💟 ஜீவாமிர்தம் 44
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்; எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்!" என்று பாடியவாறு ஷைலுவின் கழுத்தை கட்டிக் கொண்டு உயிரை வாங்கிய கவிப்ரியாவை முறைத்த ஷைலு இனியாவிடம்,
"ஏய் லட்டு இந்த கவிப்ரியாவுக்கு என்னமோ ஆகிடுச்சுடீ! அப்போலேர்ந்து என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு பாட்டா பாடி கொல்றா! இவ கிட்ட இருந்து என்னைய காப்பாத்து ப்ளீஸ்!" என்று தன் தோழியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஷைலஜா.
"வாடீ ரூபி என்னை பேரு சொல்லி கூப்பிடுற அளவுக்கு கொழுப்பாகிடுச்சா உனக்கு...... அண்ணின்னு தான் கூப்பிட மாட்டேங்குறீங்க, சரி ஓகே அக்கான்னாவது கூப்பிடுறீங்கன்னு பார்த்தா அதுவும் இல்லாம..... என்னது இதெல்லாம்? இனிமே ஒழுங்கா அண்ணின்னு கூப்பிட்டு பழகணும், புரியுதா?" என்று சொன்ன கவிப்ரியாவிடம்,
"அது வர மாட்டேங்குது கவி அக்கா, அதை விடு. எங்க ரெண்டு பேருக்கும் உன்னை விட ரெண்டு வயசு கம்மி தான்.....ஆனா எங்களுக்கு அதுக்குள்ள மேரேஜ் பண்ணி வைக்க ப்ளான் பண்ணிட்டாங்க! நீ மட்டும் உன் கேரியர், ஆம்பிஷன்னு ஜாலியா சுத்திட்டு இருக்க. எப்படி உன்னால மட்டும் இவ்வளவு நாள் எஸ்கேப் ஆக முடிஞ்சது?" என்று கேட்ட ஷைலுவை தீ பார்வை பார்த்த கவிப்ரியா,
"இவ்வளவு நாள் எனக்கு கல்யாணம் ஆகிடக்கூடாதுன்னு ஒத்த காலை தூக்கிட்டு விரதம் இருந்தேன். உங்கண்ணன் எங்கிட்ட வந்து பேசினதுக்கப்புறம் தான் விரதத்தை முடிச்சேன். கேக்குறா பாரு கேள்வி...... பேமிலியில அண்டர்க்ரௌண்ட்ல எத்தன பிரச்சனை போயிட்டு இருந்ததுன்னு உனக்கு தெரியும்ல! அதெல்லாம் இல்லன்னா எங்களுக்கும் இன்னும் சீக்கிரமா கல்யாணம் நடத்தியிருப்பாங்க ரூபி.....நீ தேவையில்லாம குழப்பிக்காத, லட்டுவும் அவ ஹப்பியும் பார்முக்கு வந்துட்டாங்க, பாகிய பத்தி கேக்கவே வேண்டாம்.... அவன் அண்ணியை பார்த்து விடுற பெருமூச்சுல நாம எல்லாரும் பறந்து போயிடுவோம் போலிருக்கு. ஜீவா கூட ரொம்ப டெவலப் ஆகிட்டான் தெரியுமாடீ...... அவனைப் பார்த்து இப்போ எனக்கு வெக்கம் வெக்கமா வந்து தொலையுது. நீயும் பவின் கூட அப்படி லவ்வோட இருந்தா தானே வீட்ல எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க.....நம்ம செலக்ட் பண்ணி தந்த பையனோட ரூபிக்கு செட் ஆக மாட்டேங்குதுன்னு டார்லிங் நினைச்சுட்டார்னா கஷ்டம் பார்த்துக்க!" என்று கவிப்ரியா ஷைலஜாவிடம் சொல்ல அவள் சிந்தனையுடன் கவிப்ரியாவிடம் தலையாட்டி விட்டு சென்றாள்.
பத்மா வெளியில் வந்து இனியா மற்றும் கவியிடம், "உள்ள போய் கொஞ்சம் வேலை பார்த்து குடுங்கடா, ஷைலு மாப்பிள்ளை வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களாம், இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க, ரூபிக் கண்ணு ஏதாவது அழகா டிரெஸ் போட்டு தலையில கொஞ்சம் பூ வச்சுக்கடா செல்லம்!" என்று சொன்ன தன் பாட்டியிடம்,
"அப்படியே காதுல கொஞ்சம் வச்சு விட்டுடு பாட்டி..... ஏன் லூஸ் ஹேர்ல இருந்தா அவன் என்னை பார்க்க மாட்டானா? டிரெஸ் பண்ணினா அழகா இருக்கும்னு சொல்லு அது ஓகே..... அவன் வர்றான் அதுக்காக டிரெஸ் பண்ணிக்கோன்னு சொல்லாத! எனக்கு கடுப்பாகுது!" என்று தன் பாட்டியிடம் வாதம் செய்து கொண்டு இருந்தவளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள் இனியா.
ஹாலில் அமர்ந்திருந்த பார்கவ் இருவரும் வாக்குவாதம் புரிந்து கொண்டே மேலே செல்வதை பெருமூச்சுடன் பார்த்து தலையை உலுக்கிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் கெளதமன் குடும்பத்தினர் வந்து விட ஜெய் நந்தன் அவரை வரவேற்று அவரிடம், "என்னடா கௌ வர்றேன் வர்றேன்னு சொல்லி இவ்வளவு நேரம் ஆக்கிட்ட..... வாங்க முதல்ல டின்னர் சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம்! வாங்க மா..... வினு!" என்று தனியாக தன் மாப்பிள்ளைக்கு ஒரு அழைப்பையும் விடுத்தார்.
பவின் அன்று அவர் வீட்டிற்கு சென்ற போதே அனைவரிடமும் அவன் பெயரை சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல்லி விட்டான். ஜீவாவும் பார்கவும் கௌதமன் ராகினியை உள்ளே செல்ல சொல்லி விட்டு பவினை அழைத்துக் கொண்டு தனியாக சென்றனர்.
"யேய் என்னப்பா ரெண்டு பேரும் ரெண்டு பக்கத்துல பிடிச்சு தனியா தள்ளிட்டு வர்றீங்க? என்ன மேட்டர்?" என்று கேட்ட தன் மாப்பிள்ளையிடம்,
"வினு நீங்க ஷைலுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும், அவளோட பிஹேவியர், காரெக்டர் பத்தி நாங்க கொஞ்சம் டிஸ்க்ரைப் பண்ணிட்டோம்னா அவளை ஹாண்டில் பண்றது உங்களுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்!" என்று பார்கவ் ஒரு அவசரத்துடன் அவனிடம் சொல்ல, பவின் அவர்கள் இருவரிடமும் ஒரு விசித்திர புன்னகையுடன்,
"படிக்குறப்போலேர்ந்து நான் எக்ஸாம் எழுதணும்னா யாரும் சொல்லிக் குடுத்து எழுத மாட்டேன். இப்போ என்னோட கொஸ்ட்டின் பேப்பர் ஷைலு....... உங்க கிட்ட கேட்டு அவள தெரிஞ்சுக்கட்டுமா? இல்ல நானே ட்ரை பண்ணட்டுமா......!" என்று கேட்டவனை மேலும் கீழும் பார்த்த ஜீவா பார்கவின் அருகே சென்று,
"நமக்கு இந்த பல்பு தேவையாடா..... நான் அப்பவே சொன்னேனே கேட்டியா! ரூபி ரொம்ப காம்ப்ளிகேட்டட் டைப்; வினுட்ட பேசியே ஆவேன்னு சொன்னல்ல! நல்லா பேசிட்டு வா, நான் வெளியே வெயிட் பண்றேன்!" என்று சொன்ன ஜீவாவிடம் பவின்,
"மச்சான் நோ ஹார்டு ஃபீலிங்ஸ்..... எந்த ஒரு ஆளா இருந்தாலும் அவங்களையே அறியாம என்னோட காரெக்டர் இப்படித்தான்னு பேசும் போது சில ஹிண்ட்ஸ் குடுப்பாங்க, நம்ம கொஞ்சம் அப்ஸர்வ் பண்ணினா போதும், தட்ஸ் இட்! எனக்கு ஷைலஜாவை பெர்சனலா தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு. ஐ வில் ஹாண்டில் திஸ் மைசெல்ஃப்!" என்று சொன்ன பவினிடம், "வினு ஒரே நிமிஷம் வெயிட் பண்ணுங்க!" என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் சென்று தன் அன்னையிடம் இருந்து பூவை வாங்கி கொண்டு வந்தான் பார்கவ்.
"எதுக்கு இது?" என்று அவன் கையில் இருந்த பூக்களை பார்த்து கேள்வி கேட்டவனிடம்,
"ஆத்தா மகமாயி இப்பத்தான் புடவை கட்ட மாட்டேன், பூ வைக்க மாட்டேன், வர்றவன் நான் எப்படி இருக்கனோ அப்படியே என்னைப் பார்த்தா போதும்னு இனியாட்ட சாமியாடிகிட்டே போறா, உங்களால முடிஞ்சா இந்தப் பூவை அவளுக்கு வச்சு விட்டு அவள மலையிறக்கி கூட்டிட்டு வாங்களேன் பார்ப்போம்!" என்று சவால் விட்ட பார்கவிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு பூவுடன் மேலே சென்றான் பவின். கதவை தட்டுவதற்காக கை உயர்த்திய போது உள்ளே ஷைலஜா இனியாவிடம் வாக்குவாதம் புரிந்து கொண்டு இருந்தாள்.
"............ முதல்ல இருந்தே உங்கிட்ட சொல்லிட்டு தானே லட்டு இருக்கேன், வீ ஆர் ஜஸ்ட் லைக் ரூம்மேட்ஸ்; அப்படித்தான் இருக்கப்போறோம், இந்த காதல் ஃபீல் டாஷ் டாஷ் டாஷ் எல்லாம் வரும் போது பார்த்துக்கலாம், என்னைய ஜஸ்ட் ஒரு லுக் விடுவானாம்...... ஓவர்டூ பண்றான் இடியட்! வருவானாம்; என் அழகுல மயங்கி ஊறுகா சோறு சாப்பிடுவானாம்...... இத நம்ம வீட்ல இருக்கிற ப்ரகஸ்பதிங்க எல்லாம் வாயை மூடி சிரிச்சுட்டு பார்த்துட்டு இருப்பாங்களாம். நான் பாகி அத்தான்ட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, அவன் லவ் பண்ண பொண்ணோட அவனுக்கும் முட்டிக்கிச்சு. ஸோ வீட்ல பெரியவங்க பிக்ஸ் பண்ணிட்டாங்களேன்னு கடமைக்கு பண்ணிக்க போற கல்யாணம் இது...... இதுல லவ் வர்றதுக்கான பாஸிபிளிட்டி ம்ஹீம்...... ரொம்ப கஷ்டம்! பூசுற மாவெல்லாம் பூசி முடிச்சுட்டன்னா நம்ம கீழ போகலாமா?" என்று கேட்ட தன் தோழியிடம்,
"ரூபிம்மா என் பட்டுல்ல..... ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் ஒரே ஒரு புடவை கட்டிக்கோடீ!" என்று சொன்ன இனியாவின் முகத்தை பற்றி தன் அருகே கொண்டு சென்று,
"லட்டு செல்லம் நீ டென்ஷன்ல உளற ஆரம்பிச்சுட்ட, ஒரே ஒரு தடவை ஸாரி கட்டிக்கோன்னு சொல்றதுக்கு பதிலா..... நீ ஒரே ஒரு புடவை கட்டிக்கோன்னு சொல்ற; நீயே கேட்டாலும் என் வாயையும் சரி புடவையையும் சரி இன்னிக்கு கட்ட முடியாது டார்லிங்! உங்க பெரியப்பாட்ட போய் சொல்லிடு, அவர் வேற நம்மள முறைக்க போறாரு!" என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறந்தவர்கள் முன்னால் ஹாய் சொல்லிக் கொண்டு நின்றான் பவின். அவனைப் பார்த்து இனியாவும் ஷைலுவும் சற்று பயந்து போய் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர்.
"ரூபிம்மா பேசுனது எல்லாம் அவருக்கு கேட்டுருக்கும், நம்மள பத்தி என்ன நினைச்சாரோ......." என்று ஷைலுவின் காதருகே முணங்கிய இனியா,
"ஹலோ மிஸ்டர் பவின்..... வாங்க. ஹவ் ஆர் யூ? எப்போ வந்தீங்க?" என்று நலம் விசாரித்தாள்.
"ஹாய் இனியா..... இப்போ தான் ஜஸ்ட் வந்து நிக்குறேன், நீங்களும் டோர் ஓப்பன் பண்றீங்க, கரோக்கி ஸாங் பாடணும்னு சொல்லி மிஸ்டர் இசக்கி ராசு உங்களை தேடுறாங்க, நீங்க கீழே போங்க, எனக்கு ஷைலுட்ட கொஞ்சம் பேசணும், நாங்க டென் மினிட்ஸ்ல கீழே வர்றோம்!" என்றான் பவின்.
"ரூபிம்மா கைய விடு. பவின் ஸார் கூட பேசிட்டு வா. நான் கீழே வெயிட் பண்றேன்!" என்று ஷைலுவிடம் சொல்லி தன் கைகளை உருவிக் கொள்ள முயன்றவளிடம்,
"விட்டுட்டு ஓடுன..... பத்து நாளைக்கு உங்கூட பேசமாட்டேன்டீ லட்டு; எங்கேயும் போகக்கூடாது, எங்கூட தான் இருக்கணும்!" என்று சொல்லி முடிந்த அளவு இறுக்கமாக இனியாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஷைலஜா.
பவின் இரண்டு எட்டுகள் முன்னால் வந்து ஷைலுவின் மற்றொரு கையைப் பற்றி சற்று அழுத்தம் கொடுத்தான். "ஏ........ய் எனக்கு வலிக்குது!" என்று சொல்லி அவன் கைகளைப் பிரிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தவளிடம், "இப்படித்தானே இனியாவுக்கும் வலிக்கும்....... அவங்க உன் பெஸ்ட்டீன்னு சொல்ற; அப்புறம் நீயே அவங்கள ஹர்ட் பண்ற! இனியா நீங்க கிளம்புங்க, இவ சொன்ன மாதிரி பத்து நாள் இவட்ட பேசாதீங்க! உங்க கை வலிக்கலையே!" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் இல்லையென தலையசைத்து விட்டு படிகளில் கீழே இறங்கினாள் இனியா.
"சொல்ல சொல்ல கேக்காம விட்டுட்டு போறல்ல..... இரு உங்கிட்ட அப்புறம் பேசிக்குறேன்!" என்று முணங்கியவளை தோள்களை பற்றி அறையின் உள்ளே அழைத்து வந்தான் பவின்.
"மிஸ்டர் பவின் யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ்..... எனக்கு உங்க கிட்ட பெர்சனலா பேசறதுக்கு ஒண்ணுமில்ல!" என்று சொன்னவளிடம் நமுட்டுச் சிரிப்புடன், "எனக்கு உங்கிட்ட பேசறதுக்கு நிறைய விஷயம் இருக்கு ஷைலு, அதுக்கு முன்னாடி.....!" என்று சொல்லி நிறுத்தி விட்டு தன் வாலட்டிற்குள் இருந்து இரு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து அவளிடம் நீட்டினான் பவின்.
"உன் பாக்கெட் மணிக்காக இந்த அமௌண்ட், வாங்கிக்கோம்மா!" என்று சொன்னவனிடம்,
"ஸாரி எனக்கு இந்த பணம் தேவையில்ல!" என்றாள் ஷைலஜா.
"நிஜமாவே வேண்டாமா? இட்ஸ் ஓகே.....இதோ மறுபடியும் என் வாலெட்ல வச்சுட்டேன், இதே மாதிரி தான் அவ கிட்ட என் லவ் ஃபீலை குடுத்தேன், அவ அக்செப்ட் பண்ணிக்கல, சரி ஓகேன்னு இன்னொரு பொண்ணுக்காக அதை பத்திரமா எங்கிட்டயே வச்சுக்கிட்டேன், அன்னிக்கு உங்க வீட்ல ஊறுகாவை சாதத்துல போட்டது ஆக்ஸிடெண்டலா தான்; சரியா கவனிக்காம நடந்த விஷயம், எல்லாரும் இருக்கறப்போ பாதியில எழுந்திரிச்ச மாதிரி ஆகிடக் கூடாதுன்னு தான் சாப்பாடு நல்லா இருக்குன்னு என்ஜாய் பண்ணி சாப்பிடுற மாதிரி ஒரு இமேஜை க்ரியேட் பண்ணினேன், அத எல்லாரும் உன் மேல உள்ள லவ்னு நினைச்சுட்டா நான் என்ன பண்ண முடியும்? ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா நீ பார்கவ் மேல வச்சிருக்கிறது ஜஸ்ட் இன்ஃபாக்சுவேஷன், கூடவே இருந்த பையன், உன்னை நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி வச்சுருக்குற பையன் உன் லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா தான் இருந்திருக்கும், பட் லவ் ஃபீல்னா என்னன்னே தெரியாம பார்கவ லவ் பண்ணினேன்னு சொல்லாத, உன்னை கல்யாணம் பண்றது என் ரூமை உன் கூட ஷேர் பண்ணிக்குறதுக்கில்ல, லைஃப் அ ஷேர் பண்ணிக்குறதுக்கு! ஏன் இன்னும் ஒரு தடவை கூட நீ எனக்கு கால் பண்ணல? ப்ரெண்ட்ஸ் ஜானர்ல அடாப்ட் ஆக கஷ்டம்னா ரெண்டு பேரும் லவ்வர்ஸா ஆகிக்கலாமா?" என்று கேட்டவனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அப்போ நீ நாங்க பேசின எல்லாத்தையும் வெளிய நின்னு கேட்டுட்டு தான் இருந்துருக்க; மேனர்ஸ் இல்ல உனக்கு?" என்று கேட்டவளிடம்
"பில்டிங் அதிருற மாதிரி கத்தினா எல்லாருக்கும் கேக்க தான் செய்யும், ஒருத்தரை திட்டணும்னா அட்லீஸ்ட் அவருக்கு மட்டுமாவது கேக்காத மாதிரி பார்த்துக்கணும், பட் இட்ஸ் ஆல்ரைட். அதெல்லாம் கேக்க முடிஞ்சதுனால தானே எக்ஸ்ப்ளனேஷனும் குடுக்க முடிஞ்சது!" என்று பவின் பேசிக் கொண்டு இருக்கையில் ஷைலஜா
"யூ ஷட் அப் மை மவுத்!" என்று ஆத்திரத்தில் கத்த பவின் நமுட்டுச் சிரிப்புடன்,
"ஏய் ஆர்வக்கோளாறு தெரிஞ்சு சொன்னியா? தெரியாம சொன்னியா?" என்று கேட்க அவள் கோபம் குறையாமல்,
"தெரிஞ்சு தான்டா சொன்னேன்!" என்றாள் அழுத்தம் திருத்தமாக.
"என்னோட காதல் என்னன்னு உனக்கு புரிய வச்சா தான் அட்ராக்ஷனுக்கும் லவ்வுக்கும் உள்ள வித்தியாசம் உன் மூளையில ஏறும். ஸோ இப்போ ஐ வில் ஷட் யுவர் மவுத்!" என்று சொல்லி அவளை இடையைப் பற்றி தன் அருகே இழுத்து அணைத்து அவள் இதழ் நோக்கி குனிந்தான் பவின்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro