Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 2


எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாமல் அவள் அறையின் ஓரத்தில் கிடைக்கும் அந்த இள-நீல நிற போர்வை போர்த்தப் பட்டிருக்கும் கட்டிலின் மேல், அழுகையில் கரைந்த நிலையிலேயே பல நிமிடங்கள் படுத்திருந்தாள் சுபித்ரா... அவள் அறைக்கு வெளியே பெரும் பிரளயம் ஒன்று உக்ரமாக வெடித்துக் கொண்டிருந்தது அம்மூவரின் மத்தியில்.

கதவிற்கு அப்பால் கேட்கும் மூன்று குரல்களும், வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவள் செவிகள் இரண்டிலும் வந்து விழுந்தவண்ணமே இருக்க, வேறு வழி இல்லாமல் அவள் மூளையும் அதனை ஜீரணித்து கொண்டிருந்தது.

"இப்போ உங்களுக்கு என்ன பிரச்சன.. ஊரு உலகத்துல பொண்ணுங்களுக்கு பிரச்சன இருக்க தான் செய்யுது... அத பாத்து ஒதுங்கி ஒதுங்கி போனா அது தொரத்தி தொரத்தி தானே வரும்?... கொஞ்சமாச்சும் அவ கண்ணுல வெளி உலகத்த காட்டுங்களேன்... சும்மா நாலு செவத்துக்கு உள்ளேயே அடச்சு வச்சுகிட்டு ஏன் இப்டி அவள டார்ச்சர் பண்ணுறீங்க??", ஒரு வாலிபனின் குறள் உச்ச ஸ்தானியில் ஒலித்தது.

"டேய் மனோ.. அவள போகவே வேணாம்ன்னு ஒன்னும் நாங்க சொல்லலையே... அதான் கல்யாணம் முடியவும் மாப்பிள்ளயே அவ ஆச படுரத செஞ்சு தரேன்னு சொல்லுறாருல்ல.. அப்போ போகட்டும் அவ ஆச படுற எல்லா எடத்துக்கும்... இப்போ எங்கேயும் போக வேணாம்... வீட்டுலையே இருக்கட்டும்.", அம்மா ரஞ்சனியின் குரல் சிறு சிடுசிடுப்புடன் கொட்டியது.

"ஏன் ம்மா... அவரு சொன்னா மட்டும் போதுமா?.. அவங்க வீட்டுல இருக்குறவங்களும் சொல்லணும் இல்லையா?.."

"அவங்களுக்கு என்ன டா கொற.. இவள தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க... அங்க போனதுக்கு அப்பரம் அவ ஆசபட்டது எல்லாமே அவ காலுக்கு அடியில வந்து கெடக்க போகுது.. அதுவரையும் பொறுக்க மாட்டாளா உன் அக்கா?"

"பொறந்த வீட்டுல கெடைக்காததா ம்மா அவளுக்கு அங்க கெடைக்க போகுது?... என்னதான் இருந்தாலும் பொண்ணு பொறந்த வீட்ட விட்டுட்டு வேற வீட்டுக்கு போனா அவளால அவ இஷ்டத்துக்கு இருக்க முடியாது... என்னதான் சுதந்திரம் குடுக்குற வீடா இருந்தாலும் அவங்க போடுற வட்டத்துக்கு உள்ளேயே இருக்குற வரையும் தான் அவளுக்கு மரியாதைன்னு நீங்க தானே ம்மா சொல்லுவீங்க... இப்போ அங்க போய் அவ இஷ்ட்டத்துக்கு இருக்கட்டும்ன்னு சொல்லுறீங்க... ஏன் ம்மா இப்டி மாத்தி மாத்தி பேசுறீங்க?..", அம்மாவிற்கு சரியான பதிலடியை கொடுத்தான் மனோஜ். மகனிடம் இருந்து இத்தகைய கேள்விகள் வேளிவரும் என எதிர்பார்த்திராத ரஞ்சனி, ஒரு நொடி வாயடைத்து தான் போனார்.

"நீ எப்பவும் அவளுக்கே சாதகமா பேசாத டா மனோ... பொண்ண எப்டி வளக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்... முடிவா சொல்லுறது தா... இப்போ அவ எங்கேயும் போக போறதில்ல... படிச்சது போதும்... அதான் கைக்கு ஒரு டிகிரி வந்துருச்சுல... இன்னும் என்ன பொம்பள புள்ளைக்கு படிப்பு வேண்டி கெடக்கு?... ஒழுங்கா ஒரு வருஷத்துக்கு வீட்டுலையே இருக்க சொல்லிரு அவ கிட்ட... இல்ல... கால ஒடச்சு போட்டுருவேன் ஆமா", அம்மாவின் சொற்கள் யாவும் ஆவேசமாக வெளிவந்தது. என்னதான் முயன்றாலும் தன்னுடைய கண்ணோட்டத்தை அன்னையிடம் கொண்டுவர முடியவில்லை என வெகுவாக நொந்து போனான் மனோஜ்.

"ஏன் ம்மா இப்டி பேசுறீங்க.... நீங்களும் ஒரு பொண்ணு தானே?... உங்களுக்கும் அவ வயசுல இந்த மாறி ஆசையெல்லாம் இருந்துருக்குன்னு நீங்களே சொல்லி இருக்கீங்க தானே?... அது நிறைவேறலன்னா இவ ஆசையும் இப்டி கனவாவே போகணுமா??.. ", இறுதியில் மனோஜின் குரல் அவன் அன்னையின் குரலுக்கு சரிக்கு சமமாக ஒலிக்க... அவனது பொறுமை, முழுவதுமாக எல்லை கடக்குமாறு அடுத்து ஒரு வார்த்தை பேசினார் அவர்களின் குடும்பத் தலைவரானவர்... கலைவானர்.

"போதும் மனோ, ஆச ஆசன்னு அவ ரெக்க கட்டி பறக்குறா... நீ எங்க வேண்னா போ... என்ன வேண்னாலும் பண்ணு... எப்டி வேண்னா ஊரு சுத்துன்னு விட்டுட்டு, நாங்க வாய மூடிட்டு இருக்கோம்... போதுமா??... நீயே அவளுக்கு ஜால்ரா தட்டிட்டு இரு... வெக்கமா இல்ல உனக்கு... இப்டி வீட்டு புள்ளைய எங்கேயோ போய் தன்னந்தனியா தவிக்க வைக்க நெனைக்குற.. ச்சை...", மொத்த பொறுமையையும் இழந்தவர் தன் வார்த்தைகளை தடுமாறவிட, "அவ மட்டும் அவளுக்கு புடிச்ச மாறி தான் இருப்பேன்னு அடம்பிடிச்சா... அப்பரம் அவ்ளோ தா... அவளுக்கு இனி வடிச்சு கொட்ட என் சம்பாத்தியத்துல இருந்து ஒத்த பைசா இந்த வீட்டுக்கு வராது... உருப்படியா எதாச்சும் படிக்கிறதா இருந்தா சரி.. இவ என்னவோ எதுக்கும் உதவாத வேலைய பாக்க போறேன்னு நிக்கிறா.... பொண்ணுங்க சம்பாத்தியத்துல தான் என் வீட்டுல சோறு பொங்கனும்ன்னு எந்த ஒரு அவசியமும் இல்ல... போறதுனா போக சொல்லு... இனி மறுபடியும் என் வீட்டு வாச படிய மிதிக்க கூடாது...", கலைவானரின் குரல், இறுதி எச்சரிக்கை வெளிப்படுமாறு கோபம் மேலோங்கி அதே நேரம் தீர்க்கமாக வெளிவர.. அவரின் அந்த வார்த்தைகள் அனைத்தும் முற்று பெற்ற அதே நொடியில் அறைக்கு உள்ளே இருப்பவள் மொத்தமாக உடைந்து போனாள்.

தன் தந்தையின் அந்த பேச்சுகள் அனைத்தும் உண்மை தானா??... இல்லை அக்கறையின் எல்லை மீறலா என யூகிக்க கூட இயலாத நிலையில் உள்ளுக்குள் நொறுங்கி கொண்டிருந்தாள் அவள்..
அதை நினைத்து அவளின் விழிகள் இரண்டும் வற்றாமல் ஊற்றெடுத்த நொடியில் அவளை திடுக்கிட செய்யுமாறு படாரென திறந்து கொண்டது அவள் இருக்கும் அறையின் வாயில் கதவு.

தந்தை கூறிய வார்த்தையால் இறுகிய முகத்துடன் சிடு சிடுவென உள்ளே வந்தவன் விறு விறுவென அறைக்கு உள்ளே முன்னேறி, அலமாரியில் இருந்த அனைத்து ஆடை ஆபரணங்களையும் ஒரு பையில் அடைக்க தொடங்கி, மேலும் மேலும் அந்த அறையினுள் இருக்கும் அனைத்தையும் மூன்று பைகளில் அடைத்து கொண்டிருக்க... ஆடைகளை எடுக்கும் போதே அவனருகில் வந்துவிட்ட சுபித்ராவையும் அவள் கேட்கும் கேள்விகளையும் புறந்தள்ளியவாறு மௌனமாகவே அனைத்து பொருளையும் எடுத்து கொண்டிருந்தான்.

"மனோ சொல்லி தான் தொலையேன் டா.. எதுக்கு எல்லாத்தையும் பேக் பண்ணுற...?", ஏற்கனவே அழுது அழுது சோர்ந்துபோய் இருந்தவளால் அதற்கு மேல் அவனிடம் பேசி போராடவும் இயலவில்லை.. அவனும் இவளுக்கு ஒரு வார்த்தையேனும் பதில் கூற நினைக்கவில்லை. அவன் மனதில் இருந்தது எல்லாம் 'அக்காவை இந்த வீட்டை விட்டு தனியாக எங்கேனும் அழைத்து செல்லுங்கல்

magnu'அனைத்தையும் எடுத்து முடித்தவன் இறுதியாக அலங்கார மேஜையின் மீதிருந்த பொருளை எல்லாம் எடுத்து கொண்டிருந்தான்.

அவன் பொருட்களை எடுத்து கொண்டிருந்த வேகத்தில் சுபித்ராவால் கவிழ்த்தி போடபட்ட அந்த புகைப்படத்தை முதல் எடுப்பில் எடுக்க தவறி விட்டான் போலும்... கையில் இருப்பவற்றை பைக்குள் அடைத்து விட்டு இரண்டாம் முறைக்காக பொருளை எடுக்க நிமிர.. அந்த புகைபடத்தை அவன் முகத்திற்கு நேராக நீட்டி கொண்டு நின்றிருந்தாள் சுபித்ரா.

எதற்காக அனைத்தையும் எடுத்து வைக்கிறான் என்பது கூட அவளுக்கு தெரியாது., ஆனால் எதற்காகவாய் இருந்தாலும் இந்த புகைப்படத்தை பிரிய கூடாது என்பது மட்டும் நன்றாக அவள் மூளையில் பதிந்து கிடந்தது.

அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க.. பதிலுக்கு அவளும் ஒரு அப்பாவி பார்வை சிந்தியதில், "இதுக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல...", வாய்க்குள்ளேயே முனங்கி விட்டு அந்த படத்தை வெடுக்கென பிடுங்கி பத்திரமாக பைக்குள் வைத்தவன் மற்றவைகளையும் எடுக்க தொடங்கி விட்டான்.

மொத்த பொருளையும் எடுத்து முடித்தப் பின் சுபித்ராவை நோக்கி கோபத்துடன் திரும்பி, "இங்க பாரு சுபா... இங்க எல்லாமே நீ கேட்ட ஒடனே கெடச்சிடாது... அப்டி கெடைக்கலைன்னு ஒக்காந்து அழறவ நீ கெடையாது... ஆனா இந்த விஷயத்துல நீ தெனம் தெனம் அழறது எனக்கு தெரியாதுன்னு மட்டும் நெனைக்காத... இவங்களும் உன்ன சீக்கிரமே புறிஞ்சுப்பாங்க... அது வர அவங்க பேசுற எதுவும் உன் காதுல ஏற கூடாது... இனி நீ நா சொல்லுறத மட்டும் தான் கேக்கனும்... புரிஞ்சுதா?", படபடவென பேசியவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல், தான் தயார் செய்த மூன்று பைகளில் ஸ்கூல் பேக் ஒன்றை தோளிலும் மற்ற இரு சிறிய டிராவல் பேக்கையும் ஒரே கையிலும் பிடித்து கொண்டு, மறு கையால் வம்படியாக சுபித்ராவின் கரத்தையும் பிடித்து இழுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான் அவன்.

"மனோ... என்ன பண்ணுற நீ... என்ன விடு.. எனக்கு எதுவும் வேணாம்.. விடு டா... டேய்... நா இப்டியே இருந்துக்குறேன் என்ன விடு மனோ", அவன் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவிக்க போராடியவளால் அவள் மணிக்கட்டை சிவக்க வைத்துகொள்ள தான் முடிந்தது.

"எங்க டா கூட்டிட்டு போற அவள...??", மனோ செய்வதை கண்ட கலைவானரின் குறள் உண்மையிலேயே அதிர்ச்சியில் வெளிவந்தது... ரஞ்சனிக்கும் அதே அதிர்ச்சி தான்... ஆனால் குறள் வெளி வரவில்லை அவ்வளவே வித்தியாசம்.

அக்கேள்வியில் ஏனோ மனோவின் கோபம் தலைக்கு ஏற.. அதன் காரணமாய் பல்லை கடித்ததன் தாக்கம் அவன் நெற்றிப் பொட்டில் மேலெழும்பிய நரம்புகளில் வெளிப்பட..., "உங்க மகளோட ஆசைய உங்களுக்கு நெறவேத்த தெரியல... என் அக்கா ஆசைய எனக்கு நெறவேத்த தெரியும்... இனி அவ என் பொறுப்பு.,", அழுத்தமாக கூறி, தன் பிடியில் இருந்து விடுபட இன்னுமும் திமிறி கொண்டிருக்கும் சுபித்ராவை இழுத்து கொண்டு விருட்டென வெளியேறி, தன் சொகுசு காரில் அவளை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு அடைத்தான் மனோஜ்.

★★★

கல்லூரி செல்வதற்காக சாலை வழியே நடந்து கொண்டிருந்த வந்தனாவின் சிந்தையில் பலநூறு எண்ணங்கள் ஒருங்கே அரங்கேற்றம் நடத்தி கொண்டிருந்தது.

"கடவுளே... நா பண்ணுறது எல்லாமே சரி தானே??... நா தப்பா எதாவது செஞ்சா தயவு செஞ்சு எனக்கு அத சொல்லிரு... எனக்கு பயமாவும் இருக்கு அப்பா பயபுடுற மாறி எதாவது ஆகிருமோன்னு... ஆனா... நல்லா யோசிச்சு பாத்தா சரின்னு தான் தோணுது...", மனதினுள்ளேயே நினைத்தவள் வெறுமையாக பெருமூச்சு விட்டு கொண்டு காற்றில் நிலவிய மௌனத்தை உள்ளிலுத்தபடி சில அடி தூரத்தில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடை போட்டாள்.

✨ சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro