💟 ஜீவாமிர்தம் 20
"ஜீவாக்குட்டி இப்போ தான்டா உன் சிரிப்பு அழகா இருக்கு. ரிலாக்ஸ்டா இருக்கியா......!" என்று கேட்ட தன் அத்தையின் முதுகுப்புறம் தன் முதுகை சாய்த்து அமர்ந்து கொண்டவன்,
"இதுக்கு மேல என்ன ஹாப்பினெஸ் வேணும் மீராக்குட்டி..... நம்ம மூக்கி கூட பழம் விட்டாச்சு. பேமிலியோட மிங்கிள் ஆகியாச்சு. அப்பா கிட்ட பண்ணையார் ஐயா சமாதானம் சமாதானம்னு பத்து தடவை சொல்லி சரண்டர் ஆகியாச்சு. இனியா, ராசு ப்ராப்ளம் மட்டும் தான் நம்மள லேசா டென்ஷன் ஆக்கிடுச்சு. பட் கலவைப்படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல. நம்ம மாப்பிள்ளை எஸ்டேட்டுக்கு வரும் போது கொஞ்சம் அவரை வச்சு கவனிக்கணும். அவ்வளவு தான். மற்றபடி மகாகனம் பொருந்திய திருவாளர் ஜீவானந்தன் அமைதியாக, ஆனந்தமாக, குதூகலமாக, உற்சாகமாக, நிம்மதியாக இருக்கிறார். இப்போதைக்கு எந்த விதமான நச்சரிப்பும் இல்லாம இருக்கு. சொல்லி வாய் மூடல. அதுக்குள்ள வந்துடுச்சு பாரு நச்சரிப்பு...... வேற இடமே இல்லையா; ஏன்டீ என் மடியில வந்து உட்காருற?" என்று கேட்ட படி கவியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவனை பார்த்து புன்னகைத்த கவிப்ரியா,
"உங்கத்தை கிட்ட நீ கொஞ்சிட்டு இருக்க. அது தான் உன் மடியில நான் உட்கார்ந்து கொஞ்ச வந்தேன். என் ரூமுக்கு வா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! அம்மா உங்களுக்கு ஓகே தானே?" என்று கேட்ட தன் மகளிடம்,
"கவிம்மா இன்னும் நீங்க சின்ன குழந்தைங்க கிடையாது. இனிமே பெர்மிஷன் எல்லாம் கேக்க தேவையில்ல. உங்களுக்கு குடுத்திருக்கிற சுதந்திரத்தை நீங்களே தான் சரியா பயன்படுத்திக்கணும். போய் பேசுங்க! ஜீவாம்மா பாகி அந்த ராசு பத்தி உங்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னான் கண்ணா. ராம் மாமா வீட்டுக்கு நீ போறியா? பாகியை இங்க வரச் சொல்லவா?" என்று கேட்ட தன் மீராத்தையிடம் சலித்துக் கொண்டு,
"எனக்கு கவிம்மா கிட்ட நிறைய பேசணும் மீராத்தை. அந்த நல்லவனை எல்லாம் இப்ப கூப்பிடாத. உன்னதம் ஃப்ராபிட், சஹாயன் பேலன்ஸ், ராசு மேட்டர்ன்னு எல்லாத்தையும் பேசி என்னை சாவடிப்பான். அஜு மாமா வந்தா சாப்பிட மட்டும் கீழே கூப்பிடு. வேற எதுக்கும் என்னை கூப்பிடாத. அம்மா ஏதேதோ நிறைய ஐயிட்டம் உனக்கும், கீதா அத்தைக்கும் குடுத்து விட்டுருக்காங்க. எடுத்து வச்சுக்க. நான் ஊருக்கு கிளம்பும் போது கீது அத்தைட்ட கரெக்டா அட்டெண்டென்ஸ் போட்டுட்டு கிளம்பிடுறேன்!" என்று சொல்லி விட்டு மாடிப்படிகளில் ஏறினான் ஜீவா.
தன் அண்ணன் மகன் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ச்சி அடைந்து அர்ஜுனை அழைப்பதற்காக போனை எடுத்தார் மீரா.
"உள்ள வாங்க மிஸ்டர் ஜீவானந்தன்!" என்று அவள் அறைக்குள் நின்று கொண்டு கூப்பிட்டவளை பார்த்து புன்னகைத்தவன்,
"என்ன மேடம் மரியாதை எல்லாம் ஹை லெவலுக்கு எகிறுது..... என்ன விசேஷம்?" என்று கேட்ட படி கட்டிலில் அமர்ந்து கொண்டான் ஜீவானந்தன்.
"சும்மா...... அப்பப்போ ஏதாவது வெரைட்டி வேணும்ல..... இந்த மாசம் வெயிட் கூடி இருக்கியா? குறைஞ்சு இருக்கியாடா..... ஒழுங்கா ஒரு கெட்டப்ல இல்லாம ஏன்டா திடீர்னு தாடி வைக்கிற, அப்புறம் க்ளீன் ஷேவ் பண்ற, இல்லன்னா ப்ரெஞ்ச் பியர்டுல இருக்க. இப்போ பார்த்தா நாலு நாள் தாடில இருக்க! மனுஷிக்கு இம்சையா இருக்கு!" என்று சலித்துக் கொண்டவளை அருகில் அமர்த்தியவன்,
"ம்ம்ம்.....இந்த மன்த் இன்னும் வெயிட் செக் பண்ணலையேடா அம்முலு..... கண்டிப்பா கூடி தான் இருக்கும்னு நினைக்கிறேன்! ஆனா நான் ஹேண்ட்ஸமா இருக்கேன்னு உனக்கு பொறாமைடீ கேப்ஸி! பண்ணையார் சக்தி, முத்துவை ரூமுக்குள்ளயே வச்சுட்டு கவனிச்சுக்குறாரு தெரியுமா..... ரொம்ப பேபீஸா இருக்காங்களாம். ஸோ வெளிய டாக் ஷெல்டர்ல இப்போதைக்கு விட முடியாதாம். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அவங்க வந்ததுக்கப்புறம்
ஒரே சண்டை, எப்படியோ கஷ்டப்பட்டு ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்க. உனக்கு எப்படிடீ இப்படி ஒரு கிப்ட் வாங்கணும்னும், அதை என்னோட கிப்ட்னு சொல்லணும்னும் தோணுச்சு?" என்று கேட்டவனை உற்று நோக்கியவள்,
"சத்தியமா சொல்லு. உனக்கு உங்கப்பாவை பார்க்க போகும் போது கிப்ட் எதுவும் வாங்கலன்னு கொஞ்சம் கூட யோசனை வரலையா..... எல்லாருக்கும் பார்த்து பார்த்து செய்றவன்; ஆனா அவருக்கு எதுக்கு நான் எதுவும் வாங்கணும்ங்கிற வீம்புல தானே ஒண்ணும் வாங்கல...... பட் என்னால டார்லிங்க அப்படி ஃபீல் பண்ண விட முடியுமா? அது தான் உன் சார்பா சக்தி, முத்துவை குடுத்துட்டேன். சரி சொல்லு எப்படி இருக்கு உன் ஆனந்த ஸாகரம் லைஃப்?" என்று கேட்டவளிடம் வருத்தத்துடன்,
"அத ஏன் கேக்குற அம்முலு..... எல்லாமே அங்க சிஸ்டமெடிக்கா நடக்குது. அஞ்சு மணிக்கு மேல எவ்வளவு குளிரா இருந்தாலும் யாரும் தூங்க மாட்டேங்குறாங்க. நைட் 8 மணிக்கு எல்லாம் படுத்துர்றாங்க. காலையில 8 மணிக்கு எழுந்துரிச்சு கீழே வந்தா அம்மாவை பேஸ் பண்றதுக்கே எனக்கு கில்டியா இருக்கு. பண்ணை வேலையை பார்த்து, பாக்டரிக்கு போயிட்டு வந்து, ருசி கலெக்ஷனை சரி பார்த்து, பூம்பாறையில ஏதாவது வொர்க் இருந்தா அங்கே போயிட்டு, சஹாயனுக்கு அப்பப்போ ரவுண்ட்ஸ் போயிட்டு.....ப்பா; எத்தன கமிட்மெண்ட்ஸ், எஸ்டேட்ல இப்போதைக்கு வெட்டியா இருக்கிற ஒரே ஆள் நான் தான்!" என்று ஆதங்கத்துடன் சொன்னவனிடம்,
"நந்து திஸ் இஸ் நாட் ஃபேர்! அங்க
எல்லாரையும் செல்லம் கொஞ்சினதெல்லாம் போதும். எப்போ இங்க வரப் போற? உன் ஆஃபிஸை பார்த்துக்கிற ஐடியா இல்லையா?" என்று கேட்டவளை பார்த்து சிரித்தவன்,
"அம்முலு இனிமே நான் அங்க தான் இருக்கப் போறேன்டா! என்ன காலையில கரெக்டா 9 மணிக்கு உன் நியாபகம் வந்துடுது. அது நம்ம சைட்டிங் டைம்ல அதுதான்.... ஆனா இனிமே 15 டேஸ் ஒன்ஸ் தான்டா பார்க்க முடியும்ன்னு நினைக்கிறேன்! இவ்வளவு நாள் நீ சொன்ன மாதிரி எல்லாரையும் செல்லம் கொஞ்சிட்டு இருந்தாச்சு. இனிமே நான் எஸ்டேட்ல ரெஸ்பான்ஸிபிளிட்டியை எடுத்துக்கணும்!" என்றவனிடம் அப்பட்டமாக முகத்தில் எரிச்சலை காட்டியவள்,
"ஜீவா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தானே அங்க போகணும்ன்னு சொன்ன..... போயிட்டு ஒரு வாரம், பத்து நாள்ல வந்துடுவன்னு பார்த்தா இப்பவே அங்கயே செட்டில் ஆகப் போறேன்னு சொல்ற. உன் ஆஃபிஸ்.......!" என்று கேட்டவளை ஆச்சரியத்துடன் பார்த்து,
"அம்முலு நம்ம ஆஃபிஸ்..... என்னால தனியா கேஸ் ஹாண்டில் பண்ண முடியுமான்னு சும்மா ஒரு ட்ரையல் பார்க்குறதுக்காக ஸ்டார்ட் பண்ணினதும்மா! இங்க இருக்கிறப்ப உன்னை பார்க்குறது, உன் பின்னால சுத்திக்கிட்டு இருக்கிறது, தீராஸ் போறது, அந்த வேலைகளெல்லாம் போக எக்ஸ்ட்ரா டைம் இருந்ததால ஆரம்பிச்சது. 4 பேரு அங்க வொர்க் பண்றதால தான் என் பேட்ச் பிரெண்ட் கிட்ட ஹாண்ட்ஓவர் பண்ணிட்டேன். இல்லன்னா அந்த ஆஃபிஸை கூட டிஸால்வ் பண்ணியிருக்கலாம்!" என்று காஷுவலாக சொன்னவனை அதிர்ந்து போய் பார்த்தவள்,
"ஜீவா அப்போ உன் ஆம்பிஷன்.....நீ நல்ல லாயர் ஆகி நிறைய கேஸ் ஜெயிக்கணும்னு எல்லாம் உனக்கு ஆசையில்லையா?" என்று கேட்டாள் கவிப்ரியா.
"வாட்..... நல்ல லாயராகி..... கேஸ் ஜெயிக்கணுமா? இதெல்லாம் என் லைஃப் ஆம்பிஷன்னு நான் எப்போ அம்முலு உன் கிட்ட சொன்னேன்? என் மனசில ஒரு சந்தேகம் தோணுச்சு. அந்த சந்தேகத்துக்கு விடை கிடைக்கும்ன்னு தான் லா படிச்சேன். தட்ஸ் எனஃப்! பட் அப்பா மாதிரி கண்டிப்பா எனக்குன்னு ஒரு சுய அடையாளத்தை உருவாக்கிக்கணும்னு எல்லாம் நான் நினைக்கவேயில்ல. அது நம்ம டிஸைன்லயும் இல்ல. அப்பா, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, தாத்தா, பாட்டியை அப்பப்போ போய் பார்த்துட்டு, இனியா, ஷைலுவுக்கு என்னென்ன வேணுமோ அதை செஞ்சுட்டு, அடிக்கடி சென்னை வந்து உன்னை கொஞ்சம் கொஞ்சிட்டு அத்தை, மாமாஸ்ட்ட ரெண்டு சேட்டை பண்ணிட்டு அப்படியே
ஆற அமர எல்லா பிஸினஸையும் பொறுப்பா பார்த்துக்கணும். அது போதும் கேப்ஸி; தனியா இத்தன வருஷம் கிடந்ததுக்கு இப்போ கிடைச்சிருக்கிற ப்ளஸ்டு லைஃப் ஒரு அமிர்தம் மாதிரி இருக்கு. ஜீவாவுக்கு கிடைச்ச ஜீவாமிர்தம்; இதே மாதிரி லைஃப் ஸ்மூத்தா போயிட்டு இருந்தா போதும். ரொம்ப சந்தோஷமா இருக்கும்!" என்று சொன்னவனிடம் ஒரு தலையாட்டலுடன் நிறுத்திக் கொண்டாள் கவிப்ரியா.
"ஓய்.....டார்லிங்; என்னாச்சுடா..... திடீர்னு ஏன் முகம் இப்படி மாறுது...... எதுக்கு இப்படி சிஸ்டம் ஷட்டவுன் பண்ற மூக்கி?" என்று கேட்ட படி அவள் முகத்தை நிமிர்த்தியவனிடம்,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. கீழே போகலாமா?" என்று தலைகவிழ்ந்த படி நின்றிருந்தவளிடம்,
"மழை பெய்ஞ்சப்ப உன் செடிங்க கூட பேசிட்டு நீயும் நனைஞ்சியா அம்முலு..... வந்ததுல இருந்து நாலு தடவை தும்மிட்ட; உனக்கு கோல்ட் பிடிச்சிருக்கா....... எனக்கும் வேணும், அத குடு!" என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு,
"லூசா நீ....... சளி பிடிச்சிருக்கு. அதைப் போய் குடுன்னு கேக்குற..... கையில தூக்கியாடா அத குடுக்க முடியும்?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன்,
"இல்ல........ அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய வேலை இருக்கா..... அதுனால நம்மள சரியா கண்டுக்க மாட்டேங்குறாங்க. அத்தைஸ் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துட்டு மடியில உருளுற மாதிரி அம்மா, அப்பாட்ட சட்டுன்னு ஒட்ட முடியல. இப்போ கோல்ட் பிடிச்சிருக்குன்னு ஸீன் போட்டோம்னு வையேன்.... மடியில படுக்க வைச்சு தலைய அமுக்கி விடச் சொல்லலாம். தைலம் தேய்ச்சு விடுவாங்க. சாதம் ஊட்டி விடுவாங்க. இவ்வளவு பெனிஃபிட் கிடைக்கும். முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கிற என் லிட்டில் டாலோட பிரச்சனையையும் சரி பண்ணிடலாம். ஒரே கல்லுல ரெண்டு மேங்கோ.....எப்படி?" என்று கேட்டவனிடம் சலிப்புடன்,
"பேசி பேசி சாவடிக்காத. இப்போ உனக்கு என்ன வேணும்...... சொல்லிட்டு கிளம்பு!" என்றவளை எழுப்பி தன் எதிரே நிறுத்தி ரசித்தவன்,
"தூரத்தில இருந்து பார்த்தா ஒரு விதமா இருக்க. பக்கத்தில நின்னுட்டு இருந்தா இன்னொரு விதமா தெரியுற. உன் முகத்தை பார்த்துட்டே இருந்தா போதும் போலிருக்கேடீ..... அம்முலு உன்ட்ட இருந்து கோல்டை எடுத்துக்கட்டுமா?" என்று கேட்ட படி கவியின் கழுத்தை தன் கையால் பற்றி லேசாக சாய்த்து தன் இதழ்களை அவள் இதழ்களில் அழுந்த இணைத்திருந்தான் ஜீவானந்தன்.
சில நிமிடங்கள் வரை தொடர்ந்த இதழ்களின் தழுவல் கவிப்ரியா ஒத்துழைப்பு தர மறுத்ததால் முடிவுக்கு வந்தது.
"ம்ப்ச்! என்னடீ நல்ல ஃப்ளோவில போயிட்டு இருக்கும் போது நடுவில டிஸ்டர்ப் பண்ற?" என்று எரிச்சலுடன் கேட்டவனை மார்பில் குத்தியவள்,
"இது தான் டூ இன் ஒன் ட்ரீட்மெண்டாக்கும்..... சரியான கிரிமினல்டா நீ!" என்று சொல்லி சிரித்தவளிடம்,
"ப்ளீஸ் கேப்ஸி...... பாதி ஜெர்ம்ஸ் தான் உள்ள போயிருக்கும். இன்னும் ஸ்ட்ராங்கா சளி பிடிக்கணும். அடுத்து எப்போ ஊருக்கு வருவேன்னு தெரியல. அது வரைக்கும் தாங்கணும். இப்போ ஒரு டூ இன் ஒன் ட்ரீட்மெண்ட் எடுக்கலாமா?" என்று கேட்டு கண்சிமிட்டியவனிடம்,
"உன்னைய நல்லா மொத்தப்போ.....!" என்று கவிப்ரியா பேசிக் கொண்டிருக்கையில் அவனது இதழ்கள் அவளது பேச்சை தடை செய்திருந்தது.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro