Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 5

பன்னிரெண்டாம் எண் அச்சடித்த அந்த நகர் பேருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை நோக்கி உருண்டு கொண்டிருந்தது... சரியாக முன்பக்க  வாசலுக்கு நேரெதிரே மூவர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர் சுபித்ராவும் வந்தனாவும். இருவருக்கும் இடையில் ஒரு ஆள் அமரும் இடைவெளி.

வந்தனா ஜன்னல் வழியே வெறுமையான பார்வையை வீசி கொண்டிருக்க... சுபித்ரா அதே போல் வாசல் வழியாக சாலையை வெறித்து கொண்டிருந்தாள்... அவரவர் மூளையில் அவரவரின் குழப்பங்கள்.

பேருந்தில் ஏறும்முன், "பஸ் ஸ்டான்ட்க்கு எந்த பஸ் போகும்??", என சுபித்ரா கேட்டது ஒரே ஒரு கேள்வி தான். "நா போற பஸ் போகும்.. என் கூட வாங்க...", வந்தனா கூறியதும் ஒரே ஒரு பதில் தான்... அதன் பின்னர் மௌனமே நிலைக்க.. பேருந்து வந்ததும் வந்தனாவை தொடர்ந்தே ஏறிய சுபித்ரா சீட் கிடைத்ததால் அவளருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

சிலபல நிறுத்தங்களில் நின்ற பேருந்தும் மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட... அது தான் தன் நிறுத்தம் என்பது கூட தெரியாமல் அருகில் இருந்த கம்பியில் தலைசாய்த்து கொண்டு, "எப்படா பஸ்ஸ எடுப்பாங்க?", என கண்டக்டரின் விசிலையும் வாயையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள் சுபித்ரா. அந்த கண்டெக்டரும் பாவம் மகளிருக்கு இலவசம் என பேருந்து வந்ததில் இருந்து யார்யார் எந்தெந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது தெரியாமல் அமைதியாகவே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.

என்றும் போல் இன்றும் ஜன்னலில் பார்வையை பதித்திருந்தவளின் மூளை, தான் எதையோ மறப்பதை வந்தனாவிற்கு உணர்த்த, அப்போதே அருகில் இருப்பவள் இறங்க வேண்டிய இடம் இது தான் என்பது நினைவு வந்து படக்கென அவள் புறம் திரும்புவதற்கும் பேருந்தை எடுப்பதர்க்கும் சரியாக இருந்தது.

"அக்கா அக்கா அக்கா... இது தான் க்கா பஸ் ஸ்டான்ட் ஸ்டாப்பிங்... எறங்குங்க...", வந்தனா படபடத்ததில் தான் வெளியே சுற்றிலும் பேருந்துகள் வரிசை கட்டி நிற்பதை உணர்ந்து, "சீக்கிரமா சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் மா..", என தலையசைத்து விட்டு, நகரும் பேருந்தில் இருந்து ஒரே ஜம்ப்படித்து இறங்கினாள் சுபித்ரா.

அதை கண்ட கண்டெக்டர், அவள் சென்ற வேகத்தில் கால் தடுக்கி விழுந்து விட்டாளோ என பதறியடித்து வாயிலுக்கு வர... அவளோ முதல் முறையாக நகரும் பேருந்தில் இருந்து குதித்த அனுபவத்தில் அந்த பேருந்தையே தான் பார்த்திருந்தாள்.

அவள் விழுந்திருந்தால் கூட தூக்கிவிட  நான்கு பேர் வந்திருப்பார்கள் போலும்... "ஸ்டெடியா நின்னது ஒரு குத்தமா?", என அவளை சிந்திக்க வைக்கும் விதத்தில் "என்ன மா புள்ள நீ... இவ்ளோ நேரம் பஸ் நிக்கைல என்ன தூங்கிட்டு இருந்தியா மா??...", நகரும் பேருந்தில் இருந்து கண்டெக்டர் ஒரு புறம் கரித்து கொட்ட...., "இந்த காலத்து புள்ளைகளுக்கு எல்லாமே வேடிக்கையா போச்சு", அருகில் சுண்டல் விற்று கொண்டிருந்த தள்ளுவண்டி காரர் அவருக்கு ஜால்ரா போட..., "பாத்து எறங்க கூடாதா மா... கீழ விழுந்தா என்ன ஆவுறது...", அவ்வழியாக சென்ற இரு பெண்மணிகள் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க சுபித்ராவிற்கு தான் போதும் போதும் என்றிருந்தது... ஒருவழியாக அனைவரையும் சமாளித்து வேறு புறமாக வந்து விட்டவள் சுற்றி சுற்றி மனோவை தான் தேடினாள்.

"எனக்கு முன்னாடியே கெளம்பீட்டானே.... எங்க ஆளையே காணோம்", தம்பி தேடலில் ஈடுபட்டிருந்தவள் தலையிலேயே ஒரு அடியை போட்டபடி அவள் பின்பாக வந்து நின்றான் மனோஜ்.

"ஏன்டி லூசு... உன்ன தனியா பஸ்ல வர சொன்னா அந்த பொண்ணு கிட்ட எந்த பஸ் வரும்ன்னு கேட்டு ஏறி வர..."

"ம்ம்?.. நீ தா கெலம்பீட்டியே??,. உனக்கு எப்டி தெரிஞ்சுது??"

"உன்ன தனியா விட்டுட்டு நா எங்க போக?.. அங்கேயே தா நின்னேன்... நீ வந்த பஸ் பின்னாடியே தா நானும் வந்தேன்... சரி, அந்த பொண்ணு இல்லனா எப்டி வந்துருப்ப நீ??", அக்காவை முறைத்து கொண்டே அவன் நிற்க..., "சிம்பில்... வாசல்லயே நிக்குற கண்டெக்டர் கிட்ட கேட்டுருப்பேன்", அசால்ட்டாக தோளை குலுக்கினாள் அவள்.

"அதானே பாத்தேன்... இப்போ பஸ் கூட்டமா இருந்து அவரு நடுவுல மாட்டிகிட்டு இருந்தா என்ன பண்ணுவ??"

"அம்ம்ம்ம்..!!??!!", அவள் தலையை சொரிய.. இவன் தலையில் அடித்து கொள்ள.., "பஸ்ல சைட்ல எழுதி இருக்குறத கொஞ்சமாச்சும் படிச்சு பாருங்க மிஸ் சகோதரி", அலுத்து கொண்டு கூறினான் மனோஜ்.

"ஓஹோ... அப்போ அந்த பஸ்ல எழுதி இருந்ததுலாம் ஸ்டாப்பிங்கா ஓகே ஓகே... இப்போ புரியுது.. இப்போ புரியுது"

"கொடும டா...", தலையில் அடித்து கொண்டவன், "ஹ்ம்ம்... என்னத்த புரியுதோ.. சரி இந்தா உன் கோயம்புத்தூர் டிக்கெட்... இதுக்கு மேல நீ தனியா தா போயாகனும் க்கா... இப்போ நீ போக வேண்டிய பஸ்ஸ சரியா கண்டு புடி பாப்போம்", ஒரு டிக்கெட்டை அவள் கையில் கொடுத்து விட்டு, தூக்கி வந்திருந்த அவளின் உடைமைகளில் ஒரு பையையும் அவள் கையில் கொடுக்க, அதை தோளில் மாட்டி கொண்டு அந்த டிக்கெட்டில் இருந்த எண்கள் முதற்கொண்டு அனைத்தையும் ஒரு முறை முழுவதுமாக பொறுமையுடன் பார்த்தாள்.

"இந்தா இருக்கு பஸ் நம்பர்... இப்போ இந்த நம்பர் போட்ட கோயம்புத்தூர் பஸ்ஸ கண்டு புடிக்கணும்... ரைட்டா??" தம்பியை நோக்கி கண்கள் மிளிர திரும்பினாள்.

"அட.. பரவால்லயே... இதெல்லாம் என் அக்கா தெரிஞ்சு வச்சுருக்கா...", அதிசயமாக அக்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "அது சரி தா சுபா... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ஒரு ஊருக்கும் பஸ் ஒரு ஒரு சைடுல நிக்கும்.. அது எந்த சைடுன்னு நீ கண்டு புடிக்கனும்... அங்க பாரு.. அது தா பஸ் ஸ்டான்ட் ப்ளூ பிரின்ட்", ஒரு பேனரை கைகாட்டி கூறினான். "அதுக்கு பக்கத்துல இருக்குறது பஸ் வர்ற ஷெட்யூல்... ஓகே வா?... இது எல்லா ஊரு பஸ் ஸ்டான்ட்லயும் இருக்கும்.. தெரிஞ்சு வச்சுக்கோ... அப்டி இல்லையா?.. இங்கஇருக்குற கடைகள்ல கேட்டா எல்லாத்தையும் சொல்லுவாங்க... ஓகே இப்போ நீ அதுல போய் தேடுறதுக்கு டைம் இல்ல... வா நானே கூட்டிட்டு போய்டுறேன்.. இனிமே நீயே தா தேடிக்கிரனும் ", குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல் அக்காவிற்கு அனைத்தையும் புரிய வைத்து அவளை கையோடு அழைத்து சென்றான் மனோஜ்.

இவ்வாறு தனிமையில் அவள் என்றுமே சென்றதில்லை... வெளியே என புறப்பட்டால் ஒன்று குடும்பத்தோடு இருக்கும்.. இல்லையென்றால் மனோவே அழைத்து சென்று அவனே அவளை பார்த்து கொள்வான்..
ஆனால் இவ்வாறு தனிமையில் பயணம் செய்து அதன் அனுபவத்தை பெற வேண்டும்.. அதில் வரும் இன்னல்களை தனியாக திடமாக எதிர்கொள்ள வேண்டும் என சுபித்ரா ஆசை கொண்டு அவனிடம் பல முறை தன்னை தனியாக விடும்படி கேட்டிருக்கிறாள்... இத்தனை நாள் அவளை தனிமையில் விட மறுத்தவன் இன்று அது அவசியம் என்பதை புரிந்து கொண்டான்.

பேருந்தில் அவளை ஏற்றி விட்டவன், "சுபா... ... .. ", சோகத்தை மறைத்த குரலில் அவளை அழைக்க.. அவன் கொடுத்த தண்ணீர் பாட்டிலை பைக்குள் தினித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனை நோக்கினாள்... அவள் கண்களிலும் பிரிவின் சாயல்  தெரிந்தது.

"ஃபீல் பண்ணுரியா??"

"ஹே... என்ன டா கேள்வி இது... திடீர்னு என்ன இங்க இழுத்துட்டு வந்து வேற ஊருக்கு போக சொல்லுற... அப்பாம்மா கிட்ட கூட சொல்லல பாத்தியா...", கண்ணில் கசிந்த துளியை மறைக்க ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.

அவள் அருகில் அமர்ந்த மனோஜ் அவள் கரத்தை பற்றி கொண்டு, "கோபமா??", என்றவனின் கண்ணிலும் கண்ணீர், வரவா??.. என்று தான் இருந்தது.

"டேய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டா மனோ.. என் தம்பி மேல எனக்கு நம்பிக்க இருக்கு... எனக்கு தேவையானத கேக்கமாலே பாத்து பாத்து செய்வான்.. இப்போ வருத்தம் மட்டும் தா.. என்ன அனுப்பி வைக்குறதுக்கு என்ன ஆக போரியோ??", சிறு நக்கலுடன் அவள் பேச்சை சற்று திசை மாற்றினாள்.

"ஹ்ம்ம்... அதெல்லாம் நாங்க சமாலிச்சுப்போம்... நீ இங்க எத பத்தியும் யோசிக்காத... ஜஸ்ட் ஆறு மாசம்.. நா சமாலிச்சுகுறேன்... சரியா... நீ கோயம்புத்தூர் பஸ் ஸ்டான்ட் போனதும் கால் பண்ணு", ஒரு புத்தம்புது மொபைலை அவளிடம் கொடுத்தான்.

"இது என்ன டா புது ஃபோன்??.. என் ஃபோன் தா எடுத்துட்டு வந்தியே... அப்பறம் இது எதுக்கு??"

"ம்ஹும்ம்... அதெல்லாம் உன் கிட்ட குடுக்க முடியாது... அப்பறம் நம்ம அம்மா நாளைக்கே கால் பண்ணி மகளேஏஏஏஏஏஏ திரும்பி வந்துருஊஊஊஊன்னு உன்ன பிரைன் வாஷ் பண்ணுவாங்க... நீயும்... இதோ நா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்னு அடுத்த நாளே வந்து நிப்ப... தேவையா??.. இப்போல இருந்து என் கான்டாக்ட் மட்டும் தா உன்ட்ட இருக்கனும் வேன்னா புதுசா கெடைக்குற ப்ரெண்ட்ஸ் நம்பர் வச்சுக்கோ... முடிஞ்சா எனக்கும் அனுப்பி வை...", இறுதியாக பல்லை காட்ட... அதற்கு அவனை போலியாக முறைத்தவள், "இருந்தாலும் தப்பில்லையா டா மனோ... அப்பறம் ஆறு மாசம் கழிச்சு நா திரும்ப வரைல நீ யாருன்னு தெரியாதுன்னு சொல்லி வெலக்கமாத்தாலையே அடிச்சா??", அவள் உணர்ச்சிவசபட்டு சோகமாக கூறி கொண்டிருக்க... , "அதுகென்ன... வாங்கிக்கோ... நீ வாங்காத அடியா??...", மனோஜ் நக்கலடித்ததில், "எதுக்கு??... நீ மறுபடியும் மல ஏறவா?", புன் சிரிப்புடன் அவள் சகஜ நிலைக்கு திரும்பினாள். பதிலுக்கு அவனும் லேசாக சிரித்து வைத்தான்.

"இங்க பாரு சுபா... என்ன நடந்தாலும் பரவாயில்லை... என் அக்கா அவளுக்கு பிடிச்ச மாறி இந்த ஆறு மாசமும் இருக்கனும்... அப்ரம் நடக்குறத அப்போ பாத்துக்கலாம்... ஆனா ஒன்னு.. என்ன நடந்தாலும் உனக்கு நா இருக்கேன்... மறந்துறாத...", தன் இரு கரங்களில் அவள் கரத்தை பிடித்தபடி அவன் கூறி முடிக்கையிலேயே டிரைவர் பெருந்தினுள் ஏற... ஒருகணம் இருவரும் அப்புறம் திரும்பினார்கள்.

"அந்த தைரியத்துல தா போறேன் மனோ... என்ன விட்டுறாத டா..."

"என் சுபாவ நா விடுவேனா??.. போய்ட்டு கால் பண்ணு... பத்ரமா இரு.... அப்பப்போ எடைலயும் கால் பண்ணு... ஃபர்ஸ்ட் சாப்டு... உன் பர்ஸ் அந்த ரெட் பேக்ல தா இருக்கு... பாத்துகோ... பத்ரம்... ... .. வரேன்", கைசைத்து கொண்டே மெல்லமாக நகர்ந்த பேருந்தில் இருந்து இறங்க... இறங்கியும் அவளை நோக்கியே கையசைத்து கொண்டிருந்தான்.

ஜன்னல் வழியே பிரிவின் சோகம் வழியும் முகத்துடன் அவனுக்கு கையசைத்து கொண்டே மதுரை மாநகரில் இருந்து தற்காலிகமாக விடை பெற்று சென்றாள் சுபித்ரா.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro