💟 ஜீவாமிர்தம் 62
"கவி தனியா கிளம்பணும்ன்னும் சொல்ற... அப்புறம் ஜீவா மச்சிட்ட ப்ராமிஸும் பண்ற! என்ன ஐடியால தான் இருக்க நீ? உன்னையும் குழப்பிகிட்டு மச்சியையும் கஷ்டப்படுத்தாதம்மா! இங்கயே நீ இருக்கேன்னு சொன்னா எல்லாருக்கும் ரொம்ப ஹாப்பியா இருக்கும். அன்னிக்கு நீ அழுறத பார்த்து எனக்கு கஷ்டமா இருந்ததால தான் என் கூட வர்றியான்னு கேட்டேன். ஜீவா மச்சி கூட உன் லைஃப் எந்த காம்பிளிகேஷனும் இல்லாம போச்சுன்னா ஓகே தான் கவி!" என்று சொன்ன ராகவை ஒரு பாவப் பார்வை பார்த்த கவிப்ரியா,
"ஏன்டா நீயும் விஷயம் புரிஞ்சுக்காம என் கழுத்தை அறுக்குற..... ஜீவா மேல எப்போ பார்த்தாலும் நான் ஒரு பெரிய தப்பை தூக்கி வச்சுர்றேன். ஆனா அதுக்காக எல்லாம் அவன் கோபப்பட்டு ரியாக்ட் பண்ணினா கூட பரவாயில்லை ஆனா அவன் எப்பவுமே தப்பு செய்றது நான் இல்ல இந்த விஷயத்தை தப்பா புரிஞ்சுகிட்டது நீ தான்னு சிரிச்சுக்கிட்டே அவன் செயலால எனக்கு உணர்த்திட்டு மட்டும் போயிடுறான். இன்னிக்கு மாமா எந்த முட்டாப்பயடா உன் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டதுன்னு அவன்ட்ட கேட்டதுக்கு அவன் பொண்டாட்டி தான் இப்படி கேட்டான்னு சொல்லியிருந்தா அதுக்கப்புறம் நான் என் முகத்தை எங்க போய் வச்சுக்குறது? ஒரு புருஷனா ஜீவா அவனோட காதல்ல தெளிவா இருக்கான், அந்த தெளிவு எனக்கு இல்லாம தானே அவன் கிட்ட என்னைய நீ யூஸ் பண்ணிக்கிட்டியாங்கிற கேள்வியை கேட்டேன்..... இந்த ஒரு விஷயம் மட்டுமா? இன்னும் எத்தனை தடவ அவன அழ வச்சிருக்கேன்..... என்னால இப்போ நிமிர்ந்து ஜீவா முகத்தை கூட பார்க்க முடியல, இதுல எங்கிருந்து அவன் கூட சந்தோஷமா லைஃப் அ ஸ்டார்ட் பண்றது? எங்க ரெண்டு பேருக்குள்ள கண்டிப்பா ஒரு கேப் வேணும்னு எனக்கு தோணுது; நாளைக்கு ரிஷப்ஸன் முடிஞ்சதும் நான் உடனே கிளம்பிடுவேன். அதுக்கு மேல இங்க இருக்க மாட்டேன்!" என்று சொன்ன தன் அக்காவிடம்
"கவி கிளம்பறதுன்னா இப்பவே கிளம்பி போக வேண்டியது தான.... அதென்னடீ நாளைக்கு ரிஷப்ஸன் முடிஞ்சதுக்கப்புறமா கிளம்பறது? ஜீவா பேருக்கு மட்டும் உன்னோட புருஷனா இருக்கணும்னு நினைக்கிறியா? இப்போ நீ தான் ரொம்ப தப்பு பண்ற கவி!" என்று சொன்ன தன் தம்பியிடம் ஒரு சிறிய விரக்தி சிரிப்புடன்,
"ஏன்டா தப்பு பண்றேன்னு சொல்றதோட நிறுத்திட்ட..... நான் ஜீவாவ யூஸ் பண்ணிக்குறேன்னு சொல்ல வேண்டியது தானே..... என்னோட எல்லா ஃபீலையும் உங்கிட்ட சொல்ல முடியாது தம்பி. இதுக்கு மேல நான் ஜீவாட்ட பேசிக்குறேன். நாளைக்கு பங்ஷன் முடிஞ்சதுக்கப்புறம் அவனே என்னை அப்பா அம்மா கூட அனுப்பி வைப்பான் பாரு!" என்று சொன்ன தன் அக்காவை கேவலமாக முறைத்த ராகவ்,
"மறுபடியும் மச்சிய எல்லாரும் தப்பா நினைக்குற ஒரு சிச்சுவேஷனை க்ரியேட் பண்ண போற...... இந்த தப்புக்கு உன் மனசுல ஒரு குற்ற உணர்ச்சி வருமே? அதென்ன செய்ய போற கவிப்ரியா?" என்று கேட்டான் ராகவ்.
கவிப்ரியா தன் தம்பியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு அமர்ந்திருந்த போது அவளது அறைக் கதவு தட்டப்பட்டது.
"இந்த நேரத்துல யாரா இருக்கும்டா.... கதவைத் திறந்து விடேன்!" என்று ராகவிடம் சொல்லிய கவிப்ரியாவை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு சென்று கதவை திறந்து விட்டான் ராகவ்.
"ஓய் என்ன ரெண்டு பேரும் கதவை பூட்டிகிட்டு சீரியஸா.....? டேய் மண்டைவீங்கி நாளைக்கு உங்க அக்காவை இங்க விட்டுட்டு போகப்போறோமேன்னு உனக்கு கவலையா இருக்கா.... எனக்கும் ஷைலு, இனியாவை பிரியப் போறோமேன்னு நினைச்சு வருத்தமா தான்டா இருக்கு....!" என்று சொன்ன ஜீவானந்தனை பார்த்து, "ஐ'ம் ஸாரி மச்சி, உள்ள போய் உங்க பொண்டாட்டி கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க. நான் கிளம்புறேன். பை!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் ராகவ்.
"ஏய் மூக்கி பையன் எதுக்கு நம்ம கிட்ட ஸாரி கேட்டு போறான்..... நம்மள தொந்தரவு பண்ணிட்டோம்னு நினைச்சு ஸாரி சொல்லிட்டு போகுதா பயபுள்ள..... நாளைக்கு ராத்திரியெல்லாம் இந்த மாதிரி யாரையும் உள்ள விட்டு தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க கூடாது. புரியுதா..... நீ இன்னிக்கு பாடுன பாட்டு ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது. ஏன்டீ திடீர்னு அழுத..... எனக்கு உன் கண்ணுல கண்ணீரை பார்த்தவுடனே கஷ்டமாகிடுச்சு. இனிமே எதுக்கும் அழாத. சரியா? இப்போ எதாவது குறையிருந்தா சொல்லு. உன் கண்ணன் கேக்குற மூடுல இருக்காரு!" என்று சொல்லி விட்டு அவளருகில் வந்து அமர்ந்தவனிடம் இருந்து ஒரு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் கவிப்ரியா.
"எனக்கு உன்னோட பணத்தை வச்சு லான்ல ஒரு க்ளாஸ் ஹவுஸ் கட்டித் தா ஜீவா, நம்ம தோட்டத்துல இருக்குற எல்லா செடியும் அங்கயும் இருக்கணும்..... எப்போ செஞ்சு தர்ற?" என்று கேட்ட தன் மனைவியின் தோளில் கைகளைப் போட்டு அவள் விரல்களை பற்றி விளையாடிக் கொண்டிருந்த ஜீவா,
"ஏன்டீ கேர்ள்ஸ் உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா, இப்போ தான் ஒருத்தி பன்ஜி ஜம்ப்பிங்னு கேட்டான்னு அத முடிச்சுருக்கு. அதுக்குள்ள நீ க்ளாஸ் ஹவுஸ் கட்டித் தாடாங்குற, அதுவும் நான் தான் கட்டித் தரணும்னு சொல்ற ..... நம்ம முதல் வருஷ வெட்டிங் ஆனிவர்சரிக்கு உனக்கு க்ளாஸ் ஹவுஸ கிப்ட்டா தர்றேன். அப்படியே உன் ஒட்டக சவாரி, லண்டன் ஐ ரைடும் கூட்டிட்டு போறேன். ஆனா இப்போதைக்கு எதுவும் முடியாது அம்முலு..... நம்ம பண்ணையில கொஞ்சம் ரெனோவேஷன், மாடிஃபிகேஷன்லாம் செய்யணும் போலிருக்கு. அத நான் என் கமிட்மெண்ட்டா எடுத்துக்கிட்டேன். ஸோ ஒரு டூ, த்ரீ மன்த்ஸ்க்கு உன்ற புருஷர் ரொம்ப பிஸி!" என்று சொன்னவனை ஒரு ஏளனச் சிரிப்புடன் ஏறிட்டவள்,
"ஸோ நீ இவ்வளவு நாள் வெரைட்டியா சீன் போட்டது, நானும் ஒரு லாயர் தான்னு சொல்லி உன் சீனியர் பின்னாடி சுத்திட்டு இருந்தது இது எல்லாம் வேஸ்ட், இங்க இருந்து மாடு மேய்க்குறதுக்கு தான் அவ்வளவு பில்டப் குடுத்தியா ஜீவா.... எனக்கு நீ இதெல்லாம் செய்யப் போறேன்னு சொல்றது பிடிக்கல!" என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
ஜீவானந்தன் புன்னகையுடன் அவள் கன்னத்தை கிள்ளி விட்டு, "என் செல்லப் பொண்டாட்டி, மாடு மேய்க்குறதுக்கு வலிக்குது, ஆனா உனக்கு சீம்பால் மட்டும் அண்டாவுல வேணுமாக்கும், நம்ம வேலைய நம்ம பார்க்கறதுல என்ன கவுரவக் குறைச்சல் வந்துடப் போகுது?" என்று கேட்டான்.
கவிப்ரியா ஆழ்ந்து ஒரு மூச்செடுத்து விட்டு அவன் முன் வந்து நின்றாள்.
"என்னடா அம்முலு.... இன்னிக்கு உன் கிட்ட ஏதோ வித்தியாசமா தெரியுதே.... என்னாச்சு, பங்ஷன்ல இருந்துட்டு வந்தது தலை வலிக்குதா கண்ணா?" என்று கேட்ட ஜீவாவிடம் இல்லையென தலையசைத்தவள்,
"என்னிக்கு நீயே உன் திறமையையும் உழைப்பையும் நம்பி சம்பாதிக்குற பணத்துல டார்லிங்கும், எங்கப்பாவுக்கும் தர்ற அளவுக்கு உன்னால எனக்கு ஒரு சொபிஸ்ட்டிகேட்டட் லைஃப் தர முடியுதோ அன்னிக்கு சொல்லி அனுப்பு ஜீவா...... அதுவரைக்கும் ஸாரி ஐ காண்ட் லிவ் வித் யூ ஹேப்பிலி! ஸோ ஐ'ம் கோயிங்" என்று சொன்ன தன் மனைவியை தன் வாழ்நாளில் முதல் முறையாக மெய்யான ஒரு தீப்பார்வை பார்த்த வண்ணம் கைகளை நரம்புகள் தெரியும் வண்ணம் இறுக்க மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro