💟 ஜீவாமிர்தம் 17
ராசுவின் வீட்டில் அனைவரும் குழுமியிருந்தனர். இனியா நிர்மலாவின் மடியில் படுத்துக் கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள். அடிபட்ட மான் குட்டி போல் மிரண்டு போய் நிற்கும் தன் மகளைக் கண்டதும் ஜெய் நந்தனுக்கும், விவேக்குக்கும் அடக்க மாட்டாத ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
ஆனால் ராசு எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் சட்டவட்டமாக நடு வீட்டில் அமர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஜீவானந்தன் தன் தங்கையின் கண்ணீரை காண முடியாமல் வீட்டின் வெளிக் கூடத்தில் நின்று கொண்டு இருக்க ராசு அவனை கூவி அழைத்தான்.
"எலேய் மச்ச்ச்சான்..... கெரகம்! என்னைய விட இளவட்டத்தை எல்லாம் மரியாதையா முறை வச்சு கூப்பிட வேண்டியிருக்கு. என்ன செய்ய; என் பொஞ்ஜாதி உன்னைய அண்ணாங்காலே.... அப்ப எனக்கு நீ மச்சான்தேன்! உள்ளார வாலே!" என்று கூப்பிட்டவன் குரலை கேட்டதும் அமைதியாக உள்ளே வந்த ஜீவானந்தன்,
"மிஸ்டர் இசக்கிராசு உங்க கிட்ட அஞ்சாறு கேள்வி கேக்கணும். அதுக்கு பதில் சொல்றீங்களா?" என்றான்.
இவன் என் காலுக்கு கீழே குழி பறிக்க திட்டம் போடுகிறான் என்று நினைத்துக் கொண்டு, "எது வேணும்னாலும் கேளுங்க மச்சான். ஆனா உட்கார்ந்து மோர் குடிச்சிட்டு சாவகாசமா கேளுங்க!" என்றான் ராசு புன்னகையுடன்.
"ஐ டோண்ட் நீட் யுவர் ஹாஸ்பிட்டாலிட்டி மிஸ்டர் இசக்கி! டோண்ட் சேன்ஜ் த டாப்பிக் அண்ட் கம் டூ த மேட்டர்!" என்றான் ஜீவானந்தன்.
"யெஸ் கம்மிங் டூ த மேட்டர் மிஸ்டர் ஜீவானந்தன். ப்ளீஸ் சூட் யுவர் கொஸ்ட்டீன்ஸ்!" என்று கேட்டவனை இனியா நிர்மலாவின் மடியில் இருந்து முகம் தூக்கிப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்து கண்சிமிட்ட தலையை திருப்பிக் கொண்டாள்.
"வாட்ஸ் யுவர் க்வாலிபிகேஷன்.....?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"கம்ப்ளீடட் எம்எஸ்சி அக்ரி அண்ட் ஐ'ம் அ ரிசர்ச் ஸ்காலர் இன் ------ யுனிவர்சிட்டி டூ!" என்றவனிடம் அப்பட்டமான அதிர்ச்சியை
காட்டினான் ஜீவானந்தன்.
"ஐ நெவர் எக்ஸ்பெக்ட்டட் திஸ் ப்ரம் யூ மிஸ்டர் ராசு! இது எனக்கு ஒரு ப்ளசண்ட் சர்ப்பைஸா இருக்கு! பட் நீங்க ஏன் ஒரு மாதிரி ஸ்டிஃபா, ரிஜிட்டா இருக்கீங்க....... இனியாவை அவ பெர்மிஷன் இல்லாம போர்ஸ் பண்ணினது தப்பில்லையா?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"நீ என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருந்த மச்சான்...... ஸ்கூலுக்கு போகாம தோப்புல மாங்கா அடிச்சுட்டு..... அஞ்சாப்பு அஞ்சு தடவ படிச்ச மங்குனிப் பயன்னு நெனைச்சியாலே...... நெனைச்சுருப்ப. ஏன்னா எம் மாமன் என் வண்டவாளத்தை எல்லாம் உங்கிட்ட சொல்லி அழுதிருப்பாரு. என்ன தான் படிச்சாலும் நானெல்லாம் கிராமத்தான் தான்யா. எங்க ஊரு கட்டுப்பாடு, கலாச்சாரம், ஏன் இந்த பேச்சு வழக்கு கூட எங்களுக்கு தாய்ப்பால் மாதிரி, இது இல்லைன்னா சவலையா போயிடுவோம். விவேக் மாமா உங்ககிட்ட வேலைக்கு இருக்கிறத தவிர உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொல்லு பார்ப்பம்! சும்மா பல வருஷ ஸ்நேகிதம் தானே? உங்களுக்கு இனியா புள்ள கிட்ட இவ்வளவு உரிமையும், உறுத்தும் இருக்குன்னா........ ஆமாய்யா சொந்தக்காரன் எனக்கு உங்கள விட அதிகமாதேன் இருக்கு. ஊர்ல ஏதாவது பிரச்சனை ன்னு வந்தா அங்க மொத ஆளா போய் நாந்தேன் நிப்பேன். அடிதடி சண்டைன்னா நமக்கு அல்வா சாப்பிடுத மாதிரி! மத்தபடி எப்பயாவது ஒருக்கா சிகரெட்..... பியர் எல்லாம் உண்டு. ஆனா உன் தங்கச்சிக்கு அதெல்லாம் ஒவ்வாது போலிருக்கு! இனிமேல் நிறுத்திப்புடுறேன். இதுக்கு மேல நீங்கதேன் சொல்லணும்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனிடம் கோபத்தில் பற்களை கடித்தவாறு,
"வெட்டிப்பயலே.... இவ்வளவு சவடால் பேசுற....? என்னடா சம்பாதிக்குற?" என்றார் விவேக்.
"வெட்டிப்பயன்னு வெட்டியா சுத்துறவனைதேன் கூப்பிடணும் மாமோய்..... உம்ம மருமவன் சம்பாத்தியத்தில உம் புள்ளை மகாராணி மாதிரி கால் மேல கால் போட்டுட்டு சாப்பிடலாம். நல்லா சாப்பிட்டு கதியா இருக்கச் சொல்லு உம் புள்ளைய; பேசச் சொன்னா முணங்குறா!" என்று சலித்துக் கொண்டவனை பார்த்து சிரிப்பு வந்தது ஜீவாவிற்கு. பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அடக்கிக் கொண்டான்.
"தம்பி உங்களுக்கு 29 வயசாகிடுச்சுன்னு விவேக் சொன்னாங்க! இனியாவுக்கு இப்போ தான் 21. இதைக் கூட யோசிக்கலையா நீங்க?" என்று நிர்மலா கேட்க ராசு அவரிடம்,
"இதெல்லாம் ஒரு காரணமா அயித்தை..... யாரு அவளை என்னைய விட எட்டு வருஷத்துக்கு இளசா பொறக்க சொன்னது? கொஞ்சம் சீக்கிரமா பொறந்திருக்கலாம்ல.......!" என்று பாவமாக கேட்டவனை விவேக்கும், இனியாவும் ஒன்றாக சேர்ந்து முறைத்தனர்.
"அயித்தை! நீ என்ன ஒண்ணுமே பேசாம உட்கார்ந்துட்டு கிடக்க..... உம் பேரன் பண்ணின காரியம் தப்பில்லன்னு நீயும் சாதிக்க போறியா?" என்று தன் அத்தையிடம் நியாயம் கேட்டார் விவேக்.
"தப்புதேன் ராசா, ரொம்ப தப்புதேன்! ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவளை இந்தப் பய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இவனை கட்டை விளக்கமாத்தை கொண்டு சாத்தணும்! கூறு கெட்ட மட்டை, நா ஒண்ணு சொல்ல அது ஒண்ணு செஞ்சுட்டு வந்துருக்கு. உன் பொஞ்ஜாதி முத தடவை வந்திருக்காவ; அவிய முன்னாடி உம் மானம் கெடக்கூடாது ன்னு பார்க்குதேன். இல்ல கெளுரு மீனு மண்டைய ஆயுற மாதிரி ஆஞ்சுப்புடுவேன்.... ஆஞ்சு!" என்று சொன்ன தன் பாட்டியை சமாதானம் செய்ய முடியாமல் அவன் திணற இனியா மெலிதாக புன்னகைத்தாள்.
"ஏட்டி சிட்டு......! உனக்கென்னடீ கொண்டாட்டம்; பல்லைக் காட்டிக்கிட்டு கெடக்குறவ! வாயை மூடு!" என்று சொல்லி அவளை மிரட்டினான் ராசு.
"உங்க முடிவு என்னய்யா?" என்று கேட்ட தன் அத்தையின் முகம் பார்த்த விவேக் தன் அண்ணனின் முகத்தை நோக்கினார்.
ஜெய் நந்தன் இனியாவிடம், "லட்டு நீ என்னடா சொல்ற?" என்று கேட்டவரிடம் புன்னகையுடன்,
"போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம் பெரியப்பா. ஆனா நான் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணணும். நீங்களும், அப்பாவும் சேர்ந்து என்னை இவங்களுக்கு முறையா கல்யாணம் பண்ணித் தரணும்! அது வரைக்கும் நா நம்ம வீட்ல தான் இருப்பேன்!" என்றாள் தீர்மானமான குரலில்.
"சவுண்டு வந்துடுச்சுடே மச்சான்! இதே மாதிரி இவளை எப்பவும் பேசச் சொல்லுலே! ஆமா வந்ததுல இருந்து நானும் உன்னை மச்சான்.... மச்சான்ங்கேன்; நீ ஒரு தடவை கூட என்னைய அப்படி கூப்பிடாதன்னு சொல்லவேயில்லையே....!" என்று கேட்ட ராசுவிடம்,
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. எங்க அப்பா ஒரு முடிவு சொல்லட்டும். அதுக்கப்புறம் உன்னை நானும் மாப்பிள்ளைன்னு கூப்பிடறேன்!" என்று ஜீவா சொன்னதும் ராசு சந்தோஷமாக தலையசைத்தான். ஏனென்றால் வந்து இறங்கியதும் ஜீவா செய்த அலப்பறைகள் அப்படிப்பட்டவை. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் ஜெய் நந்தன் அவனை வெளியே நிற்குமாறு அனுப்பி வைத்தார்.
ஜெய் நந்தன் எழுந்து நின்று "இன்னும் மூணு மாசத்துல லட்டு படிப்பு முடிஞ்சுடும். அதுக்கப்புறம் ஒரு நாள் பார்த்து முஹூர்த்தம் குறிச்சுடலாம். கல்யாணம் மலையில வச்சா உங்களுக்கு வசதி தானே மாப்பிள்ளை?" என்றார்.
"எம்மேல நம்பிக்கை வச்சு உங்க பொண்ணை எனக்கு தர்றதுக்கு ரொம்ப நன்றி. நா கொஞ்சம் முரட்டுப்பய தான். ஆனா என்னைய நம்பி வர்ற பொண்ணை மனசு கோணாம பார்த்துப்பேன். இவ்வளவு புரிதலோட இருப்பீகன்னு தெரிஞ்சா சம்மதம் கேட்டுட்டு கல்யாணம் பண்ணி இருப்பேன். உங்க விருப்பப்படி கல்யாணத்தை வச்சிக்கிடுங்க. என்ன இருந்தாலும் நா செஞ்சது ரொம்ப தப்புதேன்! மன்னிச்சுடுங்க. விவேக் மாமா நீயும்தேன்யா மன்னிச்சுடு!" என்றான் ராசு.
"என் பையன மட்டும் மச்சான்னு கூப்பிடுறீங்க.... என்னை மாமான்னு கூப்பிட உங்களுக்கு சங்கடமா இருக்கா மாப்பிள்ளை?" என்று கேட்ட ஜெய்யிடம் புன்னகையுடன்,
"இல்ல மாமா..... நமக்கும், மரியாதைக்கும் ரொம்ப தூரம். வாய்யா, போய்யான்னு விவேக் மாமன கூப்பிடலாம். ஆனா உங்களை எப்படி அப்படி......!" என்று இழுத்தவனிடம்
"அப்பா, பெரியப்பாவை மரியாதை இல்லாம பேசக் கூடாது!" என்று கட்டளையிட்டாள் ராசுவின் தர்மபத்தினி.
"வாடா, போடான்னு கூப்பிடலையே.....
அதுவரைக்கும் சந்தோஷம் தான்டா லட்டு. சரி கிளம்பலாமா?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம்,
"அதெப்படி.... முத தடவையா வீட்டுக்கு வந்துருக்கீக..... சாப்பிட்டு பொறவு தான் கெளம்பணும்! அப்பத்தா உன் கைருசி எப்படின்னு என் பொஞ்ஜாதிக்கும், விருந்தாடிகளுக்கும் காட்டு. தோட்டத்தில எல எடுத்தாரேன்!" என்று வீட்டின் பின்புற வாசல் வழியாக சென்றவனை, "ராசு ஒரு நிமிஷம்!" என்று அழைத்து நிறுத்தினான் ஜீவானந்தன்.
"என்னலே மச்சான்!" என்று புருவம் உயர்த்தியவனிடம்,
"இனியாவுக்கு உன் வீட்டை சுத்திக் காட்டு. கொஞ்ச நேரம் ஏதாவது பர்சனலா பேசணும்னாலும் ஓகே தான்! இனியா போடா!" என்றான் ஜீவா.
தயக்கத்துடன் தன் பெரியன்னையை ஏறிட்டவளிடம், "போய் பேசிட்டு வாடா!" என்று நிர்மலாவும் அவளுக்கு அனுமதி அளித்தார்.
"என் பொஞ்ஜாதி ரொம்ப நல்ல புள்ளை போலிருக்கேப்பா.....ராசு நீ நிறைய மாறணும்லே ஐயா!" என்று குரல் கொடுத்த தன் மனசாட்சியை,
"அதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுதோம். நீ உங்க சோலிய மட்டும் பாரு!" என்று சொல்லி மூடி வைத்து விட்டு வாழை மரத்தருகே சென்று இலைகளை வெட்டிக் கொண்டு இருந்தான் ராசு.
"ம்க்கும்!" என்று செருமியவளை திரும்பி முறைத்தவன், "வாயில சுளுக்கு பிடிச்சிருக்காலே உனக்கு..... மாமா ன்னு கூப்பிட மாட்டீகளோ?" என்று கேட்டவனிடம் மாட்டேன் என்று தலையாட்டினாள் இனியா.
"ரொம்ப கோபமா இருக்கீகளோ....?" என்று கேட்டதற்கு ஆம் என தலை ஆடியது.
"ஏட்டி இம்சை பண்ணாத..... இழுத்து பிடிச்சாலும் இன்னும் அரை மணி நேரம் தான் இங்கண இருப்ப. பொறவு ஊருக்கு கிளம்பி போய்டுவ. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமுல்ல.....?" என்று கேட்டவனிடம்
"உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன். நீங்க பேசுங்க. நான் கேக்குறேன். இல்ல ஏதாவது கேள்வி கேளுங்க. பதில் சொல்றேன்! ஆனா பத்து நிமிஷம் தான்..... அதுக்கப்புறம் போய்டுவேன்!" என்றாள் இனியா.
"மகராசியா கெளம்புடீ....பக்கத்துல நின்னுட்டு உசுரை வாங்காத. கிளம்புன்னு சொன்னேன்!" என்று கத்தினான் ராசு.
"உங்களை எனக்கு பிடிக்கவேயில்ல. நீங்க ரொம்ப கெட்டவர். ஐ ஹேட் யூ!" என்று சொன்ன இனியாவிடம்,
"ஷப்பா...... நிறைய பொண்ணுங்க இதத்தேன் சொல்லியிருக்காளுக. நீ வேற ஏதாவது சொல்லு லட்டு! குட்டியா சிட்டுக்குருவி மாதிரி அழகா இருந்த. அதனால நான் சிட்டுன்னு கூப்பிட்டா உங்க பெரியப்பா அதுக்கு முன்னாலேயே உனக்கு லட்டுன்னு ஒரு சூப்பர் பேருல்லயா வச்சு இருக்காரு மனுசன்...... இந்த லட்டுவை ருசி பார்க்க இன்னும் மூணு மாசம் காத்திருக்கணுமோ.... ஏட்டி பேசாம தாலிய கழட்டி என் கிட்டயே குடுத்துர்றியா? காலேஜ்ல எல்லாரும் டீஸ் பண்ணுவாகல்ல.....!" என்று கேட்டவன் அருகில் வந்து அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு அவன் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டாள் இனியா.
"அடடா......சொர்க்கம்லே!" என்று கண்மூடி ரசித்தவன் தலையில் குட்டியவள்,
"அறிவு கெட்டவனே........ நான் காலேஜ் போறேன்! காலேஜ்ல எவனாவது கிண்டல் பண்ணுவான்...... இதெல்லாம் இப்போ தான் யோசிச்சியாக்கும்...... உனக்கு எவன்டா இசக்கிராசுன்னு பேரு வச்சது? பேசாம மங்குனிராசுன்னு பேரை மாத்தி வச்சுக்க. டெய்லி நைட் 8 மணிக்கு படுத்துடுவேன். ஆனா 9 மணிக்கு தான் தூங்குவேன். பேசறதுன்னா அந்த நேரத்தில கூப்பிடு.
பாட்டியை நல்லா பார்த்துக்கணும்! சிகரெட் பிடிச்ச.... தண்ணியடிச்சன்னு தெரிஞ்சது; எங்கண்ணாவை இங்க கூட்டிட்டு வர சொல்லி உன் வாயில மிதிச்சுட்டுப் போவேன். ஜாக்கிரதை!" என்று அவனை முறைத்து விட்டு சென்றாள் இனியா.
"எலேய் ராசு.....உன் மேல வீசின காத்து உன் பொஞ்ஜாதி மேலயும் பட்டுட்டோ..... இந்த போடு போட்டுட்டு போறா சுண்டக்கா; இருடீ உன்னைய...... மருக்கா
கல்யாணம் முடியட்டும். அப்புறம் பேசிக்குறேன்!" என்று அவனது உதடு அவளைத் திட்டிக் கொண்டு இருந்தாலும் அவனது உள்ளம் கவிழ்ந்து அவளிடம் சரணாகதி அடைந்து இருந்தது.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro