Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 67

"டேய் ராகவ் நிஜமாவே உனக்கு அந்தப் பொண்ணு யார்னு தெரியலயா? நான் அவ கிட்ட ரெக்வெஸ்ட் பண்ணினதால அவளோட இமேஜை பத்தி கூட கவலைப்படாம உன்னை லவ் பண்றதா எல்லார் முன்னாடியும் சொன்னால்ல..... பங்ஷன்க்கு வந்த எல்லாரும் முணுமுணுன்னு நம்ம பேமிலிய பத்தி கொஞ்சம் அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்ததை அவ வார்த்தையால நிறுத்தினா பாரு, அதுக்கு நீ அவளுக்கு தேங்க் பண்ண வேண்டாம், பட் அன்னிக்கு நீ யாருன்னே தெரியாம சரஸை அவ்வளவு கைண்டா சமாளிச்சுருக்கால்ல அதுக்காகவாவது தேங்க் பண்ணியிருக்கணுமா இல்லையா?" என்று கேட்ட தன் தந்தையின் பேச்சை அவசரமாக மறுத்து தன் நெற்றியில் அடித்துக் கொண்ட ராகவ்,

"ஓ....... இன்னிக்கு இங்க வந்து ஒரு ஹாட் அனௌன்ஸ்மெண்ட் குடுத்தது அந்த ரெஸ்டாரெண்ட் கேர்ளா டாடி? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதேன்னு ரொம்ப யோசிச்சுட்டே இருந்தேன். அன்னிக்கு பார்த்தப்போ மார்டன் அவுட்பிட்ல இருந்தா, இங்க வந்தப்போ டிரடிஷனலா வந்தாளா.... அதனால தான் பார்த்த உடனே ஐடென்டிஃபை பண்ண முடியல.
அவங்க செஞ்ச ஹெல்புக்கு தான் அன்னிக்கே தேங்க்ஸ் சொல்லியாச்சே, இன்னிக்கு ஒருக்கா தேங்க்ஸ் சொல்லணும்னா அத ஜெய் மாமாவும், நீயும் தான் சொல்லணும். அவ என்னை லவ் பண்றாளா? இதென்ன புது கதையா இருக்கு. லவ் அட் பர்ஸ்ட் சைட்டாமா? அவ காதலை இங்க வந்து புலம்பிட்டு போறாளாக்கும்..... நமக்கு இந்த காதல், அவங்க பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு நீ தான் என் உலகம்னு கதை விடுறது, நம்ம பாகி மாதிரி, ஜீவா மச்சி மாதிரி என்ன செஞ்சாலும் இது வொர்க் அவுட் ஆக மாட்டேங்குதுடான்னு புலம்புறது இதெல்லாம் செட் ஆகாது. மன்த்லி ஒன்ஸ் ஃபோர்த் சாட்டர்டே ஈவ்னிங் டைம்ல ஒரு டூ ஹவர்ஸ் எனக்கு ஏதாவது ஹாரர் மூவி இல்ல சயின்ஸ் பிக்ஷன் பார்க்குற ரிலாக்ஸிங் டைம்! அத வேணும்னா இனிமே அந்த பொண்ணுக்காக ஸ்பெண்ட் பண்றேன். ஆனா அட்லீஸ்ட் இன்னொரு நாலு வருஷத்துக்கு கல்யாணத்தை பத்தி பேசக் கூடாது. அவங்களுக்கு ஒரு ஓன் பேஷன் இருக்கணும். அவங்களோட இன்டூஜூவாலிட்டியை யாருக்காகவும் விட்டுக் குடுக்க கூடாது. இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் ஓகேன்னா அவளை நான் என் கேர்ள் ப்ரெண்டா அக்செப்ட் பண்ணிக்குறேன். ஆமா ஸ்டேஜ்ல அந்த பொண்ணு என் பேர் சொல்லலயே, வேற ஏதோ பேர் சொன்ன மாதிரி தான் நியாபகம்.... நிஜமாவே அவ என்னை லவ் பண்றேன்னு உன் கிட்ட சொன்னாளாப்பா?" என்று கேட்ட தன் மகனிடம் ஒரு பெருமூச்சுடன் அவள் அலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு,

"இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா நீ வசுவோட பாய் ஃப்ரெண்டு மட்டுமில்ல, எந்தப் பொண்ணோட பாய் ப்ரெண்டாவும் ஆக முடியாது பார்த்துக்க. உன்னோட சந்தேகம் எதுவா இருந்தாலும் நீயே அத பெர்சனலா அவ கிட்ட கேட்டுடு. நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ அதையும் தெளிவா சொல்லிடு. உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் வரல, ஏற்கனவே உங்கம்மா, பெரியம்மா எல்லாம் அந்தப் பொண்ணு யார்னு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம சிரிச்சு சமாளிச்சு வச்சுட்டேன். இதுக்கு மேல உன் லைஃப்ல வசுந்தரா வேணுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்க!" என்று சொல்லி விட்டு தன் இளைய மகனை அழைத்து கொண்டு காரின் அருகே சென்றார் பலராம்.

"நம்ம கூடத் தான் இன்னிக்கு கிளம்பப் போறோம். ஏன் கீத்து உங்க அண்ணனுக்கு உன் மேல இருந்த பாசம் போயிடுச்சா என்ன? மீரு பெரியம்மா, அஜு பெரியப்பாவை மட்டும் தனியா கூப்பிட்டு ஏதோ ரகசியமா கொஞ்சிட்டு இருக்காரு, உன்னைய ஆட்டையில சேர்த்துக்கவே இல்ல போல?" என்று கேட்ட தன் மகனிடம் எரிச்சலுடன்,

"வாயை மூடுடா எரும..... மீரு ஸேடா இருக்கான்னு நானே கவலையில இருக்கேன். இதுல நீ வேற லூசுத்தனமா என்னைய கொஞ்சல, உன்னைய கொஞ்சலன்னு பேசி கடுப்பாக்கிட்டு..... எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சுன்னு கார்ல ஏறி உட்காரு. நைட் ட்ரைவ் பண்ணி போகணும். கம்மியா சாப்பிட்டியா? தூங்கிட மாட்டியே?" என்று கேட்ட தன் அன்னையிடம், "வண்டியையும், உன்னையும் பத்திரமா சென்னைக்கு கூட்டிட்டு போறத நாங்க பார்த்துக்குவோம். உன்னை மாமா கூப்பிடுறாரு பாரு, போய் பேசிட்டு சீக்கிரம் கிளம்புங்க. அப்பப்பப்பா அங்கிருந்து இங்க வர்றதுக்கும் ஒரு அலப்பறை, இங்க இருந்து அங்க போறதுக்கு அத விட பெரிசா அலப்பறை..... குடும்பத்துல எல்லாரும் கட்டிப் பிடிச்சு அழுது முடிக்கிறதுக்குள்ள நான் வாணிட்ட மேட்டர் கலெக்ட் பண்ணிக்குறேன்!" என்று சொல்லி விட்டு தன் மனைவியிடம், "வாணிம்மா இப்போ அங்க என்ன படம் ஓடிட்டு இருக்கு? படம் பார்த்து கதை சொல்லு பார்ப்போம்!" என்று கேட்ட தன் கணவனிடம்,

"சும்மாயிருங்க கவி, மீராத்தை ப்ரியாவை ஏதோ திட்டிட்டாங்களாம். அவ கோபப்பட்டு இப்போ வரைக்கும் அவங்கட்ட பேசவும் இல்ல, நம்மள செண்ட் ஆஃப் பண்றதுக்கு வெளியவும் வரல. அதுதான் மீரா அத்தைய எல்லாரும் சமாதானம் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க ரெடின்னா கார்ல ஏறுங்க!" என்று அபிநயா சொல்லிக் கொண்டு இருக்கையில்,

"அங்க தான் சரஸ் போறோம். ராஜேஷ மீட் பண்ணிடலாம்!" என்று தன் பாட்டியை தாஜா செய்து அழைத்து வந்து கொண்டிருந்தான் ராகவ்.

"டேய் தம்பிப் பையா, நானே டின்னரை கொஞ்சம் வலுவா இழுத்துட்டு, நைட் ட்ரைவ் வேற பண்ணணும்னு நினைச்சு பீதியாகி கிடக்கேன்.... நீ வேற சரஸ் கிட்ட அங்க தான் போய் ராஜேஷ மீட் பண்ணப் போறோம்ங்கிற...... இப்படியெல்லாம் பேசப்படாது. தப்பு!" என்று அறிவுரை சொன்ன தன் அண்ணனின் கையில் இருந்த கார் சாவியை வாங்கிக் கொண்ட ராகவ்,

"இன்னிக்கு நான் வண்டிய ஓட்டுறேன், நீ அண்ணி, சரஸ், அம்மா பக்கத்துல போய் உட்கார்ந்து தூங்கு!" என்று சொல்லி விட்டு தந்தையை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்.

"ஹலோ டைம் ஆச்சு, ரெண்டு பேரும் இன்னும் எவ்வளவு நேரம் இப்படி கட்டிப் பிடிச்சு அழுதுட்டு இருக்கப் போறீங்க.... உங்க ஹப்பீஸ் ரெண்டு பேரும் உங்கள அப்போலேர்ந்து முறைச்சு பார்த்துட்டு இருக்காங்கம்மா!" என்று தன் தங்கைகளிடம் கேட்டவாறு புன்னகைத்த ஜீவாவின் இரு தோள்களிலும் ஷைலஜாவும், இனியாவும் புதைந்து கொண்டனர். புறப்படுவதற்கு தாமதம் ஆகிறது என்று உணர்ந்து ஜீவா தன் தங்கைகள் இருவரையும் பெரியவர்களிடம் அழைத்து வந்தான்.

பவின், ஷைலு, இனியா, ராசு தம்பதியர் ஜெயந்தன் பத்மாவிடம் ஆசி பெற்றதும் பெரியவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கவர்களை ஷைலஜா, இனியாவிடம் நீட்டினார்கள்.

"மறுபடியுமா கவர்....." என்று கேட்ட ஷைலு, இனியா இருவரின் கண்களும் தங்கள் பாகி அத்தானை தேட ஆரம்பித்தன.

"ஒவ்வொருத்தரா கார்ல ஏறினா தான் இன்னும் அரைமணி நேரத்துலயாவது கிளம்ப முடியும்னு தோணுச்சு. பாகி அத்தான் கார்ல இருக்கான் பாருங்க..... அவன்ட்ட, சரஸ் பாட்டிட்ட, ராம், கீதாட்ட ப்ளெசிங்ஸ் வாங்கிட்டு நீங்களும் கார்ல ஏறுங்க. நான் உள்ள போய் உங்க அண்ணிய மூக்கைப் பிடிச்சு தூக்கிட்டு வர்றேன்!" என்று தன் தங்கைகளிடம் சொல்லி விட்டு சென்றான் ஜீவானந்தன்.

"ரூபி ராசுவுக்கு நான் அவர்ட்ட காசை நீட்டினா பிடிக்காது. அவர் பணத்தை தான் எனக்கு செலவு செய்யணும்ன்னு நினைப்பார். ஆனா பவின் எப்படின்னு தெரியலயே, இந்த கவரை ஒரு வேளை அவர் கிட்ட குடுக்கணுமோ?" என்று கேட்ட தன் தோழியிடம் சிரிப்புடன்,

"வினுவும் அப்படித்தான்டீ லட்டு இருக்காரு. பங்ஷன்ல வந்த கலெக்ஷனும் தனியா என் கிட்ட தான் இருக்கு. இப்போ கையில இருக்குறதையும் சேர்த்து நம்ம வீட்டு அக்கவுண்ட்ஸ் ஆபிஸர்ட்ட குடுத்துட வேண்டியது தான்.....!" என்று சொல்லி விட்டு இருவரும் பார்கவிடம் சென்றனர்.

பணத்தை அவனிடம் கொடுத்து விட்டு, அனைவரின் ஆசிகளையும் பெற்று விட்டு ஷைலஜா இனியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு திரும்புகையில் பார்கவ் அவளுடன் பின்னாலேயே வந்தான். பின்னால் அவன் வருகிறான் என்று உணர்ந்ததும் நின்ற ஷைலு, "என்னத்தான் எதுவும் சொல்லணுமா?" என்று கேட்டாள்.

"அது வந்து........ ம்ம்ம் நீ சென்னையில தான் இருக்கப் போற; அப்பப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போ ரூபி, ப்ரேக் ஃபாஸ்ட் மிஸ் பண்ணாம சாப்பிடு. உனக்கு என்ன தேவைப்பட்டாலும், அது எந்த நேரமா இருந்தாலும் என்னைக் கூப்பிடு.....! இனியா ராசுவையும், அவர் பாட்டியையும் நல்லா பார்த்துக்கடா, உனக்கு ராசுவோட ரிலேட்டிவ் யாரோ ஒருத்தர் க்ளினிக்ல நர்ஸா வொர்க் பண்ண ஜாப் வாங்கி தர்றதா ராசு சொன்னாரு. நீ ரொம்ப மெச்சூர்டு பெர்ஸன். உனக்கு அட்வைஸ் எதுவும் தேவையில்ல. உங்க ரெண்டு பேருக்கும் எல்லாத்துக்கும் எப்பவுமே நாங்க இருக்கோம். அத மட்டும் மனசுல வச்சுக்கோங்க. ஆல் த பெஸ்ட்!" என்று சொல்லி கை குலுக்கியவனின் வார்த்தைகளில் தெரிந்த அக்கறையில் மறுபடியும் இனியா ஷைலு இருவரின் கண்ணிலும் நீர் முத்துக்கள் உதிர ஆரம்பித்தது.

"சரி சரி இங்கயே நின்னு வாய் பார்த்துட்டு இருக்காம போய் கார்ல ஏறுங்க, இனியா விவேக் மாமா உங்க கூட அங்க வரலையாம்மா?" என்று கேட்டான் பார்கவ்.

"இல்ல அத்தான், ஜீவாண்ணா பண்ணையில புது கமிட்மெண்ட் எடுத்து இருக்காங்கல்ல, ஸோ அதுக்கு ஹெல்ப் பண்ண அப்பா கூட இருக்கணும்னு சொன்னாங்க. எனக்கும் அது தான் கரெக்ட்னு பட்டது. இன்னும் அஞ்சாறு மாசம் கழிச்சு அம்பைக்கு வந்து தங்குறேன்னு அப்பா சொல்லி இருக்காங்க அத்தான்!" என்று சொன்ன பெண்ணின் முகத்தில் தெரிந்த புன்னகைக்கு பின் மறைந்து இருந்த தியாகம் பார்கவை நெகிழ வைத்தது.

"சீக்கிரம் இந்த ஜீவா பையனுக்கு வேலை கத்து குடுத்துட்டு விவேக் மாமா உங்க கூட வந்து இருப்பாங்கம்மா.... வாங்க கார்ல ஏறுங்க.....!" என்று சொல்லி விட்டு இனியாவை அவளுக்கு ஜீவானந்தன் பரிசாக தந்த காரிலும், ஷைலுவை பவினின் காரிலும் கதவை திறந்து அமர உதவி விட்டு நகர்ந்து விட நினைத்தவனை,

"பாகி அத்தான் என்னோட கார் கிப்ட்......" என்று இழுத்து விட்டு பேச்சை பாதியில் நிறுத்தினாள் ஷைலஜா. அதிசயமாக அத்தான் கொஞ்சம் நல்ல மூடில் இருக்கிறான்..... ஆனால் எந்நேரமும் அப்படி இருப்பான் என்று சொல்லி விட முடியாதே என்று நினைத்துக் கொண்டு இருந்தவளிடம்,

"உன்னோட காரை கௌதம் அங்கிள் எடுத்துட்டு வருவாங்க. ஸாரி எனக்கு உன் மாமனாரை ரிலேஷன்ஷிப் வச்சு கூப்பிட வர மாட்டேங்குது ரூபி..... அப்புறம் எல்லாத்துக்கும் ஸாரிடா!" என்று அவள் தோளில் மென்மையாக ஒரு தட்டு தட்டி விட்டு சென்று விட்டான் பார்கவ்.

"இந்த பாகி அத்தான் ரெண்டாவது ஸாரி எதுக்கு சொன்னாங்க?" என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவளின் கையில் ஒருகேக் நீட்டப்பட்டது.

"ஹாய் வினு என்னப்பா ப்ளைன் கேக் கொண்டு வந்திருக்க, ஐ வான்ட் கேக் புல் ஆஃப் க்ரீம்....." என்று சொன்ன ஷைலுவை புன்னகையுடன் பார்த்தவன்,

"இந்நேரம் நீ எங்கிட்ட ஆர்டர் பண்ணினா நான் எந்த பேஸ்ட்ரியில போய் நீ கேக்குறத வாங்கி தர்றது ஷை பேபி; நிர்மலா ஆன்ட்டி என்கிட்ட குடுத்ததை அப்படியே உன்ட்ட குடுத்துட்டேன். நீ என் பார்ட்டிஷன்ஸ பூரா புடுங்கி சாப்பிட்டது தெரியாம பங்ஷன்ல சரியா சாப்பிட்டியோ இல்லையோன்னு ரொம்ப டென்ஷன் ஆகி, உனக்கு சாப்பிட தர சொல்லி குடுத்து விட்டாங்க. ஆல்வேஸ் மதர்ஸ் அபெக்ஷன் இஸ் அ ஸ்பெஷல் ஒன் யூ நோ.....?" என்று கேட்டவனிடம் ஆமோதிப்பாக தலையசைத்து,

"என்னன்னு தெரியல வினு, எனக்கு இன்னிக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது.....!" என்று சொல்லி விட்டு அவன் இடத்தோளில் சாய்ந்து கொண்டாள் ஷைலஜா.

தன் மனைவியை தன் இடக்கையால் இறுக்கிப் பற்றிக் கொண்ட பவின், "லெட்ஸ் டேக் அ செல்ஃபி வித் திஸ் அழுமூஞ்சி! இப்படி ஒரு அரைகுறை ஆர்வக்கோளாற கல்யாணம் பண்ணின நானே ரொம்ப ஹாப்பியா இருக்கேன். நீ எதுக்கு பேபி அழுவுற.... உன் அப்பா, அம்மா, அண்ணா, இனியா இவங்க எல்லாரையும் இனிமே டெய்லி நேர்ல பார்த்துக்க முடியாது. அதுதான் ஹலோ சொல்லி ஆரம்பிச்சா நீ மூணு மணி நேரத்தை காலி பண்ணிடுறியேம்மா, மாசத்துல ஒரு நாள் இனியா ஊருக்கு இல்லன்னா இங்கன்னு மாறி மாறி வந்துட்டு போகலாம். உங்க வீட்ல எல்லார் கூடவும் இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு! தூக்கம் வந்தா பின்னால போய் கம்பர்டபிளா படுத்து தூங்கும்மா, நான் உன்னை ஸேஃபா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்!" என்று சொன்ன தன் கணவனிடம்,

"உனக்கு கஷ்டமா இருந்ததுன்னா என்னை ட்ரைவ் பண்றதுக்கு கூப்பிடு வினு..... அப்பா இன்னிக்கு ரொம்ப ஸ்டிஃப்பா இருக்குற மாதிரி தெரியுறாங்க வினு, இன்னும் ஒரு தடவ அவங்க கிட்ட போய் ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு வந்துடட்டுமாப்பா?" என்று கேட்டவளின் கண்கள் அவனிடம் அனுமதி தருவாயா என்று யாசித்தன.

"எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உன் கிட்ட எல்லாம் இனிமே என் காரை குடுக்கறது மாதிரி இல்லம்மா...... வா கீழே இறங்கு. எப்படியும் உங்க அண்ணிட்ட சொல்லிட்டு கிளம்பணும்ல, அவங்க வர்ற வரைக்கும் கொஞ்ச நேரம் உங்கப்பா கூட பேசிட்டு இரு!" என்று சொல்லி விட்டு தன் மனைவியை மறுபடியும் ஜெய் நந்தனிடம் அழைத்து சென்றான் பவின்.

"மீரு நீ வருத்தப்படாதடா, நம்ம கவிம்மாவோட அடம் நமக்கு தெரியாததா? அது தான் நந்து இருக்கான்ல, கண்டிப்பா இன்னும் பத்து நிமிஷத்துல அவளைக் கூட்டிட்டு வந்துடுவான் பாரு!" என்று சொல்லி நிர்மலா மீராவை தன் வார்த்தைகளால் தேற்றிக் கொண்டிருந்தார்.

"ஸோ உங்க மருமகளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்றதுக்கு நீங்க எனக்கு குடுக்கற டைம் பத்து நிமிஷம்.... ஓகே ஐ வில் டூ மை லெவல் பெஸ்ட், ஏய் அஜு நீ ஏன் முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்க..... அவ வராட்டி போறா, நம்ம ஜாலியா ஹைஃபைவ் குடுத்துட்டு கிளம்புவோம்!" என்று சொன்ன தன் மருமகனிடம்,

"இல்லடா ஜீவாக்குட்டி, அப்புறம் அர்த்த ராத்திரியில எங்க அப்பா அம்மாவை பார்க்கணும்ன்னு கவிம்மா அழுதான்னா நீ தான் கஷ்டப்படணும், அதனால அவள எப்படியாவது கூட்டிட்டு வந்துடேன் ப்ளீஸ்!" என்று கெஞ்சியவரிடம் புன்னகைத்தவன்,

"நீ பண்ணையார்ட்ட உன் காலேஜ் காஸிப்ஸ் பேசி முடிக்கிறதுக்குள்ள வந்துடுறேன்.... பை!" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான்.

"யோவ் மாமா என்னய்யா நீயி எப்போ பார்த்தாலும் ஊரு எல்லையில உட்கார்ந்து இருக்குற அய்யனாரு மாதிரி உன் வூட்டுக்குள்ள வந்து தனியா உட்கார்ந்துக்குற..... வாய்யா நாங்க இன்னிக்கு ஊருக்கு கிளம்புறம்ல, வந்து உம் பொண்ணை நல்லாயிருன்னு சொல்லி வழியனுப்பி வை....வா!" என்று சொன்ன தன் மருமகனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,

"என்னன்னு தெரியலடா மாப்பிள்ளை, இனுக்குட்டி இன்னிக்கு பூரா அண்ணன் அண்ணியைக் கூட பார்க்காம என் பக்கத்துல வந்து வந்து உட்கார்ந்து இருந்தா.... அதுதான் நான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்னு....." என்று இழுத்தவரை கைகளைப் பற்றி அழைத்து வந்தவன்,

"நல்லா ஒதுங்குன போ..... அப்புறம் எங்கப்பன காணும்னு எம் பொஞ்சாதி வழி நெடுக அழுதுகிட்டு வரவா..... போய்யா கிளம்புற வரைக்கும் உங்கண்ணன் கூட உட்கார்ந்துக்காம போய் இனியா புள்ள கூட இரு; ஊர்ல எல்லா அப்பனும் மருமவன் கிட்ட புள்ளைய ஒழுங்கா பார்த்துக்கன்னு சொல்லுவாய்ங்க, இங்க அப்பனுக்கே சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதிருக்கு...." என்று சலித்த படி விவேக்கை தன் மனைவியிடம் அழைத்துச் சென்றான் இசக்கி ராசு.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro