விளக்கம்:20
வீட்டுக்குள் நுழைந்தவன் கீழிருந்த ஒரு அறையினுள் நுழைந்து தான்யாவை மெத்தையால் படுக்க வைத்தான்...
வீர்: வீனா மா.. கொஞ்சம் சுடு தண்ணி எடுத்துட்டு வா டி...
வீனா : ஓக்கே டா...
வீர்: ரக்ஷா உன் First aid kit ட எடுத்துட்டு வா டி...
ரக்ஷா : ம்ம் சரி டா...
மாடிக்கு சென்று தன் கிட்டை எடுத்துவந்தாள்... சரியாக வீனாவும் சுடுதண்ணீரை எடுத்துவந்தாள்... அதற்குள் ரவி Stethoscope ஆல் அவள் மூச்சை செக் செய்தான்... சீராக மூச்சு விட்டாள்... வீனாவிடமிருந்து தண்ணீரை வாங்கிய வீர் அவள் கைகளிளும் காலிலும் சுடு நீரால் ஒத்தடம் கொடுத்தான்... ரக்ஷா தான்யாவிற்க்கு அடிப்பட்ட இடத்திலெல்லாம் மருந்திட்டு Bandage போட்டாள்...வீரிடமிருந்த தண்ணீரையும் துணியையும் வாங்கிய வீனா அதை ரனீஷின் கையில் கொடுத்துவிட்டு...
வீனா: ரனீஷ் நீ அவளுக்கு ஒத்தடம் குடு வீர் நீ இப்டி வாடா
ரனீஷ் : ம்ம்ம் வீர் தல்லு டா.. என அவனை தள்ளிநிற்க்க வைத்துவிட்டு இவன் ஒத்தடம் கொடுக்க தொடங்கினான்...
வீர்: நானே பன்னீர்ப்பேனே டி... எதுக்கு என்ன எலுந்து வர சொன்ன??
வீனா: ஏன் கூட வா... என அவனை வெளியே அழைத்தாள்...
வீர்: எங்க டி...தனுவ பாக்க வேணாமா???
வீனா : அவள பாக்க இங்க மூணு பேர் இருக்காங்க.. நீ ஏன் கூட வா...என வர மறுத்தவனை அழைத்து(இழுத்து) சென்றாள்...
ஹாலிற்க்கு அழைத்து வந்தவலை ஏன் டி இங்க இழுத்துட்டு வந்த என்பதைப் போல் லுக்கு விட்டுக் கொண்டிருந்தான்...
வீனாவோ அவன் விடும் லுக்குகளை எல்லாம் கவனிக்காமல்...
வீனா: இங்கையே நில்லு நா வரேன்....
என மாடி ஏறிச் சென்றாள்...அருகே இருந்த சோபாவில் சீக்கிரம் வா டி...என கத்திக்கொண்டே அமர்ந்தான்... நொடிக்கொருமுறை கண்கள் தான்யா இருக்கும் அறையை பார்த்துக்கொண்டிருந்தது... இதை கவனித்தவாறே First aid kitடுடன் கீழ் இறங்கினாள் வீனா...
வந்தவள் அவன் அருகில் அமர்ந்து அவனிடம் "கையை காமி" என்றாள்...
வீர்: ஏன்? ??
வீனா: ஜோசியம் பாக்கப்போரேன்...
வீர்: ஜோசியம் பாக்க இதுவா டி நேரம்??? நைட்டு உக்காந்து பாரு... நா இப்போ தனுவ பாக்கப்போரேன்...என்று எலுந்தவனை
வீனா: டேய் உக்காரு டா... அவள அவங்க மூணு பேரும் பாத்துப்பாங்க...உன் காயத்துக்கு யாரு மருந்து போடுவா???குடு கைய...
என அவன் கையில் கிலித்திருந்த காயத்தில் Tinger வைத்து மெதுவாக ஊதி ஊதி வைத்தாள்... இவள் காட்டும் அன்பில் ஒரு நிமிடம் வீரின் கண்கள் கலங்கி விட்டது... நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்கலங்கி அமர்ந்திருந்தவனைக் கண்டு பதறிபோய்...
வீனா: ரொம்ப வலிக்கிதா டா???நா மெதுவா தான வச்சேன்...
வீர்: எனக்கு வலிலாம் இல்லை டி... நீ எனக்கு மருந்து போடும் போது எனக்கு வலிக்குமோன்னு பட்டும் படாம மெதுவா ஊதி ஊதி வச்சேல்ல அதப்பாக்கவும் ஏன் அம்மா நியாபகம் வந்திருச்சு... ஆனா இத்தன வர்ஷமா ஏன் மச்சானுங்க ஏன் கூட இருந்ததுனால இதுவர அம்மாப்பா நியாபகம் வந்ததே இல்லை... இன்னைக்கு தா உன்னால ஏன் நினைவுல திரும்ப வந்துர்க்காங்க...ஏன் அம்மா, தனுக்கு அப்ரம் ஏன் மேல இவ்ளோ அக்கரையா இருக்குர பொண்ணுங்கன்னா அது நீயும் ரக்ஷாவும் தான் டி...
அரையிலிருந்து இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த ரக்ஷா...
ரக்ஷா: இதுல என்னடா இருக்கு??? எங்களுக்கு ஒரு அண்ணண் இருந்தா இதக்கூட பன்னமாட்டோமா???
வீனா: அதானே...
இருவர் அருகிலும் வந்த ரக்ஷா இன்னோரு Sponge ஐ எடுத்துக்கொண்டு அவன் காலில் வெட்டுக்காயம் போல் இருந்த காயத்தில் மெதுவாக மருந்து போட்டாள்...அவன் அருகிலிருந்து எலுந்த வீனா அவன் தலையிலிருந்த அடியை ஆராய தொடங்கினாள்...இரத்தம் சிறிது கசிந்துக்கொண்டிருந்தது... அதை சரி செய்தவள்... தலையில் கட்டுப்போட்டாள்...கழுத்திலும் காயம் இருந்ததைக் கண்ட ரக்ஷா..அவனுக்கு மருந்துப்போட்டுக்கொண்டே திட்டிக்கொண்டிருந்தாள்...
ரக்ஷா: அப்டி எங்க டா போனீங்க?? இவ்ளோ காயம்.???? கொஞ்சமாவது வலிக்கிதா டா உனக்கு சொரனைக்கெட்டடவனே...
வீர்: எனக்கிந்த காயம்லாம் பெருசா தெரியல டி...மனசுல பட்ட காயந்தான் வலிக்கிது... என்றான் சிரித்துக்கொண்டே....
ரக்ஷா,வீனா : இந்த காயத்துக்குள்ளாம் நாங்களே மருந்து போட்டுட்டோம்.... உன் மனசுல பட்ட காயத்துக்கு தான்யா
எலுந்ததும் வந்து மருந்து போற்றுவா டா... அதுவர கொஞ்சம் வெய்ட் பன்னு...
வீர் தனுவை பற்றி இருவரும் எப்படி அறிந்துக்கொண்டனர் என அதிர்ந்துவிட்டான்...
வீனா : என்னா டா வாய்க்குள்ள ஈ Free யா போலாம்... டிக்கெட்லா கெடையாதுனு ஓப்பன் பன்னி வச்சிர்க்கியா???😝😝😝
ரக்ஷா: ஈ என்ன டி நம்ம அனகோன்டா வாயனே உள்ள போவாரு போல...
அவள் கூறிதைக்கேட்டு திறந்து வைத்திருந்த வாயை டக்கென மூடிக்கொண்டான்...அவன் செய்ததைக்கண்டு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்...இன்னும் இரு சிரிப்பொலி கேட்டு வீர் திரும்பி பார்க்க அவனைப் பார்த்து சிரித்தவாறே வந்தனர் ரவியும் ரனீஷும்...
வீர்: அவ எப்டிடா இருக்கா???
ரனீஷ் : உன் தனு நல்லா இருக்கா டா... சீக்கரமா எலுந்து வந்து உனக்கு மருந்து போடுவா.. என்று கன்னடித்தான்...
ரவி : ஆமா டா மச்சான்...
அப்பொழுதே அவன் மன்டையில் பல்பெரிந்தது... தான் தனுவின் நிலையைக் கண்டு நிதானமில்லாமல் தனுவ பாக்கனும்... தனுக்கு மருந்து போடனும்... என உலரியது ரீவைன்ட் ஆனது...
நாழ்வரையும் பார்த்து அசடுவலிந்தவன் எப்படி சமாலிப்பதென தெரியாமல் முளிக்க..😓😓அவர்களை பார்க்காமல் மன்டையை அங்குமிங்கும் திருப்பினான்...அவன் படும் அவஸ்த்தையில் சிரித்துக்கொண்டே
ரவி: டேய் டேய் போதும் டா.... ரொம்ப திருப்பாத சுலிக்கிக்க போகுது...
வீர்: ஹிஹி சரி மச்சான்...
ரனீஷ் : சரி அத விடுங்க... இரண்டு பேரும் வீட்டுக்கு போரேன்னு சொல்லீட்டு ஏன் காட்டுக்கு போனீங்க??? அங்க எப்டி தனிதனியா பிரிஞ்சீங்க???
வீர்: அது... தனு எலுந்ததும் சொல்றேன் டா...
ரக்ஷா: லவ்வர் யாருன்னு தெரிஞ்சதும் சாரு அவங்க Permission இல்லாம எதுவும் பன்னமாட்டேன்னு உறுதிமொழி எடுத்துர்க்காரு...
வீர்: ஹே இல்ல டி... அவ எலுந்ததும் சேந்து சொல்றோம்னு தா சொன்னேன்...
வீனா: பராவா இல்லை...அவ எலுந்ததும் திரும்ப சொல்லு...எங்க காது நல்லாவே கேக்கும்...
வீர்: சரி சரி சொல்றேன்.... நேத்து ஏன் Shirt ல இருந்த Locket யும் சாவியையும் நா வைக்கல... நா ரூம் விட்டு வெலிய வரப்போ தனு சோபா வந்து உக்காந்துக்குட்டா... நா Dress சேன்ஜ் பன்ன மாடிக்கு போய்ட்டேன்... சேம் கலர்ல ஷேர்ட் போட்டதுனால உங்களுக்கு தெரியல...ஒடனே சொல்லவேனாம்னு தனுட்ட நான்தா சொன்னேன்... நைட் இதப்பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம்...
ரனீஷ் : நிலாவ பத்தி தானடா பேசிக்கிட்டு இருந்தீங்க..
வீர்: First இங்க என்னமோ இருக்கு... மொதல்ல இந்த மதிவாலயத்த பத்தி தெரிஞ்சிக்கனும்..
இடையில் புகுந்தான் ரனீஷ்..
ரனீஷ் :மதிவாலயமா??? அப்டீனா???
வீர்:இந்த வீடோட பேருடா... முன்னாடி அப்டி தா சொல்லுவாங்கலாம்...
ரனீஷ் : ஏன் டா???
வீர்: பௌர்னமி அப்போ இந்த வீட்டு மாடில நிலாவோட வெளிச்சம் முலுசா தெரியுமா... ஊர்லயே பெரிய வீடுல்ல ... அதான்...
வீனா: இன்னைக்கு பௌர்னமி டா...
ரவி: அப்டியா டி..
வீனா: ஆமா டா...
ரக்ஷா : ஏய் சும்மா இருங்க இரண்டு பேரும்...டேய் நீ Continue பன்னுடா..
வீர்: நம்ம கூகுல்ல பாத்தோமே ஒருத்தன் 7 வர்ஷத்துக்கு முன்னாடி எறந்துட்டான்னு... அவன் இந்த வீட்ல தா தற்கொலை பன்னீர்க்கான்... I mean இது அவன் வீடு தான்...
ரனீஷ்:என்னடா சொல்ற??? இதல்லாம் எப்டிடா கன்டுபுடிச்சீங்க???
வீர்: மொதல்ல எங்கேந்து தொடங்குரதுன்னு தெரியாம இரண்டு பேரும் கொளம்பிநின்னுட்டு இருந்ப்போ டீ கடைல ரேடியோ ஓடுச்சு...அன்னைக்கு ரௌடி ஒருத்தன் செத்துட்டான்னு News வந்துச்சுல்ல அவனோட அடியாட்களும் செத்துட்டானுங்களாம்.. அதப்பத்தி பேசீட்டே போனோம் அப்போ ஒரு மரத்தடியில கொஞ்சநேரம் இருக்களாம்னு தனு அங்க ஓடிட்டா... அப்போ ஒரு தாத்தா சில லைன்ஸ் சொன்னாரு டா... ஒன்னுமே புரியல டா... என்ன அர்த்தம் னு கேட்டா நீ யே தெரிஞ்சிக்குவ ன்னாரு...
திரும்பிப்பாத்தோம் அவரக்கானும்...அப்போ தா கந்தசாமியப் பாத்தோம்...
ரனீஷ் : கந்தசாமியா அவரு எப்படா நார்மலானாரு???
வீர் : தெரியல டா...அவரு தா சொன்னாரு வீட்டப்பத்தி...காட்டுக்குள்ள போகமாட்டோம் னு சொன்னாரு... எதாவது அங்க தெரியவரும்னு அங்க தேடி போனோம்...
ரனீஷ்: டேய் டேய் நிருத்து டா.. அந்த தாத்தா என்னமோ சொன்னாருல்ல அது என்ன???
வீர்: டேய் உன்ன கொல்லப்போரேன் பாரு... Question ஆ கேட்டு கொல்ரியே... முழுசா சொல்ல விடேன்டா...அந்த தாத்தா என்ன சொன்னாருன்னு தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பன்னப்போர???
ரனீஷ் : அவருக்கு Subtitle ஆ வேலை பாக்கப்போக போரேன்..(உனக்கு ஏத்த வேலை தான் டா)
சொல்லு டா...
வீர்: எனக்கு நியாபகம் இல்லை டா... தனு எலுந்ததும் அவல்ட்ட கேளு...இப்போ நா சொல்றதக்கேளு...
ரனீஷ்: சரி சொல்லு...
வீர்: காட்டுக்குள்ள ஒன்னுமே இல்லை... தனி தனியா போலாம்னு சொன்னா... என அனைத்தையும் சொல்லி முடித்தான்...உருவத்தை பற்றி எதுவும் கூறவில்லை...
ரவி: அவ எப்டி டா அந்த பள்ளத்துக்கிட்ட போனா???
வீர்: தெரியல டா... நா அவக்கூட இல்லாதப்போ வேர என்னமோ நடந்துருக்கு...
வீனா: காத்து பலமா அடிச்சு ஒரு எடத்துல மட்டும் புகை மன்டலமா இருந்துச்சே அது என்னடா..???
வீர்: அங்க தான் டி நா இருந்தேன்...தனு தனுன்னு கத்திக்கிட்டே வந்தேன்...
ரவி: எங்களுக்கு கேட்டுச்சு டா... ஆனா நாங்க உன்ன கூப்டதுதான் உனக்கு கேக்கல...
வீர்: இல்ல டா... எனக்கு சுத்தமா கேக்கல... நீங்க காட்டுக்குள்ள இருக்கீங்க ன்னு எனக்கே அது சொல்லிதா தெரியும்...
ரவி: அதா??? எது டா???
வீர்:தனுவ தேடி போய்ற்றுந்தேன் டா... அப்போ ஒரு கரும்பு உருவம் பெரியமுடியோட சிவப்பு நிற கண்களோட பயங்கராம முன்னாடி வந்துச்சு... நம்மல ஏதோ ஒரு கெட்ட சக்தி தொரத்துது ...நம்மல தொரத்துரதுக்கு காரணம் தெரியல... ஆனா நம்ம யாரையும் விடமாட்டேன்னு சொல்லுச்சு... தனு சாகப்போரா ன்னு சொல்லுச்சு... எங்கள ஒன்னும் பன்ன முடியாதுன்னு அத எதுத்து நின்னேன்.. திடீர்னு காத்து பலமா அடிச்சிச்சு என்னால பாக்க முடியல...அது எங்கையோ பாத்துச்சு டா... உடனே ஏன் பக்கம் திரும்பி உனக்கு சாவு இப்போ இல்லை...அவளுக்கு நெருங்கீருச்சுன்னு கத்தி சொல்லுச்சு...
அவன் கூறியதையெல்லாம் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த நாழ்வரும் அவன் கூறப்போவதை கேட்க காதை தீட்டிக்கொண்டனர்...
வீர்: எதோ ஒரு பேர சொல்லி சும்மா விடமாட்டேன்னு கத்தீட்டு... மறஞ்சிருச்சு டா.. அப்ரம் தான் தனுவோட சத்தம் எனக்குக் கேட்டுச்சு....
தொடரும்.....
Hii my dear hearts gale...Epdi irukkenga ... inniku ud epdi irukku?? Slow aa pohuthunnu nenaikkireengala???
Negative comments um sollunga pa...ignore my mistakes drs... share ur valuable comments 😊😊😊
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro