66
பின் சென்றவன் முன்னாள் இருந்தவளை இம்சித்து கொண்டிருந்தான்...
திரும்பி திரும்பி முறைத்து முறைத்து பார்த்து முன்னாள் சென்று கொண்டிருந்தாள் மரியம்..
இப்படியே இவர்கள் பேலஸ்க்குள் செல்ல..
அங்கே இருப்பவை பார்த்து அசந்து தான் போனார்கள்..
ஒவ்வொறுத்தரும் இவ்வளவு நகையா??
அங்கே எதை பார்த்தாளும் தங்கமாக இருக்க...அதிசியத்து போய் நின்று கொண்டிருந்தனர்..
என்ன ஆஷா இது...இந்த தங்கத்தை விட எவ்வளவு அழகா இருக்குறே நீ...உன்னை பார்க்காமல் அங்கே பார்த்துட்டு இருக்குதுங்க...லூஸுங்க என்றதும் அவள் முறைத்து பார்க்க.. ச்சே.. நான் தான் லூஸுலே.. உன்னை நான் மட்டும் தானே பார்க்கனும் என கூறி அவளின் இடுப்பில் கை வைத்து சிரித்தவனை..ச்சீ..விடு டா..கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்புனு தெரியாது என கூறி திரும்பியவளிடம்...அப்படினா..என் ஆஷா க்கு என் மேலே கோவம் போச்சி...கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா..எப்ப பன்னிக்கலாம் என கேட்டு சிரிக்க...அப்பொழுது தான் கோவத்தில் மனதில் உள்ளதை பேசினாள் என்பது தெரிய...முகத்தில் செம்மை குடியேறியது...
.
.
இங்கே "நஸிரா"ன்ற பேஷன்ட் எந்த வார்ட்ல அட்மிட் ஆகிக்கிறாங்கனு சொல்லுங்க என கூறி பதிலை வாங்கியவள்..அங்கே சென்றாள்...
மனதில் படப்படப்புடன் அங்கே சென்று பார்த்தவர்கள் நஸிரா, செய்யதை பார்த்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்...
அஸ்ஸலாமு அலைக்கும் என குரல் வந்த திசையை கேட்டு திரும்பி பார்க்க இருவரும் அதிர்ந்தனர்..
முதலில் சுதாரித்த செய்யது,..
வ அலைக்கும் முஸ்ஸலாம் வாங்க..வாங்க என வரவேற்க்க.. லாத்தா என அழுதபடியே ஓடிச்சென்று நஸிராவை கட்டிக்கொண்டாள்...நஸிராவும் அழுதபடி கட்டி கொண்டு ஃபரிதாவின் முதுகை தடவி விட்டார்..
பிறகு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்...யார் முதலில் பேச்சை எடுப்பது என யோசித்து ஒவ்வொறுவரும் ஒவ்வொறு மனநிலையில் இருந்தனர்..
அதை கலைக்க எண்ணிய சிராஜ்,. நீங்க ஏன் திருச்சில இருந்து இங்கே வந்தீங்க என கேட்க..செய்யது அங்கே இருந்து வந்ததர்க்குரிய காரியத்தை சுருக்கமாக கூறினார்..
அவர்களின் காரணத்தை இருவரும் ஆமோதித்தனர்..
நீங்க எப்படி மா ஒன்னு சேர்ந்தீங்க...சிராஜ் எப்படி கிடைச்சாறு என நஸிரா கேட்க..
அவளும் சென்னையில் அனுபவித்த கஷ்டங்கள், சிராஜ் பழையதை மறந்து காரைக்குடியில் இருந்தது...பிள்ளையை தேடும் படலம் என அனைத்தையும் கூறியவள்...என் பிள்ளைக்காக தான் எங்க வாழ்க்கையே இருக்கு என கண்ணீர் சிந்தியவள்...தயவு செய்து என் மரியமை என் கிட்ட குடுத்துருங்க மா என கதறி அழுதவளை பார்க்க மற்றவர்களுக்கும் அழுகை தான் வந்தது...
ஃபரிதாவின் அழுகை அந்த அறையில் நிறைந்திருக்க...நஸிராவின் ஒற்றை வரியில் அடங்கியது...
"சரி மா...உன் பிள்ளையை நீயே வச்சிக்கோ" நம்பாமல் ஃபரிதா..நஸிராவை பார்க்க...இனி உன் கூட தான் மரியம் இருப்பா...நீ பட்ட கஷ்டம் போதும் என்ற நஸிராவை கட்டிக்கொண்டாள்...
முதலில் செய்யது அதிர்ந்தாலும்,.. மரியம் எப்படியும் எங்களை விட்டு பிரிய சம்மதிக்க மாட்டாள் என தெரிந்ததாள் வாயை மூடிக் கொண்டார்...
மரியம் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவா...நீங்களும் எங்க கூட சென்னைக்கு வந்துருங்களேன் என ஃபரிதா இழுக்க...இல்லை மா...அதுலாம் சரிப்பட்டு வராது என செய்யது மறுக்கவும்... மரியம் வரும் நேரம் நாம்ம எல்லோரும் அங்கே இருந்து உண்மையை சொன்னா தானே மரியம் புரிஞ்சிப்பா...ப்ளீஸ் என இழுக்கவும் மனதில் பாரத்துடனும் உள்ளுக்குள் தவிப்புடனும் சம்மதித்தனர் செய்யது மற்றும் நஸிரா..
நம்ம பிள்ளை நம்ம கூட வந்துருவாள் என்ற நம்பிக்கையிலும் சந்தோஷத்தில் செவ்வாய் கிழமையை எதிர்ப்பாத்திருந்தனர் சிராஜ் மற்றும் ஃபரிதா...
.
.
ஹேய்..."வொன்டர் லா" வந்திருச்சி என ஒருவன் கத்த...மற்றவர்களும் "ஓஓஓஓ" என கத்தினர்...
செம்மயா இருக்குலே என அவர் அவர்கள் கேங்குடன் சுத்த ஆரம்பித்தனர்..
இருக்குற எல்லா ஊஞ்சல்களிலும் போட்டி போட்டு ஆடி...கேமராவில் பதிவி செய்தனர்..
இந்த ஊஞ்சல்ல என்னால ஆட முடியாது பா...பார்க்கவே தலை சுத்துது.. நீங்களே ஆடிக்கோங்க என கூறி...அங்கே இருந்த இருக்கையில் மரியம் அமர அவளை இடித்து கொண்டு வந்து அமர்ந்தான் ஆஷிஃப்...
மரியம் தள்ளி அமர...மீண்டும் அவள் அருகில் ஆஷிஃப் அமர..எல்லோரும் நம்மள தான் பார்க்குறாங்க..இது தப்பு..தள்ளி போ என்று திரும்பியவளை...முடியாது..எப்பையும் அவங்க கூடாத தான் சுத்திட்டு இருக்குறே..இப்ப நீ என் கூட வா என கை பிடிச்சு இழுத்தவனை...விடு ஆஷிஃப் என கூற...ப்ளீஸ் ஆஷா என அவன் கெஞ்ச இவள் முறைக்க.. அவன் கொஞ்சி கொண்டிருந்தான்...
இதைலாம் மேலே அமர்ந்து பார்த்த ஆஜித்க்கு,. மரியமிடம் அவன் தகராறு செய்தது போல் தெரிய...இவன் ஏன் டி மரியமோட சண்டை பிடிக்கிறேன் என ஷாலினி கேட்க...இவன் மரியமோட வம்பு பன்னுறான் என தான் யூகித்தவற்றை சொன்னாள் ஷிவானி..
இதை ஏன் முன்னாடியே சொல்லலே...இதுனாள தான் மரியம் சேடா இருந்திக்கிறா.கீழே இறங்குனதும் அவனுக்கு இருக்கு என கோபம் அடைந்தான் அர்ஜுன்...
ஹேய்...இந்த பேங்கள்ஸ் உனக்கு அழகா இருக்கும் செல்லம்...இதுல உனக்கு எது சரியா இருக்குனு பாரு என மரியமிடம் ஆஷிஃப் கேட்க..
எனக்கு இதெல்லாம் வேண்டாம் ஆஷிஃப் என திரும்பி கொண்டவளை...கையை பிடித்து முன்னாள் இழுத்தவன்...இங்கே பாரு ஆஷா...நான் செய்ஞ்சது தப்பு தான்..நான் உன் ஆஷிஃப் தானே...என்னை மன்னிச்சா குறைஞ்சா போயிருவே என கூறிய ஆஷிஃபிடம்...என்ன இது...முஸ்லிம் பையன் தானே நீ.. இப்படி தொடுறது தப்புனு தெரியலயா?? என மரியம் கையை பின் பக்கமாக இழுக்க...
ஏய்...என்ன டா...மரியமோட வம்போட இழுக்குறே என கேட்ட அர்ஜுனிடம்...இல்லண்ணா...அது என இழுத்தவனை...மூஞ்ச ஒடைச்சிருவேன் அவ பின்னாடி சுத்துனா என வினை கோவமாக கூறவும்...இல்லண்ணா...நீங்க தப்பா என ஆரம்பித்தவனை...இவன் கிட்ட என்னடா பொறுமையா பேசிட்டு இருக்கீங்க என ஆஜித் அடிக்க செல்ல...
ஹேய் ஆஜித்...இது உனக்கு தேவையில்லாதது...எப்படி அவனை நீ அடிக்க கை நீட்டுவா என மரியம் கோவத்தில் கத்த...இல்லை மரியம் இவன் என ஆஜித் இழுக்க..இவனுக்கு என்ன ஹான் என கேட்டவளிடம்...இவன் உன் கிட்ட தப்பா பிஹேவ் பன்றான்லே என அர்ஜுன் கோவப்பட..
பாய்ஸ்க்கு அறிவே இருக்காதா?? கண்ணால் பார்த்தத வச்சி நீங்களே முடிவு பன்னுவீங்களா...இவனை அடிச்சா..இவனை விட எனக்கு தான் வலிக்கும் ஏன்னா என இழுத்தவள் அழுக ஆரம்பிக்க..."ஆஷா மா" என கூறி அவளை சமாதானம் செய்ய வந்தவனை பார்த்தவர்கள்,.. அதிர்ச்சியில் நின்றது ஒரு நிமிடமே...
"ஆஷிஃப்" என அர்ஜுன் இழுக்க...ஹ்ம்ம் என தலையாட்டி மரியம் அழுத அடுத்த நிமிடம் "ஹேய் ஆஷிஃப்" என கத்தி தூக்கினார்கள் நால்வரும்...
நட்புகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி,..அந்த நொடியே இவர்கள் கேங்கில் ஆஷிஃப் மற்றும் ரன்வா இனைந்தனர்..
சந்தோஷமாக "பேய் குகை"க்குள் கத்தி ஆர்ப்பாட்டமிட்டு சென்றனர்..
.
.
இவர்களின் ஆட்டம் ஓய்ந்து சென்னையை நோக்கி சந்தோஷமாக திரும்பினர்..
காலையில் பேருந்தில் வரும் நேரம் பெற்றோர்கள் அநேகம் பார் காத்திருக்க...
"ஹாய் நாங்க வந்துட்டோம்" என மூன்று பேருந்தில் உள்ளவர்களும் கத்தியபடி வந்தனர்..
மரியம் சந்தோஷமாக வருவதை பார்த்தவர்கள் நடுக்கத்துடனே இருக்க...இங்கு இவர்களை எதிர் பார்க்காதவள்,..
என்ன மா...என் கிட்ட நீங்க வரேனு சொல்லலை என குதித்து கொண்டு நஸிராவை கட்டி கொண்டவள்...
வாப்பா என செய்யது தோழிலும் சாய்ந்தாள்...
ஆளாளுக்கு எப்படி பேச்சை ஆரம்பிக்க என தெரியாமல் இருக்க...ஃபரிதா வீட்டிர்க்கு அழைத்தாள்...
என்ன மேம் எதுக்கு என மரியம் கேட்க.. அவள் மேம் என்று அழைத்த வார்த்தையின் வலி ஃபரிதாவின் கண்களில் தெரிய...அதை சரியாக கவனித்து கொண்ட நஸிரா...வா மரியம்.. உன் கிட்ட முக்கியமா பேசனும்....அங்கே போய் பேசிக்களாம் என நஸிரா கூற இவளும் அமைதியாக சென்றாள்..
என்ன மா..வந்ததுல இருந்து அமைதியா இருக்கீங்க...ஆளுக்கொரு பக்கமா..என்ன ஆச்சி மா...ஏதாச்சும் பேசுங்க என கூறிய மரியம்க்கு ஏதோ படப்படத்தது...
"நான் உன் ம்மா இல்லை மரியம்...இது தான் உன் ம்மா" என ஃபரிதாவை கை காண்பித்து அழுத நஸிராவை பார்த்தவளுக்கு தலையே சுற்றியது...
ப்ளீஸ் மா...ஏன் மா..அப்படிலாம் சொல்லுறே என மரியம் கேட்க...நான் உன் ம்மா இல்லைனு சொல்றேன்லே...இன்னொரு தடவை ம்மானு கூப்பிடாதே என நஸிரா கூற..எனக்கு பயம்மா இருக்கு ம்மா...பொய் சொல்லாதே மா.. நீங்களாச்சிம் சொல்லுங்க வாப்பா...அவங்க பொய் சொல்லுறாங்கனு...எனக்கு என்னைக்கும் நீங்க தானே வாப்பா..இன்னொரு தடவை இப்படி சொல்ல வேணாம்னு சொல்லுங்க வாப்பா என கூறி அழுதவளை,..
இல்லை டா...நான் உன் வாப்பா இல்லை...சிராஜ் தான் உன் வாப்பா..
நீ வைத்துல இருக்கும் போதே உன் மேல உயிரையே வச்சி..எனக்கு பொண்ணு தான் பிறக்கும்னு அப்பவே சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டவருக்கு...உன் கூட வாழ குடுத்து வைக்காம போச்சு மா...
சந்தர்ப்ப சூழ்நிலையால நீ எங்க கிட்ட வந்துட்டா மா என நடந்தது அனைத்தையும் கூறி முடித்தார் செய்யது...
ஒவ்வொன்றாக கேட்டவளுக்கு தலையே வெடிக்க...நின்ற இடத்திலேயே மயங்கி சரிந்தாள்...
மயக்கம் தெளிந்து எழுந்த போது,. சிராஜின் மடியில் தான் படுத்திருப்பதை பார்த்தவள்..வேகமாக எழுந்து...எங்கே என் ம்மா, வாப்பா...நீங்க ஏன் இங்கே இருக்கீங்க என கோவமாக கத்தியவளை பார்த்து...
நான் தான் டா.. உன் வாப்பா என கூற...இல்லை...என்னைக்கும் நீங்க என் வாப்பா இல்லை..
எனக்கு வாப்பா ம்மா னா என்னை வளர்த்தவங்க தான்,. உண்மை தெரிஞ்சதும் உங்க மேலே பாசத்தை காட்டுவேனு நினைக்காதீங்க...ஒரு நாளும் நீங்க என்னை பெத்தவங்களா ஆக முடியாது என கத்தியவள் அறையை விட்டு வெளியேறி...நஸிராவின் முன்னாள் சென்று...
சரி மா,..உண்மை தெரிஞ்சிருச்சிலே...
சரி..வாங்க...நாம்ம நம்ம வீட்டுக்கு போகலாம் என மரியம் கூற...
இல்லை மா...இனி இதான் உன் வீடு...இங்கே தான் நீ இருக்கனும்...இவங்க தான் உன்னை பெத்தவங்க என மனதை கல்லாக்கி நஸிரா கூற..
ஏன் மா...இனி அந்த வீடு எனக்கு சொந்தம் இல்லையா மா...நான் உங்க பொண்ணு இல்லையா மா...என் மேலே இறக்கப்பட்டு தான் நீங்க என்னை வளர்த்தீங்களா என பாவமாக முகத்தை வைத்து கேட்டவளை பார்த்து என்ன சொல்லுவது என தெரியாமல் தவித்தனர் சுற்றி உள்ளவர்கள்...
இவர்களை பார்த்து...சிராஜ் அருகில் வர...
இங்கே பாருங்க..நீங்க என் கிட்ட இருந்து இவங்களை பிரிக்க முடியாது...இது தான் என் குடும்பம்...நான் இவங்களோட தான் இருப்பேன் என கரராக பேசியவளிடம்..
எந்த நிலமைல நான் உன்னை பிரிஞ்சேனு வார்த்தையாலே சொன்னா புரியாது..
என் வாழ்க்கையே நீ தானு உன்னை தேடியே நான் ஊர் ஊரா பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சேன்...இப்ப தான் என் பொண்ணு எனக்கு கிடைச்சிக்கிறா...
அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை விட மாட்டேன்.. கோர்ட்ல கேஸ் போட்டாச்சும் உன்னை என் கூட இருக்க வைப்பேன் என கோவமாக பேசியவரை பார்த்து ஹாஹாஹா என சிரித்தவள்...
கோர்ட்ல கேஸ் போடுவீங்களா??
எனக்கு 18 வயசு ஆகிடுச்சி...நான் மேஜர்...இப்ப என்ன செய்வீங்க என சிராஜின் கோவத்திர்க்கு ஈடாக கேட்டவளை..
"மாஷா அல்லாஹ்" என் பொண்ணு என்ன அழகா பேசுறா என கூறி வியந்த சிராஜை பார்த்து முகத்தை சுளித்து திரும்பி கொண்டவள்...நான் உங்க பிள்ளை இல்லை என கூறினாள்...
இப்படியே இவர்கள் வாக்கு வாதம் அதிகரித்து கொண்டிருக்க,..
"லாத்தா" என ரசாக் ஓடி வந்து...மரியம் லாத்தா...நீங்க தான் என் லாத்தாவா...நான் உங்களை எவ்வளவு மிஸ் பன்னேன் தெரியுமா...இனிமே நீங்க என்னை விட்டு எங்கேயும் போக மாட்டீங்க தானே என பாவமாகவும் ஏக்கமாகவும் கேட்டவனை பார்த்தவளுக்கு மறுக்க நாவு எழாமல் போக..
என்ன பேச என தெரியாமல் பார்த்து கொண்டிருந்தவளை அவனிர்க்கு ஈடாக மரியமை குனிய வைத்து கண்ணத்தில் முத்தம் பதித்தான் ரசாக்...
நீயும் எங்க கூட வர்றியா??
நான் உன்னை பார்த்துக்குறேன் என கேட்டவளை பார்த்து...அப்ப ம்மா, வாப்பா என திரும்பி பார்த்து கேட்டவனிடம்,..
இங்கே பாரு தங்கம்...உனக்கு உங்க ம்மா வாப்பாவ விட்டு பிரிய முடியாதுலே...அதே மாதிரி தானே நானும்...எனக்கு மதி தெரிஞ்சதிலிருந்து இவங்க தான்..என் ம்மா , வாப்பா என நஸிரா, செய்யதை கை காண்பித்தவள்...
ப்ளீஸ் டா தங்கம்.. நான் உன் கூட டெய்லி ஃபோன் பேசுறேன்...உனக்கு என்னை பார்க்கனும்னு தோன்றப்பலாம் நீ வா...இந்த லாத்தாவ வந்து பாரு என கூறி ரசாக்கின் கண்ணத்தில் முத்தமிட்டவளை பார்த்து...
அப்ப நீ என்னை ம்மா வா ஏத்துக்குவியா மா என ஃபரிதா ஏக்கத்துடன் கேட்க...
நெவர் என கூறி ஒற்றை வார்த்தையில் திரும்பி கொண்டவளை பார்த்து...
உண்மை தெரிய முன்னாடி கூட நீ என் மேலே அன்பா இருந்தியே மா...உண்மை தெரிஞ்சதும் இப்படி ஒரு வெறுப்பான பார்வை பார்க்குறியே மா என கூறி அழுதவள்...
என் வாழ்க்கை பாதி நாளு என் கணவரை பிரிஞ்சேனா...மீதி நாளும் உன்னை பிரிஞ்சிட்டேன் மா...நான் செய்ஞ்ச சின்ன தப்புக்கு எனக்கு பதினெட்டு வருட தண்டனை போதும் மா...என்னை ஒரு தடவையாவது "ம்மா"னு சொல்லு மா என அழுதவளை பார்த்து மனம் பாரமாக இருந்தாலும்,..
நஸிராவிடம் சென்று போலாமா என கேட்க...அவளோ என்ன செய்ய என்பதை போல் பார்க்க...நீங்க என் கூட வரீங்களா இல்லை நான் வேற எங்கையாச்சும் போகவா என கேட்டவளுடன் நஸிராவும் செய்யதும் செல்ல...
செல்பவர்களை தடுக்க வழி தெரியாமல் சிராஜும் பரிதாவும் நின்றனர்...
நாட்கள் அதன் வேகத்தில் ஓடினாலும் மரியமின் மனது சிறிதும் மாறவில்லை..
கல்லூரியிலும் ஃபரிதாவை கண்டும் காணாமல் சென்று விடுவாள்..
எத்தனை வழியில் ஃபரிதாவும் சிராஜும் மரியமிடம் நெருங்கினாலும் அத்தனை வழியும் அடைத்தே இருந்தது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro