Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

64

பேருந்தில் ஏறியவர்களின் ஆட்டம் அதிகமாக ஆகியது...
பேருந்து கிளம்புகையிலே RK சாப் க்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க என அதில் ஒருவன் கத்த...மற்றவர்களும் ஓஓஓஓஓஓ போட்டனர்...

பாய் கடை பிரியாணிக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க என மற்றொருவன் கத்த...அதர்க்கும் ஓஓஓஓஓஓ போட்டனர்...

இப்படியே இவர்களின் ஆட்டம் அதிகமானது...இதை பார்த்த ஆஷிஃப்க்கு தான் எரிச்சலாக இருந்தது...மரியமும் தன் தோழர் தோழிகளுடன் கலாட்டா அடிக்க ஆஷிஃப்க்கு அதை பார்க்க கோவம் பத்தி கொண்டு வந்தது...

இப்படியே அவர்கள் கத்தி கூச்சலிட...
ஹேய்...போதும்...ஏதாச்சும் பாட்டு போட்டு விடுங்க...கேட்போம் என ஷாலினி கத்தவும்..
என் கிட்ட நியூ சாங்ஸ் இருக்கு...நான் போய் பென் ட்ரைவ குடுத்துட்டு வர்ரேன் என ஆஜித் செல்ல...ஹேய்...அவன் பென் ட்ரைவ மாத்திட்டு போய்ட்டான்...அது என்னோடது என மரியம் முன் சீட்டில் இருப்பதால் அவன் கிட்ட பென் ட்ரைவ குடுக்க சொல்லி அர்ஜுன் குடுக்க...

மரியம் எழுந்து செல்லவும் ஆஜித் வரவும்...அந்த இடத்தில் மேம்பாலம் வரவும் சரியாக இருந்தது...

பேருந்து ஏறி இறங்க ஆஜித் நிலை தடுமாறி அருகில் வந்த மரியமின் மேல் விழவும்...மரியம் அதிர்ச்சியில் கண்களை இருக்கி மூட...சுற்றி இருந்தவர்களோ விவரம் புரியாமல் ஓஓஓஓஓஓ என கத்தினர்...

ஆஷிஃபிர்க்கு கோவம் தலைக்கேற பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்...

ஹலோ ஸ்டூடண்ட்ஸ்...பஸ் இங்கே டென் மினிட்ஸ் நிற்கும்... வாஷ் ரூம்க்கு போக வேண்டியவங்க போங்க என ஒரு ஆசிரியர் கூறவும்...சரி என எல்லோரும் இறங்கி கொண்டிருந்தனர்...

இறுதியாக மரியம் இறங்க...வழி மறித்த ஆஷிஃப்...உன் கிட்ட கொஞ்சம் பேசனும்...உள்ளே போறியா என கூற...இவளும் சரி என தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள்...

"ஹேய்...நான் தெரியாம தான் கேக்குறேன்...நீ லாம் ஒரு பொண்ணா டி..
எனக்கு உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு என ஆஷிஃப் கத்த...ஹேய்..நீ என மரியம் வாயை திறக்க...ச்சீ...வாய மூடு...என்ன டி பொண்ணு நீலாம்...அன்னைக்கு ஒருத்தன் கூட அப்படி கிடந்தே...அப்புறம் என் பின்னாடி சுத்துனே...இப்ப இன்னைக்கு இன்னொருத்தனோட இப்படி கிடக்குறே...உனக்கு உடம்பு கூசலை...நீலாம் எப்படி பட்ட பொண்ணு டி...நீ கெட்டு போ...எதுக்கு என் கண் முன்னாடி நின்டு அசிங்கமா நடந்துக்குறே என கத்தியவன் அதிர்ச்சியாக உறைந்து நின்றான்...ஆம், பொருத்து பொருத்து பார்த்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் ஓங்கி அறைந்தாள்...

"நீ எப்படி டா இப்படி பேசுறே...ஒரு பொண்ண பத்தி...அதுவும் உன் ஆஷாவ பத்தி இவ்வளவு அசிங்கமா பேசுறே...உனக்காகவா நான் காத்திருந்தேனு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்கு டா...ச்சீ...என் மூஞ்சிலயே முழிக்காதே டா...நீ சத்தியமா என் ஆஷிஃபா இருக்க முடியாது...என் ஆஷிஃப் இப்படிலாம் இருக்க மாட்டான்..."
இதுக்கு அப்புறம் நான் உன் பக்கமே வர மாட்டேன் என மூச்சை இழுத்து பிடித்து கூறியவள் அழுதபடி ஓடி விட்டாள்...

கண்ணத்தில் கை வைத்து நின்றவனுக்கோ "ஆஷா" என்ற வார்த்தை மட்டுமே மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது...

அப்படினா...ஆஷா,அது ஆஷா, என் ஆஷா, என் லட்டு குட்டி என வேகமாக திரும்பியவன்...இல்லை...என் ஆஷா.. அவளை நான் சந்தேகம் பட்டேன்...இனிமே அவ மூஞ்சில எப்படி முழிப்பேன் என நின்ற இடத்திலே அமர்ந்தவன்...தலை குனிந்து அழுதான்...
.
.

இங்கே!! பலதையும் நினைத்து பயந்த படி இருந்த நஸிரா... நெஞ்சில் கை வைத்து சரியவும்...செய்யது வரவும் சரியாக இருந்தது...

வலியில் நஸிரா துடிக்க...வேகமாக மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்...

அங்கு நஸிராவை பரிசோதித்த டாக்டர் Sneha_RV,.இடம்...டாக்டர்..என் மனைவிக்கு என்ன ஆச்சி என பதற்றத்துடன்  செய்யது கேட்க...மிஸ்டர்...உங்க வைஃப்க்கு மைல்ட் அட்டாக் வஞ்திருக்கு...ஆக்ஸிஜன் சப்ளை குடுத்த நார்மல் ஆகிடுவாங்க பட் கொஞ்சம் பைன் இருந்துட்டு இருக்கும்...     பிரைமரி ட்ரீட்மெண்ட் குடுத்து...க்ளாட் பஸ்டிங் மெடிஷின் குடுத்திக்குறோம்... சோ,. வீக் ஆ இருப்பாங்க...த்ரீ டேய்ஸ் ஹாஸ்பிடல்ல வைச்சி பார்த்துக்களாம்...நீங்களும் உங்க வொய்ஃப கஷ்டப்படாம பார்த்துக்கோங்க என கூறவும்...

ஓகே டாக்டர்,. அவ சரியான போதும்...எப்ப பார்க்களாம் என கேட்க...அவங்க மயக்கத்தில இருக்காங்க..கொஞ்ச நேரத்துல முழிச்சிருவாங்க...டிஸ்டர்ப் பன்னாம பாருங்க என கூறி சென்றார்...
.
.
எனக்கு அந்த பஸ்க்கு வர பிடிக்கலனா விடுங்கலேன் என மரியம் கத்த...நீ தானே இந்த பஸ்ல தான் போவேனு அடம் பிடிச்சி ஏறுனே...இப்ப எதுக்கு கோபமா கத்துறே என அர்ஜுன் ஒரு பக்கம் கேட்க...நம்ம இஷ்டத்துக்குலாம் மாத்தி தர மாட்டாங்க..
ப்ளீஸ்...அடம்பிடிக்காம வா என ஆஜித் கூற...மற்றவர்களும் கெஞ்ச...சிறிது யோசித்தவள்..சரி என ஒத்துக்கொண்டு பேருந்தில் ஏறினாள் மரியம்...

இவ்வளவு நேரம் இருந்த குதூகலம் போக...எல்லோரும் ரீசன் கேட்க...தலைவலி என பொய்யுரைத்து  ஜன்னல் ஓரத்தில் சாய்ந்து கண்ணை மூடினாள்...

குற்ற உணர்ச்சியில் ஆஷாவயே பார்த்து கொண்டிருந்தான்...அவள் ஒரு தடவையேனும் தன்னை திரும்பி பார்ப்பாளா என்று...அவள் அவன் பக்கமே திரும்பவில்லை...

எல்லா கூட்டமும் ஆடி அடங்கி இரவானதும் ஆளுக்கு ஒரு பக்கமாய் தூங்க...ஆஷிஃபும் மரியமும் தூங்காமல் விழித்து சோகத்துடன் அமர்ந்திருந்தனர்...

திடீரென சுற்றி முற்றி பார்த்தவன்...எல்லோரும் தூங்கிட்டார்கள் என உணர்ந்து.. பதற்றத்துடன் மரியமின் அருகில் சென்று....ஆஷா என அழைக்க.. அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக..."ஆஷா மா" என அவள் தோழின் கை வைக்க...கண்களை திறந்து ஆஷிஃபை எரித்து விடும் பார்வை பார்த்தவள் திரும்பி கொள்ள...ப்ளீஸ் மா...எனக்கு நீ னு தெரியாது...என் கண்ணுக்கு எல்லாமே தப்பா தெரிஞ்சுது என அடி குரலில் கூற...

ஏன் ஆஷிஃப்...நான் ஆஷாவா இல்லாம இருந்தா உன் கண்ணுக்கு கடைசி வர தப்பானவளா போயிருப்பேன்லே...
நீ எப்படி என்னைனு இல்லை...எந்த பொண்ணா இருந்தாலும் இப்படி கீழ் தரமா நினைக்களாம் என அதே அடிக்குரலில் சீற..

இல்லை மா...நான் எந்த பொண்ணுகிட்டையும் இப்படி நடந்துகிட்டது இல்லை...உன் கிட்ட மட்டம் ஸ்டார்டிங்ல இருந்து தப்பா போச்சி என ஆஷிஃப் கூற...
விடு ஆஷிஃப்...நீ ஆரம்பத்திலிருந்து எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கஷ்டப்படுத்திட்டே...நீ தான் என் ஆஷிஃப்னு(அவன் கைச்செயனை தொட்டு காண்பித்து) தெரிஞ்சதும்...நான் எல்லாத்தையும் மறந்து உன்னயே சுத்தி சுத்தி வந்தேன்...ஆனா, என்னை எவ்வளவு அசால்ட்டா "கெட்டு போ"னு சொல்லிட்டே...நான் அப்படிப்பட்ட பொண்ணா என கண்ணீர் வடிய கேட்டவளை...அணைத்து கொள்ள நினைத்தவன்...இல்லை டா...நீ அப்பவே என் கிட்ட சொல்லிக்கலாம்லே...நான் தான் உன் ஆஷானு என கூறிய ஆஷிஃபிடம்...ஹாஹா என விரக்தியாக சிறித்தவள்...அப்பவே சொல்லிறுந்தா...என்னை நல்லவளா நினைத்திருப்பிலே என கூறியவள்...ஃபர்ஸ்ட் இங்கே இருந்து போ...யாராச்சும் பார்த்துர போராங்க என கூறிய மரியமிடம் என்னை மன்னிச்சிரு டி...ப்ளீஸ் என கேட்க...வார்த்தையால் கூறாமல் முகத்தை திருப்பிக் கொண்டால்...

இருவருக்கு மட்டும் விடியலே வர மாட்டேன் என வானம் கூறியது போல இருக்க...தூக்கம் இல்லாமல் மனது ரணமாக இருவரும் விழித்து கொண்டிருந்தனர்...

அவனோ!! மன்னிப்பு வேண்டி விழித்துக் கொண்டிருக்க...அவளோ!! மன்னிக்கும் படி நீ தவறு செய்யவில்லையே என முறைத்து கொண்டிருந்தாள்...
.
.
.
இப்ப எப்படி மா இருக்கு...பரவாயில்லையா என கேட்ட செய்யதிடம்...பரவாயில்லைங்க என கூறி...மரியம் என இழுக்க...மரியம்க்கு கால் பன்னேன் மா...பஸ்ல போய்ட்டு இருக்குறதுனாள டவர் கிடைக்கலே போலே என செய்யது கூற...நல்லதா போச்சி...அவ சந்தோஷமா இருக்கட்டும்ங்க...அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா...அவ கிட்ட சொல்லாதீங்க என நஸிரா  கூற...அவரும் ஒப்புக் கொண்டார்...
.
.
அதிகாலையில் உடல் நடுங்கும் குளிரை வைத்தே தெரிந்தது....ஊட்டி வந்து விட்டது என...

அங்கு அங்கு பற்கள் டைப் அடிக்க....அழகு விடியலை பார்த்து...சுற்றி முற்றி நோட்டமிட்டு கொண்டிருந்தனர் நண்பர்கள்...

பேருந்து ஹோட்டலுக்கு செல்ல அங்கு தன் உடமைகளை வைத்து விட்டு...சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு கீழே உணவகத்தில் குளிருக்கு இதமாக காஃபி குடித்தவர்கள்... பேசியபடி சாப்பிட ஆரம்பிக்க...திடீரென எதிர்பாராமல் சாராவை பார்த்த ஆஜித்...அவளிடம் சென்று ஓய்...நீயுமா வந்திக்கிறே என கேட்க..ஹலோ..ஏன்...நான் வரக்கூடாதா...இது என்ன கேள்வி என முறைத்தவளை...சரி..சரி...கூல்...வா காஃபி சாப்ட்டுட்டு பேசலாம் என
ஆஜித் கூற...ஆமா...நீங்க யாரு...நான் ஏன் உங்க கூட பேசனும் என சாரா கேட்க...ஹேன்ன்ன்...உன் புருஷன்...இப்ப வர்றியா என ஆஜித் கேட்க...சாரா விழி விரித்து முழிக்க...கையை பிடித்து இழுத்து சென்றான் ஆஜித்...
.
.
.
.
எல்லா வேலையையும் முடித்த ஃபரிதா போர் அடிக்கிதே என்ன செய்யலாம்...காலேஜும் இல்லை என யோசித்து கொண்டிருக்க...

சரி...ரம்ஜான் பிக்க லேப் ல ஏத்துவோம் என ஆன் செய்தவளுக்கு தெரியவில்லை...
தன் தேடலின் விடை கிடைக்க போவது...
.
.
ஏன் மரியம்...இப்படி சோகமா இருக்குறே...என்ன ஆச்சி என ஷிவானி துலைத்து எடுக்க...ஒன்னும் இல்லை டி...விடு.. தலை வலிக்குது என கூறியவளை ஒரு மாதிரியாக பார்த்தவள் மேலும் டிஸ்டர்ப் செய்யாமல் சுத்தி முத்தி நோட்டமிட்ட படி அமர்ந்திருந்தாள்...

அப்பொழுது...இவர்களின் பக்கமே ஆஷிஃப் பார்த்துக்கொண்டிருக்க...மரியமும் அவ்வப்போது ஆஷிஃபையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த படி இருந்தாள் ஷிவானி...

ஒரு வேலை ஏதாவுது ப்ரச்சனையா இருக்குமோ என நினைத்து கொண்டு...சரி...அவளே சொல்லுற வரை...நாம்ம கேட்க கூடாது என விட்டு விட்டாள் ஷிவானி...
.
.
ஒவ்வொறு புகைப்படமாய் பார்த்து லேபில் காப்பி பன்னிக் கொண்டிருந்தவள்...

மரியம்,..  பெருநாள் அன்று  செல்ஃபி எடுத்து அனுப்பியிருந்த ஃபோட்டாவை பார்த்தவள்...அதையும் லேபில் காப்பி செய்யும் நேரம் எதார்த்தமாக அந்த புகைப்படத்தில் இருந்த கண்ணாடியை...சிறிது குழப்பத்துடன் ஜும் செய்து பார்த்தவளுக்கு... கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது...

ஆம்...அந்த கண்ணாடியில்...மரியமிர்க்கு முன்னால் ஒரு ப்ளேட்டுடன் நின்ற நஸிரா தெரிந்தாள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro