8
காலையில் 9.00 மணி போல சிராஜின் முதலாளி செய்யதை அழைக்க வந்தார்...
இருவரும் ஃபரிதாவிடம் சென்று காவல் நிலையம் போய் வருவதாக சொல்லி சென்றனர்..
ஃபரிதாவோ குழந்தையை நஸிராவிடம் கொடுத்து விட்டு முஸல்லா(தொழுகை விரிப்பு)வில் அமர்ந்து கண் கலங்க துஆ செய்தாள்...😢😢😢
காவல் நிலையம் சென்று சிராஜின் முதலாளி காவல் துறை மேலாளர் ரவியிடம் புகார் குடுத்தார்...
ரவி காணாமல் போன நபரின் பெயரை கேட்டான்...சிராஜ் என செய்யது சொல்லவும் ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கியவன்...பிறகு புகைப்படத்தை வாங்கி வைத்து கொண்டு வண்டியின் தகவலை பற்றியும் வினவி குறித்து கொண்டான்...
இவர்கள் புகார் குடுத்து வெளியேறிய பிறகு ரவி யாருக்கோ தொலைபேசியில் அழைத்து பேசி விட்டு வைத்தான்..
அடுத்த 4 மணி நேரத்தில் காவல் நிலையத்தின் வாசலில் உயர்ரகமான காரில் வந்து இறங்கினார் ரஹ்மான்..
இங்கு ஃபரிதா கவலையுடன் இருந்தாள்..குழந்தை அழுகும் சத்தத்தை கூட காதில் வாங்காமல் எதையோ வெரித்தபடி அமர்ந்திருந்தாள்...
குழந்தை அழுகும் சத்தம் வீட்டு வெளியே வரை கேட்கவும் நஸிரா பதறியடித்து ஓடி வந்து பிள்ளையை தூக்கினார்..
ஏன் மா, குழந்தை அழுகுறது....அதை கூட கவனிக்காமல் இப்படி வாடிப்போய் இருக்கியேமா என்று நஸிரா பரிதாபமாக கேட்டார்...அவளோ நஸிராவை கட்டியணைத்து அழுதாள்...
என் சிராஜுக்கு ஏதோ ஆகியிருக்கிறது..
இல்லையென்றால் இப்படி இந்த மாதிரி நேரத்தில் என்னை தனியாக விட்டுட்டு இருக்க மாட்டார் என்று புலம்பி கொண்டு அழுதாள்...
அது தான் புகார் குடுத்திருக்கோமே மா...எப்படியும் கண்டுபிடித்திரலாம் என்று சமாதானம் படுத்தியவள்....பிள்ளைக்கு முதலில் வயிற்றை நிரப்பு என கூறி குழந்தையை குடுத்தாள் நஸிரா...
நானே ரொம்ப நேரமாக சாப்பிடவில்லையே அப்புறம் எப்படி பால் சுரக்கும் என்று அப்பாவியாக கேட்டவளை முறைத்தவள்...தான் சமைத்து வருவதாக கூறி அழுகும் குழந்தையை சமாதானம் படுத்திய படி தூக்கி சென்று தூங்க வைத்தாள்...
அஸ்ஸலாமு அலைக்கும் என்று குரல் கேட்டு திரும்பியவள்...அங்கு தன் பெற்றோர் நிற்பதை கண்டு...ம்மா(mom) என்று கூறி அழுதபடியே ஓடி அணைத்து கொண்டாள்...அவளின் தாயும் அவளை அணைத்து கண் கலங்கினார்..
அவனை நம்பி வந்தியே...உன்னை இப்படி அநாதையாக விட்டுட்டுப் போய்ட்டானே என்று ரஹ்மான் கத்துனதை கேட்டதும்...இல்லை வாப்பா(dad) அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று தன் கணவனுக்கு பரிந்து பேசிய ஃபரிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்....
பிள்ளை பெற்ற பச்சை உடம்பு, மனக்கவலை, பசியின்கொடுமை என அனைத்தும் ஒன்று சேர அடித்த அடியில் ஃபரிதா மயங்கி சரிந்தாள்..
மும்தாஜ் பதறியபடி ஃபரிதாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எலுப்பினாள்...கண் விழித்தவள் தனக்கு குழந்தை இருப்பது இவர்களுக்கு தெரிய கூடாது... தெரிந்தால் தன் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, நல்லதாக போய் விட்டது சரியான நேரத்தில் நஸிரா லாத்தா குழந்தையை தூக்கி சென்று விட்டார் என ஃபரிதா நினைத்து கொண்டிருக்கையில்....
ஏதோ சத்தம் கேட்கிறது என்று உள்ளே நுழைந்த நஸிராவை பார்த்து ஃபரிதா கண்களை அசைத்து சமிக்ஞை செய்தாள்...அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவள் அங்கிருந்து நழுவினாள்...
எங்கள் கூட வா மா..உனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் தருவது என் கடமை என்று ரஹ்மான் சொல்லவும்...முடியாது என வீடே அதிரும் படி கத்தியவள்...என் சிராஜ் என்னிடம் வருவார்...அவருக்காக
நான் காத்திருப்பேன் என்று ஃபரிதா கத்தினாள்...
நான் உன்னை மகாராணி மாதிரி வைத்திருந்தேனே...இந்த கோலத்தில் உன்னை பார்க்கவா இவ்வளவு சம்பாதித்தேன் என்று கூற உங்களுக்கு பணம் தானே எப்பவும் முக்கியம்...இந்த நிரந்தரம் இல்லாத உலகத்திலே ஏன் பா பணம் என்றே அலைகிறீர்கள் என்று அவள் தன் கணவனை குறை சொல்வது பொருக்காமல் கத்தினாள்...
நீ என்ன சொன்னாலும் சரி...இப்போது வீட்டுக்கு வந்திடு இல்லையென்றால் சிராஜை கண்டு பிடித்தாலும் காவல்துறை அதிகாரிகள் எனக்கு தான் முதலில் தகவல் கூறுவார்கள்.. நீ என்னுடன் வரவில்லை என்றால் அவனையும் அழித்து அவன் குடும்பத்தையும் அழித்திடுவேன் என மிரட்ட...போராடி பார்த்தவள்..
இவர்கள் எப்படியும் என்னை விடமாட்டார்கள்...இல்லையென்றால் என்னை சுற்றி இருக்குறவர்களுக்கு ஆபத்து....இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள்...அல்லாஹ்!! என் பிள்ளை... என் பிள்ளை என் கண்மணியே உன்னை இவர்கள் பார்த்தால் எதையும் செய்ய துனிவார்களே...என்னை மன்னித்து விடு மா என்று மனதிர்க்குள் புலம்பியவள்...அவர்களுடன் கிளம்பினாள்...
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு திரும்பி பார்த்த போது...நஸிரா பிள்ளையை கையில் வைத்து நின்றாள்..
உன்னை ஆவலோடு எதிர்பார்த்த எங்களுக்கு உன்னுடன் வாழ குடுத்து வைக்கவில்லையோ என பயமாக இருக்கிறது என்று நினைத்தவள் நஸிராவை பார்த்து கண்களால் போய் வருவதாக கூறி குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தாள் ஃபரிதா..
நெஞ்சோடு குழந்தையை நஸிரா அணைக்க...ஃபரிதா தன் குழந்தை நல்ல படியாக இருக்கனும்...நல்ல படியாக தான் இருப்பாள் என நம்பிக்கையில் கண்கலங்க அவர்களுடன் சென்றாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro