Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2

அடுத்த நாள் காலை 

வானளந்த கட்டடத்தில் பொன்னிறத்தில் echinos group of companies என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்க அக்கட்டிடத்தின் வெளிப்புறத்தை ஒருமுறை ஆராய்ந்த நவ்யா உள்ளே சென்றால் .

பின் receptionil நேர்காணல் நடக்குமிடத்தை அறிந்து கொண்டவள் அங்கே சென்று நேர்காணலிற்காக வந்திருந்த மற்றவருடன் அமர்ந்து கொண்டால் .அவள் கண்கள் அங்கே நேர்காணலிற்காக வந்தவர்களை ஆராய இங்கோ அறைக்குள் விக்ரம் நவ்யாவின் வருகையை தெரிந்து கொள்ள வெளியே பொருத்தப்பட்டிருக்கும் cctv விடியோவை ஆராய்ந்தான் .

அவள் வருகை அவன் இதழில் ஒரு சிறு புன்னகையை வரவழைக்க நேர்காணலும் ஆரம்பமாகியது .ஒவ்வொருவராய் வந்து தங்கள் திறமையை பதில்களால் வெளிப்படுத்த ஏனொ விக்ரமிற்கு எவரது பதில்களிலும் திருப்தி ஏற்பட வில்லை.

கடைசியாக நவ்யாவின் முறை வர கதவை திறந்து "excuse me sir "என்று அனுமதி கேட்டு நுழைந்தால் அவளது பார்வை அவனது பார்வையை நேரிடையாக சந்தித்தது எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அது அவள் தன்னம்பிக்கையை எடுத்துக்கூற முதல் அணுகுமுறையே அவனிற்கு அவள் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை கொடுத்தது .

அவளை சைகையால் அமர சொல்ல அவளும் அவனிற்கு முன் அமர்ந்தாள் பின் கையை நீட்ட அவள் அவளது சான்றிதழ்கள் அடங்கிய fileai அவனிடம் தந்தாள் .

fileai பார்த்து கொண்டே அவள் முகத்தில் பதட்டம் தெரிகின்றதா என்று அவன் பார்க்க அவளோ மிகவும் நிதானமாக அவனின் கேள்விகளை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

அவனிற்கே இவளிற்கு இது உண்மையில் முதல் நேர்காணல் தானோ என்று ஐயம் எழுந்தது .அவள் சான்றிதழ்களை சரி பார்த்தவன் பின் அவளிடம் கேள்விகள் கேட்க துவங்கினான் "சோ நவ்யா டெல் மீ about yourself "

எங்க அவளோ "goodmorning sir i am நவ்யா " என்றவள் தான் படித்த படிப்பு அதில் அவளது மதிப்பெண் அது போக அவள் செய்த இதர coursegalai பற்றி விவரித்தவள் அமைதி ஆனால்

அவனது அடுத்த கேள்வி "எதற்காக நீங்க இந்த கம்பெனிய சூஸ் பண்ணீங்க?"என்க

அவளோ "echinos குரூப் of கம்பெனிஸ்.சவுத் இந்தியால மட்டுமில்லாம பிற நாடுகள்லயும் தன்னோட கிளைகளை பரப்பி தொழில் சாம்ராஜ்ஜியத்துல தனக்கென்று தனியான அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட நிறுவனம்.கடந்த 10 வருடத்தில் வருடத்திற்கு 70 % முன்னேற்றம் காட்ட கூடிய ஒரு நிறுவனம்.தொழிலில் மட்டுமில்லாமல் பொதுசேவையிலும் ஈடுபட்டு இது வரை 1௦ லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு இலவசமாய் படிப்பை கொடுத்ததும் இனியும் கொடுத்துக்கொண்டும் இருக்கும் நிறுவனம் "

என்றால் தான் வேலை பார்க்க போகும் இடத்தை பற்றி இத்தனை ஆராய்ந்து வைத்திருப்பவளின் திட்டமிடும் திறனையும் இப்பதிலில் கண்டறிந்தான் .

பின் "ஓகே உங்கள பொறுத்த வரைக்கும் இந்த உலகத்திலேயே மிகவும் ஷக்தி வாய்ந்ததா நீங்க நெனைக்குறது எதை?"என்க

அவளோ "உண்மை "என்றால் அவன் பார்வை கூர்மையாக அவள் தொடர்ந்தால் அவனது மேஜையிலிருந்த ஒரு புத்தர் சிலையை சுட்டி காட்டியவள் புத்தர் கூறிய வார்த்தைகள் " three things cannot be long hidden the sun,the moon and the truth"நான் அதை முழுசா நம்புறேன் உண்மையை யாராலும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.உண்மை உள்ள எந்த செயலும் தோர்ததும் இல்ல உண்மை இல்லாத எந்த செயலும் ஜெய்சதும் இல்ல ."என்க அவளது நேர்மையை இப்பதிலில் கண்டான் .

இவ்வாறே அடுத்தடுத்து அவன் கேள்விகளை கேட்க அதற்குரிய விடையை தெளிவாக கூறியவள் தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .அவளது அனைத்து விடைகளும் திருப்திகரமான அவனிற்கிருக்க இறுதி கேள்வியை முன்வைத்தான் "ஓகே மிஸ் நவ்யா உங்களோட பெரிய பலமா நீங்க நெனைக்குறது என்ன ?"எங்க

அவளோ "மௌனம்" என்றால் "அவன் "கேன் யு elaborate என்க "அவளோ "என்னோட பலமா நா நெனைக்குறது என்னோட அமைதியை தான்.பல நேரங்களில் பேசி பேசி நிதானமில்லாம எடுக்குற முடிவுகளை விட மௌனமா இருந்து அந்த பிரச்னைய ஆராய்ஞ்சு எடுக்குற முடிவு தான் வெற்றியை குடுக்கும் .வாழ்க்கைலயும் சரி தொழில்லயும் சரி மௌனம் நிதானத்தை குடுக்கும் நிதானம் தெளிவை குடுக்கும் தெளிவான முடிவு வெற்றியை குடுக்கும் "என்க

அவனோ"குட் understanding .சோ நவ்யா ஐ அம் இம்ப்ரெஸ்ஸட் வித் யுவர் performance and yes யூ ஆர் செலக்டட் போர் தி ஜாப் .கலெக்ட் யுவர் அப்பொய்ண்ட்மென்ட் லெட்டர் இன் நெக்ஸ்ட் 10 மினிட்ஸ் அண்ட் join in யுவர் டியூட்டி from tomorow "என்க அவளது முகத்திலோ சாதித்ததன் நிறைவு குடிகொண்டது எனில் மீண்டும் சில நொடிகளிலேயே முகத்தை சீராக்கி கொண்டால் அதை கவனித்தவன் உணர்ச்சிகளை கை ஆள்வதிலும் அவள் சிறந்தவள் என்று தெரிந்து கொண்டான் .

பின் அவள் எழுந்து"thank யு சோ மச் சார் "என்க அவன் கையை நீட்டினான் கை குலுக்க.கை குலுக்கியவளின் கைகளில் அடுத்த சில நிமிடங்களில் அப்பொய்ன்ட்மென்ட் ஆர்டர் இருந்தது .அதை அவள் கையில் கொடுத்த விக்ரம் "வெல்கம் டு echinos பேமிலி "என்று சிரிக்க அவளும் "thank யு சார்" என்று மெலிதாய் சிரித்தாள் பதிலிற்கு புன்னகை புரிந்தவன் அவள் வெளியே செல்ல போக அவளை அழைத்தான் "நவ்யா "என்று

அவள் திரும்ப அவனோ "உங்க கருத்து நல்லாருந்துச்சு ஆனா சில நேரங்களில் தேவை இல்லாத மௌனம் பிரெச்சனையை விரிவு தான் படுத்தும்.(அனுபவம் போல )"

என்க அவளோ பதில் கூறவில்லை சிறு புன்னகை மட்டுமே பதிலாய் கிடைத்தது .

அவள் சென்றதும் தனது நாற்காலியில் அமர்ந்து வேலை செய்ய துவங்கியவனின் கண்களில் அவனது மேஜையில் இருந்த புத்தர் சிலை கண்ணில் பட நவ்யா உண்மையை பற்றி கூறிய வார்த்தைகள் அவனிற்கு ஞாபகம் வர இலவச இணைப்பாய் இதழ்கள் விரிந்து கொண்டது உதடுகள் "different பெர்சோனாலிட்டி " என்று உச்சரிக்க அவனது நினைவடுக்குகளை இன்று அவனே அறியாது நவ்யாவே அதிகமாய் ஆக்ரமித்திருந்தால் .

இங்கோ அப்பொய்ன்ட்மென்ட் லெட்டரை வாங்கிய நவ்யா மனதில் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைய அங்கோ யாரும் இன்றி மிகவும் அமைதியாக இருந்தது.இன்று வித்யுத் அணைத்து நண்பர்களும் வருவதாய் கூறி இருந்தான் .அப்படி இருக்க இவ்வசாத்திய அமைதியை கண்டு குழம்பியவள் "அண்ணா ,அண்ணி, அதிதி எங்க இருக்கீங்க "என்று கத்தி கொண்டே நுழைய அவளிற்கு எந்த பதிலும் கிடைக்க வில்லை .பின் தோட்டத்திற்கு வந்தவள் அங்கே நிற்க அவளை போலவே சைந்தவியும்,அதிதியும் அங்கே நின்று அனைவரையும் தேடிக் கொண்டிருந்தாள் .அவர்களிடம் வந்தவள் "அண்ணி,அதிதி இங்க என்ன பண்றீங்க அண்ணா இன்னிக்கு பிரிஎண்ட்ஸ் எல்லாம் வருவாங்கனு சொல்லிருந்தாங்களே எல்லாரும் எங்க?"என்று

கேட்க சைந்தவி"இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்கடா மொட்டைமாடில துணிய எடுத்துட்டு வரதுக்குள்ள ஆள காணோம் ".என்றவள் அவர்களின் உடையின் நிறத்தை கவனிக்க இருவரும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தனர் இன்று காலை வித்யுத் அவளிற்கு வெள்ளை நிற ஆடையை எடுத்து கொடுத்தது ஞாபகம் வர சம்திங் வ்ரோங் என்று அவள் யோசித்த நொடி நவ்யா,அதிதி மற்றும் சைந்தவியின் மேல் பற்பல திசையிலுமிருந்து சாயங்கள் ஊற்றப்பட்டது .அவர்கள் திகைத்து விழித்த அடுத்த நொடி பலரின் சிரிப்பு சத்தம் கேட்க திரும்பியவர்கள் முன் நண்பர்கள் பட்டாளமே இருக்க மூவரும் முறைக்க அனைவரும் சேர்ந்து "ஹாப்பி ஹோலி "என்று கத்த மூவரும் முறைக்க

சரண் "ஆங் இப்போ தான் லட்சணமா இருக்கீங்க மூணு பேரும்" என்க மூவரும் அடிங் கொய்யால என்று துரத்தி துரத்தி அனைவர் மேலும் சாயத்தை ஊற்றி விளையாட நவ்யாவிற்கு அன்றைய தினம் முழுதும் மகிழ்ச்சியுடன் சென்றது .பின் அவள் வேலை கிடைத்த செய்தியை கூற அனைவரும் அவளிற்கு வாழ்த்தை தெரிவித்தனர் .பின் தனதறைக்கு வந்தவள் தன் தாய் தந்தையரின் புகைப்படத்தை கையில் எடுத்து அவர்களோடு மானசீகமாய் பேசினால் அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் எட்டி பார்த்தது .

பின் அவளது அறையிலிருந்த balconyil வந்து நின்றவள் இன்றைய நிகழ்வுகளை ஆசை போட அவளது நினைவடுக்கில் விக்ரமின் அனைத்து செய்கைகளும் கண்முன் தோன்றியது .உள்ளே நுழைய கூறுகையில் அவனது பார்வையில் இருந்த அந்த கூர்மை ,கேள்விகளில் இருந்த தெளிவு ,முகத்தில் உறைந்திருந்த கடுமையையும் தாண்டி உதட்டில் உறைந்திருந்த ஒரு சிறு புன்னகை .அதை நினைவு கூறுகையில் அவள் இதழ்களிலும் தானாய் புன்னகை குடி கொண்டது .அவனது செய்கைகளை நினைவுகூர்ந்தவள் இதழும் மனதும் ஒருசேர உச்சரித்து "மெஜஸ்டிக்"என்று இங்கே நவ்யா இப்படியிருக்க அங்கு விக்ரமோ தனது வீட்டில் தனது அறையில் இருக்கும் balcony வழியாய் அவ்வாழக் கடலை ரசித்துக் கொண்டிருந்தான் .

அவனது வீடு கடற்கரையை ஒட்டி அதிகமான பரப்பளவில் ஒவ்வொரு மூலையிலும் பணத்தின் ஆளுமை தெரியும் படியாய் பார்த்து பார்த்து பணத்தால் இழைத்து சிறு மாளிகையாகவே உயர்ந்து நின்றது .அவனது அறையிலிருந்து வெளியே பார்த்தால் அந்த ஆர்ப்பரிக்கும் ஆழியின் அழகை அணு வணுவாய் ரசிக்கலாம்.அவன் இன்பத்திலும் துன்பத்திலும் அவனை சமநிலை படுத்தும் சக்தி அக்கடலிற்கே உண்டு .

என்றும் மானசீகமாய் கடலிடம் பேசுபவன் இன்றும் இன்றைய நிகழ்வுகளை தனது கடல் தோழியிடம் பகிர்ந்து கொண்டிருக்க.நவ்யாவை பற்றி நினைத்தவனின் மனத்திலும் அக்கடலை போன்றே ஒரு அமைதி குடி கொண்டது .அவனது சிந்தனை அவளைக் கூறியது வித்யாசமானவள் என்று.இவ்வாறு அவன் அமைதியாய் நின்றுகொண்டிருக்க. அவ்வமைதியை குலைக்கவே அவனது மொபைல் தனது இருப்பை காலின் மூலம் உணர்த்தியது .

அதை எடுத்தவன் காதில் வைத்து "ஹலோ விக்ரம் here "என்க அந்த புறம் கூறிய செய்தியில் இதுவரை சாந்தமாய் இருந்த அவனது முகம் அடுத்த நொடி குழப்பத்தையும் கோபத்தையும் அடைந்தது .கைகள் இறுக "வாட் ??"என்றான் மொத்த கோபத்தையும் குரலில் காட்டி .

என்னவாய் இருக்கும் ?

இருவரின் நினைவுகளும் ஒரே கோட்டில் பயணிக்க இவ்விருவரும் வாழ்க்கை பயணத்திலும் ஒன்றாய் பயணிப்பரா?

பொறுத்திருந்து பாப்போம் 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro