Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

19

இங்கு இவர்கள் இப்படி இருக்க வீட்டிற்கு வந்த நவ்யாவுக்கோ மனம் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது .

குழம்பிய முகத்தோடு luggageai தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குள் வர வீடோ நிசப்தமாய் இருந்தது .யாரும் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள் நேரத்தை பார்க்க அதுவோ மதியம் ஒன்றென காட்டியது . வேலைக்கு சென்றிருப்பர் என்று சைந்தவிக்கு கால் செய்ய phoneai எடுக்க அதிலோ 100 missed கால் வித்யுத் ,சைந்தவி மற்றும் அதிதியின் எண்களில் இருந்து இருந்தது .

phoneai silent modeil போட்டது நினைவு வர தலையில் அடித்துக்கொண்டவள் சைந்தவிக்கு கால் செய்தால் .

சைந்தவி "ஹே நவி எவ்ளோ தடவ கால் பண்றதுடா ஏன் எடுக்கவே இல்ல நீ ?ஹாப்பி பர்த்டே டா குட்டி .டென்மார்க்ள எல்லாம் ஓகே தான "என்க

நவ்யா "தேங்க்ஸ் அண்ணி.அண்ணி நா இப்போ டென்மார்க்ள இல்ல அண்ணி ஒரு சின்ன ப்ரோப்லேம் மறுபடி இந்தியா வந்துட்டோம்."என்க

அப்புறம் சைந்தவியோ "எது இந்தியா வந்துட்டியா முதல்லயே சொல்றதில்லயா நவி "என்க

நவ்யா "என்னாச்சு அண்ணி எனி ப்ரோப்லேம்? ஒர்க்ல தான இருக்கீங்க ?"என்க

சைந்தவி "இல்லடா ஏதோ நேத்திக்கடன் இருக்குன்னு நாங்க எல்லாரும் ஊருக்கு வந்துருக்கோம் நாளைக்கு தான் சென்னை வருவோம் .ப்ச் முதல்லயே நீ வரது தெருஞ்சுருந்தா நாளைக்கே கெளம்பிருக்கலாம் பர்த்டே அன்னிக்கு தனியா விட்டுட்டேன் "என்க

நவ்யாவோ மெலிதாய் சிரித்தவள் "அச்சோ அண்ணி ஒரு பிரெச்சனையும் இல்ல ஒரு நாள் தான நா இருந்துக்குறேன் வேணா birthdayah postpone பண்ணிருவோம் நாளைக்கு நீங்க பொறுமையா சாமி கும்புட்டுட்டு வாங்க ."என்க

சைந்தவி "ஒரு ஸ்வீட் கூட செஞ்சு வைக்கல நா sorryda .டேக் கேர் பத்திரமா இரு நாளைக்கு காலைல வந்துருவோம் "என்க

நவ்யா "ஓகே அண்ணி டேக் கேர் .என் மருமகள் என்ன பண்ரா?" என்று கேட்க

சிரித்த சைந்தவி "உன் மருமகளா இன்னிக்கு முதல் தடவ அசைவு தெருஞ்சுச்சுடா. சரியான அப்பா புள்ளையா இருப்பா போல முதல் தடவ அசஞ்சதே உன் அண்ணனை திட்டேள தான்.இப்போவே இவ்ளோ சப்போர்டுஹ் வெளிய வந்தா என்ன பண்ண போறாளோ தெரில "என்க கேட்ட நவ்யாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது .

பின் சற்று நேரம் உரையாடி விட்டு வைத்தவள் தன் அறையில் சென்று குளித்து விட்டு பூஜை அறையில் கண்மூடி பிரார்த்திக்க தன் அருகில் ஏதோ நிழலாடுவதைப்போல் உணர்ந்தவள் கண்ணை திறந்து பார்க்க அவள் எதிரில் விக்ரம் நின்றிருந்தான் .

அவனை பார்த்தவள் சிறு சிரிப்புடன் "எல்லாம் ஓகேவா விக்ரம் ?"என்க

அவனோ ஆமோதிப்பாய் தலை அசைத்தவன் "everything sorted."என்க மீண்டும் ஒரு முறை கண்களை மூடி பிரார்த்தித்த நவ்யா ஆரத்தி காண்பித்து விட்டு விக்ரமிடம் ஆரத்தி தட்டை நீட்டி "எடுத்துக்கோங்க" என்று நீட்ட ஆரத்தியை கண்ணில் ஒற்றிக்கொண்டவன் அவளுடன் வெளியே வந்து sofaavil அமர்ந்தான் .

அவன் எதிரே உள்ள இருக்கையில் அவள் அமரப்போக அவள் கையை பற்றி இழுத்தவன் அவளை தன் கை அணைவிற்குள் கொண்டு வர அவளோ நன்றாக அவன் மேல் சாய்ந்து கொண்டு அமர்ந்தவள் "யாருனு எதுவும் தெருஞ்சுச்சா விக்ரம் ?"என்க

அவனோ இவற்றை எல்லாம் சொன்னால் பயந்துவிடுவாள் என்று நினைத்தவன் அவளின் தலைமுடியை கோதியவாறே "ம்ஹும் இன்னும் தெரியலடா ஆனா சீக்கிரமே ப்ரோப்ளேம்லாம் ஒரு முடிவுக்கு வந்துரும் என்றவன் ஆமா வித்யுத் சைந்தவிலாம் எங்க உன் பர்த்டே அன்னிக்கு எப்போவும் லீவு போட்ருவானுங்களே "என்க

அவளோ "அவுங்க ஊருல இல்லப்பா ஏதோ நேத்திக்கடனாம் ஊருக்கு போயிருக்காங்க .நாம திரும்பி வரத இன்போர்ம் பண்ணல,callsum அட்டென்ட் பண்ணலேல சோ டென்மார்க்ள இருக்கேனு நெனச்சு போய்ட்டாங்க "என்க

விக்ரமிற்கோ மனதில் "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" என்ற குரல் கேட்டது அவள் புறம் திரும்பியவன் "அடியேய் ஆனாலும் உனக்கு இவ்ளோ தைரியம் ஆகாதுடி யாரும் இல்லாத நேரத்துல வீட்டை தொறந்து போடு வச்சுருக்க அது போதாதுன்னு நா வேற வீட்டுக்கு உள்ள வந்து உன்ன கட்டி புடுச்சுட்டு உக்காந்துருக்கேன் நீ என்னனா coolaah வசதியா இன்னும் என் மேல சாஞ்சுட்டு உக்காந்துருக்க கொஞ்சமாச்சு பயம் இருக்கா உனக்கு "என்க

அவளோ அவனை திரும்பி பார்த்து சிரிக்க அவள் சிரிப்பதை குழப்பத்துடன் பார்த்தவன் "என்னடி சிரிக்கிற ?"என்க

அவளோ அவன் கண்ணை பார்த்தவள் "சத்தியமா எனக்கே தெரியலைங்க எப்படி இவ்ளோ தைரியமா இருக்கேன்னு.உங்களோட இருக்கேல ரொம்ப securedaah பீல் பண்றேன்.எந்த பொண்ணுக்குமே தன் அப்பாவோட நெஞ்சுல படுத்து தூங்கேல ஒரு நிம்மதி கிடைக்கும் அந்த நிம்மதியை நா உங்களோட இருக்கேல பீல் பண்றேன் ."என்க

அவள் கூறியதை கேட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு மென்மையாய் அணைத்து "நவி "என்க

அவள் "ம்ம் "என்க

அவன் "மீண்டும் நவி " என்க

அவனை நிமிர்ந்து முறைத்தவள் "கொஞ்ச நேரம் பீல் பண்ண விட மாட்டியாடா நீ "என்க

சிரித்தவன் "பசிக்குதுடி மணி மதியம் மூணாச்சு காலைலயும் சாப்பிடல"என்க

பதறி அவனை விட்டு விலகியவள் "லூசா விக்ரம் நீங்க இவ்ளோ நேரம் சாப்பிடாம உங்கள எல்லாம் என்ன பண்றதுனே தெரில.எனக்கு வேற கேசரி தவிர்த்து ஏதும் சமைக்க தெரியாதே "என்று முகத்தை பாவமாய் வைக்க

அவனோ அவள் பாவமான முகத்தை பார்த்து சிரித்தவன் "சேரி சேரி மூஞ்ச அப்டி வைக்காத restaurant போகலாம் வா "என்று அவளுடன் restaurant சென்றான்.ஆர்டர் செய்தவை வந்து விட உண்ணுவதற்கு திரும்பிய விக்ரம் திரும்ப நவ்யா ஏதோ ஒன்றை சிரித்தபடி கவனித்துக்கொண்டிருந்தால் .

அப்டி என்னத்த பாத்து சிரிக்குறா என்று அவன் நோக்க அங்கோ ஒரு குழந்தை இரட்டை குடும்பி போட்டுக்கொண்டு icecreamai முகம் முழுவதும் ஒட்டவைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தது .பின் என்ன நினைத்ததோ தன் கையிலிருந்த இஸ்கிரீமை தன் தந்தையின் முகத்தில் அப்பிவிட்டு கை தட்டி சிரிக்க அந்த காட்சியை பார்த்த விக்ரம் இதழிலும் புன்னகை ஒட்டிக்கொண்டது .

அக்குழந்தையை பார்த்துக்கொண்டிருந்த நவ்யாவிடம் திரும்பியவன் "என் நெலம எண்ணாகபோபோதோ ?"என்று சொல்ல

புரியாமல் திரும்பிய நவ்யா "என்ன விக்ரம்?"என்க

அவனோ அவளை பார்த்து சிரித்தவன் "இல்ல நம்ம பொண்ணு என்ன பாடு படுத்தப்போறாளோனு நெனச்சேன் சிரிச்சேன் "என்க

நவ்யாவின் கன்னங்கள் இரண்டும் செம்மை வண்ணம் பூசிக்கொள்ள பொய்யான கோபத்தை குரலில் காட்டியவள் "சாப்பிடுங்க விக்ரம்" என்று விட்டு உண்ண அவனோ அவளை நோக்கி ஒற்றை புருவம் உயர்த்தியவன் "சேருங்க மேடம் "என்றவாறே உண்ண துவங்கினான் .

இவ்வாறே சிறு சிறு சீண்டல்களுடனும் விவாதங்களோடும் உண்டு விட்டு இருவரும் வெளியே வருகையில் மணி நான்கு .விக்ரம் "சோ பர்த்டே பேபி அடுத்து எங்க போலாம் "என்க

நவ்யா "அன்னை இல்லம் போங்க விக்ரம் "என்க

அவன் அவளை கேள்வியாய் நோக்கினான் "அங்கேயா"என்று அவள் ஆமோதிப்பாய் தலை அசைக்க இருவரும் அன்னை இல்லம் நோக்கி பயணப்பட்டனர் .

அவள் இறங்கியதும் அங்கே விளையாடிக்கொண்டிருந்த சில வாண்டுகள் "அக்கா "என்று இவள் கால்களை ஓடி வந்து கட்டிக்கொள்ள அவளும் ஒரு குழந்தையை கையில் தூக்கியவள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு ஒரு மரத்தடியை நோக்கி சென்றால் விக்ரமிற்கு கண்ஜாடை காட்டி விட்டு .

அவர்களை சுற்றி அமர வைத்தவள் ஏதேதோ பேசி அவர்களோடு சிரித்துக்கொண்டிருக்க அந்த மரத்தில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம் இதழில் உறைந்த சிரிப்புடன் .அவனை ஓரக்கண்ணால் கண்டவள் ஒரு வாண்டின் காதில் என்ன கூறினாலோ அந்த வாண்டு மண்டையை ஆட்டிவிட்டு அவன் அருகில் வந்து அவன் pantai பிடித்து இழுத்தது .

அவன் "என்ன பாப்பா "என்று கேட்க

அதுவோ "சார் கொஞ்சம் குனியுறீங்களா கழுத்து வலிக்குது உங்கள எக்கி எக்கி பாத்து "என்க விக்ரமோ மனதில் சிரித்தவன் அவள் உயரத்திற்கு மண்டியிட அந்த வாண்டோ இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டது "நீங்க தான் என்க நவ்யா அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா "என்க

அவனோ நவ்யாவை ஓரக்கண்ணால் பார்த்தவன் "ஆமா ஏன் கேக்குறீங்க" என்க

அந்த வாண்டோ "அது அவ்ளோ easy இல்லையே சில கண்டிஷன்ஸ் இருக்கே " என்க

அவனோ சிரமப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவன் வெளியே பொய்யாய் வியந்து "ஓஹோ அப்டியா மேடம் என்ன கண்டிஷன்ஸ்னு சொன்னீங்கன்னா செஞ்சுருறேன் "என்க

அந்த வண்டோ கையை நீட்டியது "எங்களோட friends ஆகணும் "என்று சிரித்தவாறே தலை சாய்த்து கூற

அது சொல்லிய அழகில் சிலிர்ப்புற்றவன் அவளை அள்ளி எடுத்து கன்னத்தில் இதழ் பதித்து" ஓகே குட்டி மேடம் "என்றவாறு அவர்கள் gangil தன் வயதை மறந்து சிறுவனாய் மாறி விளையாடிக்களித்தான்.அவன் முகத்தில் என்றும் கண்டிராத ஒரு நிறைவான ஆனந்தம் நிரம்பி வழிந்தது .அவனின் அவ்வதனத்தை கண்ட நவ்யாவிற்கும் மனது நிறைந்தது .

பின் நேரமாகிவிட அந்த வாண்டுகளிடமிருந்து பிரியா விடை பெற்று வந்த விக்ரம் நவ்யாவின் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு காரில் வந்து அமர்ந்தான் .அவன் காரை கிளப்பாமல் அவளையே பார்க்க அவளோ "ஹலோ என்ன பாஸ் என்னையே பாத்துட்ருக்கீங்க வீட்டுக்கு போற ஐடியா இல்லையா ?"என்க அவனோ ஏதும் பேசாமல் அவளை இழுத்து அணைத்தான் .

முதலில் அதிர்ந்தவள் பின் வாகாய் அவன் மார்பில் தன் தலையை வைத்துக்கொண்டே "என்னாச்சு விக்....."என்க

அவனோ "ஷ்ஷ்ஷ் எதுவும் பேசாத .இன்னிக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு சத்தியமா தெரியாதுடி அங்க டென்மார்க்ள என்னோட கனவான racing ,அப்பறோம் உன்னோட ப்ரோபோசல் ,இன்னிக்கு இந்த கொழந்தைங்களோட இந்த most happiest moments .இது வரைக்கும் இழந்த மொத்த சந்தோஷத்தையும் ஒரே நாளுல அனுபவிக்குற மாறி இருக்கு நவி. உன் birthdayku எனக்கு நெறய surprises குடுத்துட்ட.யு know சம்திங் நவி lifela என்ட நெறைய பணம் இருந்துச்சு ,இருக்கு ஆனா நீ வர வரைக்கும் பணம் மட்டும் தான் இருந்துச்சு .everything was the same அண்ட் perfect until ஐ saw you but the difference is my days are now beautiful after you came in my life . போக்க முடியாத டென்ஷன் எல்லாமே உன் ஸ்மைல் பார்த்த அடுத்த செகண்ட் எங்கே போச்சுன்னே தெரியாது.இந்த feelah மூணே வார்த்தைல என்னால அடக்க முடியாது நவி. ஐ நீட் யு டில் மை லாஸ்ட் breath ஜஸ்ட் லைக் திஸ்."என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் விழும் ஒரு கற்றை முடியை ஒதுக்கியவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் நீ ஏன் சொந்தம் என்னும் உணர்வு அதில் தென்பட்டது .

பின் அவளது கண்ணை ஒரு சிறு துணி கொண்டு கட்டியவன் தன் கை அணைவில் வைத்தவாறே காரை செலுத்தினான் .அவள் எங்கே செல்கிறோம் என்று கேட்கவே இல்லை.

பின் ஒரு இடத்தில நிறுத்தியவன் அவள் புறம் வந்து கதவை திறக்க அவள் தன் கையை நீட்ட அவனோ அவளை அப்படியே அலேக்காக கையில் ஏந்திக்கொள்ள நவ்யா "achoo விக்ரம் என்ன பண்றீங்க விடுங்க "என்க

அவனோ அவள் கூறியதை காதிலேயே வாங்கி கொள்ளாமல் ஒரு இடத்தில இறக்கிவிட்டவன் சற்று நேரம் கழித்து அவள் கண்கட்டை அவிழ்த்துவிட்டான் .

கண்ணை கசக்கி திறந்தவள் தான் கண்முன்னே கண்ட காட்சியில் அப்படியே சிலையாய் நின்றாள்.மாமல்லபுரத்து கடற்கோவில் முழுநிலவின் ஒளியில் பளிங்காய் ஜொலிக்க அதை அடுத்து அமைந்திருந்த ஆர்ப்பரிக்கும் ஆழி நிலவொளியில் வெள்ளி வார்த்தாற்போல் மினுமினுக்க மேலெழும்பி வீழ்ந்த அலைகளின் நீர்த்துளிகள் வைரக்கற்களாய் சிதறிட அந்த ரம்மியமான காட்சியை கண்டவளுக்கோ வார்த்தையே வரவில்லை .சிலையென இருந்தவள் பின்னே திரும்பி ஓடி வந்து விக்ரமை அணைத்துக்கொள்ள அவனும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் தன் மனம் கவர்ந்தவளை .

பின் அவளை தன்னை விட்டு விலக்கியவன் ஒரு boxai திறக்க அதிலோ ஒரு மெல்லிய செயின் இருந்தது .அதை எடுத்தவள் ஆச்சர்யத்தில் கண்களை மிகவும் அகலமாய் விரித்தாள் .அது அவள் அம்மாவுடையது .

அவள் சொந்தக்காரர்களிடமிருந்து அவளால் தன்னையும் தன் தந்தை தனக்காக சேர்த்து வைத்த சொத்தையும் காக்க முடிந்தது எனில் அவள் அன்னையின் அந்த சங்கிலியை அவர்கள் யாரிடமோ விற்றுவிட அவளால் அதை காக்க இயலாமல் போனது.தன் அன்னை மூச்சு முடியும் வரை ஒரு உறுப்பை போல் அவருடனே அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்த சங்கிலியை இழந்தது அவளிற்கு அந்த சமயம் அதிக வருத்தத்தையே தந்தது .என்றுமே பெண்களுக்கு ஆயிரம் நகைகள் இருந்தாலும் தன் அன்னை அணிந்திருந்த நகை என்றுமே மனதால் மிகவும் விலை உயர்ந்ததாக உணர்வில் கலந்ததாகவே இருக்கும் இருக்கும் அதற்கு நவ்யா மட்டும் என்ன விதிவிலக்கா .

அதைக்கண்ணீருடன் கண்டவள் விக்ரமை நிமிர்ந்து எப்படி என்பதை போல் பார்க்க அவனோ சிரித்தவன் "உனக்கு இது ரொம்ப ஸ்பேசியல்னு தெரியும் அதான் எப்டியோ track down பண்ணி வாங்கிட்டேன் .இனி உன் அம்மாவை மிஸ் பண்ண மாட்டேள."என்க

அவளோ இல்லை என சிரிப்புடன் தலை அசைத்தாள் .பின் அதை அவள் கையிலிருந்து எடுத்த விக்ரம் கொக்கியை கழற்றி அவள் கழுத்தில் அணிவித்து விட்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து கை கோர்த்துக்கொண்டவன் அவளுடன் அந்த கடற்கரையோரத்தில் நடைபயில காரிகையவளோ நெஞ்சம் நிறைந்த காதலுடன் தன்னவனின் தோளில் சுகமாய் சாய்ந்து கொண்டால் .

இவர்கள் இங்கே ஏகாந்தமான காதலில் திளைத்திருக்க இங்கே விக்ராந்த்தோ விக்ரமும் நவ்யாவும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டே சிக்ரெட்டே பிடித்துக்கொண்டிருந்தவன் "இவன்னா அவ்ளோ இஷ்டமா விக்ரம் உனக்கு?" என்றவாறு நவ்யாவின் பிம்பத்தின் மேல் பார்வையை திரும்பியவன் பார்வை வக்கிரமாய் அவள் பிம்பத்தை மேய ஏளனமாய் சிரித்தவன் .அந்த சிகெரென்டரை வைத்தே அவளது பிம்பத்தை சுட்டெரித்தான்.

தொடரும் ..............

so guys how about this chapter .enaku love sceneslaam avlo expressiveaah eludha varaadhuppa edho try pannirken if you feel it to be too cheesy just ignore yarr.

then vikranth's target is now turned towards navya what do you expect to happen next ?

wait till tomorrow 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro