Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடும் படலம் :27

எப்படியோ வீனாவை சமாளித்து விட்டோமென அனைவரும் பெருமூச்சு விட்டப்படி தங்கள் உறையாடலை தொடர்ந்தனர்...சரியாக உறங்காமலும் காயம் பட்ட வலியும் சேர்த்து வீரையும் தான்யாவையும் ஓய்விற்க்கு அழைத்துச்சென்றது....தங்களை அறியாமல் தான்யா வீரின் தோலிலும் வீர் தான்யாவின் தலைமேலும் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தனர்...திடீரென ரவி
What a lovely pose என கூறவுமே அவர்களை கவனித்தனர் மற்றவர்கள்...

அவர்களின் நிலையை படம்பிடித்த ரக்ஷா தன் போனில் அப்படத்தை நியாபகமாக சேமித்துக்கொண்டாள்....அதுவே நாளை இவர்களின் கேள்விக்கு பதில் என்று தெரியாமல்...

தான்யாவை கைதாங்கலாக அழைத்துச்சென்று அவள் படுக்கையில் படுக்கவைத்து மெதுவாக வெளியேறினான் ரவி....அற்க்குள் அடுத்த அறையில் வீரை படுக்க வைத்துவிட்டு வந்தான் ரனீஷ்....காலை ஆறு மணி ஆகியிருக்க...நாழ்வருக்கும் காஃபியுடன் வந்தாள் ரக்ஷா... ஹாஸ்பிட்டலிற்கு போன் செய்த ரனீஷ்...

எங்களாள கொஞ்ச நாள் ஹாஸ்பிட்டல் வர முடியாது....நீங்க பாத்துக்கங்க...பேஷன்ட்ட வீட்டுக்கே வர சொல்லி ஊர்ல அனௌன்ஸ் பன்னீருங்க...இம்பார்ட்டன்ட் கேஸா இருந்தா....Contact me immediately என்று உத்தரவுவிட்டுவிட்டு சோபாவில் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தான்....

ரவி : ஏன்டா இப்டி மூச்ச இழுத்து விட்ர???

ரனீஷ் : வந்து நாழு நாள் தான் ஆகுது...அதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை??? முடியல டா...

மற்றவர்களும் அதை அமோதிப்பதாய் தலை ஆட்டினர்...

வீனா : என்ன டா பன்றது??? விதி நடந்துதான ஆகனும்....

ரக்ஷா : ஆனா ஏன் மச்சி நமக்கு நடக்குது??? யாரந்த பேய்??? ஏன் அவ நம்மல தொரத்துரா???

ரவி : தெரியல டி...யார்ட்ட கேட்டா தெரியும்னு தெரியல...ஒரே கொழப்பமா இருக்கு....

வீனா: அந்த தாத்தா டா..

ரனீஷ் : எந்த தாத்தா வ டி சொல்ற???

வீனா : அதான்டா நேத்து அந்த லைன்ஸ் லாம் சொன்னாரே...

ரக்ஷா : கரக்ட்...

ரவி: ஆனா அவர எப்டி கண்டு புடிக்கிறது??? அவரு யாருன்னுக்கூட நமக்கு தெரியாதே...

ரனீஷ் : ம்ம்ம்ம்ம் என யோசனையில் அனைவரும் ஆழ்ந்தனர்..

ரக்ஷா : ஐடியா...நா அவர வரயிறேன்..அத வச்சி நாம தேடலாம்...

வீனா : Good idea டி.... உனக்கு அவரு முகம் நல்லா நியாபகம் இருக்குள்ள...இரு நா பேப்பர் பென்ஸில் எடுத்துட்டு வரேன்...

என ரூமிலிருந்து எடுத்து வந்து கொடுத்தாள்...அறை மணிநேரம் களித்து....

ரக்ஷா : Guys....

ரனீஷ் : என்ன டி வரஞ்சிட்டியா???

ரக்ஷா : கம் ஹியர்...என்று மூவரையும் அழைத்தாள்...வந்து பார்த்தவர்கள் சூப்பர் என்று பாராட்டினர்...
அச்சு அசல் அந்த முதியவரை வரைந்திருந்தாள் ரக்ஷா....

ரனீஷ் : நானும் ரவியும் அவர தேடிப்போறோம்...

ரக்ஷா : வேண்டா...வீட்ல ஒருத்தனாவது இருங்க டா...பொண்ணுங்க எங்கள மட்டும் தனியா விட்டுட்டு போறீங்க???

ரவி : அதா வீர் இருக்கானே டி...

வீனா : அவன் தா தூங்குரானே...ஆல்ரெடி அவன் டையர்டா இருக்கான்னு தான் நேத்து அவன் குடிச்ச பால்ல தூக்க மருந்த அட் பன்னேன்...ஆனா அதையும் தான்டி எலுந்து வந்துட்டான்..( என்று தன்னை அறியாமல் உளரிவிட்டாள்.....)

மூவரும் : என்னது Sleeping peels ஆ???

வீனா : ஓஓ ஒலரீட்டனா??? ஹிஹி அவன் கலைப்பா இருந்தான்னு குடுத்தேன் மச்சீஸ்...

ரனீஷ் : சரி சரி...நானும் ரக்ஷாவும் போறோம்...நீயும் ரவியும் அவங்க இரண்டு பேரையும் பாத்துக்கங்க...நீங்களும் பத்திரமா இருங்க...

இருவரும் : ம்ம்ம் சரிடா..

வீனா டீவி ரிமோட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்...ரவி குளிக்க சென்றான்...ஊருக்குள் சென்ற ரனீஷும் ரக்ஷாவும் ஊர் முழுவதும் அம்முதியவரைத் தேடி அலைந்தனர்...

ரக்ஷா : டேய் என்னடா இப்டி இருக்க?? எனக்கு கால் வலிக்கிது டா... 1 மணி நேரமா சுத்தீட்டு தான இருக்கோம்...கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உக்காந்து தொலையேன்...

ரனீஷ் : அச்சோ மை குட்டி சாத்தானுக்கு கால் வலிக்கிதா??? சரி அதோ அந்த கடைல உக்காரலாம் வா...
கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி இருவரும் குடித்தனர்...மீண்டும் தொடங்கியது அவர்களின் பாதையாத்திரை....

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வீரின் கணவில்...

முழுதும் இருள் கவ்விய இடம்...எவ்வித சத்தமும் இல்லை...அங்கு யாரும் இல்லை...திடீரென அவன் முன் ஒரு பெண் தன் கூந்தலை இரண்டு பக்கமும் கழுத்தின் பக்கம் தொங்கவிட்டவாரு திரும்பி நின்றிருந்தாள்... அவள் கைகளளெள்ளாம் இரத்தமாய் இருந்தது...சில இடங்களிள் கருகிய தோல் தொங்கிக்கொண்டிருந்தது... ஒரு பக்கம் மண் ஒட்டியிருந்தது... யாரிவள்??? இவளுக்கு ஏன் இந்த நிலமை???
என கேள்விகள் எழுந்தது ... அப்பெண் விசும்பத்தொடங்கினாள்...

அப்பெண் : வீரா அண்ணா....
அவளின் உடைந்த குரலே நான் உன் தங்கை ஒவீ என கூறியது...திடிக்கிட்டு முன்னேரினான்...

அப்பெண் : அங்கயே நில்லு ண்ணா...என்னால உன்ன பாக்க முடியாது...நீ என்ன இப்டி பாத்தா தாங்க மாட்ட...அவளும் தான்..ஆனா அவ எனக்கு துரோகம் செஞ்சிட்டா அண்ணா...

வீர் : இல்ல ஒவீ ....நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க...ரொவீ எந்த தப்பும் பன்னல டா...அவ நடந்த எல்லாத்தையும் மறந்துட்டா டா...

அப்பெண் : பாத்தியா??? இப்போக்கூட நீ அவளுக்காக தான் ஏன்ட்ட பேசுரல்ல??? அன்னைக்கு நீ வந்துர்க்கலாமே அண்ணா...நீ எனக்கு ஒன்னு ஆக விற்றுக்க மாட்டள்ள???

வீர் : உனக்கென்ன ஒவீ ஆச்சு???

எனக்கென்ன ஆச்சுன்னு நீயே பாரு...என திடீரென திரும்பினாள்...அப்பெண்ணிண் கூந்தல் பாதி எறிந்து போயிருந்தது...நெற்றியெல்லாம் கிலித்து இரத்தம் வலிந்து காய்ந்திருந்தது... கண்கள் இரண்டும் இரத்த சிவப்பை தத்தெடுத்திருந்தது....

வீர் : நீ ஒவீ இல்ல...அந்த உருவம்.... எங்கல கொல்ல பாக்குர அந்த பேய்...என் தங்கச்சிய வச்சே என்கிட்ட விளையாட பாக்குரியா????

அப்பெண் : நீயும் அவக்கூட சேந்துட்டள்ள...உன்னையும் விடமாட்டேன்...உங்க ஆறு பேரையும் விடமாட்டேன்...என பெருங்குரலெடுத்து அலரி தன் எறிந்த கூந்தலைக்கொண்டு வீரின் கழுத்தை நெரித்தது...ஏதோ ஒன்று அப்பெண்ணை தடுக்கவும் அலரியவாரே மறைந்தது...வீனாவின் தூக்க மாத்திரையின் வீரியத்தாள் வீரால் கண்களை திறக்க முடியவில்லை...எப்படியோ கண் முளித்தவனுக்கு அனைத்தும் மங்களாக இருந்தது...தூக்கம் சொக்கியது...தடவி தடவி தண்ணீரை எடுத்து முகத்தில் திரும்ப திரும்ப அடித்தான்...

வீரியம் குரைந்திருந்தது...எங்கிரிக்கிறோம் என சுற்றி பார்க்க...ரூமில் இருப்பதை உணர்ந்து வெளியே வந்தான்...

குளித்து முடித்து வந்த ரவி வீனா சோபாவில் அமர்ந்தவாரே உறங்குவதைக்கண்டு புன்னகைத்துக்கொண்டே அவள் அருகிலமர்ந்தான்...அவள் உறக்கம் கலைலாதவாறு தன் மடியில் அவளின் தலையை கிடத்திக்கொண்டான்.... அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் ரனீஷும் ரக்ஷாவும் சென்று நேரமாகியும் வராததால் குழப்பமடைந்து...அவர்களுக்காக காத்திருந்தவன் தன்னையும் அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தான்...

வீர் வெளியே வரும் பொழுது மணி 9:30 தாண்டி இருந்தது...ரவியும் வீனாவும் உறங்குவதைப்பார்த்து மற்றவர்கள் எங்கே என்று சற்று பதட்டத்துடன் தேடினான்...அடுத்த அறையிலே தான்யா தூங்குவதைக்கண்டு ரனீஷும் ரக்ஷாவும் ஒரே இடத்தில் தான் இருப்பார்களென்று பெருமூச்சு விட்டான்....

தன்னவளின் அருகிலமர்ந்து அவளையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்....அரைமணி நேரம் களித்து உறக்கம் கலைந்து எழுந்தால் தான்யா...வீரைப்பார்த்து புன்னகைத்தவள்..

தான்யா : இங்க என்னடா பன்ற???

வீர் : சும்மா தான் டி...நீ தூங்குரத பாத்துட்டு இருந்தேன்...
அவன் கன்னங்களிள் கண்ணீர் கோடாய் பதிந்திருந்ததைக் கண்டு துடைத்து விட கையை உயர்த்தினாள்...சுலீர் என வலி எடுக்க...தொப்பென கையை போட்டுவிட்டால்...

வீர் : என்ன ஆச்சு டி? ?? கை ரொம்ப வலிக்கிதா???

தான்யா: ரொம்பலாம் இல்லை டா...லைட்டா தான்...

வீர் : சரி எழுந்து வா..மாத்திரை போடனும்...பாலாவது குடி..என அவளை வெளியே அழைத்துவந்தான்...

சற்று முன்னரே தூக்கம் கலைந்து எழுந்த வீனா தான் ரவியின் மடியில் படுத்திருக்கிறோம் என உணர்ந்து புன்னகையை சிந்திவிட்டு...அமர்ந்தவாரே உறங்கிக்கொண்டிருந்த ரவியை சோபாவில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு காலை உணவு தயார் செய்ய சமயலரை பக்கம் சென்றாள்...

வீரும் தான்யாவும் வருவதைக்கண்டு அவர்களுக்கான உணவையும் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு இருவர் அருகிலும் சென்றால்...

வீனா : டேய் வீர்...கால்ல தான் அடிப்பற்றுக்குள்ள??? ஏன்டா அங்கையும் இங்கையும் போர?? ஒருஇடத்துல உக்காரு...என்று அதட்டியவள்...அவனிடம் ஒரு தட்டை குடுத்துவிட்டு தான்யாவிற்கு ஊட்டிவிட்டாள்...

அவனும் சரி டி போகமாட்டேன் என கூறிவிட்டு உண்ண ஆரம்பித்தான்...ரவி உறக்கத்திலே புரண்டு சோபாவிலிருந்து கீழ் விழுந்தான்...மூவரும் என்ன சத்தம் என பதட்டத்துடன் பாக்க...ரவி கீழே விழுந்தும் எழுந்துக்கொள்ளாமல் உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு...அட கும்பகர்ணா...என நகைத்து சிரித்துக்கொண்டிருந்தனர்...

முதியவரை தேடி ஊர் சுற்றிக்கொண்டிருந்த ரனீஷ் ரக்ஷா...சற்று நிழலில் நிற்க்களாம் என நின்றுகொண்டிருந்த போது

ரக்ஷா : ஐயா ஐயா கொஞ்சம் நில்லுங்க...இந்த தாத்தாவ உங்களுக்கு தெரியுமா???

கத்திக்கொண்டே ஓடியவல் அவர் முன் நின்று கேட்க... யாரிடம் கேட்கிறாள் என திரும்பி பார்த்த ரனீஷுக்கு அப்பொழுதே தெரிந்தது...அவர் நம் நாயகன்கள் மூவரும் மதிவாலயத்திற்கு வழி தெரியாமல் அலைந்த போது வேற்றுகிரகவாசி லுக்கு விட்டு சென்றவர்... (வீடு :9 இல் வருபவர்)

அவள் காட்டிய படத்திலிருந்தவரைப் பார்த்து இவர ஏன்மா கேக்குர?? என இவர் அவளிடம் எதிர் கேள்வி கேட்க....

ரக்ஷா: நேத்து இவர் எங்க கிட்ட சில விஷயம் சொன்னாரு... என்னன்னு கேக்குரதுக்குள்ள போய்ட்டாரு...அதான் அவரப்போய் பாக்களாம்னு தான்....

அவளின் பதிலில் அவளையும் அவள் அருகில் நின்றிருந்த ரனீஷையும் அதே லுக்கை( ஏலியன் லுக்)  விட்டுவிட்டு முன் சென்றார்...

எரிச்சலுற்ற ரனீஷ்..அவர் முன் சென்று...

ரனீஷ் : ஹலோ எக்ஸ்க்யூஸ்மீ...உங்கள்ட்ட அவர தெரியுமான்னு தான அவ கேட்டா?? நீங்க அதுக்கு தெரியும் தெரியாதுன்னு ஒரு பதில் சொல்லாம ஏன் கேக்குறீங்க ன்னு எங்கள்ட் திரும்ப கேக்குரீங்க...பதில் சொன்னா அன்னைக்கு விட்ட லுக்க திரும்ப விட்டுட்டு போறீங்க??? என பொரிந்து தள்ளினான்....

அவர் : தம்பி செத்துபோனவர போய் எங்கன்னு கேட்டா நா என்ன யா சொல்லுவேன்?? ஊருக்கே தெரியும் அவர் செத்துட்டாருன்னு...நீங்க அவர நேத்து பாத்தீங்களாக்கும்...என்று நொடித்துக்கொண்டார்....

ரக்ஷா : என்னது செத்து போய்ட்டாரா??? எப்போ???

அவர் : அந்த தாத்தா தான் நம்ம ஊர் தலைவரோட அப்பா...7 வர்ஷத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு அலரல கேட்டு அதிர்ச்சியில செத்துட்டதா சொன்னாங்க பா...

ரனீஷ் : அலரலா???

அவர் : ஆமா தம்பி.. அவரு பேசுரது அவரு குடும்பத்துக்கு மட்டும்தா புரியும்...ஏதோ புதிர் போடுர மாரியே பேசுவார்...என கூறிக்கொண்டே சென்றவரை ரனீஷ் நிறுத்தினான்...

ரனீஷ் : இன்னைக்கு சரி...நாழ் நாள் முன்னாடி தா பெரிய வீட்டுக்கு வழி கேட்டப்போ ஏன் எங்கள ஒரு மாரி பாத்துட்டு போனீங்க???

அவர் : தம்பி...நா கிராமத்தான்...நா படிக்கும் போதுலாம் தமிழ தவிர வேற எதுவும் சொல்லித்தரல....

ரக்ஷா : அத ஏன் இப்போ தேவ இல்லாம சொல்லுரீங்க..???

அவர் : ஏன்மா எனக்கு தமிழத்தவிர வேற எந்த மொழியும் தெரியாதுன்னு சொல்றேன்...இந்த தம்பி ஏதோ தெரியாத மோழில கேட்டா எனக்கு எப்டிமா புரியும் என்று சீரினார்...

அவரின் பதிலில் இருவரும் உறைந்துவிட்டனர்....

தொடரும்....

Hiii hearts....how was the ud??? Share ur comments..😊😊

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro