💟 ஜீவாமிர்தம் 6
ஹாலில் ஜீவாவின் அருகில் வந்தமர்ந்த கவிப்ரியாவிடம், "ப்ளீஸ் கேப்ஸி, ஐ'ம் நாட் இன் அ மூட் டூ ஆர்க்யூ வித் யூ! எங்கே உன்னை ஹர்ட் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு. அவர் கூட பேச சொல்லி என்னை கம்பெல் பண்ணாம இருந்தீங்கன்னா தான் இங்க இருப்பேன்! இல்லன்னா ப்ளாட்டுக்கு கிளம்பறேன்!" என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டிருந்த கவிப்ரியா
இனியா மற்றும் ஷைலுவை அழைத்து
"இந்த கிறுக்கன் மாமா கிட்ட என்ன உளறிட்டு வந்தானோ..... தெரியல! நீங்க ரெண்டு பேரும் அவர்ட்ட பேசிட்டு இருங்க!" என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தவள் ஜீவாவிடம் திரும்பி,
"உன் கூட கொஞ்சம் பேசணும். நீ கார்டனுக்கு வா!" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
அர்ஜுன், மீராவும், நிர்மலாவும் அவர்கள் இருவரையும் கவலையுடன் பார்த்து கொண்டு இருக்கவும், "ஹலோ இங்க என்ன பார்த்துட்டு நிக்கிறீங்க? காலையில தான் கடனேன்னு சமைச்சு போட்டுட்டு ஓபி அடிச்சுட்டீங்க! இப்பவாச்சும் செமையா ஒரு பிடி பிடிக்குற மாதிரி சமைச்சு வைக்கணும்! எனக்கு, ஷைலு, இனியாவுக்கு எல்லாம் நிறைய வேலை இருக்கு! ஸோ ஹெல்ப் வேணும்னு எங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. சித்தப்பு நீங்க சமையல் சூப்பர்விஷன் முடிச்சுட்டு அப்படியே ஸ்வீட் பீடாவும் ரெடி பண்ணிடுங்க. நானும், ஜீவாவும் கார்டன்ல கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்!" என்று சொல்லி விட்டு ஜீவாவை கையைப் பிடித்து அழைத்து சென்றாள் கவிப்ரியா.
"அம்முலு....கையை விடு! நானே வர்றேன்.....!" என்று சொன்னவனிடம்,
"விடுவேன். ஆனா ஓடிட மாட்டியே.....?" என்று ஆட்காட்டி விரலை தூக்கி மிரட்டினாள் கவி. அவளிடம் புன்னகையுடன்,
"அப்படி போறதா இருந்தா ரெண்டு வயசுலயே போயிருப்பேனே மூக்கி! நீ சொல்ற வரைக்கும் இந்த இடத்தை விட்டு வேற எங்கயும் அசைய கூட மாட்டேன். போதுமா?" என்றான் சிரிப்புடன்.
"கரெக்டா லாக் ஆகிட்ட மச்சான்! உட்காரு. நிறைய பேசணும்!" என்று நாற்காலியை கைகாட்டினாள் கவிப்ரியா.
"இப்போ என்னடீ குண்டை அடியில வச்சுருக்க? உன் வாயில மச்சான் வர்றது ஆபத்தாச்சே?" என்று யோசனையுடன் புருவம் நெறித்த படி அவளைப் பார்த்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.
"சேச்சே....அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லடா! மாமா மேல என்னடா இவ்வளவு கோபம் உனக்கு? அவர் உன்னை அடிச்சதுக்கு தான் இவ்வளவு வீம்பு காட்டுறேன்னா...... என்னை வேணும்னா உன் கோபம் குறைஞ்சு மறையுற வரைக்கும் அடிச்சிடு நந்து. ஏன்னா நம்ம பிரச்சனையில நான் பண்ணினது தான் பெரிய தப்பு. என்னையும் மன்னிச்சுட்ட. ராகவையும் மன்னிச்சுட்ட; மாமாவை மட்டும் ஏன்டா இன்னமும் தண்டிச்சுட்டு இருக்க? இவ்வளவு வருஷம் எப்படா நீ வந்து பேசுவ, உடனே உன் கிட்ட ஸாரி கேட்டுடலாம்னு நினைச்சு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா! நானே உன் கிட்ட பேசியிருப்பேன்; ஆனா எனக்கு ஒரு ஆபத்து வந்தவுடனே நீ ரியாக்ட் பண்ணின விதம் தான் என்னை ரொம்ப தயங்க வச்சிடுச்சு. என் மேல எவ்வளவு லவ் இருந்தா உனக்கு அந்த அளவு கோபம் வந்து என்னை அடிச்சிருக்கணும்? ஆனா அந்த வயசுல அவ்வளவு மெச்சூரிட்டி இல்ல. எப்படி எப்பவும் பத்திரமா பார்த்துக்குற நீயே என்னை அடிக்கலாம்ங்கிற கோபம் தான் வந்துச்சு.....!
என் கிட்ட நீ பேசாமலேயே எனக்காக பார்த்து பார்த்து செய்றதும் ரொம்ப பிடிச்சிருந்தது. பட் நீ என் மேல அவ்வளவு கேர் எடுத்துக்கும் போது என்னோட தயக்கம் நாளுக்கு நாள் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாச்சு. உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு உணர்த்திடணும்னு நினைச்சேன். நீ கரெக்டா புரிஞ்சுக்கிட்ட; ஆனாலும் வாயை திறக்கவே இல்ல! அது தான் சித்தப்பா கிட்ட பேசி அப்பாவை உன் கிட்ட பேச வரச் சொன்னேன். ஆனாலும் நான் தான் திமிர் பிடிச்ச அடங்காப்பிடாரி ஆச்சே...... நிர்மலா அத்தை என் கிட்ட நம்ம விஷயத்தை பத்தி பேசினப்போ அவங்க கிட்ட இதை பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டேன். எப்படியாவது இந்த ஃபங்ஷனுக்காவது எல்லாம் சரியாகிடும்னு நிறைய நம்பிக்கை இருந்தது. அதுக்குள்ள நீ கையை கிழிச்சு; கண்ணாடியை உடைச்சு இல்லாத சேட்டை எல்லாம் செஞ்சு வச்சுட்ட..... மாமா கிட்ட பேசிடுறியா....கூட்டிட்டு வர்றேன்!" என்று கேட்டவளிடம்,
"அப்பா என்னை அடிச்சதுனாலயா அவர் கூட இவ்வளவு வருஷமா பேசாம இருந்தேன்னு எல்லாரும் நினைச்சீங்க அம்முலு?" என்று கேட்ட ஜீவாவை ஆச்சரியமாக பார்த்து விட்டு,
"அதில்லையா....பின்னே? நான் உன்னை மன்னிச்சு எஸ்டேட்டுக்கு கூட்டிட்டு வரணும்ன்னு சொன்னதுனாலயா?" என்று குன்றியவளிடம்,
"நம்ம பேமிலியில பெண் குழந்தைங்கன்னாலே ஒரு ஸ்பெஷல் மரியாதை தருவாங்க. மீரா அத்தை, கீதா அத்தை, நீ, ஷைலு, இனியா உட்பட எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் அட்டென்ஷன் எப்பவும் குடுத்துட்டு இருப்பாங்க. உனக்கு என்னால பிரச்சனைன்னு அப்பா நினைச்ச பட்சத்தில அவர் சொன்ன ஸ்டேட்மெண்ட் கரெக்ட் தான்......பட்!" என்று பெருமூச்சுடன் நிறுத்தியவனிடம் பொறுமை இல்லாத ஒரு தவிப்புடன்,
"எதுவுமே தப்பு இல்லங்கிற; அப்புறம் என்ன தான்டா உன் ப்ராப்ளம்? சொல்லி தொலையேன்!" என்றாள் கோபத்துடன்.
"கோர்ட்ல ஜட்ஜ் ஆகணும்னா எவ்வளவு தகுதிகளும், அனுபவமும் வேணும்னு உனக்கு தெரியுமா கேப்ஸி? என் விஷயத்தில அப்பா ரெண்டு செகண்ட் கூட யோசிக்கல. அதுக்குள்ள ஜட்ஜ் ஆகி ஜட்ஜ்மெண்ட்டும் சொல்லி முடிச்சிட்டார். அவர் என்னை அடிச்சத, நீ என்னை மன்னிச்சு மலைக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்னது எதையும் நான் தப்புன்னு சொல்லல. பட் ஒரு நிமிஷம்..... ஒரே ஒரு நிமிஷம் நம்ம ஜீவா தப்பு செஞ்சுருப்பானான்னு யோசிச்சு இருக்கலாம் இல்லையா? இல்ல என்ன நடந்ததுன்னு எங்கிட்ட கேட்டுருக்கலாமே? அவருடைய ஒரு நிமிஷ தடுமாற்றத்தால நான் எத்தனை விஷயத்தை இழந்துட்டு நிக்கிறேன். எல்லாரும் அசெம்பிள் ஆகுறீங்க ன்னா அங்கே வர்றதுக்கு நான் ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு. நீ பாட்டுக்கு ஈஸியா சொல்லிட்ட..... நீ நியூ கம்மர் இல்லையா? அடாப்ட் பண்ணிக்கோன்னு; ஆனா எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ணும் போது இதைத் தானே இவ்வளவு வருஷமா மிஸ் பண்ணினோம்ங்கிற ஃபீல் அதுவா வந்துடுது. இந்த வலி கொஞ்சம் குறையுற வரைக்குமாவது எனக்கு டைம் வேணும். என் ஃபீலிங்சை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. ப்ளீஸ்டீ அம்முலு!" என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சியவனை பார்த்து கவிப்ரியாவிற்கு தவிப்பும், குற்ற உணர்வும் மறுபடியும் அவள் மனதிற்குள் வாளைப் பாய்ச்சி அதை மேலும் திருகுவது போல் வலியை கொடுத்தது.
அவன் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தவள், "உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது. பட் முடிஞ்ச அளவு சீக்கிரம் ட்ரை பண்ணுப்பா! எல்லாரும் எல்லா பிரச்சனையும் முடிஞ்சு சந்தோஷமா இருந்தா கொஞ்சம் உறுத்தல் இல்லாம இருக்கும்!" என்றவளிடம்,
"எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் அம்முலு! அது சரி ரொம்ப நாள் கழிச்சு மேடம் கிஸ் தர்றீங்க.....கொஞ்சம் கன்ஸிடர் பண்ணி கன்னத்துலயாவது தந்திருக்கலாமே? என் லிப்ஸ், சீக்ஸ் எல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு?" என்று கேட்டவனை கனல் விழிகளால் எரித்தவள்,
"ஏன்டா மலைமாடு.... எல்லார் கிட்டயும் கேஷுவலா, ஜாலியா இருன்னு சொன்னா அதை கேக்க மாட்ட..... மாமா கிட்ட பேசிடுறியான்னு கேட்டா அதையும் செய்ய மாட்ட; பாவம் பையன் ரொம்ப ஃபீல் பண்றானே.... கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கட்டும்னு நினைச்சா உனக்கு கன்னத்துல, லிப்ஸ்ல கிஸ் கேக்குதா..... மரியாதையா ஓடிடு..... பிச்சுப்புடுவேன்.... பிச்சு!" என்று சொல்லி கண்களை உருட்டியவளிடம்,
"நான் உன்ன பர்ஸ்ட் டைம் கிஸ் பண்ணினப்ப எல்லாம் நீ இவ்வளவு ஆர்க்யூ பண்ணவே இல்ல தெரியுமா கேப்ஸி! அழகா ஸ்மைல் பண்ணிட்டு தொட்டில்ல கிடந்த! நீ நினைக்குறத எல்லாம் உன் வாயில இருந்து வார்த்தையா வர்றதுக்கு முன்னாடி செஞ்சு முடிக்கணும்னு நினைக்கிறேன்! ஆனா சில விஷயத்தில கொஞ்சம் பொறுமையா தான் மூவ் பண்ண முடியும். புரிஞ்சுக்கடா அம்முலு!" என்று சொன்னவனிடம் தலையாட்டி விட்டு, "ஜீவா நிஜமாவே என்னை உனக்கு பிடிக்குமா? என் மேல கோபமே இல்லையா?" என்று கேட்டவள் கையைப் பற்றி அவள் புறங்கையில் முத்தமிட்டவன்,
"எதுக்குடா கோபப்படணும்? அப்பா மேல கூட எனக்கு டைம் குடுக்காம அவரா எல்லாம் பேசி முடிச்சிட்டாரேன்னு ஒரு வருத்தம் தான், உரிமையா போற இடத்துக்கு கூட போக முடியலையேன்னு அப்பப்போ மனசு வலிக்கும். மத்தபடி நான் என்னோட வேலையை ஜாலியா பார்த்துட்டு, அப்பப்போ உன்னை சைட் அடிச்சிக்கிட்டு, நம்ம பாகி, ராம் கூட சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டு, மீரா, கீதா அத்தை கிட்ட பருப்பு சாதம் வாயில ஊட்டி விட சொல்லிட்டு ஹாப்பியா தானே இருந்தேன்!" என்று சொன்ன ஜீவாவை ஒரு கதறலுடன் அணைத்து கொண்டாள் கவிப்ரியா.
"என்னடா ஆச்சு? எதுக்கு இப்போ இந்த அழுகை?" என்று கேட்டு அவளை அணைத்து கொண்டவனிடம்,
"ஐ'ம் ஸாரி நந்து! ரியலி ஸாரி!" என்று தன்னிடம் மன்னிப்பு கேட்டவள் கண்ணீரை துடைத்து சமாதானப் படுத்தியவன், "உன் ஸாரியெல்லாம் நீயே வச்சுக்க மொளகா; ஆனா தயவு செய்து அழுகையை மட்டும் நிப்பாட்டு. பண்ணையார் வந்து பார்த்தாரு........ மறுபடியும் டூர் அனுப்பிட போறாரு. சத்தியமா இனிமே எல்லாம் தனியா சுத்திக்கிட்டு இருக்க முடியாது. அதுவும் அத்தை மக அழகு ரத்தினம் கைக்குள்ள வந்து குழைஞ்சு நின்னுட்டு இருக்கும் போது அவளை சமாதானப் படுத்தாம சும்மா அனுப்பவே முடியாது!" என்று சொல்லி விட்டு அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் அவள் சுதாரித்துக் கொள்ளும் முன் அவளுக்கு சற்று தூரத்தில் சென்று நின்று கொண்டான்.
கவிப்ரியா ஆத்திரத்துடன், "டேய்.....நில்லு! நான் உன் கிட்ட ஸாரி தானே கேட்டேன். என்னை சமாதானப்படுத்துன்னு கேட்டேனா? அதுவும் இப்படி கிஸ் குடுத்து...... உனக்கு ஒண்ணு தெரியுமா நந்து; நான் அடுத்த கீசெயின் வாங்கி வச்சுட்டேன்!" என்று சொன்னவளிடம் ஒரு அலட்சிய தோள் குலுக்கலுடன்,
"பத்திரமா அத ஆணியில மாட்டி வச்சுக்க. இனிமே நம்ம மேரேஜ்க்கு தான் உனக்கு கார் கிப்ட், வீட்ல மத்தவங்களையும் கவனிக்கணும்மா! உன்னை மட்டும் ஃபோக்கஸ் பண்ணிட்டு இருக்க முடியாது! எங்க அஜு மாமா உங்கிட்ட சேரக் கூடாது. நீ ரொம்ப கெட்ட பொண்ணுன்னு சொன்னாங்க கேப்ஸி! அதனால நான் உன் கூட பகல்ல மட்டும் சேர மாட்டேன். நைட் வந்து கட்டிப் பிடிச்சுக்குறேன்! இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்பறேன்!" என்று சொல்லி விடைபெற்றவனிடம்,
"வீட்டுக்கு வா, ஓவரா பேசுற வாயிலயே சூடு போடுறேன்!" என்று உரக்கக் கத்திய படி சென்றவளை மீரா, கீதா, நிர்மலா மூவரும் முறைத்து கொண்டு இருந்தனர்.
"அய்யய்யோ; பயபுள்ள கோர்த்து விட்டுட்டு கிளம்பிடுச்சே!" என்று யோசித்தவள்,
"இங்க பாருங்க, அவன் என்ன பேசினான்னு உங்களுக்கு தெரியாது. பாயாசம் ரெடியா? சரஸ் பாட்டிக்கு தர்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருந்தேன்!" என்றாள் கவிப்ரியா.
மீரா தன் மகளிடம், "நீ தானேம்மா பாட்டிட்ட பாயாசம் தர்றேன்னு சொன்ன; நீயே போய் செய்!" என்றார்.
தனது சித்தியின் தோளில் சாய்ந்து கொண்டு பின்புறம் இருந்து அவரை கட்டிப் பிடித்து கொண்டவள், "இங்க பாருங்க சித்தி, உங்க காதல் கணவரோட அம்மா இன்னும் கொஞ்ச நாளைக்கு உயிரோட இருக்கணும்ங்கிறதுக்காக சொல்றேன்! நான் பாயாசம்ன்னு ஒரு டிஷ் செய்ய ரெடி தான், ஆனா அது பாயாசமா வரணுமே...... கஞ்சி, புட்டு அந்த மாதிரி ஏதாவது ஒரு பார்ம்ல வந்தா என்னப்பா பண்றது......அவ்!" என்று சத்தமிட்டவளிடம்,
"பரவாயில்லை சிஸ்ஸி! நீ வைக்கிறது பாயாசமா வந்தா டம்ளர்ல ஊத்தி குடிச்சிக்கிறோம். புட்டா இருந்தா ஸ்பூனால எடுத்து சாப்பிட்டுக்குறோம்!" என்றான் பார்கவ் சிரிப்புடன்.
"அடேய் சோத்துமூட்டை...... நீ எதைக் குடுத்தாலும் மேய்வ! ஆனா உயிர் மிக முக்கியம் அமைச்சரே!" என்று கவிப்ரியா கிண்டல் குரலில் சொல்ல இனியாவும், ஷைலுவும் வழக்கம் போல தலையாட்ட வந்து விட்டனர்.
"போங்கப்பா! எனக்கு பேசி பேசி வாய் டையர்டா ஆகிடுச்சு. சரஸும், என் டார்லிங்கும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் போறேன்!" என்று சொல்லி சமையலறையில் இருந்து தப்பி ஓடி விட்டாள் கவிப்ரியா. ஓட்டமும், நடையுமாக அவள் விரைந்து செல்வதைக் கண்டு அனைவரும் சேர்ந்து சிரித்து கொண்டு இருந்தனர்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro