விதி:35
ஷான்த்தியின் மரணத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருந்தாள் வனோஜா... குழந்தைகள் வளர தொடங்கினர்... யாரும் அறியாமல் பலரிடம் உயிரையும் பணத்தையும் அபகரித்து வந்தாள் வனோஜா... இன்றிலிருந்து அவளின் மொத்த திட்டத்தையும் தீட்டத் தொடங்கினாள்...
வனோஜா வின் திட்டம்....
ஷான்த்தி இறந்தமையால் வசன்த்திற்கு இரண்டாம் தாரமாய் தான் இருக்க வேண்டும்... ஒவீனா ரொவீனாவை சாக்காய் வைத்து... விக்ரமையும் வசன்த்தையும் பிரிக்கனும்... அப்போ குடும்பம் பிரிஞ்சு.. சொத்தும் பிரியும்... கொஞ்சொ வர்ஷத்துல இராமலிங்க தாத்தா வ முதியோர் இல்லத்துல சேத்துடலாம்...அப்ரொம் என்ன வசன்த் த ஏமாத்தி எல்லா சொத்தையும் ஏம் பேருக்கு மாத்தீடுவேன்....
வனோஜாவின் விஷ குணம் அறியாமல் அவளிடம் என்றும் போலே நடந்துக்கொண்டனர்.... ஆனால் இரத்தினம் தாத்தாவிற்கு வனோஜாவின் மேல் சந்தேகம் எழுந்தது... அவளை கண்கானிக்க தொடங்கினார்... ஷான்த்தியை கொலை செய்ததை தவிர்த்து அவள் வீட்டு வேலையாட்களிடம் நடந்துக் கொள்ளும் நடவேடிக்கை குழந்தைகள் அருகில் வந்தாளே அறுவெருப்பாய் தள்ளி விடுவதையெல்லாம் கண்டு இவள் விமலா ஷான்த்தியின் தங்கையா என்று அதிர்ச்சியாகிவிட்டார்....
இத்தனை மாதங்களிள் அவரின் இரண்டு மருமகள் களுமே வேலையாட்களிடம் தரை குறைவாய் பேசியது இல்லை... இன்று அவள் பேசியது எல்லாம் அவளின் திமிறாள் தான் .... என யூகித்துக்கொண்டார்... சொத்தை அபகரிக்கவே வனோஜா அனைத்தையும் செய்ய நினைக்கிறாளென்பதை ஒரு நாள் அவள் அந்த குருவிடம் போனில் பேசும் போது தெரிந்துக்கொண்டார்... மீண்டும் ஒரு அதிர்ச்சி... ஷான்த்தியை கொலை செய்ததும் வனோஜா தான் என்றதை அறிந்ததும் ஒன்று கூட பேச முடியாமல் தவித்தார்... கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது...
அதன் பின்பு அவளின் திட்டம் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வெளியில் அவளை பற்றி விசாரித்தார்... அப்போதே அவள் சில குடும்பங்களை பிரித்து அல்லது பணம் கொடுக்க மறுத்தாள் அவர்களை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எங்கேனும் புதைத்து விடுவாள் என தெரிந்துக் கொண்டார்...
அவளை பற்றி போலிஸில் புகார் கொடுக்களாமே என்று கேட்டதற்கு...
ஒருவர் : எங்களாள் முடியாது ஐயா... நம்ம ஊரின் ரௌடி பாலாவை கைக்குள் வைத்திருக்கிறாள்... புகார் கொடுக்க சென்றாள் பள்ளி செல்லும் எங்கள் பிள்ளைகளை கடத்தி கொன்று விடுவேன் என பயமுருத்துறாள்... அவரின் கண்களிள் இருந்து தானாய் கண்ணீர் வந்தது...
இரத்தினம் தாத்தா : அதுக்கு ஏன் அழுகூறீங்க???
ஒருவர் : என்ன ஐயா பன்ன சொல்றீங்க??? என்னால வேற என்னதா பன்ன முடியும்...புகார் கொடுக்க போன என்ன தடுக்க என் புள்ளை ய கொண்ணுட்டா ஐயா.... 5 வயசுப் பையன் ஐயா... கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம கொண்ணு அவளே பொதச்சிட்டு போய்ட்டாயா.... கடைசியாக்கூட என் புள்ள மொகத்த என்னால பாக்க முடியல ஐயா... என்று கதறி அழுதார்....
இரத்தினம் தாத்தா அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்... ஐந்து வயது சிறுவனை இறக்கமே இல்லாமல் கொன்றவளை என்ன செய்யலாம்??? இப்போது நான் என்ன செய்தாளும் அது என் பேரக் குழந்தைகளை தான் பாதிக்கும்... ஒவீ ரொவீயை வசன்த்திற்க்காய் விட்டு வைத்தாளும்... நிச்சயம் அவளின் குறி வீரின் மேல் தான் இருக்கும்... விமலாவின் கருவை கொல்ல நினைத்தவள் இதை செய்ய மாட்டாளென எப்படி நம்புவது??? வீர் இங்கிருந்தாள் அவன் உயிருக்கு ஆபத்து... அவனையும் விமலாவிடமிருந்து பிரித்து தவறான வழியில் வளர்க்க தொடங்குவாள் வனோஜா இதை நான் என்றும் நடக்க அனுமதிக்க மாட்டேன்... வனோஜா உனக்கு என்னால் தண்டனை குடுக்க முடியாது... உனக்கு தண்டனை வேறொரு உருவத்தில் நிச்சயம் கிடைக்கும்.... என்று தீர்மானித்தார்..
அன்றே வீட்டுக்கு சென்றவர் மூன்று குழந்தைகளையும் சென்னை அனுப்ப முடிவு செய்தார்... ஆனால் மூவரும் இல்லா விட்டால் தானும் வசன்த்தும் எவ்வாறு இருப்போம்??? என்று யோசித்தவர் அப்போது தான் அந்த காட்சியை கண்டார்...
மூன்று வயதான ரொவீனா அவளின் சித்தியான வனோஜாவிடம் செல்ல திரும்புகையில் அவளின் நோக்கம் புரிந்த அவளின் உடன் பிறப்பான ஒவீனா அவளின் கையை பிடித்து போகாதே என்று சொல்லி தன்னுடனே அமர்த்திக் கொண்டாள்....
இதில் இரத்தினம் தாத்தாவின் மனம் நிம்மாதியுற்றது... ஒவீனா ரொவீனாவை பாதுகாப்பாள்... ஒவீயை வனோஜா என்ன செய்தாளும் நெருங்க முடியாது... என்று வீரை மட்டும் சென்னையில் படிக்க வைக்க வற்புருத்தினார்... விமலாவும் மனமே இல்லாமல் ஒவீனா ரொவீனா வை விட்டு சென்னை கிளம்பினாள் வீருடன்...
வனோஜாவால் என்ன முயன்றாலும் ஒவீனாவையும் ரொவீனாவையும் நெருங்க முடியவில்லை... முதலில் இவர்களை பிரிக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினாள்... அனைத்தும் வீனாப் போனது... நாட்கள் சென்றது... வருடங்கள் சென்றது... இருவரையும் பிரிக்க முடியாமல்... வசன்த்தை திருமணம் செய்வதில் இறங்கினாள்... அதுவும் வீனா போனது...
கடுங்கோவமுற்ற வனோஜா... அவளின் அக்கா புகைப்படத்தின் முன் நின்று...
வனோஜா : என்ன ஷான்த்தி க்கா... உன் புள்ளைங்க இரெண்டையும் உசுரோட விட்டதுல நிம்மதியா போன... ஆனா இப்போ அது தப்போன்னு எனக்கு தோனுது... உன் பொண்ணு ஒவீனா இருக்காளே... நான் என்ன பன்னாலும் அவளையும் தோ இரெண்டாவது ஒருத்தி இருக்காளே ரொவீனா அவளையும் கிட்ட கூட வர விட மாற்றா... என்ன பொறக்கும் போதே சொல்லி குடுத்தியா??? வனோஜா கிட்ட போய்டாதீங்க ன்னு... எப்டி இருந்தா என்ன? ?? நா தோக்க மாட்டேன்...எப்டியாவது பிரிக்கிறேன்... இரெண்டு பேரையும் சாகடிச்சி வசன்த் க்கே தெரியாம அவன் பேர்ல இருக்குற மொத்த சொத்தையும் என் பேருல மாத்துவேன்... ஹோ விமலாவ விட்டுட்டேனா??? எதாவது சண்டை மூட்டிவிட்டா போதும்... தனியா இருக்குற விக்ரம் விமலாவையும் கூட்டிக்கிட்டு தனியாவே போய்டுவான்... என பேசிக் கொண்டிருந்ததை அங்கு வந்த இரத்தினம் தாத்தா எதர்ச்சையாக கேட்டு விட்டார்...
என்ன செய்வது??? நான் இறந்துவிட்டாள் இவளிடம் என் பேத்திகளை எப்படி விட்டு செல்வது??? சொத்துக்காகவே சாகடிச்சிடுவாளே... என்ன பன்றது..???? இல்ல எல்லா சொத்தும் வசன்த் விக்ரம் பேர் ல இருந்தா தானே அவ இப்டி பன்னுவா? ?? நா இத செஞ்சா அவளால ஒன்னும் பன்ன முடியாது இல்லையா... என்று ஒரு திட்டம் துட்டியவர் உடனடியாய் தன் வக்கீலை கூப்பிட்டு அதற்கு தேவையான பைலை தயார் செய்ய சொன்னார்...
மொத்த சொத்தையும் மூன்று பிள்ளைகளின் பெயரிலும் எழுதி வைத்தார்.. இது மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்ததும் ஏன் என எவரும் கேட்கவில்லை... பிள்ளைகளின் நலனுக்காக தான் இருக்கும் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்... இதனை பற்றி அறிந்த வனோஜா இதுவும் நல்லது தான்... மூணு செத்துப்போச்சு ன்னா எல்லா ஏம் பேருக்கு தானா வந்துரும் என கணவு கண்டாள்....
ஆனால் இரத்தினம் தாத்தா செய்த ஒன்றை அறியாமல் அவள் கண்ட கணவு நிறைவேற வேண்டி வேலையில் இறங்கினாள்...
இரத்தினம் தாத்தா மூவரின் பெயரிலும் சொத்தை மாற்றும் பொழுதே ஒரு உயிலையும் எழுதி வைத்தார்... அது என்ன வென்றால்... பிள்ளைகள் மூவரும் யாருக்காகவும் இந்த சொத்தை எழுதி கொடுக்க முடியாது என்றும்... அவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட்டாள் மொத்த சொத்தும் ஆஷ்ரமங்களுக்கு சேர்ந்து விடும் என தன் கைப்பட எழுதி அதற்க்கான வேலையையும் செய்து முடித்து விட்டு சொத்து பிள்ளைகளின் பெயரில் இருக்கும் வரை அவள் இவர்களை ஒன்றும் செய்ய மாட்டாளென நினைத்து நிம்மதியாய் உறக்கத்தில் ஆழ்ந்தார்...
ஆழ்ந்த உறக்கத்திலே மரணத்தையும் தழுவினார்.... உயிலை பற்றி எதையும் அறியாத வனோஜா இரத்தினம் தாத்தா வின் மரணத்தில் ஆனந்த குத்தாட்டம் போடாத குறையாக மூன்றாவது நாள் குரு வுக்கு போன் செய்தாள்... ஆனால் அவரோ முக்கிய பூஜையில் இருந்தார் போலும்... இவள் போன் செய்து தொந்தரவு செய்யவும் கட் பன்னிவிட்டு விட்டு பூஜை முடிந்ததும் கால் செய்தார்...
அவள் எடுத்ததும் நான் எவ்வளவு பெரிய பூஜை யில் இருந்தேன் தெரியுமா??? நீ இப்படி தொந்தரவு மேல் தொந்தரவு செய்தால் உன்னை சாபத்தில் தள்ளிவிட்டு விடுவேன்... நான் எவ்வளவு பெரிய குரு வென்று தெரியுல்லவா? ??
தீரா (மீ) : (கேப் விடாம பொய்யா சொல்ற??? இரு உனக்கு வெக்கிறேன் ஆப்பு.. )
என்று இல்லாத பொல்லாத கதையெல்லாம் கூறி அவளை மெரட்டியதில் தான் அன்று ஒவீ கவனிக்கும் போது வெளிவந்த கேவலமான மசாலா எபெக்ட்...
நாட்கள் செல்ல செல்ல வனோஜாவால் ஒவீனா மற்றும் ரொவீனாவின் நிழலைக் கூட தொட முடியாமல் போனது...
அன்று சென்னை சென்றே ஆக வேண்டும் இனி நாங்கள் அங்கு தான் கல்லூரியை தொடங்குவோம்.. கோவை வர மாட்டோமென அடம்பிடித்தனர் ஒவீ மற்றும் ரொவீ... இதனை கவனித்த வனோஜா... "இனிமே நீங்களே நெனச்சாலும் கோவை பக்கம் வர மாட்டீங்க டி " என்று நினைத்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினாள்...
அன்று தான் ஒவீ ரொவீ யின் வாழ்க்கை தலை கீழாய் மாறிய நாள்... 16 வருடங்கள் முன் வனோஜாவின் சதியால் கடுவளடி சேர்ந்த ஷான்த்தியின் இறந்த நாள் மட்டுமல்லாது அவள் பெற்ற செல்வங்களின் பிறந்த நாள்...
ஒவீ அன்னை இறந்த அன்று பிறந்த நாள் கொண்டாட அடம்பிடிக்கும் தன் தங்கையான ரொவீ மேல் கோவத்தில் இருந்தாளும் அவளின் மனமும் உருத்திக் கொண்டே இருந்தமையால் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்தில் பங்கிட்டாள்...
வீரை மட்டும் விடுத்து அனைவரும் கோவிலுக்கு சென்றனர்... இது சற்று சாலை யில் அமைந்த ஒரு கோவில்... அதன் அருகில் வீடுகளோ கட்டிடங்களோ எதுவும் இல்லை... ஏதோ பூஜை தட்டை மறந்து வைத்துவிட்டு வந்த விக்ரமை திட்டிக் கொண்டே விமலா விக்ரமுடன் காரில் வீட்டுக்கு சென்றார்... அப்போது ரொவீ குளக்கரையில் அமரப்போவதாய் சொல்லிவிட்டு ஓட அவளை பின் தொடரப்போன ஒவீனா வனோஜாவின் குரல் கேட்டு கோவிலின் பின் புறம் சென்றாள்...
அங்கு சில அடியாட்கள் நின்றிருக்க... கால் மேல் கால் போட்டவாரு அமர்ந்திருந்தாள் வனோஜா....ஒரு தூணின் மறைவில் நின்றுக் கொண்ட ஒவீ... கூர்மையாக கவனிக்கத் தொடங்கினாள்...
வனோஜா : என் அக்காவ கொல்ல ஒரு நாக விஷம் குரு ஜி தந்தார் ல.. விமலா புள்ளைய கொல்ல குடுத்தது இல்லை... ஷான்த்தி ய கொல்ல நா வர வச்சது... அது இந்த பை ல இருக்கு.. பத்தலன்னா குரு கிட்ட கேலுங்க... மொத்தத்தையும் செஞ்ச சாப்பாட்டுல கலந்துடுங்க... எல்லாரும் சாப்ட்டுட்டு மேல போகட்டும்... நம்ம ஆலுங்கள சாப்டாம பாத்தூக்கோங்க... அந்த குமாரு (Rowdy :5 ) தெரியாம தின்னாலும் தின்னுடுவான் பாத்துக்கோ பாலா (Rowdy : 1 ) இப்போ போங்க.... என்று கட்டளையிட்டு விட்டு திரும்புகையில் ஏதோ தெரிவதைப் போல் இருக்க... ஒவீ வருவதைக் கண்டு உடனடியாய் ஒரு திட்டத்தை போட்டாள்....முன்பு ரௌடிகளிடம் பேசியதை அவள் கேட்டிருக்க மாட்டாள் என நினைத்துக்கொண்டு செயல் படுத்த தொடங்கினாள்..... திட்டத்தை பற்றி அறியாமல் அதில் விழுந்தாள் ஒவீனா.....
வராத போனை காதில் வைத்து....
வனோஜா : குரு ஜி .... நீங்க சொன்ன மாரி எல்லாத்தையும் பக்காவா பன்னீட்டேன்... இன்னைக்கு நடக்குமா ன்னு நா சந்தேகப் பட்டது... ரொவீனா அடம்புடிச்சதுனாள நடந்துருச்சி....
புரியலையா குரு ஜி... ரொவீ ய பணத்தக் காட்டி என் பக்கம் இழுத்துட்டேன்... நா சொன்னதால தா இத்தன வர்ஷமா கொண்டாட கூடாதுன்னு சொன்னவ இன்னைக்கு கொண்டாடியே ஆகனும் னு சொல்லி எல்லாரயும் சம்மதிக்க வச்சிட்டா... சொத்து கைக்கு வந்ததும் அவளுக்கு பாதி எனக்கு பாதி... என்று ஒவீயின் கோவத்தை சரியாக கிளரி விட்டு சகோதரிகளுக்குள் விரசல் உருவாக்கினாள்....
ஒன்றும் அறியா ரொவீயின் குழப்பத்தை அவளின் திட்டம் தான் என பொய் உரைத்து ஒவீயை நம்ப வைத்தாள் வனோஜா.... எதிலும் யோசித்து முடிவெடுக்கும் ஒவீ இன்று கொஞ்சம் கூட யோசிக்காமல் ரொவீயின் மேல் கோபம் கொண்டாள்...
நேராக ரொவீயிடம் சென்றவள் அவளை ஓங்கி அறைந்துவிட்டு " ஏன்டி எனக்கு இப்டி துரோகம் செஞ்ச???? " என கத்தி திட்டிவிட்டு எங்கோ சென்றாள்.... அப்போது சரியாக கோவிலை விட்டு வெளியேரியவளை வனோஜாவின் அடியாட்களான ரௌடி பாலாவும் மற்றும் அவனின் 4 அடியாட்களும் ஒரு காரில் வந்து அவளை தூக்கி கோவிலை தாண்டி சென்றனர்...
அவர்களிடமிருந்து திமிரிய ஒவீ கார் ஓட்டியவனை தட்டிவிட்டு கோவிலை தாண்டி சென்ற காரை மீண்டும் கோவில் பக்கமே போவதை போல் திருப்பி விட்டாள்... அப்போதே வசன்த் ரொவீ சமாதானம் செய்து சிரிக்க வைத்து அந்த சாலையின் ஓரத்தில் ரொவீயை அனைத்தவாரு நடந்துக் கொண்டிருந்தார்...
அவர்கள் இருவரையும் கண்டு திமிரியவளுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி ..... தன் தங்கையை ஒரு முறை தான் திட்டினாளே இரண்டு நாள் விடாமல் அழும் ரொவீனா இன்று சிரித்துக் கொண்டே வசன்த்திடம் பேசியவாறு சாலையை கடக்க நின்றுக் கொண்டிருவளை காணும் போது வெறுப்பு மேலோங்கியது... ஒரு லாரியும் ஒவீ இருந்த காரும் தாண்டியதும் ரொவீயும் வசன்த்தும் சாலையை கடந்து சென்றனர்... விதியின் சதியில் ரொவீயும் வசன்த்தும் காரில் இருந்த ஒவீயை கவனிக்க தவறினர்...
ஒவீக்கோ... ரொவீ தந்தையை தன்னுடன் பகிர்ந்துக் கொள்ள பிடிக்காமலும் சொத்து முழுவதையும் தான் ஒருவளே ஆழ வேண்டுமென்ற பேராசையாளும் உடன் பிறந்தவளை 16 வயதிலே கொள்ள ஆல் அனுப்பி இருக்கிறாள் என சிந்தனை ஓடியது... ஏனெனில் அந்த கார் இருவரையும் தாண்டும் போது அவளை பார்த்திருக்க முடியும்... ஆனால் ரொவீயோ வேண்டுமென்றே ஏதோ சுவாரஸ்யமான விஷயத்தை கூறுவதைப் போல் அவள் பக்கம் வசன்த்தின் கவனத்தை திருப்பிவிட்டாள் அதனால் அவள் அனுப்பியவர்களாக தான் இருப்பார்கள் இல்லையேல் நான் அடித்ததற்கு அவள் ஏன் கொஞ்சம் கூட வருந்தாமல் இருந்தாள்...???? இதுவரை அவள் காட்டிய அன்பெல்லாம் நடிப்பு...என்று சரியாக கண்டுப்பிடித்து விட்டோமென தவறாக யூகித்தாள்.... அப்போதும் ஒவீ கண்ணீருடன் திமிரியதாள் ஒரு மயக்க மருந்தை அவளின் நாசியில் வைத்து மயக்க மடைய வைத்தான் அந்த ரௌடிகளிள் ஒருவன்...
தொடரும்....
Hii ithayngaleee .... post pannitten..epdi irukku ud??? ippo therinjirkkum en ovi rovi ethume pannama avala kolla thudikkiraannu... ethavathu logic idikkira maari iruntha thayangaama sollunga...
Advance happy bakridh dears... and innikku bakrid kondaadravangaluku EID MUBARAK guys....❤❤❤❤❤
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro