interview வச்சு recruit பண்ணிரலாம் ."என்க
அவளோ அவன் கூறியதை செய்தவள் தீவிரமாய் யோசிக்க அவனோ அவள் முகத்தை பார்த்தவன் "என்ன அப்டி யோசிக்குற ?"என்க
அவளோ "இல்ல விக்ரம் இது முன்னாடி வரைக்கும் நல்லா ரன் ஆய்ட்ருந்த கம்பெனில திடீர்னு இந்த ஒரு மாசமா ricemillah fire accident ,food இண்டஸ்ட்ரில அழுகுன ரா material use பண்ணது இங்க கன்ஸ்டருக்ஷன்ல வேகாத செங்கல் அதுவும் நீங்க govern பண்ற இந்த companiesla கரெக்டாக இந்த ஒரு மாசமா இவ்ளோ இன்சிடெண்ட்ஸ் நடந்துருக்கு .தனியா பாக்கேலா ஒன்னும் தெரில பட் sequentiallaah நடக்கேல சம்திங் ஐஸ் fishy "என்க
அவனிற்குமே அவள் கூறிய பின்னே அவன் கவனித்து வரும் தொழில்களில் இத்தனை வருடங்களாய் இல்லாது இந்த ஒரு மாதத்தில் இத்தனை பிரெச்சனைகள் நடந்திருக்க அவை எதேர்ச்சியாய் நடந்தவைகளாய் தோன்றவில்லை .அவனும் அவளும் அதன் காரணத்தை ஆராய அதன் காரணமான அவ்வுருவமோ மிகவும் கூலாக கடற்கரையில் நின்று காற்று வாங்கி கொண்டிருந்தது .அதற்கு ஒரு கால் வர இங்கே நடந்தவைகளை கேட்ட அது சிறு ஏளனச் சிரிப்பை உதிர்த்து விட்டு கடலை மீண்டும் வெறித்து இது ஆரம்பம் மட்டுமே என்னும் தோரணையில் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro