💟 ஜீவாமிர்தம் 71
இரவு ஆனந்த ஸாகரத்தில் நிர்மலா ஜெய் நந்தனிடம் எரிந்து விழுந்து கொண்டு இருந்தார். "வீட்ல என்ன பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு? இப்போ டார்சன் பார்க்குறது ரொம்ப முக்கியமா போச்சா உங்களுக்கு? நீங்களே ஒரு மினி டார்சன் தானே..... யானைய காட்டுறேன், சிறுத்தைய காட்டுறேன், காட்டெருமைய காட்டுறேன்னு சொல்லி எப்போ பார்த்தாலும் நம்மள ஒரு பீதியிலயே வச்சிருக்கிறது; இதுல படம் வேற பார்க்கணுமாக்கும்! அதை ஆஃப் பண்ணிட்டு என் பக்கத்துல வந்து உட்காருங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்ற சொன்ன மனைவியின் சொல் தட்டாமல் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு நிர்மலாவின் அருகே வந்து அமர்ந்து கொண்டு அவரை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.
"இப்பல்லாம் எதுக்கு எடுத்தாலும் என்னைய திட்டிட்டே இருக்க நிலாம்மா.... இதெல்லாம் சரியில்லை. எல்லாம் ஹாப்பியா செட் ஆகி ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. இப்ப உனக்கு மட்டும் தனியா எங்க இருந்து பிரச்சனை வந்துருச்சு பஞ்சு மூட்டை?" என்று கேட்ட தன் கணவனிடம் ஆழ்ந்த ஒரு மூச்செடுத்து விட்டு,
"உங்கள அஃபெக்ட் பண்ணலன்னா அது உங்க கண்ணுக்கு பிரச்சனையாவே தெரியாது. எல்லா பிள்ளைங்களுக்கும் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சுட்டு நம்ம புள்ளைய மட்டும் நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க, அவனுக்கு ரிச்சுவல்ஸ் கூட நம்ம அரேன்ஜ் பண்ணல, ரெண்டும் பிஸினஸ பார்க்குறேன் பார்க்குறேன்னு போயிட்டு போயிட்டு வந்துட்டு இருக்குங்க. நம்ம நடத்துற தொழிலை எல்லாம் சரி பண்றதுக்கு உங்களுக்கு என் மகனும், மருமகளும் தான் கிடைச்சாங்களா? கவிம்மா முகம் எந்நேரமும் ஒரு யோசனையிலயே இருக்கு. என் வயித்துல பொறந்த எரும அது ஒண்ணையும் கண்டுக்காம பண்ணையில நம்ம கன்னுக்குட்டி சிந்து பின்னாலயே போய் விளையாடி அதுக்கு முத்தம் குடுத்துட்டு திரியுது. எனக்கு தெரியாது, அவங்க ரெண்டு பேரும் லைஃப்ல அடுத்த லெவலுக்கு எப்போ போகப் போறாங்கன்னு நாளைக்கு காலையில டீடைம்ல நந்து கிட்ட பாலிஷ்டா பேசிடுறீங்க அத்தான்.....!" என்று சொன்ன தன் மனைவியிடம் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் ஜெய் நந்தன்.
"ஸ்ரீ நான் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.....!" என்று சொன்ன தன் மனைவியை முறைத்தவர்,
"இல்ல தெரியாம கேக்குறேன்..... என்னை பார்த்தா உங்க எல்லாருக்கும் கோலிக் குண்டு மாதிரி தெரியுதா? ஆளாளுக்கு உருட்டி விளையாண்டுட்டு இருக்கீங்க!
உன் உத்தம புத்திரன் அவனுக்கு ரிஷப்ஸன் வச்சுடலாம்ன்னு சொன்ன அஞ்சாவது நிமிஷம் என் முன்னாடி வந்து ரிஷப்ஸனோட நிறுத்திக்கங்க, அதுக்கு மேல எதுவும் ப்ளான் பண்ணாதீங்க, எங்க லைஃப் ஐ எப்போ ஸ்டார்ட் பண்ணனும்னு நாங்க டிஸைட் பண்ணிக்குறோம்னு என் காதை கடிச்சுட்டு போயிட்டான். இத எங்க சித்தப்பா கிட்ட சொன்னா உங்க இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் ஆடுங்கன்னு அவர் என்னைய பிடிச்சு கிழிச்சுட்டு போனாரு. அவன் பொண்டாட்டிக்கு ஷாப் ஓப்பன் பண்ணி தரணும்னு ஆசைப்பட்டத உன் பையன் உங்கிட்ட தானே சொன்னான்; இப்போ நீ கேக்க நினைக்குற கேள்விய அவன் கிட்டயே கேளு; இல்ல மலையில வந்து தங்கணும்னு முடிவெடுத்ததுக்கப்புறம் ஏதோ ஒரு மினி ஹவுஸ்ல போய் தங்கப் போறேன்னு உங்கிட்ட மட்டும் சொன்னாரே உங்க அர்ஜுன் அண்ணா.... அவர் மாப்பிள்ளைட்ட அவரை பேசச் சொல்லு! அத விட்டுட்டு எதுக்கு எடுத்தாலும் என்னைய கோர்த்து விடாத; எனக்கு நிறைய வேலை இருக்கு!" என்று சொல்லி விட்டு கட்டிலில் ஒருக்களித்து படுத்துக் கொண்டவரை பார்த்து சிரித்துக் கொண்டார் நிர்மலா.
"ச்சை இந்த நரசிம்மமூர்த்திட்ட போய் ஒரு முக்கியமான வேலைய செய்ய சொன்னேன் பாரு; என்னை சொல்லணும்! லிஸன் ஜெய் ஸார்..... என்னோட கேள்விக்கு நானே விடை தேடிக்கறேன். அதுவும் இப்பவே... இண்டர்காம்ல நந்துவை கூப்பிடவாவது செய்றீங்களா?" என்று கேட்ட தன் மனைவியை கோபப்பார்வை பார்த்தார் ஜெய் நந்தன்.
"இண்டர்காம்ல கையை வைக்கிறதுக்கு முன்னாடி வாட்சை பாரு நிலாக்குட்டி..... ராத்திரி பத்து மணி; உனக்கு ஏன் இன்னிக்கு சீக்கிரம் தூக்கம் வரல? வா என் பக்கத்துல வந்து படுத்துக்கோ. ஆனந்த்ட்ட காலையில பேசிக்கலாம்!" என்று சொல்லி தன் மனைவியை அழைத்தார் ஜெய் நந்தன்.
"முடியாது. நான் கேக்க நினைக்குறத கேட்டுட்டு தான் வந்து படுப்பேன்!" என்று ஜெய்யிடம் சொல்லிக் கொண்டு தன் மகனை அழைத்தே விட்டார் நிர்மலா.
தன் அறையில் இண்டர்காம் சப்தமிட்டதும் ஜீவானந்தன் எரிச்சலுடன் உச்சுக் கொட்டி விட்டு தன் மடியில் கிடந்த கவிப்ரியாவின் உறக்கம் கலைந்து விடாமல் அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு சென்று அழைப்பை ஏற்றான்.
"ஹலோ!" என்றவன் தன் அன்னையின் குரல் கேட்டவுடன், "சொல்லுங்கம்மா என்ன இந்த நேரத்துல..... எதுவும் பிரச்சனை இல்லயே?" என்று கேட்டான்.
"அதெல்லாம் இல்ல நந்து.... நீ தப்பா எடுத்துக்கலன்னா எனக்கு உங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்! நீ உன் மேரேஜ் லைஃப்ல ஹாப்பியா இருக்கியா நந்து?" என்று கேட்ட தன் அன்னையிடம்,
"என்னம்மா இப்படி ஒரு கேள்வி கேட்டீங்க..... சும்மா சுத்திட்டு இருந்தவன் கவியோட ஆசையால பொறுப்பா ஒரு பிஸினஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டேன், இப்பல்லாம் உங்க கூட நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ண முடியுது! வாரத்துக்கு ஒரு தடவை நம்ம எல்லாரும் பேமிலியோட எஸ்டேட்டுக்கு அவுட்டிங் போக முடியுது. இதுக்கு மேல என்ன வேணும்?" என்றவனிடம்,
"இதுக்கு மேல என்னவா..... நந்து உனக்கு கவிம்மா மாதிரி அழகா ஒரு பாப்பா வேண்டாமா? எங்களுக்கு வேணும் நந்து!" என்று சொன்ன தன் அன்னையிடம் சிரிப்புடன்,
"ஓ.... பாப்பா! இதைத்தான் கேக்க நினைச்சீங்களா? பேபி இஸ் ஆன் த வே மா..... ப்ளே ஸ்கூல் பத்தி ஒண்ணும் கவலையில்ல, லிட்டில் சிக்ஸ்க்கே பேபியையும் அனுப்பிடலாம். பட் அதுக்கப்புறம் வேற ஸ்கூல் பார்க்கணுமே, இப்போ எல்லாம் அட்மிஷன் ரொம்ப கஷ்டமா இருக்குல்ல, எங்க கான்வென்ட்ல தான் பேபியை படிக்க வைக்கணும். அப்பாட்ட சொல்லி அட்மிஷன் ரிஸர்வ் பண்ணிட சொல்லுங்கம்மா!" என்று சொன்ன தன் மகனின் வார்த்தையில் நிர்மலாவின் மனச் சலனம் அனைத்தும் மறைந்து நிம்மதியுற்றார்.
"ஸாரி நந்து..... ரொம்ப ஸாரி! இன்னும் மூணு வருஷத்துக்கு அப்புறம் வர்றத அப்போ யோசிக்கலாம் கண்ணா;
உன்னை இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நீ பேசினத கேட்டவுடனே ரொம்ப நிம்மதியாகிடுச்சு. குட்நைட் நந்து!" என்று அவனை வேறெதுவும் பேச விடாமல் அவசரமாக சொல்லி விட்டு இண்டர்காமை வைத்து விட்டார் நிர்மலா.
"என்ன பண்ணையாரம்மா பல்லை பத்திரமா புடிச்சுட்டு சிரிங்க..... ரொம்ப ஈன்னு காட்டுறீங்க. கொஞ்ச நேரம் இப்படி அத்தான் பக்கத்துல வர்றது.....!" என்று சொல்லி தன்னை அழைத்தவரிடம்,
"ஒரே தூக்கமா வருது அத்தான்.... நம்ம நாளைக்கு நைட் பேசலாம். குட்நைட்!" என்று சொல்லி விட்டு படுக்கையில் விழுந்த தன் மனைவியை "என் கூட பேசச் சொன்னா மட்டும் உனக்கு தூக்கம் வந்துடுமா..... நிலாக்குட்டி கொஞ்ச நேரம் கதை பேசிட்டு இருக்கலாம்டீ......" என்று கேட்டு தன் மனைவியின் கன்னத்தில் கிள்ளி நிர்மலாவின் கன்னம் வலிக்க செய்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.
தன் அன்னையின் மனநிலையை நினைத்து ஜீவாவிற்கு சிரிப்பு வந்தது. "ஏய் நந்துப்பையா எதுக்கு தனியா நின்னு சிரிச்சுட்டு இருக்க?" என்று கேட்ட தன் மனைவியை திரும்பி பார்த்தவன்,
"நந்துவுக்கு எப்போ பையன் வருவான்னு உன் மாமியார் அவுட் ஆஃப் சிலபஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க, லைனா என்னென்ன கதையெல்லாம் சொல்ல முடியுமோ சொல்லி அவங்களை கன்வின்ஸ் பண்ணிட்டு சிரிச்சேன். நீ தூங்கிட்டு தான இருந்த, திடீர்னு எப்படி எழுந்திரிச்ச கேப்ஸி?" என்று கேட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டவன் மடியில் சாய்ந்து கொண்டு,
"பள்ளத்துக்குள்ள விழுந்த மாதிரி ஏதோ கனவு வந்தது நந்து... அதான் அப்படியே முழிப்பு வந்துடுச்சு!" என்று சொன்ன தன் மனைவியின் மூக்கை பிடித்து இடம் வலமாக திருப்பியவன்,
"என் லேப்ல இருந்து நீ பில்லோவுக்கு போன..... அதான் பள்ளத்துக்குள்ள விழுந்துட்ட ஒரு ட்ரீம் வந்துடுச்சு போல..... தூங்கலாமா?" என்று கேட்டு தன் புறம் படுக்கையை சரி செய்து கொண்டு இருந்தவனிடம்,
"நந்து வேற ஏதாவது கேள்வி கேளேன்! நம்ம ரெண்டு பேருல எப்பவுமே நான் தான் ரொம்ப டாமினேட் பண்ணி உங்கிட்ட எல்லாத்தையும் எடுத்துக்கறேனோன்னு எனக்கு தோணுது. நம்ம மேரேஜ், அதுக்கப்புறம் உன்னை போர்ஸ் பண்ணி இங்க வேலை பார்க்குற மாதிரி செஞ்சது..... உன்னை நான் ரொம்ப தான் படுத்துறேனோ நந்து?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன்,
"என்னை படுத்தி எடுக்குறதுக்கு உனக்கு இல்லாத உரிமையா அம்முலு.... என்ன நீ ஃபோல்டு பண்ணி உன் ஹேண்ட்கீயா வச்சாலும் நோ ப்ராப்ளம் அட் ஆல்..... ஏதோ கேக்கணும்னு நினைச்சுட்டு இவ்வளவு தயங்காத, கேட்டுடு!" என்று சொல்லி அவள் பக்கவாட்டில் அமர்ந்து அவள் கண்களைப் பார்த்து கொண்டு இருந்தவனிடம் ஒரு தடுமாற்றத்துடன்,
"நான் அத்தைக்கும், டார்லிங்குக்கும் ரெண்டு பேபீஸ் பெத்துத் தர்றேன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன் நந்து...... கடைசியா நமக்குள்ள சண்டை வந்து 16 நாள் ஆச்சு. ஸோ லெட்ஸ் ட்ரை ஃபார் த பேபி?" என்று கேட்ட கவிப்ரியாவிடம்,
"ரெண்டு பேபியா..... இது எப்ப நடந்தது? ப்ரொடெக்ஷன்லாம் ஒண்ணொண்ணா தான்மா ட்ரை பண்ண முடியும். குடும்பம் மொத்தமும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு. நம்ம ரெண்டு பேரும் லைஃப ஆரம்பிக்கறது பெரிசில்ல அம்முலு, அதுக்கு நீயும் நானும் முதல்ல ஒரு சின்க்ல இருக்கணும். எந்த விதமான கவலையோ, குழப்பமோ, பயமோ, தயக்கமோ இல்லாம நீ முழு மனசோட தான் இந்த கேள்விய என் கிட்ட கேட்டியா? சண்டை போடாம இருக்கோம்ங்கிறதுக்காக நம்ம ஐடியல் கப்புள்னு சொல்லிட முடியாது. நீ உன் வேலைய பார்க்குற, நான் என் வேலைய பார்த்துட்டு இருக்கேன். பட் அம்மா கேட்ட மாதிரி வாழ்க்கையில அடுத்த லெவலுக்கு போகணும்னா நமக்குள்ள லாட்ஸ் ஆஃப் லவ் வேணும்டா மூக்கி......" என்று சொன்னவனிடம் அவசரமாக,
"அதெல்லாம் நிறைய இருக்கு நந்து..... எனக்கு இப்போ ஒரு கில்ட்டினெஸும் இல்ல, உன்னைய தானே எனக்கு தேவையானதெல்லாம் செய்ய வச்சேன்...... மத்த யாரையோ இதெல்லாம் செய்ய சொல்லி இருந்தா தான் தப்பு. என் நந்து எனக்காக, என்னை கம்பர்டபிளா வச்சுக்கவே பொறந்தவன்; அதே மாதிரி தான் நானும்...... உனக்காகன்னு யோசிச்சு ஒரு விஷயம் செய்யும் போது அது எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் எனக்கு கஷ்டமா தெரியல நந்து...... ஐ'ம் டோட்டலி மூவ்டு பை யூ! இனிமே நமக்குள்ள லவ் அண்ட் கம்பாட்டிபிளிட்டி ரெண்டும் ஸ்ட்ராங்கா இருக்கும். இதுக்கு மேல நீ தான் சொல்லணும்!" என்று சொல்லி தன் இரு கைகளையும் விரித்தவளின் அணைப்பிற்குள் இயல்பாக பொருந்திப் போய் இருந்தான் ஜீவானந்தன்.
தன்னவளின் இதயத்துடிப்பையும், சீரான சுவாசத்தின் ஓசையையும் கேட்டுக் கொண்டு அவள் மார்பில் படுத்திருந்தவனிடம், "என்ன நந்து ஒரே யோசனை? த மேஜிக் இஸ் நாட் ஹேப்பணிங்னு தோணுதுல்ல....." என்று கேட்டவளிடம் தன் முக்தை திருப்பாமல் தலையை மட்டும் ஆட்டினான் ஜீவானந்தன்.
"லெட்ஸ் டூ ஒன்திங்..... என் மேல நீ வச்சுருக்கிற லவ்வையும், உன் கிட்ட என்னோட லவ்வையும் நம்ம நமக்குள்ள முதல்ல எக்ஸ்ப்ரஸ் பண்ணிக்கலாம். பை சான்ஸ், ஏதாவது ஒரு இடத்துல நீயும் நானும் ஒரே விஷயத்தை சொல்லி காதலை வெளிப்படுத்தி இருந்தோம்னா நம்ம லவ் நிஜமாவே இம்மார்ட்டல் திங்க் தான்...... இத ட்ரை பண்ணி பார்க்கலாமா.... மத்ததெல்லாம் நீ சொன்ன மாதிரி ஸ்பார்க் வரும் போது பார்த்துக்கலாம்!" என்று சொன்னவளிடம் முக மலர்ச்சியுடன் சம்மதித்து மேஜை இழுப்பறையில் இருந்து ஒரு லெட்டர் பேடை எடுத்து நீட்டினான் ஜீவானந்தன்.
இரண்டு, மூன்று வரிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டு இருவரும் எழுதிய முதலாவது கடிதத்தை சற்று பயத்துடன் இருவரும் மாற்றிக் கொண்டனர்.
"கேன் ஐ பீ யுவர் ட்ராஹன் ஃப்ளை பார்எவர்?" என்று எழுதி இருந்தான் ஜீவானந்தன்.
"உன் வாழ்வெனும் கோப்பையில் தங்கத்தூளாக இருந்து
நான் அதை செப்பினிடும் அளவில்
இனி ஒரு கீறலும் விழாமல் இருக்கட்டும்.......!" என்ற கவிப்ரியாவின் வரிகளை பார்த்து விட்டு உதடு பிதுக்கினான் ஜீவா.
"செண்டென்ஸ் ரொம்ப அழகாயிருக்கு..... ஜீவா அம்முலு" என்று இருவரும் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி கூறி விட்டு சிரித்துக் கொண்டனர்.
இரண்டாவது கடிதத்தில், "நீ சுவாசிக்கும் காற்று கூட எனக்கு மட்டுமே சொந்தம்...... நான் உன் வாழ்வில் நிலையான ஒரு சொந்தம்!" என்று எழுதி இருந்தாள் கவிப்ரியா.
"என் மனம் நினைந்த பாவை
எனைத் தேடி வந்த பின்
இனி குறிஞ்சிப்பூவை
எதற்கு நான் தேட......." என்று எழுதி விட்டு இதுவும் வேறு வேறாகி போய் விட்டதே என்று நினைத்தபடி அவளைப் பார்த்து தோளைக் குலுக்கினான் ஜீவானந்தன். மூன்று கடிதங்களுக்கு பின்னர் கவிப்ரியா அவனிடம்,
"அடுத்த லெட்டருக்கு ரெண்டு பேரும் கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சுட்டு எழுதலாம் நந்து. ரெண்டு பேரும் தப்பு தப்பா எழுதுறோம்!" என்று சொன்ன கவியிடம்,
"ஏய் மூக்கி நாம என்ன எக்ஸாமா எழுதுறோம்..... தப்பா எழுதுனா மார்க் போயிடும்னு புலம்பறதுக்கு..... இதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ் தானே? நான் உனக்கு எழுதினத நீ பத்திரமா வச்சுக்க. நானும் உன்னோடத பத்திரமா வச்சுக்கறேன். இன்னும் நல்லா யோசிப்போம். ஏதாவது க்ளிக் ஆகும்!" என்று சொன்னவனிடம் இரவு வாழ்த்து தெரிவித்து விட்டு அவன் கைகளைப் பற்றிக் கொண்டு உறங்கி விட்டாள் கவிப்ரியா. இருவரின் காதல் கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்து விட்டு ஜீவாவும் உறங்கி விட்டான். இரண்டு நாட்களுக்கு பின் காலை வேளையில் ஜீவானந்தன் தன் தங்கை ஷைலு மற்றும் இனியா இருவரையும் கவியின் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தான். "என்ன இரண்டு நாளா நீயும் டார்லிங்கும் ஏதோ ரகசியமா ஒளிஞ்சு ஒளிஞ்சு பேசுறீங்க.......?" என்று கேட்ட தன் மனைவியிடம், "பதினாலாவது லெட்டர் எழுதுனியா இல்லையா....... நான் ரெடி பண்ணிட்டேன். நீ முதல்ல போய் ஒழுங்கா அந்த வேலைய பாரு, இன்னும் நாலஞ்சு நாள்ல விவேக் சித்தப்பா அம்பைக்கு கிளம்பிடுவாங்க. அவருக்கு ஏதாவது லாங் டெர்ம் வொர்க் கமிட் பண்ணி வச்சிருந்தன்னா ரெண்டு பேரும் சேர்ந்து இப்பவே செஞ்சு முடிச்சுடுங்க. நாளைக்கு ஈவ்னிங் வீக் எண்டுக்காக எல்லாரும் கிளம்பி இங்க வர்றாங்க. ஸோ எஸ்ஜேஎன்ல உன் வொர்க்ஸ் எல்லாத்தையும் இன்னிக்கே பார்த்து ரெண்டு நாளைக்கு உன்னை ஃப்ரீ பண்ணிக்கோ!" என்று சொல்லி அவளை எஸ்ஜேஎன் அனுப்பி வைத்து விட்டு தான் அலைபேசியை கையில் எடுத்திருந்தான்.
இனியா ராசுவை முதலில் அழைத்து பேசியவனிடம் விழாவிற்கு அவர்கள் வருவதாக சொல்ல அதில் திருப்தியடைந்தவன், அடுத்த படியாக பவினிடம் பேசினான். அவனிடமும் விஷயத்தை தெரிவித்து சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தவன்,
"ஷைலு எப்படி இருக்கா வினு..... உங்க மேரேஜ் லைஃப் எப்படி போயிட்டு இருக்கு? இப்பவும் அவ கிட்ட நிறைய அடி வாங்கிட்டு இருக்கீங்களா?" என்று கேட்டவனிடம்,
"அதெல்லாம் இல்ல ஜீவா..... ஆனா எப்போ பார்த்தாலும் ஏதாவது லூசுத்தனம் பண்றது, அப்புறம் குட்டி சண்டை போடுறது, அதுக்கப்புறம் சமாதானம் ஆகுறதுன்னு உங்க தங்கச்சி என்னைய ஒரு வழியாக்கிட்டு இருக்கா. இன் டோட்டல் லைஃப் ஜாலியா போயிட்டு இருக்கு!" என்றான் பவின்.
"ம்ம்ம் சூப்பர் வினு ...... எங்க கல்யாணம் ஆனதுக்கப்புறம் எந்தங்கச்சி ரொம்ப பொறுப்ஸா மாறிடுவாளோன்னு பயந்தேன். ஷைலு இப்படி நாட்டி கேர்ளா இருந்தா தான் நல்லா இருக்கும். அவ இனியா மாதிரி ரொம்ப பொறுப்பா இருந்தா அவளுக்கு அது செட் ஆகாது. சீக்கிரம் இங்க வந்துடுங்க. கௌதம் அங்கிள், ராகினி ஆன்ட்டி கிட்டயும் நான் பேசிடுறேன்..... பை வினு!" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் ஜீவானந்தன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவனது அறைக்கதவு தட்டப்பட "கம் இன்...!" என்று சொல்லி விட்டு நிமிர்ந்தவனை பார்த்து கையசைத்து கொண்டு இருந்தாள் ஷைலஜா.
தனது இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து நின்றவன், "எப்புடி இங்க வந்த ஷை.....?" என்று கேட்டான் ஆச்சரியத்துடன்.
"பஸ்ல தான்..... என்னோட ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு ஃபுல்பில் ஆகிடுச்சு. நானே தனியா நம்ம வீட்ல இருந்து இங்க வரைக்கும் பஸ்ல வந்துட்டேனே, பெட்ல நீ தோத்துட்ட! எடு ஃபைவ் ஹண்ட்ரெட் ருப்பீஸ......!" என்று கேட்டவளிடம்,
"குடுத்துட்டா போச்சு......!" என்று சொல்லி அவளருகில் வந்தான் பவின். அதற்குள் அவனது கோட் ஷைலுவின் கைகளில் இருந்ததை பார்த்து பயந்தபடி அதை அவளிடமிருந்து வாங்க கைகளை நீட்டினான்.
"ஷை பேபி ப்ளீஸ் அத எங்கிட்ட குடுத்துடும்மா நீ குட் கேர்ள் தானே?" என்று கேட்டு தன் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனது வெள்ளை சீருடையின் மீது ஷைலஜாவுக்கு எப்போதுமே ஒரு தனி வெறுப்பு..... புட் கலரிங், நேச்சுரல் வெஜிடபிள் டையிங் என்று ஷைலு அவனது சீருடையை வைத்து விதவிதமான பரிசோதனைகளை மேற்கொண்டதில் அவனது வெள்ளை கோட் இதுவரை பல தடவைகள் வண்ண மயமாக மாறியிருக்கிறது.
பல முறை பவின் கெஞ்சிய பின்பும் ஷைலு அவனது உடையை கைகளில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்க, அவன் பொறுமையிழந்த ஒரு மூச்சுடன், "ஷை உன் ப்ளட் குரூப் என்னன்னு எனக்கு இன்னும் நீ சொல்லவேயில்லயே..... நாலு ஸ்டெப் எடுத்து வச்சா லேப்ல போய் ஒரு நீடில் எடுத்து உன் கையில குத்தி ப்ளட் டைப் அனலைஸ் பண்ணிடலாம். வர்றியா?" என்று கேட்க அவள் பயத்துடன் அவன் உடையை அவனிடம் பவ்யமாக கொடுத்து விட்டு அவளது இருக்கையில் வந்து கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
"என்ன ஷை பயந்து பம்மிட்டு உட்கார்ந்து இருக்க..... வீட்டுக்கு வா அப்புறம் உன்னை தனியா வச்சு செஞ்சுக்கறேன்னு நினைச்சுட்டு இருக்கியா?" என்று கேட்ட தன் கணவனிடம்,
"போடா துரியன்; என் வீக்னெசை நீ நல்லா தெரிஞ்சு வச்சிருக்க, நான் ராகினி ஆன்ட்டிட்ட போறேன். அவங்க கூடவே வீட்டுக்கும் கிளம்புறேன்! உங்கூட இன்னிக்கு பூரா பேச மாட்டேன், போ!" என்று சொன்னவளிடம் சிரிப்புடன்,
"அப்போ நீ உங்க அண்ணியோட ஷாப் ஓப்பனிங் பங்ஷன்க்கு உங்க அப்பா வீட்டுக்கு போகலையா...... அம்மாவுக்கு சர்ஜரி இருந்தா வர மாட்டாங்க. நான் உன் கூட வரணுமா வேண்டாமா? நீ இப்போ என் கூட சண்டை போட்டா நான் அன்னிக்கு உன் கூட சண்டை போடுவேன். ஒழுங்கு புள்ளையா வந்து வினுவுக்கு ஒரு டைட் ஹக் குடு பார்ப்போம்!" என்று அழைத்த தன் கணவனிடம்,
"யூ ஆர் அ ஸ்டிங்க்கிங் துரியன்..... ஐ காண்ட் ஹக் யூ!" என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள் ஷைலஜா.
"பட் ஐ கேன் ஹக் மை ஸ்வீட் லிட்டில் டர்ட்டிள் ஆல்வேஸ்.....!" என்று சொல்லி தன் மனைவியை அணைத்து சமாதானம் செய்து தன் அன்னையிடம் அழைத்து சென்றான் பவின்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro