💟 ஜீவாமிர்தம் 5
ஜீவாவின் அருகில் வந்த நிர்மலாவை மேலும் கீழும் பார்த்தவன், "கையில அடிபட்டப்போவாச்சும் உங்களுக்கு என் நியாபகம் வந்துடுச்சே. தேங்க் காட்!" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.
"நந்தும்மா....ப்ளீஸ் அம்மாவை தப்பா நினைக்காத கண்ணா; ஒரு வாரம் மாணிக்கம் தாத்தாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி சஹாயனுக்கு போக வேண்டியதாகிடுச்சு. அடுத்த வாரம் நம்ம பண்ணையில வேலை பார்க்குறவங்க வீட்டு கல்யாணம்! ரெண்டையுமே அவாய்ட் பண்ண முடியலடா அப்பு! எனக்கு கார் ஓட்ட தெரிஞ்சா கூட நானே இங்க கிளம்பி வந்துடுவேன். ஆனா அதுவும் தெரியாதுல்ல....!" என்று சொன்ன தன் தாயிடம்,
"கார்ல ஏறி பத்து நிமிஷத்துல தூங்கிடுவீங்க. இந்த அழகுல நீங்க ட்ரைவ் பண்ணி மலையில இருந்து வர்றதா..... ஸப்போஸ் இனிமே ட்ரைவிங் கத்துக்கிட்டாலும் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்க கூடாது. என் மேல ப்ராமிஸ்மா!" என்று சொல்லி தன் தாயின் கையைப் பற்றிக் கொண்டவனிடம்,
"அம்மா ஊட்டி விடட்டுமா கண்ணா?" என்று கேட்டவரிடம், "அதுக்கு தான்மா இவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்!" என்றான் ஜீவா தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு.
"உன் இடது கை நல்லா தானே இருக்கு. அண்ணி ஒரு ஸ்பூன் கொண்டு வாங்க. இந்த தடியன் அதுல அள்ளி வாயில வைப்பான்!" என்று முறைத்த படி ஜீவாவின் அருகில் வந்தமர்ந்த கீதாவிடம்,
"என்ன கீதும்மா! ஜீவா குட்டி மேல உனக்கு என்னடா கோபம்?" என்று எழுந்து தன் அத்தையின் முகத்தில் மூக்கால் உரசியவனை தூரத்தில் நின்று ஆசையுடன் பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.
ஜீவானந்தன் பிறந்ததில் இருந்தே தன் அன்னையை விட அத்தைகள் இருவரிடமும் தான் செல்லம் கொஞ்சுவான். சென்னை வந்ததற்கு பின்னர் தனிமை தாக்கும் நேரம் எல்லாம் பலராமின் வீட்டுக்கு தான் சென்று படுத்துக் கொள்வான். மீராவையும், அர்ஜீனையும் மிகவும் பிடிக்கும் என்றாலும் கவியை மனதில் வைத்து சற்று தள்ளி தான் நிற்பான். ஆனால் பார்கவிடம் எவ்வளவு நட்புடன் இருக்கிறானோ அதே அளவு நெருக்கத்தை கீதா அத்தை, ராம் மாமாவிடமும் காட்டுவான்.
"எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் நீ என் கண்ணுக்கு குட்டியா தெரியலையே..... என்னடா பிரச்சனை உனக்கு? எதுக்கு இப்படி உன்னை நீயே வருத்திக்கிற? இப்போ எதுக்கு திடீர்னு அவ்வளவு கோபமா கத்தின? இதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு நீ தான் சின்னதுல ஷைலு, இனியாவுக்கு எல்லாம் கத்து குடுப்ப. இப்போ உனக்கே அது மறந்து போச்சா?" என்று கேட்ட தன் அத்தையிடம்,
"எதுவுமே எனக்கு மறக்கல அத்தை, அது தான் இங்க பிரச்சனையே......
அன்னிக்கு அர்ஜுன் மாமா சொல்றாங்க. எங்க அம்மாவை நான் படுத்துறேனாம். எல்லாரும் எஸ்டேட்ல இருக்கும் போது நீ இல்லாம அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சியானு கேக்குறாரு. அங்க தான் என்னால போக முடியாதே.... எங்கம்மா அழறதையும், கஷ்டப்படுறதையும் இங்கே அவங்க பக்கத்திலிருந்து வேணும்னா சரி பண்ணலாம். சும்மா கூப்பிட்டா வருவாங்களா? அதுக்கு தான் கையில லேசா கீறினேன். இந்த எட்டு வருஷத்துல எத்தனை தடவை என்னை எல்லாரும் சேர்ந்து இருக்கிறப்ப ஃபங்ஷன்க்கு கூப்பிட்டிருக்கீங்க? இதோ இங்க நிக்கிறாளே.... ரகு பாட்டா, ஜானு பாட்டி போயிட்டப்போ கூப்பிட்டீங்க; அப்போ கூட ஆனந்த ஸாகரத்துக்கு வராம பூம்பாறைக்கு வந்துட்டு அங்கிருந்து அப்படியே கிளம்பிட்டேன். அதுக்கப்புறம் இவ ப்யூபெர்டி செரிமனிக்கு கூப்பிட்டீங்க. அப்புறம் அவளோட பொட்டீக் ஓப்பனிங் செரிமனிக்கு கூப்பிட்டீங்க. ராஜேஷ்வரன் தாத்தா டெத்துக்கு வந்துட்டு போனேன். உங்களுக்கும், மீரா அத்தைக்கும் கல்யாண நாள்னு ஒரு நாலஞ்சு தடவை வந்துருப்பேன். அதை தவிர நான் உண்டு, என் வேலை உண்டுன்னு ப்ளாட்டிலயும், ஆஃபிஸ்லயும் தான் நாளை கடத்தியிருக்கேன். உண்மையிலேயே உங்களோட சிரிப்பு, கூச்சல் எல்லாம் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுது. சின்ன வயசுல நம்மளும் இதே மாதிரி தானே என்ஜாய் பண்ணினோம்ங்கிற நினைவா..... இல்ல இப்போ அதெல்லாம் முடியலயேங்கிற ஏக்கமா ன்னு தெரியல..... பட் எல்லாரும் சேர்ந்து சிரிச்சா எனக்கு கோபம் தான் வருது!" என்று சொன்ன தன் அண்ணனை இனியாவும், ஷைலுவும் ஆளுக்கு ஒரு புறம் நின்று கைகளைப் பற்றிக் கொண்டனர்.
"ஃபீல் பண்ணாதீங்க அண்ணா! இனிமே எல்லாம் சரியாகிடும், எல்லாரும் எல்லா நேரமும் சந்தோஷமா சேர்ந்தே இருக்கலாம்!" என்று அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்க கவிப்ரியா அவன் முன் கைகளை கட்டிக் கொண்டு முறைப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.
"நீ என்னடி ஜீவாம்மாவை முறைச்சுட்டு நின்னுட்டு இருக்க....போய் அவன் கிட்ட ஸாரி கேளு. போ!" என்று கவிப்ரியாவை மீரா ஜீவாவின் புறம் அவளை தள்ளி விட்டதும் கவிப்ரியா கடுஞ்சினத்துடன் அவன் அருகில் வந்தாள்.
"உனக்கு இப்போ சந்தோஷம் தானே? நீ வருத்தமா இருக்கிறதுக்கு நான் தான் காரணம்னு எல்லாரையும் நினைக்க வச்சுட்டல்ல, நான் நேத்தே உன் கிட்ட ஸாரி கேக்க வந்தேன்டா; நீ தான் பெரிய இவன் மாதிரி எனக்கு எதுக்கு ஸாரின்னு கேட்ட..... இப்போ என்னையும் மாமாவையும் வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டே எனக்கு ஏக்கம் வருது; தூக்கம் வருதுன்னா டென்ஷன் ஆகுமா? ஆகாதா? எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது அடுத்தவங்களோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க தெரியாம உன்னோட ஃபீல் தான் பெரிசுன்னு பேசிட்டு இருக்கியே..... நீ ஒரு ஸாடிஸ்ட்..... சைக்கோ; பைத்தியம், நாய், பேய், குரங்கு......!" என்று வாய்க்கு வந்ததை திட்டிக் கொண்டிருந்த கவிப்ரியாவை, "ஏஞ்சல் போதும்டா.... ப்ளீஸ்!" என்று கையமர்த்தி அடக்கினார் ஜெய் நந்தன்.
இவ்வளவு நேரம் உயிர் இருந்தும் சிலை போல் அமர்ந்திருந்த தன் தந்தை இப்போது கவிப்ரியாவை அடக்கியதும் ஜீவானந்தன் மனதை சற்று அடக்கி கொண்டான்.
"அம்மா கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வர்றேன்மா, ஒரு வேலை இருக்கு!" என்று தன் அன்னையிடம் விடை பெற்றவன், தன் அத்தைகளிடம் தலையாட்டி விட்டு பலராமை அழைத்து கொண்டு வெளியே சென்று விட முனைந்தான்.
ஆனால் அதற்குள் வரவேற்பு அறையை தாண்டி அவனை மடக்கி வளைத்த கவிப்ரியா, "பேசிட்டு இருக்கும் போது பாதியில எங்கடா ஓடுற, சண்டை போட ஆரம்பிச்சாச்சுல்ல..... முழுசா முடிச்சுட்டு போ!" என்று சண்டைக் கோழி போல் சிலிர்த்துக் கொண்டு நின்றாள்.
"நிறைய வேலை இருக்கு கேப்ஸி! நீ என்ன பண்ணு..... உள்ள போய் ஒரு சுவர் முன்னாடி நின்னுட்டு அதை நான்னு இமாஜின் பண்ணி என்னை திட்ட வேண்டியது எதுவும் பாக்கி இருந்தா அது கிட்ட திட்டி முடிச்சுட்டன்னா நா வந்து அதையெல்லாம் கேட்டுக்கறேன். பை!" என்று கையசைத்து அவளை எளிதாக தன் பாதையில் இருந்து நகர்த்தி விட்டு கிளம்பினான் ஜீவா.
"உன்னை லூசுப் பையன்னு திட்டினா, என்னையும் சுவத்தை பார்த்து புலம்புற லூசுன்னு நினைச்சியாடா நீ? உன்னை மாதிரியே தான் சுவர் கூட இருக்கு. போடா ஹல்க்!" என்று திட்டிக் கொண்டிருந்த கவிப்ரியாவை தலையில் தட்டிய மீரா,
"உன்னால ஜீவாக்குட்டி அரை குறையா சாப்பிட்டு கிளம்புறான் பாரு......இந்த பாலையாவது குடிச்சிட்டு கிளம்பட்டும்! போர்டிகோவில தான் நிக்கிறான். கொண்டு போய் குடுத்துட்டு வர்றேன்!" என்று சொன்ன தன் அன்னையிடம்,
"உன் மருமகனுக்கு தானே பால் கொண்டு போற....போ! போ! இந்தோ வர்றேன்!" என்று சொல்லி விட்டு எங்கோ விரைந்து சென்றாள் கவிப்ரியா.
காரின் அருகில் நின்று கொண்டு பாலை குடித்து விட்டு பலராம், மீராவுடன் பேசிக் கொண்டிருந்த ஜீவாவிடம் புன்சிரிப்புடன், "என்ன மச்சான் பாலை குடிச்சிட்டியா?" என்று கவிப்ரியா கேட்டுக் கொண்டே அவன் அருகே வர அதற்குள் ஜீவா பலராமிடம், "மாம்ஸ் என்னை விட்டு டூ ஃபீட் டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணி நில்லு! இங்க ஏதோ ஒரு க்ரைம் சீன் நடக்க போகுது!" என்றான் சிரிப்புடன்.
பலராமும், மீராவும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அதற்குள் அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்திருந்த ஜீவானந்தன் அவள் உள்ளங்கையை கவனித்து விட்டான். "அம்முலு ப்ளீஸ்டீ..... வேண்டாம்! விட்டுடு; உன் கிட்ட ஸாரி கேட்டுடுறேன். ரொம்ப நாறும். வேண்டா......ம்!" என்று சொல்லி முடிப்பதற்குள் கவிப்ரியா அவள் இரு கைகளிலும் வைத்திருந்த இரண்டு முட்டைகளை அவன் தலையில் உடைத்து அபிஷேகத்தை முடித்திருந்தாள்.
"ஏய் கூறுகெட்டவளே..... என்னடீ பண்ணியிருக்க?" என்று மீரா கவிப்ரியாவை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர அதற்குள் ஜீவானந்தன் அவன் முதுகின் புறம் அவளை இழுத்து நகர்த்தி இருந்தான்.
"நீ தானேம்மா பால்ல முட்டையை அடிச்சு குடிச்சா தெம்பு வரும்ன்னு சொல்லுவ. வெறும் பால் மட்டும் குடுத்துட்டு முட்டை குடுக்கலன்னா உன் மருமகனுக்கு குறையா ஆகிடக் கூடாது பாரு.... அதுக்கு தான் தலையிலயே உடைச்சிட்டேன். ஹேர் கூட நல்லா ஷைனிங் ஆகிடும். போய் குளிச்சிட்டு வாங்க மச்சான். சித்தப்பா நீங்க என்ன ஜெர்க் ஆகி நின்னுட்டு..... இப்ப எங்கயும் போற ப்ளான் கிடையாது. உள்ள போங்க!" என்று சொல்லியவள்,
"மவனே.... சுவர் கூட பேச சொல்லி விட்டுட்டா போற.... என்னை மீறி நீ எந்த ப்ளானும் போடக் கூடாது. மரியாதையா குளிச்சு முடிச்சுட்டு டார்லிங் கிட்ட பேசி எல்லா விஷயத்தையும் கரெக்ட் பண்ணிடுற. இன்னமும் உட்கார்ந்து ஷெனாய்ல சோக மியூசிக் வாசிச்சுட்டு இருந்த..... கொன்னுடுவேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் கவிப்ரியா.
மாறாத புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தவனிடம், "டேய் ஜீவாம்மா.....என்னடா இது? அவ பேசுறதெல்லாம் பொறுமையா கேட்டுட்டு அவளை நீ காப்பாத்திட்டு வேற இருக்க!" என்று கேட்ட பலராமிடம்,
"இவ்வளவு நாளா இதைத் தான் நான் மிஸ் பண்ணினேன். இப்போ என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். கவி, ஷைலு, இனியா, பார்கவ், ராகவ் இவங்க எல்லாம் என் கிட்ட என்ன சேட்டை செஞ்சாலும் சரி, எனக்கு ரொம்ப...... நான் என்னோட சைல்டுஹுட் டேஸ்க்கு போயிடுறேன். இது ரொம்ப பிடிச்சிருக்கு மாமா!" என்றவனிடம்,
"உள்ள போய் குளிடா! அடிக்கிற வெயிலுக்கு உன் மேல வழியுறதெல்லாம் ஆஃப் பாயில் ஆகிடப் போகுது!" என்று சொல்லி விட்டு மறுபடியும் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
ஜீவா குளித்து விட்டு தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்த போது அனைவரும் சேர்ந்து கவிப்ரியாவை ரவுண்டு கட்டி திட்டிக் கொண்டு இருந்தனர். சரஸ்வதி ஒருவர் தான் தன் பேத்திக்கு சாதகமாக பேசிக் கொண்டிருந்தார். பார்கவ் கூட தன் தங்கையை திட்டிக் கொண்டிருக்க ஜீவா அனைவரின் முன்பாக சென்று,
"ப்ளீஸ்..... எங்கிட்ட விளையாடுறதுக்கு கவிக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. ஆன்ட்டீஸ் லன்ஞ்ச் ரெடி பண்ண கிளம்புங்க. அங்கிள்ஸ் உங்க வொய்ப் க்கு ஹெல்ப் பண்ணுங்க. குட்டீஸ் ஏதாவது கதை பேசிட்டு இருங்க! கிளம்புங்க. பாகி... வாடா கொஞ்ச நேரம் ராகவ் கூட வீடியோ சேட்ல பேசலாம். இப்போ தூங்கி இருப்பானா?" என்று கேட்க
"தெரியலடா ஜீவா! நான் ட்ரை பண்றேன்!" என்று சொல்லி அவன் ஸோஃபாவில் அமர்ந்து கொள்ள ஜீவா அவனருகில் அமர்ந்திருந்தான்.
வந்ததிலிருந்து தன் மகன் அனைவரிடமும் பேசுகிறான், ஆனால் தன்னிடம் மட்டும் பேசவில்லை. ஏன் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை என்று உணர்ந்து கொண்ட ஜெய் நந்தன் ஜீவாவை தொந்தரவு செய்ய விரும்பாமல் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு அனைவரையும் கவனித்து கொண்டு இருந்தார்.
அவ்வப்போது சென்னையில் அந்த வேலை, இந்த வேலை என்று சாக்கு சொல்லி விட்டு வந்து தன் மகனை கண்குளிர பார்த்து போவதோடு சரி, அதற்கு மேல் பேசுவதற்கு எல்லாம் முயற்சி செய்தது இல்லை. ஏதோ ஒரு தயக்கம், ஒரு குற்ற உணர்வு பூதாகரமாக அவரை வாட்டி வதைத்து கொண்டு இருந்தது.
அன்று என்ன நடந்தது என்று நீ கேட்க கூட இல்லை என்று அவர் மனசாட்சி அவரை குற்றம் சாட்டியது. அதே மனசாட்சி எட்டு வருடங்கள் பிள்ளையை தனித்து தவிக்க விட்டுவிட்டு இப்போது எதற்கு வந்தாய் என்று கேள்வி கேட்க அவர் தன் மகனை எவ்வாறு நேருக்கு நேர் நோக்குவது என்று தெரியாமல் திகைத்து குழம்பிக் கொண்டு இருந்தார்.
நிர்மலா ஜெய் நந்தன் அருகில் வந்தமர்ந்து, "போங்க ஸ்ரீ; அவன் கிட்ட போய் பேசுங்க! அவனும் உங்களை மாதிரி தயங்கிட்டு உங்க கூட பேசாம இருக்கலாம்ல, முதல்ல நீங்க பேசினா அவனும் பேசிடுவான்!" என்று சொன்ன தன் மனைவியிடம்,
"ம்ஹூம்; ரொம்ப பெரிய தப்பை ஆனந்த் இவ்வளவு சீக்கிரம் மன்னிப்பான்னு எனக்கு தோணல நிலாம்மா! இங்க வந்து அவனை பார்த்துட்டு இருக்கும் போது தான் என் தப்போட ஆழம் எனக்கு புரியுது. நான் அப்பப்போ நரசிம்மனா மாறிடுறேன்னு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லுவ. உனக்கு என் கோபம் பழகிப் போன விஷயம் தான். ஆனா எங்கப்பா எங்கிட்ட எவ்வளவு பாசமா, ப்ரெண்ட்லியா நடந்துக்கிட்டாரோ அதை மாதிரி ஆனந்த் கூட என்னை ரொம்ப நல்ல அப்பான்னு சொல்லணும் ன்னு நினைச்சேன். ஆனா அவர் அப்பான்னே சொல்ல மாட்டேங்கிறார். அப்புறம் எங்க நல்ல அப்பான்னு சொல்றது........ எனக்கு அப்பா இல்லாம வருத்தப்பட்டேன். என் பையனுக்கும் நான் இருந்தும் இல்லாத நிலை உருவாகி அவன் அதிலயுமே பழகிட்டான். இனிமே நான் இருந்தாலும், இல்லாட்டியும் ஒண்ணு தான்!" என்று வருத்த புன்முறுவலுடன் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவரை வாய் மூடி நிறுத்தி விட்டு,
"என்ன ஸ்ரீ பேச்சு இதெல்லாம்? இப்படி எல்லாம் பேசாதீங்க. கஷ்டமா இருக்குப்பா!" என்று சொல்லிய தன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு,
"ஸாரிம்மா! உன்னை கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்கல. அதுவா வந்துடுச்சு!" என்றார் ஜெய் நந்தன்.
ஹாலில் ராகவிடம் வீடியோ சேட்டில் அரட்டை அடித்து முடித்து விட்டு சிறிது நேரம் கண் அசரலாம் என்று அறைக்குள் நுழைந்த ஜீவா படுக்கையில் விழுந்ததும் கதவு தட்டப்பட்டது.
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் இல்ல டார்லிங் பேசணும். உள்ள வாங்க டார்லிங்!" என்று தன் மாமனை கைப்பற்றி இழுத்து கதவை சாற்றினாள் கவிப்ரியா.
"உனக்கு வேற வேலை இல்லையா? உருப்படியா தச்சு கிழிக்கிறது, இல்ல கிழிச்சு தைக்கிறது எதையாவது போய் செய்.... போ!" என்று விரட்டிய மாமன் மகனிடம் முறைப்பை செலுத்தியவள், "ஒழுங்கா மாமா கூட பேசணும்! இல்லன்னா மறுபடியும் வருவேன்!" என்று மிரட்டி விட்டு வெளியே சென்றாள்.
"ஆ....ஆனந்த்! காயம் எப்படிப்பா இருக்கு?" என்று கேட்ட தன் தந்தையிடம் இகழ்ச்சியாக புன்னகைத்து,
"பாலைவனத்துல வந்து ஊத்து தண்ணி தேடாதீங்க. உள்ள ரொம்ப வறண்டு கிடக்கு!" என்று சொல்லி விட்டு வேகமாக அறைக்குள் இருந்து வெளியே சென்று விட்டான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro