சந்திப்பு - 8
தன்னிடம் தனிமையில் பேசுவதற்காக தன்னை மாடிக்கு அழைத்து விட்டு, தன் பதிலை கூட எதிர்பார்க்காமல் படியில் ஏறுபவனின் முதுகை இரு நொடிக்கு முறைத்து பார்த்த வந்தனா விருட்டென தன்னறைக்குள் புகுந்து கொள்ள, கவினின் குடும்பத்தை சங்கடமாக பார்த்தார் லட்சுமிதாஸ்.
"நா போய் பேசுறேங்க...", என்றுவிட்டு மகளை தொடர்ந்து அவரும் அறைக்குள் சென்று விட... அவர் சென்றதும் கவினின் தந்தை தர்மராஜன், "செல்வி... இந்த பொண்ணு தா கண்டிப்பா வேணுமா??... சுத்தமா மரியாத தெரியாத பொண்ணா இருக்கா... எதுக்காக உனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கு...??", என்றதற்கு செல்வியிடம் எந்த பதிலும் வார்த்தையாக வரவில்லை... வந்தனாவின் அறையை நோக்கிய அவரின் பிரியமான பார்வை தான் பதிலாக வந்தது.
அறைக்குள் சென்ற லட்சுமிதாஸ் ஆர்பாட்டமில்லாத முகத்துடன் வந்தனாவின் அருகில் சென்றார்.
"ப்பா... யாரு இவங்க.. இப்போ எதுக்கு இவங்கள வர சொன்னீங்க... நா தா இப்போ கல்யாணம் வேனாம்ன்னு சொன்னேன்ல...", அவள் முகம் இன்னுமும் சிடுசிடுவென்றே இருக்க.. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பீரோவில் இருந்து அவள் அன்னையின் ஒரு நல்ல புடவையை எடுத்த லட்சுமிதாஸ், அதை கட்டிலில் வைத்துவிட்டு..., "வேணாம் தானே... அத நீயே போய் சொல்லு... ஆனா... காரணம் கேப்பாங்க... நல்ல காரணமா ஒன்னு யோசிச்சுட்டு போ.. எனக்கு அந்த குடும்பத்தையும் அந்த பையனையும் வேணாம்ன்னு சொல்ல எந்த காரணமும் தெரியல", மகளிடம் பேசிக்கொண்டே மீண்டும் பீரோவின் அருகில் சென்றவர் அதனுள் இருந்து ஒரு சிறு டப்பாவை எடுத்து அதில்லிருந்த நீளமான செயினை எடுத்து புடவையின் மீது வைத்தார்.
"உனக்கு வேணும்னா கல்யாணம் நடக்கும்... வேணாம்னா நடக்காது... ஆனா வேணாம்ன்னு சொல்லுறதுக்கு நீயே தா இப்போ மாடிக்கு போயாகனும்.. அதுவும் சரியான காரணத்தோட...", கூறிவிட்டு நகர்ந்தவர் கதவை திறந்து வெளியேறும் முன் பின்னால் திரும்பி, "போகும்போது இதெல்லாம் போட்டுட்டு போ", என கட்டிலில் எடுத்து வைத்திருந்த புடவை நகையை சுட்டி காட்டி கூறிவிட்டு அவர் வெளியேறிவிட... எப்படியும் தன்னுடைய மறுப்பை தானே நேரில் சென்று தான் கூறியாக வேண்டும் என நினைத்து கொண்டவள் அப்படியே வெளியேறினாள். ஆனால் அவள் குணம் அறிந்த அவளின் தந்தை அறைக்கு வெளியே தான் நின்றிருந்தார்.
"போய் பொடவ நகையெல்லாம் போட்டுட்டு வா", ஒரு அழுத்த பார்வையில் அவர் வந்தனாவை பார்க்க... இப்போது அவருடன் சண்டையிடும் சூழலில் இல்லாத காரணத்தால் வந்தனாவும் அவர் கூறியது போலவே கிளம்பி மாடியேறி வந்து விட்டாள்.
இப்போது கவின் முன் அவள்... அவளின் முகத்தில் அப்படி எதை கண்டானோ.. தானாகவே அவன் கண்கள் சிரிக்க தொடங்கி விட்டது.. அந்த சிரிப்பை கண்டிருந்தால் எவராயினும் மயங்கிடுவர் போலும். ஆனால் பாரக்க வேண்டிய அவளோ கைகட்டி எங்கோ ஒரு திசையில் அல்லாவா நோக்கி கொண்டிருக்கிறாள்.
★★★
மாலை வெயில் மேற்கில் பயணித்து கொண்டிருந்த நேரம் தனில் தன்னறையில் பதட்டத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தான் மனோஜ். அரைகால் பேன்ட்டுடன் சாம்பல் நிற தலையணையை மடியில் வைத்து கொண்டு கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன், கையில் வைத்திருக்கும் தன் மொபைலை முட்டுவாயில் இடித்து கொண்டே நிதானத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான்.
"சுபா... ஏன்டி இன்னும் ஒரு ஃபோன் கூட பண்ணல... எந்த பிரச்சனையும் இல்ல தானே...", அவன் மனம் ஓரிடத்தில் நில்லாமல் அக்காவையே சுற்றி சுற்றி வந்தது.
காலையில் பேருந்தில் ஏற்றி விடும்போது பேசியது தான்... அதன்பின் ஒரு தகவலும் அவளிடம் இருந்து வரவே இல்லை. பயணத்தின் போது மொபைலில் சிக்னல் இல்லாமல் இருக்கலாம் என பொறுமை காத்திருந்தவன் நேரம் ஆக ஆக பதட்டத்திலேயே அறையை சுழன்று கொண்டு வர... சரி அவள் கோவை சென்று இறங்கும் நேரம் வரும் வரை காத்திருக்கலாம் என பொறுமை காத்திருந்தான்.
இப்பொழுது அந்த நேரம் கடந்தும் இன்னும் அவளிடம் இருந்து அழைப்பு வராததில் பயந்து போய் அவனே அழைத்து விடலாம் என முடிவு செய்து சுபித்ராவின் புதிய எண்ணுக்கு அழைப்பு விடுத்து மொபைலை தன் செவியில் வைத்தான்.
அதுவோ, நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளரை தற்சமயம் தொடர்புகொள்ள இயலவில்லை... சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் என்றுவிட்டு அடங்கி போனது.
என்ன செய்வதென புரியாது குழம்பி தவித்தவனுக்கு ஒரு நொடியில் பல சிந்தனைகள் எண்ணத்தை ஆக்கிரமித்திருக்க, "தான் அவளை தனியாக இவ்வளவு தூரம் அனுப்பி எதேனும் தவறு செய்து விட்டோமோ?", என்று கூட எண்ணங்கள் துளிர்வி்ட தொடங்கி விட்டது.
மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்தும் எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் போக... அவன் தவிப்பின் உச்சத்தில் இருந்த அதே நேரம் விசோழனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
பரபரப்புடன் மொபைலை ஏற்று காதில் வைக்க... அதில் ஒலித்த குரலை செவிமடுத்த பின்னரே அவனுக்கு முழுமையாக மூச்சு வந்தது.. அதோடு சேர்த்து காதில் இருந்து இரத்தமும் வந்து விடும் போலும் என என்னும் அளவிற்கு அப்புறம் காட்டு கத்து கத்தி கொண்டிருந்தாள் சுபித்ரா.
★★★
"வந்தனா..." கவினின் மென்மையான குரல் அவனுக்கு முன் நிற்ப்பவளின் செவியை சென்றடைந்ததில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கவினை நிமிர்ந்து நோக்கினாள் வந்தனா.
"உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லையா?...", இப்படி ஒரு கேள்வியை கேட்பான் என எதிர்பாராதவள் பதில் சொல்ல சில நொடிகள் தடுமாறினாலும் இதையே சரியான சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு ஆம் என தலையசைத்து விட்டாள்.
அதை கண்டு லேசாக புன்முறுவலித்து கொண்ட கவின், "உங்க ஃபேஸ பாத்தாலே தெரியுதுங்க உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு.. ஆனா எனக்கு உங்கள பிடிச்சிருக்கே...", என அமைதியான குரலிலேயே கூறி அவள் விழி நோக்க..., "அப்பறம் எதுக்கு டா அப்டி ஒரு கேள்வி கேட்ட?", என்னும் விதத்திற்கு அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு நின்றாள் வந்தனா.
"பாத்த ஒடனே எப்டி புடிச்சுதுன்னு பிளீஸ் கேக்காதீங்க... எனக்கு உங்கள புடிச்சிருக்கா இல்லையான்னு கூட இன்னும் எனக்கு தெரியல.. அது தா உண்ம... ஆனா எனக்கு உங்கள புடிச்சுருக்குன்னு நா சொல்லுறதுக்கு காரணம் நீங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு... நானும் அப்டி தா... தனியாவே இருப்பேன்... மனசுல உள்ளத ஷேர் பண்ணிக்க யாரும் இருக்க மாட்டாங்க... ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் அவங்க ஸ்கூல்.. அப்பரம் காலேஜ்.. இப்போ ஆபிஸோட நின்னுப்பாங்க... அதா.. உங்கள பத்தி அம்மா சொல்லும் போது உங்களுக்கும் எனக்கு இருக்குற மாதிரியே அதே ஃபீலிங்ஸ் இருக்கும்ன்னு தோணுச்சு... நெனைக்க நெனைக்க எல்லாமே ஒடனேயே கெடச்சுருது... படிச்சு முடிச்சதும் கேம்பஸ் இன்டர்வியூலயே ஒரு நல்ல வேல கெடச்சுது.. கை நெறைய சம்பளம்.. இருந்தும் என்னங்க செய்ய... கெடைக்குற சந்தோஷத்த நா மட்டுமே அனுபவிக்கனும்னா எவ்ளோ தா நானும் தாங்குவேன்... அதுல கொஞ்சம் யாருகிட்டாயாச்சும் குடுக்கலாம்ன்னு பாத்தா .. அப்பாக்கு வருஷத்துக்கு அஞ்சாறு நாள் தா வீட்டுக்கு வர நேரம் கெடைக்குது.. அந்த நேரமும் எதாவது ஃபோன் கால்ல பிஸி... இல்லனா ரெஸ்ட்.. அம்மாக்கு ஸ்கூல் புள்ளைங்க தா ஃபர்ஸ்ட்.. ஹ்ம்.. நா பொறந்ததுல இருந்தே ரெண்டாவது தா. ஆனா அதுல எனக்கு பொறாமலாம் இல்லங்க... அவங்க வீட்டுக்கு வந்துட்டாலும் ஸ்கூல் ஸ்கூல்... ஸ்கூல்... டெஸ்ட் நோட்.. எக்ஸாம் பேப்பர்... மார்க் லிஸ்ட்.. நேம் லிஸ்ட்.. இதெல்லாம் முடிக்கவே ரொம்ப டைம் ஆகும்...", பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடிக்கே மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன் உணர்வுகளை கூறி ஏக்க பெருமூச்சு விட்ட கவின், வந்தனாவை நிமிர்ந்து நோக்கினான். அவளின் பார்வை அவன் மீதே தான் நிலைகுத்தி நின்றது.
"ஹ்ம்ம்.. ரொம்ப பேசிட்டேன்லங்க??..", அவனது இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று அடித்தபடி புன்னகைக்கும் பார்வையிலேயே அவளிடம் மன்னிப்பு வேண்டி நிற்க.."ஹான்???..", ஏதோ யோசனையில் இருந்து விடுபட்டவள், "இல்லங்க... ..... ..... உங்களுக்கு தோனுனத தானே சொன்னீங்க... பரவால்ல.", அவளின் உணர்வுகளை அப்படியே கூறியதாலோ இல்லை அவன் மென்மையான அணுகுமுறையாலோ... வந்தனாவின் பதிலிலும் குரலிலும் கவினின் அதே மென்மை வெளிபட்டது.
"ம்ம்.. ஆமாங்க... இப்டி நா மனசுவிட்டு பேசுறதுக்கு யாரும் இல்ல... அதனால தா எனக்கு என் கூடவே இருக்குற ஒரு பார்ட்னர்... ஒரு சப்போட்டர்... ஒரு ப்ரெண்ட் தேவ படுது...", கூறி முடித்து முன் நிற்பவளை நோக்க... "அவ்வளவு தானா? என்னும் கேள்வி அவள் விழி விளிம்பில் நிற்பதை கண்டு கொண்டான்.
அதை அவள் வார்த்தைகளில் உதிர்க்கும் முன்பே முந்தி கொண்டவன், "அது மட்டும் இல்லங்க... மத்தவங்கள மாதிரியே... கல்யாணம்.. கொழந்த.. இந்த ஆசையும் இருக்கு தான்ன்ன்... ஆனா எல்லாத்தையும் விட எனக்கு அதிகமா தேவ.. ஒரு துணை... சந்தோஷத்துல கூட சேந்து சந்தோஷ பட.. கஷ்டத்துல கட்டி புடிச்சு ஆறுதல் சொல்ல... அந்த எடத்துல நீங்க இருப்பீங்களா வந்தானா?", முதலில் வார்த்தைகளை ஜவ்வாக இழுத்து கூறியவன் இறுதியில் தன் உணர்வை உண்மையாக கூற.., இவ்வளவு நேரமும் அவன் வார்த்தை ஜாலத்தில் விழுந்து கிடந்த வந்தனா, நீண்ட பெருமூச்சு விட்டபடி தன்னை மீட்டு கொண்டாள்.
"ஏங்க.. எல்லாம் உண்மையா தா சொல்லுறீங்க... ஆனா உங்க மனச ஷேர் பண்ணிக்க கண்டிப்பா வந்தனாவே தா வேணுமா??"
"ஹஹா... சரி தாங்க... வந்தனா இல்லைனா சாதனான்னு போகலாம் தா.. ஆனா நீங்க என் அம்மா செலக்ஷன் ஆச்சே.. என் அம்மா மனச அவ்ளோ சீக்கிரம் யாராலையும் ஜெயிக்க முடியாது... ஆனா அம்மாவே நீங்க மருமகளா வேணும்ன்னு என்கிட்டயும் அப்பாகிட்டயும்.. ஏன்.. நீங்க வேணாம்ன்னு சொன்னதுக்கு அப்பரமும் உங்க அப்பா கிட்ட திரும்ப திரும்ப உங்க கிட்ட சம்மதம் வாங்க சொல்லி கேட்டுட்டே இருந்தாங்க.. அவங்க மனசையே ஜெயிச்சுட்டீங்கன்னா நா, அப்பாலாம் ஒரு விஷயமே இல்லங்க..."
"ஏன் அப்டி??.."
"ம்ம்..? எது எப்டி?"
"இல்ல.... உங்க அம்மாக்கு ஏன் என்ன புடிச்சுது?", இந்த விஷயத்தில் வந்தனாவிற்க்கு எந்த ஒரு யோசனையும் கிடைக்கவில்லை.
"ஏன்னு கேட்டா??...... ம்ச்... அம்மா அத சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க... ஒரு வேல நீங்க கேட்டா சொல்ல வாய்ப்பிருக்கு.."
"ஓ.. ..... ....", என்றவள் ஆழந்த யோசனைக்குள் மூழ்கிப்போய் விட.. சில நிமிடங்கள் வரையில் அங்கு மெளனமே நிலவியது.
"சரிங்க வந்தனா.. நா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்... இனி முடிவு உங்களோடது தா.. எப்டியும் ஒரு நாள் கல்யாணம் பண்ண தா போறீங்க.. வேற வீட்டுக்கு போக தா போறீங்க.. அது எங்க வீடா இருக்கட்டுமே... யாரும் ஸ்டிரிக்ட் இல்ல.. உங்க வீடு மாதிரி உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம்... நெனச்ச வரையும் படிக்கலாம்.. உங்க ஃபுல் ஃப்ரீடம்க்கு நா கேரண்ட்டிங்க... நல்லா யோசிச்சுட்டு கீழ வாங்க..", நீண்ட மௌனத்தை களைத்த கவின் அவளை நோக்கி சினேகமான புன்னகையை வீசிவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கினான்.
✨ சந்திப்பின் காலம் வரும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro