Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 51

"என்ன ஷைலும்மா கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரமா உன்னை ஆளக் காணும்..... இப்போ தான் பவினை கூப்பிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். கரெக்டா நீங்களும் வந்துட்டீங்க! ரெண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"நிறைய சாப்பிட்டாச்சுண்ணா, நீ எல்லார் கூடயும் கோவிலுக்கு போகலையா? தனியா வீட்ல உட்கார்ந்துட்டு என்ன பண்ற?" என்று ஷைலு தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கையில் பூஜையறையில் இருந்து கவிப்ரியா வெளியே வந்தாள்.

"ஓ! நீயும் இங்க தான் இருக்கியா கவிஅக்கா?" என்று கேட்டு குறும்பாக சிரித்தவளிடம் ஜீவானந்தன் புன்னகையுடன்,

"உங்க அண்ணி தலை வலிக்குதுன்னு சொன்னாடா, அதுனால தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன், இனிமே கவியை அண்ணின்னு கூப்பிட பழகு ஷைலும்மா, அப்படி கூப்பிட வரலைன்னா கவின்னே கூப்பிடு, அக்கான்னு கூப்பிட்டு முறையை மாத்தாத!" என்று சொன்ன தன் அண்ணனிடம் ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் அவனை ஏற இறங்க பார்த்த ஷைலு,

"இத்தன வருஷமா நான் இவள கவி அக்கான்னு தானே கூப்பிட்டுட்டு இருக்கேன், அப்போ எல்லாம் நீ ஒண்ணும் சொல்லல, இப்போ மட்டும் எதுக்கு அண்ணின்னு கூப்பிட சொல்றடா?" என்று கேட்டாள்.

பவின் அவளருகில் வந்து, "நம்ம மேரேஜ்க்கு அப்புறம் கொஞ்ச நாள்ல உங்க அண்ணாவுக்கும் கவிப்ரியாவுக்கும் மேரேஜ் ஆகப் போகுதுல்ல ஷைலு; அதனால இப்போ இருந்து அண்ணின்னு கூப்பிட்டு ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சுடு! ஜீவா கரெக்டா தான் சொல்றாரு!" என்று சொல்லவும் ஷைலு அவன் பேச்சை மறுக்க முடியாமல் தலையாட்டி வைத்தாள்.

சற்று நேரத்தில் மணமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வர குடும்பத்தினர் அனைவரும் அவர்களின் பின்னால் வந்தனர். திருமணத்திற்கு வந்த தன் பக்கத்து சொந்தங்கள் அனைவரையும் இசக்கிராசு திருமணம் முடிந்த பின் மண்டபத்தில் இருந்து அவர்கள் வந்த வாகனத்திலேயே அம்பைக்கு கிளப்பி விட்டு விட்டான். "என்னத்தான் எங்கள கட்டிக்கிடுவன்னு நினைச்சா பொசுக்குன்னு மாமன் மவள கட்டிக்கிடுதியோ..... ஏன் நாங்கல்லாம் ஒங்கண்ணுக்கு ஆளா தெரியலயாக்கும்?" என்று கேட்டு முறைப்பெண் சீதனத்தை கொடுத்தால் மட்டுமே அவனை இனியாவுடன் போக விடுவோம் என்று சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்த நான்கைந்து முறைப்பெண்களை பார்த்த ராசுவின் பாட்டி,

"எலே ராசா இதுக அம்புட்டும் ஓமொறைப்பொண்ணுக, ஆளுக்கு ஆயிரம் ரூவாய குடுத்து எனக்கு கல்யாணம் ஆயிருச்சு, நீங்கல்லாம் வேற மாப்பிள்ளைய பார்த்துக்குங்கன்னு சொல்லி அதுக கையை உருவிட்டு இந்தால வா!" என்று சொல்ல இசக்கி ராசு கடுப்பாகி விட்டான்.

"எம்பொஞ்சாதிய ஓரங்கட்டி நிப்பாட்டி வச்சுட்டு எங்கைய புடிச்சதுக்கு இவளுகளுக்கு ஆளாளுக்கு ஆயிரம் ஓவா நாங்குடுக்கணுமாக்கும், குடுப்பாய்ங்க கொல்லபேரு..... அடியேய் குந்தானிகளா என் முறைப்பொண்ணுக இம்புட்டு பேராடீ
ஊருக்குள்ளயே சுத்திட்டு இருந்தீக? இம்புட்டு நாள் தெரியாம போச்சே? ஏட்டி சிட்டுக்குருவி மாமன் உன்னைய கரெக்ட் பண்ணின மாதிரி இவளுகள்ள ஒருத்தியையும் கரெக்ட் பண்ணிக்கிடட்டுமா..... யம்மா மாரியாத்தா எவன்முலே அது பொடனியில அடிக்குறது, எவனா இருந்தாலும் முன்னால வாலே!" என்று தன் தலையை தடவிக் கொண்டே ராசு பின்னால் திரும்பிப் பார்க்க விவேக் அவனருகில் வந்து நின்று ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து விட்டு இனியாவை அவனருகில் கொண்டு வந்து நிறுத்தினார். "யோவ் விவேக்கு மாமா சும்மனாங்காட்டியும் தேன் அந்த புள்ளைகட்ட வம்பிழுத்துட்டு இருந்தேன், தப்பா நினைச்சுக்கிட்டு தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடாத!"
என்று தன் மாமனாரை அவன் குளிர்வித்து கொண்டு இருக்க சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார் விவேக்.

தன் மனைவியின் கைகளை தன் கைகளில் கோர்த்து அழுந்த பிசைந்து கொண்டிருந்த ராசுவிடமும் அப்பத்தாவிடமும், "என்னங்க இவங்க கலாட்டா எல்லாம் ரொம்ப லைவ்லியா இருக்கு. எல்லாரையும் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போக சொல்லலாமே!" என்று இனியா கேட்டதற்கு இருவருமே ஒத்துக்கொள்ளவில்லை.

"ஏட்டி உம்புருஷன் கைய புடிச்சுகிட்டு அம்புட்டு பேரும் நின்னுகிட்டு இருக்காளுக, வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வருவியா, அத விட்டுட்டு இன்னும் ரெண்டு நாள் எல்லாரையும் இங்க இருக்க சொல்லுத......
சொந்தகாரங்கலாம் வந்தமா கிளம்புணோமான்னு இருந்தாதேன் நல்லது, இல்லன்னா தேவையில்லாம யார்ட்டயாவது ஏதாவது உரண்டை இழுத்து பிரச்சனைதேன் வரும்! வந்தவங்க எல்லாம் இப்பவே அம்பைக்கு கிளம்பட்டும் சிட்டு!" என்று சொல்லி முடித்து விட்டான் இசக்கி ராசு.

மணமக்களுக்கு மீராவும், கீதாவும் ஆலம் சுற்றியதும், ஜீவானந்தன் இசக்கிராசுவிற்கு வரவேற்பு மோதிரம் அணிவித்து அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.

"டேய் மச்சி ராசுவுக்கும் இனியாவுக்கும் டாஸ்க் எதுவும் கிடையாதா?" என்று கேட்ட பார்கவை பின் புறம் திரும்பி ஒரு பார்வை பார்த்த ஜுவா,

"உனக்கும் அவனுக்கும் ஒன் ஆன் ஒன் பைட்டிங் வேணும்னா வச்சுக்கலாமா?" என்று கேட்க பார்கவ் கோபத்துடன், "ஏன்டா இப்ப அந்த மதுரைவீரன்ட்ட போய் கோர்த்து விடுற? அவன் என்னைய தூக்கி போட்டு மிதிக்கறத நீ பார்க்கணும் அதான உன் ப்ளான்...... எத்தனை நாளா இந்த மாதிரி ஐடியா வச்சிருக்க?" என்று பார்கவ் ஜீவாவிடம் கேட்டுக் கொண்டிருக்கையில் ராகவ் தன் அண்ணனிடம்,

"ஷைலு ஏதோ டாஸ்க் ரெடி பண்ணியிருக்கேன்னு சொன்னா அண்ணா, நீ ஜீவா மச்சிட்ட டென்ஷன் ஆகாம முதல்ல உள்ள வா!" என்று சொல்லி பார்கவை கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றான்.

பத்மா அபிநயாவை அழைத்து மணமக்களை பூஜையறைக்கு அழைத்து செல்ல சொல்ல ஜீவானந்தன் அவர்களிடம், "பாட்டி அந்த வேலைய கவி செய்வா, அபிக்கு வேற ஏதாவது வேலை குடுங்க, இல்ல கவியும், அபியும் சேர்ந்து போகட்டும்!" என்றான் ஒரு அழுத்தம் நிறைந்த குரலில்.

ஜெயந்தன், பத்மா, ஜெய் நந்தன், நிர்மலா, அர்ஜுன், மீரா, பலராம், கீதா, ராகவ், பார்கவ், கௌதமன், ராகினி,
பவின், ஷைலு, இசக்கி ராசு, இனியா, விவேக், சரஸ்வதி, ராசுவின் பாட்டி இவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்த போது ஜீவானந்தன் இப்படி வாக்குவாதம் புரிந்து கொண்டு இருக்க கவிப்ரியா கண்களில் பயத்துடன் அபிநய சரஸ்வதியின் உதவியுடன் அனைவருக்கும் மாலை நேர பானத்தை எடுத்து வந்தாள்.

"லேய் ஜீவா என்னலே இன்னிக்கு கோக்குமாக்கா பேசிகிட்டு கிடக்க..... என்ன புதுசா பெரியவகள எதுத்துகிட்டு பேச பழகிட்டு?" என்று கேட்ட ராசுவிடம், ஜெயந்தன் சமாதானமாக,

"இருக்கட்டும் மாப்பிள்ளை, நம்ம கவிக்கும் ஏதாவது பொறுப்பு குடுக்கணும்னு ஜீவா நினைச்சிருப்பானா இருக்கும், இதுல ஒண்ணும் தப்பில்ல, அபி, கவி ரெண்டு பேரும் சேர்ந்தே இனியாவையும் மாப்பிள்ளையையும் பூஜை ரூமுக்கு, அண்ணா ரூமுக்கு எல்லாம் கூட்டிட்டு போயிட்டு வாங்கடா, எல்லாரும் அவங்க அவங்க ஸ்நாக்ஸ எடுத்துக்கோங்க!" என்று சொல்லி விட்டு அவரது தேநீர் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.

"அத்தை டீ.....!" என்று சொல்லி ஸர்விங் ட்ரேயை தனக்கு முன்னால் நீட்டிய கவிப்ரியாவிடமிருந்து ட்ரேயை வாங்கி ஜீவானந்தனிடம் தந்த நிர்மலா, "எல்லாருக்கும் குடுத்துட்டு நீயும் எடுத்துக்க நந்தும்மா!" என்று சொல்ல அவன் கவிப்ரியாவை பார்த்து கண்சிமிட்டி விட்டு அனைவரிடமும் பானங்கள் வழங்கி கொண்டிருந்தான்.

நிர்மலா கவிப்ரியாவை தன் அருகே அமர்த்தி கொள்ள மீரா தன் மகளை கோபத்துடன் பார்த்து, "குட்டிமா ஜீவாக்குட்டி கூட மறுபடியும் சண்டை போட்டியாடீ?" என்று கேட்க ஜெய் தன் தங்கையிடம், "பூனைக்குட்டி ஏஞ்சல்ட்ட எதுக்கு இப்போ கோபப்படுற?" என்று கேட்டு தன் மருமகள் தோளில் தன் கையைப் போட்டு அணைத்துக் கொண்டார்.

"இல்லண்ணா வந்ததுல இருந்து இவ பார்வையே சரியில்லை, கண்டிப்பா ஏதோ தப்பு பண்ணியிருக்கா. ஜீவாம்மாவும் ஏதோ டென்ஷனா இருக்குற மாதிரியே இருக்கான், அதான் மீரா இப்படி கேக்குறா, ஏய் வாலு என்ன திருட்டுத்தனம் பண்ணின?" என்று கீதா கேட்டுக் கொண்டிருக்கையில் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றி நிறுத்தி தன் பக்கத்தில் அணைத்தவாறு நின்ற ஜீவா,

"என்ன ஆளாளுக்கு போட்டு கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க? யேய் அஜு நீயெல்லாம் இவளுக்கு ஒரு அப்பாவா..... எல்லாரும் அவள கேள்வி கேட்டுட்டு இருக்காங்க, நீ பாட்டுக்கு கால் மேல கால் போட்டு காஃபி குடிச்சுட்டு இருக்க.... அப்பா கவி ஒரு தப்பும் பண்ணல, நான் உங்ககிட்ட இருந்து ஸாகரி க்ரானியோட செயினை வாங்கினேன்ல, அத அவ கழுத்துல போட்டு விடுன்னு கேட்டா, ஆசையா கேக்குறாளேன்னு நானும் போட்டு விட்டுட்டேன், இதுல ஒண்ணும் தப்பில்லல்ல?" என்று கேட்க பலராம் விருட்டென்று எழுந்து நின்ற போது அவர் கைகளில் இருந்த காஃபி கோப்பை நழுவி கீழே விழுந்தது.

"டேய் ராம் பார்த்து கவனமா எந்திரிடா!" என்று அர்ஜுன் சொல்லிக் கொண்டு இருக்கையில் ஜெய் நந்தன் தன் மருமகளை பார்த்து,

"என்னடா ஏஞ்சல் லட்டு கல்யாணத்துக்கு ஆனந்த் உனக்கு ஸாகரி பாட்டி செயினை கிப்ட்டா குடுத்தானா? ஷைலுவுக்கும், இனியாவுக்கும் கார் கிப்ட் குடுத்தான்ல அத மாதிரி உனக்கு இந்த செயினை குடுத்துருக்கான் போல.... இதுக்கு எதுக்கு அப்போலேர்ந்து ஒரு மாதிரி முகத்தை வச்சுட்டு இருக்க. உன் முகத்துல ஸ்மைல் மிஸ் ஆனா பார்க்கறதுக்கு நல்லாவே இல்ல, லட்டு, ரூபி பாட்டி செயினை கவிம்மாவுக்கு ஆனந்த் குடுத்ததுக்கு நீங்க எதுவும் கோபிச்சுட்டீங்களாடா?" என்று கேட்ட தன் தகப்பனிடம் "இல்லப்பா இல்ல பெரியப்பா" என்று ஒரே நேரத்தில் தலையாட்டினர். தன் மாமன் சொன்ன சமாதானத்தில் கவிப்ரியா சற்று புன்னகைக்கவும் அவளையும் அபியையும் ராசு இனியாவுடன் அனுப்பி வைத்து விட்டு பணியாட்களை அழைத்து தரையை சுத்தம் செய்ய சொன்னார் பத்மா.

"என்னாச்சு ப்ரியா? வந்ததுல இருந்து உன்னை பார்க்குறேன், ஒரு மாதிரி பயந்து போய் நிக்குற? நந்தன் பெரியப்பா தான் செயினை வச்சுக்க ஓகே சொல்லிட்டாங்களே? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு!" என்று புன்னகையுடன் சொன்ன அபிநயசரஸ்வதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் கவிப்ரியா.

"ஏஏய்.... என்னாச்சுமா ஏன் இப்படி நடுங்குற?" என்று கேட்ட அபிநயாவிடம்,

"காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு அண்ணி.....!" என்று சொல்லி அவளது கைகளை இறுகப்பிடித்துக் கொண்ட கவிப்ரியாவின் நெற்றியில் கைவைத்து சூடு தெரிகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தாள் அபிநயா.

சிறிது நேரத்தில் அனைவரையும் விளையாட அழைத்து கொண்டிருந்த ஷைலு ராகவிடம் சிறு சிறு வேலைகளை செய்ய சொல்லிக் கொண்டு இருந்தாள். அவன் அவள் வேலைகளில் உதவிக் கொண்டே சலிப்புடன், "ஏன்டீ உயிரை வாங்குற..... எல்லாரையும் எதுக்கு விளையாட கூப்பிடுற? கப்பிள்ஸை மட்டும் கூப்பிட வேண்டியது தான?" என்று கேட்டான்.

"அங்கிளும் ஆன்ட்டியும் சென்னைக்கு கிளம்புறதுனால பவின் கேமுக்கு வர மாட்டார், நீயும் உட்கார்ந்து வேடிக்கை பாரு, ஏன்னா அந்த கேமை விளையாட
ஏழு பேரு மட்டும் தான் வேணும் என்று சொல்லி கொண்டிருந்தவளிடம் ஜீவானந்தன், "நானும் கவியும் விளையாட வரல ஷைலு, எங்களுக்கு பதிலா பவினையும் ராகவையும் வச்சுக்கோ! அம்மா மீரு அத்தை கவி கிட்ட பேசணும், அவள கூட்டிட்டு போறேன்!" என்று நிர்மலா மீராவிடம் அவன் அனுமதி கேட்க பலராம் அப்போதும் அவனைத் தான்
பார்த்துக் கொண்டு இருந்தார்.

"என்னடா ஜெய் கவிப்ரியா எப்பவும் இவ்வளவு டல்லா இருந்ததில்லையே.... இனியா கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைச்சு ஷைலு தான் அப்செட்டா இருப்பான்னு நினைச்சேன். இப்போ பார்த்தா இந்த கவிப்பொண்ணு ஃபீல் பண்ணிட்டு இருக்காளே.....?" என்று கேட்டார் கௌதமன்.

"ரெண்டும் ஏதாவது சண்டை போட்டுருக்கும்டா, அதுனாலதான் ஆனந்த் ஏஞ்சல் பின்னால போறான். ரூபி கொஞ்சம் அப்செட் மூடுல தான்டா இருக்கா. நாலஞ்சு நாளா நைட்டெல்லாம் என் மடியில படுத்துக்கிட்டு லட்டு கிளம்பி போயிடுவாளாப்பான்னு கேட்டு என்னைய டார்ச்சர் பண்றா, அவ கேக்குற நேரம் அம்பைக்கு அனுப்புறதற்கு பவின் ஓகே சொன்னதுனால கொஞ்சம் அமைதியாயிருக்கான்னு நினைக்கிறேன். இதுக ரெண்டும் இல்லாம வீட்ல இருக்கணும்னு நினைச்சா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு, ஏன்டா அஜு ஆனந்துக்கும், ஏஞ்சலுக்கும் எப்படா கல்யாணம் பண்றது? எத்தனை தடவ உட்கார்ந்து பேசியும் அவங்க கல்யாணத்தை முடிக்கறதுக்கு ஒரு நல்ல நேரம் வர மாட்டேங்குதே?" என்று சற்று கவலையுடன் சொன்ன ஜெய் நந்தனிடம்,

"சீக்கிரம் ஒரு நல்ல நாளா பார்த்து அவங்க கல்யாணத்தையும் நடத்தணும், எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்!" என்று சொல்லி விட்டு கைகளில் முகத்தை புதைத்து கொண்டார் பலராம்.

"எல்லாம் சரியா வரும்டா ராம், இவன் ரெண்டு பொண்ணை கட்டிக் குடுத்துட்டு ஃபீல் பண்றான், நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரே பொண்ணு தான் வச்சிருக்கோம், அவள இங்க குடுத்துட்டு நம்ம கஷ்டப்படுவோம்னு யோசிக்குறானான்னு பாரு!" என்று தன் தம்பியிடம் பேசிக் கொண்டு இருந்த அர்ஜுனின் உரையாடலில் பாதி பலராமின் காதிற்குள் ஏறவில்லை. அவர் மனம் முழுவதும் ஜீவா கவியிடம் தான் சுற்றிக் கொண்டு இருந்தது.

ஜீவானந்தன் கவிப்ரியாவை அவன் அறைக்குள் கூட்டி வந்து தன் வார்த்தைகளால் தைரியம் அளித்து கொண்டு இருந்தான். ஆனால் அவனது வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளாமல் உடல் நடுங்கிக் கொண்டிருந்தவளை பார்த்து விட்டு அவளை அணைத்துக் கொண்டவன்,

"ஏய் மூக்கி என்னடீ பயந்து நடுங்கியே உனக்கு ஜன்னி வந்துடும் போலிருக்கு...... நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து யாரையும் கொலை பண்ணல, கல்யாணம் தான் பண்ணியிருக்கோம். இன்னிக்கு தான் ரகு பாட்டா, ஜானு பாட்டிட்ட எல்லாம் உன்னை எப்பவும் சந்தோஷமா பார்த்துப்பேன், உன் ஹாப்பினெஸ் லைப்லாங் என்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டின்னு ஓத் எடுத்துட்டு உனக்கு வெட்டிங் செயின் போட்டு விட்டேன், ஒரு முடிவு எடுத்துட்டோம்னா தப்போ சரியோ
அந்த முடிவுல வித்ஸ்டாண்ட் பண்ணி நிக்கணும், நீ இவ்வளவு பயந்து கில்டியா ஃபீல் பண்ணினா எனக்கு கஷ்டமா இருக்கு அம்முலு, நம்ம கல்யாண விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சாலும் அத நான் பார்த்துக்குறேன், ராம் மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல என்னைய ரவுண்ட் கட்டுவாரு, அதையும் நான் மேனேஜ் பண்ணிக்குறேன்! எதைப்பத்தியும் கவலைப்படாம இப்போ சூப்பரா ஒரு ஸ்டன்னிங் ஸ்மைல் பண்ணு பார்ப்போம்!" என்று சொன்னவனை பார்த்து மனம் கனிந்த கவிப்ரியா புன்னகையுடன்,

"உனக்கு பயமாயில்லையா நந்து? அவசரப்பட்டு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டது எல்லாருக்கும் தெரிஞ்சா வீட்ல எல்லாரோட ரியாக்ஷனும் எப்படி இருக்கும்? விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் பனிஷ் பண்ணினா கூட பரவாயில்ல. ஆனா அவங்கெல்லாம் ஹர்ட் ஆகிடுவோங்களோன்னு நினைச்சா எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா!" என்று சொன்னவளை தன் நெஞ்சில் சாய்த்து வருடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

"இங்க பாரு அம்முலு...... யார் என்ன சொன்னாலும் நமக்கு நடந்த கல்யாணத்தை மாத்த முடியாது. உனக்கு எப்படியோ தெரியல, ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் நம்ம கல்யாணம் எப்படா நடக்கும்ன்னு நான் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்த விஷயம்; நம்ம ரெண்டு பேர் மட்டுமே தான் நம்ம கல்யாணத்துல இருந்தோம்னாலும், இனியா ராசு கல்யாணத்துக்கு எந்த விதத்திலும் குறைஞ்ச வகையில நாம கல்யாணம் பண்ணல! அழகான வீட்ல, தாத்தா பாட்டி ஆசிர்வாதத்தோட, ஆர்ப்பாட்டம் இல்லாம நடந்துடுச்சு; என்ன ஒண்ணு வீட்ல இருக்கிறவங்க ப்ளசிங்ஸ் இல்லாம பண்ணிட்ட ஒரே ஒரு குறை தான்..... அதையும் சீக்கிரம் சரி பண்ணிடலாம், பட் என்ன நடந்தாலும் நீ உன்னோட புருஷன் பக்கத்துல ஸ்ட்ராங் ஸப்போர்ட்டா நிக்கணும்! புரியுதா...?" என்று கேட்ட தன் கணவனிடம் அவசரமாக தலையாட்டினாள் கவிப்ரியா.

அவள் தலையாட்டிய வேகத்தில் ஜீவானந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. "என் ஸ்பைஸி கேப்ஸிகம் பொண்டாட்டியானவுடனே ரொம்ப ஸ்வீட்டாயிட்ட மாதிரி எனக்கு தோணுதே!" என்று ஆச்சரியப்பட்டு கையால் கன்னத்தை தாங்கிக் கொண்டு இருந்தவனிடம் தயக்கத்துடன்,

"நந்து இன்னிக்கு இனியாவுக்கும் அவ ஹப்பிக்கும் மாதிரியே நமக்கும்.... வந்து!" என்று உதட்டை கடித்துக் கொண்டு குனிந்து தரையை பார்த்துக் கொண்டிருந்தவளை தாடையைப் பற்றி நிமிர்த்தியவன் சிரிப்புடன்,

"எல்லாரையும் பொறுத்தவரைக்கும் நீங்க இன்னும் நீங்க கவிப்ரியா அர்ஜுன் தான் மேடம், நீங்க மிஸஸ் கவிப்ரியா ஜீவானந்தன்னு எனக்கு, உங்களுக்கு, ராமுக்கு மட்டும் தான் தெரியும். எல்லாரும் சேர்ந்து நமக்கு மேரேஜ் நடந்து அஜு என் கையில உன் கைய குடுத்து என் பொண்ணு இன்னிக்குல இருந்து உன் பொண்டாட்டிடா ஜீவான்னு ஓரல் ரெஹக்னிஷனை அவர் வாயால சொன்னதுக்கப்புறம் தான் நீ எனக்கு அஃபிஷியலி பொண்டாட்டி! நமக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சுட்டாலும் முதல்ல இருந்த அதே ரூல் தான் இப்பவும்..... ஜீவாம்மாவை அம்முலு வறுக்கலாம், பொரிக்கலாம், பட் நோ  மெச்சூர்டு கண்ட்டெண்ட்! வா நம்மள விட்டுட்டு எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல, என் ஹேண்டிகாமை எடுத்துட்டு அங்க கிளம்பலாமா? இனிமே குளிர்காய்ச்சல் வந்த பேஷண்ட் மாதிரி நடுங்க மாட்டியே?" என்று கேட்டு புன்னகைத்தவனிடம் இல்லையென தலையசைத்து விட்டு,

"என் ஹல்க் கூடத் தான் எனக்கு புருஷனாயிட்டவுடனே திடீர்னு என் கண்ணுக்கு பிரின்ஸ் சார்மிங் மாதிரி அழகா தெரியறான்! ச்சை கல்யாணம் ஆகிட்ட உடனே உன்னை கொஞ்சம் மரியாதையா கூப்பிடணும்னு எல்லாம் தோணுது! வாங்க மச்சான் போகலாம்" என்று சொல்லி விட்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்து தன் மனபாரம் சற்று அகன்று ஜீவாவுடன் சென்றாள் கவிப்ரியா.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro