💟 ஜீவாமிர்தம் 61
"நாளைக்கு நைட் ரிஷப்ஸன் முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பணும்னு நினைச்சாலே எரிச்சலா வருது. வாணிம்மா ரூபி கல்யாணத்துல நல்லா என்ஜாய் பண்ணியா? எல்லார் கூடவும் மிங்கிள் ஆகி நீ ரொம்ப ஜாலியா இருந்தத பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது!" என்று சொன்ன பார்கவை பார்த்து சிரித்தாள் அபிநயசரஸ்வதி.
"ஒண்ணுமே சொல்லாம இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்டீ..... ராசுப் பையன் இந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையாம், ஜீவா சின்ன பையனாம். அவன் இதெல்லாம் செய்ய கூடாதாம், நம்மள வேலை செய்ய வைக்கிறதுக்கு எங்க மாமா எப்படியெல்லாம் பிட்டை போடுறாருன்னு பாரு.... அந்த ஜீவா எருமைக்கும் தான் கல்யாணம் ஆகிடுச்சு தானே, அவன இதெல்லாம் செய்ய சொன்னா என்னவாம்?
ரூபிக்காக தான் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். இல்லைன்னா அப்பவே உன்னை தூக்கிட்டு நம்ம ரூமுக்குள்ள போயிருப்பேன். சீக்கிரம் வேலைய முடி, எல்லாத்தையும் சிற்பி மாதிரி வடிவமைச்சுட்டு இருக்காத...... ச்சை புருஷனோட ஃபீலிங் ஐ கொஞ்சமாவது புரிஞ்சுக்குறியா; எப்போ பாரு அண்ணியோட படுத்துக்குறேன், அத்தை கூட படுத்துக்குறேன்னு எரிச்சலை தான் கிளப்புற.....!" என்று எரிச்சலுடன் ஷைலுவின் அறையை அலங்கரித்து கொண்டு இருந்த தன் கணவனின் வாயை தன் கைகளால் மூடி விட்டு அவன் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்தம் பதித்தாள் அபிநயா.
"சும்மா புலம்பாம பேசாம இருக்கணும் மிஸ்டர் பார்கவ்..... ஷைலு ரிஷப்ஸனோட ஜீவாண்ணா ரிஷப்ஸனும் நடக்கப்போகுதுன்னு பெரியம்மா பெரியப்பா அவங்களோட பிஸினஸ் ப்ரெண்ட்ஸ் கேங்க், நிறைய க்ளப்ஸ், நம்ம பேக்டரி டீலர்ஸ், கம்பெனி வொர்க்கர்ஸ் எல்லார் கிட்டயும் போன்லயே இன்வைட் பண்ணிட்டு அவங்க கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாம பயந்து போய் உட்கார்ந்து இருக்காங்க..... கிட்டத்தட்ட நம்ம கல்யாணத்தப்போ ஆன மாதிரி சிச்சுவேஷன் தான் வரும்னு தெரிஞ்சாலும் நிறைய பேர் வர்றப்போ வாய் வார்த்தை எதுவும் தப்பாகிட கூடாதுன்னு டென்ஷன் ஆகுறாங்க. இதுல ஜீவா அண்ணா வேற யாரோ எதுவோ சொல்லிட்டாங்கன்னு ப்ரியா அண்ணிய கூட்டிட்டு ஜெய் பெரியப்பாட்ட பஞ்சாயத்து வக்க போயிட்டாங்க, அஜு மாமாவும், மீரா அத்தையும் ப்ரியா அண்ணி ஜீவா அண்ணாட்ட சரியா முகம் குடுத்து பேச மாட்டேங்குறாங்கன்னு வருத்தத்துல இருந்தாங்க. கேமெல்லாம் விளையாடி இப்போ தான் எல்லாரும் கொஞ்சமா ரிலாக்ஸ் ஆகியிருக்காங்க. வேலைய பார்க்காம உங்களுக்கு இப்போ ரூமுக்கு போகணுமா? உங்க மண்டையிலயே கொட்டுவேன்; ஜீவா அண்ணா ப்ரியாட்ட இந்த வேலையெல்லாம் குடுத்தா அவங்க எம்பாரஸ் ஆக மாட்டாங்களா? சும்மா ஒண்ணும் புரியாம மேலயும் கீழயும் குதிக்க வேண்டியது..... இதெல்லாம் செஞ்சு குடுக்கறது எனக்கு எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா..... இன்னும் ஜீவா அண்ணா, ராகவ் மேரேஜ்க்கும் இதெல்லாம் நான் தான் செய்வேன். இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா பண்ணுங்க. இல்லன்னா ரூமுக்கு போய் நல்லா போர்த்திட்டு தூங்குங்க!" என்று சொல்லி விட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தவளை அணைத்துக் கொண்டு, "தேங்க்யூ வாணிம்மா. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து உங்கிட்ட க்ளியர் பண்ணிக்க வேண்டிய ஒரு டவுட்டு இருக்கு. நீ நிஜமாவே உனக்கு பிடிச்சு தான் வேலை பார்க்குறியா? இல்ல உன் அப்பா அம்மாவ காப்பாத்தணும்ங்கிற கமிட்மெண்ட் இருக்குன்னு வேலை பார்க்குறியா?" என்று கேட்டவனிடம் கடுமையாக முகத்தை வைத்து கொண்டு,
"இப்போ எதுக்கு திடீர்னு இப்படி ஒரு கேள்வி? எனக்கு வேலை பார்க்க பிடிக்கல தான். ஓடி ஓடி ரன் எடுக்குறது மாதிரி பதினேழு வயசுல இருந்து அடுத்து என்ன அடுத்து என்னன்னு தேடி தேடி லைப் ரொம்ப பிஸியா போயிடுச்சு. சரி நமக்கு நம்ம கவி கூடவே கல்யாணம் ஆகிடுச்சு..... இனிமே அவர் நமக்காக எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நம்ம கொஞ்சம் ரிலாக்ஸ்டா வீட்ல இருக்கிறவங்க எல்லாரையும் கவனிச்சுட்டு ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா கல்யாணத்தன்னிக்கே நீங்க என் அப்பா அம்மாவை பார்த்து அவ்வளவு கோபப்பட்டீங்க! என்ன தான் கோபம் இருந்தாலும் பெத்தவங்க இல்லையா..... பாதியில விட்டுட்டு வர மனசு கேக்க மாட்டேங்குது. ஆமா ஜாலியான நேரத்துல எதுக்கு நம்ம இதெல்லாம் பேசிட்டு இருக்கோம்...... ம்ம்....ம்ம்! சரி ஒரு கிஸ் குடுங்க, நீங்க மட்டும் வாங்கிட்டு எனக்கு திருப்பிக் குடுக்கலைன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்ட தன் மனைவியிடம் பற்கள் தெரிந்த சிரிப்புடன்,
"உங்கிட்ட நான் கிஸ் கேட்டேனா? எனக்கு நீயா குடுத்துட்டு அத திரும்ப கேட்டா நாங்களும் குடுக்கணுமா? இவ்வளவு நாளா மனசுல இருந்ததெல்லாம் ஏன்டீ என்கிட்ட சொல்லல..... காலேஜ் போகாம சும்மா வீட்ல உட்கார்ந்துட்டு இருந்தா உனக்கு போரடிக்குமே.... அதுக்கு என்ன வாணிம்மா பண்றது?" என்று சற்று கவலையுடன் கேட்ட தன் கணவனிடம் சிறு புன்னகையுடன், "நான் முன்னாடியே யோசிச்சு வச்சுட்டேன் கவி.... சரஸ் பாட்டியை கொஞ்சம் பிஸிக்கலி ஸ்டெப்லைஸ் பண்ணிட்டு அவங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணி முடிச்சிடணும். அவங்களுக்கு இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஒரு பொய்யான நம்பிக்கைய குடுக்கறது? சில நேரம் ரொம்ப தடுமாறி மனசு வருத்தப்படுறாங்க தெரியுமா?" என்று சொன்னவளை ஏற இறங்க பார்த்து விட்டு, "மனசுக்குள்ளயே ப்ளான் எல்லாம் ரெடி பண்ணிட்டு இவன் எப்படா நம்ம கிட்ட வாயை குடுப்பான்னு உட்கார்ந்து இருந்துருக்க இல்லடீ....? உன்னைய பெத்த ஒரே ஒரு நல்ல விஷயத்துக்காக உங்க அப்பா அம்மாவ நான் கவனிச்சுக்குறேன் வாணிம்மா..... பட் மாசா மாசம் பணத்தை உன் கையில தான் குடுப்பேன். அத அவங்களுக்கு குடுக்கறதெல்லாம் நீ தான் பார்த்துக்கணும். சரியா?" என்று கேட்ட தன் கணவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு, "இப்ப இவன் யார் கிட்டயோ வாயை குடுப்பானான்னு யாரோ பார்க்குறாங்களாம் கவி..... அந்த ட்யூப் லைட் கரெக்டா வொர்க் பண்ணுதாப்பா?"என்று கேட்ட தன் மனைவியை முறைத்தவன், "என்னையே குடுத்துட்டேன்.... இன்னும் என் செல்லப் பொண்டாட்டி எது கேட்டாலும் குடுக்க மாட்டேனா? ட்யூப் லைட் சரியா வொர்க் பண்ணுதானா கேக்குற! பக்கத்துல வந்து பாரு, ஷாக் அடிக்கும்! ஊரையே ரவுசாக மாத்தி போற நீ கலைவாணி பேத்தி....." என்று பாடிக் கொண்டே அபியின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு அவளது செவ்விதழ் மேலும் சிவக்க வைத்தான் பார்கவ்.
கெளதமன், ஜெய் நந்தன், விவேக் மூவரும் உறங்கப் போகாமல் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். கௌதமன், "ஜெய் ஒவ்வொரு தடவையும் உன் வீட்டுக்கு வரும் போதும் எனக்கு பெரிசா எதாவது கிஃப்ட் கிடைக்கும்டா, என்னைப் பொறுத்தவரைக்கும் நீ என்னோட லக்கி சார்ம்! ரேர் பிக்ஸ் ஆகட்டும், என் மருமகளாட்டும், இப்போ என் அம்மா அப்பா ஆகட்டும், எல்லாமே உன் வீட்டுக்கு வந்ததால எனக்கு கிடைச்ச சந்தோஷம் தான். நீ உன் பொண்ணை பிரியப் போறோம்னெல்லாம் ஒண்ணுமே அலட்டிக்காத. எப்போ நீ நம்ம வீட்டுக்கு வந்தாலும் ராகி மாவு ஹாஸ்பிட்டல் போய்ட்டா கூட நான் உனக்கு பிரியாணி செஞ்சு குடுத்து சூப்பரா பார்த்துக்குறேன்..... ஓகே டோண்ட் வொர்ரி. ஜஸ்ட் பீ கூல்!" என்று தன் நண்பனிடம் ஆறுதலாக பேசிக் கொண்டு இருந்தார்.
"தேங்க்ஸ்டா கௌ.... ரூபிணியும், லட்டுவும் இல்லாம எனக்கு தான் ரொம்ப கொடுமையா இருக்கப் போகுது. நல்ல வேளை ஏஞ்சலாவது கூட இருப்பா. எம் பொண்ணை உன்னை நம்பி தான் அனுப்புறேன். நல்லா பார்த்துக்கடா!" என்று ஜெய் நந்தன் கெளதமனிடம் சொல்லிக் கொண்டு இருக்கையில் அங்கு ஜீவானந்தன் வந்து நின்றான்.
"ஹலோ என்ன ஹால்ல உட்கார்ந்து மீட்டீங் போட்டுட்டு இருக்கீங்க? தாத்தா ஷைலுவையும் பவினையும் ப்ளெஸ் பண்ண உங்க எல்லாரையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க!" என்று சொன்ன ஜீவானந்தனை தன்னருகில் அமர்த்தி கொண்டார் ஜெய் நந்தன்.
"உண்மைய சொல்லு அந்த பாட்டு யாரோட ஐடியா? நீ எழுதியிருக்க வாய்ப்பே இல்ல, உங்கம்மாட்ட கூட ஹெல்ப் கேக்கலையா? அப்புறம் யாரு எழுதினா.....?" என்று கேட்ட தன் தந்தையிடம்,
"முந்தி காலத்துல ராஜாவுக்கு எல்லாம் பொழுது போகலைன்னா யாராவது புலவரை கூப்பிட்டு பாட்டெழுத சொல்லுவாங்களாமே..... நம்ம வீட்ல அப்படி இருக்கிற ஒரு புலவர் பத்மா பாட்டி, ஃபீல் என்னோடது, லிரிக்ஸ் அவங்கட்ட வாங்கினது, உங்க மருமக மலை மேல மட்டும் இல்ல, அப்பப்போ என் தலை மேலயும் ஏறி உட்கார்ந்துக்குறா..... பிடிச்சு கீழே இழுத்துட்டு வரணும்ல இப்போ வர்றீங்களா இல்லையா? உங்கள தான் கூப்பிடுறாங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்....!" என்று சொன்ன தன் மகனிடம்,
"சூப்பர்டா ஆனந்த்மா! ஆசிர்வாதம்லாம் பண்றது பெரியவங்க வேலை...... நம்மல்லாம் சின்ன பசங்க, ஆமா உனக்கும் ஏஞ்சலுக்கும் நடுவுல என்னடா நடக்குது.....? அவ ஏதோ அப்செட்டா இருக்கற மாதிரி ஒரு ஃபீல் எனக்கு தோணுச்சு. ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிட்டதுல தான் சந்தோஷமாகிடுச்சு, எதுவும் பிரச்சனை இல்லல்ல ஆனந்த்?" என்று கேட்ட தன் தந்தையிடம்,
"போங்கப்பா எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு தெரியுமா? அவள நான் தான் என் பொண்டாட்டின்னு சொல்லிகிட்டே இருக்கேன். ஒரு ஹக் கூட பண்ண விடாம எல்லாரும் ஓவரா அவள ப்ரொடெக்ட் பண்றாங்க, அதுலயும் அஜு மாமா எல்லாம் ஓவர் டைம் பார்க்குறாரு, ப்ளீஸ் அம்முலு கூட கொஞ்சம் தனியா பேசறதுக்காவது அலவ் பண்ணுங்கப்பா! சரி ஷைலு மேரேஜ்க்கு எஸ்ஜேஎன்னை ஏன் கிப்ட்டா குடுத்தீங்க? பண்ணையை குடுத்துருக்கலாமே? அதுதானே சைஸ்ல பெரிசு?" என்று கேட்ட தன் மகனிடம் ஒன்றும் பதில் பேசாமல் விவேக்கை பார்த்தார் ஜெய் நந்தன்.
அவர் தன் அண்ணனின் பார்வையில் பதில் கூற தயாராகி ஜீவானந்தனிடம், "ஜீவாம்மா பண்ணை இப்போ அந்த அளவுக்கு ஃப்ராபிட்டபிளா நடக்கலப்பா. நிறைய மாடுகளோட மில்க் ப்ரொடெக்ஷன் நின்னு போயிடுச்சு. 60 மாடுகள்ல 15 தான் பால் தர்ற கண்டிஷன்ல இருக்கு. நம்ம கோபர் கேஸ் ப்ளாண்டையும் என்னால மேனேஜ் பண்ண முடியலைன்னு ஸ்டாப் பண்ணிட்டதால சாணத்தை டிஸ்போஸ் பண்றதே பெரிய வேலையா இருக்கு. காய்கறி விளைச்சலையும் மொத்தமா ருசிக்கு குடுத்து அதையும் நம்ம எம்ப்ளாயீஸ் தான் வாங்குறதால பெரிசா லாபம் எடுக்க முடியல, அண்ணா கிட்ட சொன்னா அவர் இதையெல்லாம் காதுல வாங்கிக்குறதே கிடையாது. இப்ப ஏதாவது ஒரு ஃப்ரெஷ் எனர்ஜி உள்ள வந்தா தான் பண்ணைய வின் வின் சிச்சுவேஷன்ல இருந்து ரீகெயின் பண்ண முடியும்!" என்று சொன்ன தன் சித்தப்பாவிடம் கூர்ந்து அனைத்து விஷயங்களையும் வாங்கி கொண்ட ஜீவானந்தன் ஜெய் நந்தனின் புறம் திரும்பி,
"என்ன டாடி நான் என் 50 வயசுல உங்கள மாதிரி கால் ஆட்டிட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டாமா? இந்த ரேன்ஜ்ல போயிட்டு இருந்தா ஒண்ணும் ஆவறதுக்கில்ல, நெக்ஸ்ட் வீக்ல இருந்து பண்ணைய என் கண்ட்ரோல்ல எடுத்துக்கட்டுமா? அத லாபத்தில நடத்தி காமிச்சா 10% ஷேர் எனக்கு குடுக்கணும், உங்களுக்கு ஓகேன்னா ஐ'ம் ரெடி!" என்று சொன்ன தன் மகனிடம் புன்னகையுடன்,
"நல்லா செய் ஆனந்த், பத்து பர்செண்ட் என்ன லாபம் முழுசையும் கூட எடுத்துக்க. ஆனா ஏஞ்சலுக்கு நீ பண்ணையில வொர்க் பண்றது பிடிக்குமான்னு தெரியலயேப்பா? எதுக்கும் அவ "அவள்" இங்க கொண்டு வந்து செட் பண்ற வரைக்கும் நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணி உன் ப்ரெண்டு அரவிந்த் கூட சேர்ந்து ஏதாவது கேஸ கவனிக்கலாம்ல?" என்று கேட்டார் ஜெய் நந்தன்.
"அரவிந்துக்கு ஆஃபிஸை குடுத்தது கிப்ட்டாப்பா...... அப்புறம் அவனோட பிஸினஸ் ப்ரிமிஸஸ்ல போய் நான் எப்படி வொர்க் பண்ணுறது? நான் முத முதலா நடக்க ஆரம்பிச்சதே நம்ம பண்ணையில தான்..... லாயர்ஸா வொர்க் பண்றதுக்கு எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. நம்ம வீட்ல இருக்கிறத பத்திரமா பார்த்துக்கறது தான் இப்போ முத வேலை.... சித்தப்பா ராசு நாளைக்கு காலையில கிளம்பிடுவானா?" என்று ஜீவா விவேக்கிடம் கேள்வி கேட்க அவர் சற்று கவலையுடன்,
"இன்னிக்கு பங்ஷன் முடிஞ்சதுல இருந்து இனுக்குட்டி கண்ணுல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக்கு. அந்தப்பய அவள கொஞ்சி பார்த்து, கெஞ்சி பார்த்து கடைசியில அதட்டி தான் தூங்க வைக்க வேண்டியதா போச்சு நந்து. நாளைக்கு ஈவ்னிங் தான் எல்லாரும் மொத்தமா கிளம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்!" என்று அவர் சொன்னதும் ஜீவானந்தன் சற்று திகைத்து போய் விட்டான்.
"மகனே எதுக்கு இந்த பரிதாப லுக்?" என்று சிரித்த படி கேட்ட தன் தந்தையிடம்,
"ஐயோப்ப்பா என் பொண்டாட்டி முத ஆளா மலைய விட்டு கிளம்பிடாம இருக்கணும், நிறைய வொர்க் பண்ண வேண்டியதிருக்கு. அப்புறம் பார்க்கலாம். மறக்காம என்னோட விஷஷ் கூட ஷைலு கிட்ட சொல்லிடுங்க, பை டாடி!" என்று சொல்லி விட்டு விரைந்த நடையுடன் தன் அறைக்கு கிளம்பினான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro