Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

56

ஏன் டா...இப்படி தள்ளிவிட்டே என்ற ரன்வாவை முறைத்தவன்...

பின்னே என்ன டா...நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்...நீ என்னனா அந்த டப்பா ஃபோன்ல பாட்டை அலறவிட்டுட்டு பாடிட்டு வேற இருக்கிறா என்ற ஆஷிஃபை...

டேய்...என்னை என்ன வேணாலும் சொல்லு...என் "ஸ்மார்ட் ஃபோன" எதுவும் சொல்லாதே என்ற ரன்வாவை...

ஹாஹா...ஹிஹி...ஹுஹு....
தயவுசெய்ஞ்சி அந்த டப்டாவை "ஸ்மார்ட் ஃபோனு" சொல்லாதே..

அப்புறம், "ஸ்மார்ட் ஃபோன்" வச்சிக்கிற எல்லோரும் தூக்குல தொங்கிடுவாங்க என்ற ஆஷிஃபை முறைத்தவன்...

ஏன் டா...இதுக்கு என்ன டா குறை என்றவனின்.... (nokia E5)வை கையில் வாங்கியவன், எல்லாமே குறை தான் டா என ஆஷிஃப் தூக்கி வீச...டேய்...என் ஃபோன் என பிடிக்க போய் ஒருத்தி மேல் விழ...அவசரமாக சென்று கொண்டிருந்தவள்..ஏன் டா...உனக்கு வேற வேலையே இல்லையா...எத்தனை தடவை இப்படி வந்து விழுவா...உனக்கு கண்ணு தெரியுமா?? தெரியாதா?? என அவனின் முகத்தை கூட கவனிக்காமல் கத்தி விட்டு அவசரமாக சென்றாள்.....

அவள் சென்ற திசையை பாவமாக பார்த்த ரன்வா, அடேய் பக்கி பயலே...இப்ப தான் நல்லா இரினு சொல்லிட்டு போன...அதுக்குள்ள அவ வாயால இப்படி கண்ட படி திட்ட வச்சிட்டியே டா என கூறி முறைத்த ரன்வாவை...

சரி...அதை விடு...அந்த பொண்ணை என்ன பன்னலாம் என ஆஷிஃப் கேட்கவும்...அடேய், நான் நல்ல பையன் டா, சைட் அடிக்கிறதோட சரி...தப்புலாம் பன்ன மாட்டேன் டா...ஒருத்தனுக்கு ஒருத்தி பாலிசி என கூறியவனை முறைத்தவன்...உன் மூஞ்சி...அங்க பாரு வந்துட்டா, அவளை தான் என மரியமை காட்டியவன்..இவளுக்கும் உனக்கும் தான் ஆரம்பத்தில் இருந்தே ஆகாதே...அப்புறம் எதுக்கு டா...அந்த பொண்ணை ஏதோ பன்னலாம்ங்ற மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறே என்ற ரன்வாவின் முதிகில் ஒரு அடியை போட்டவன்...

அடேய்...இப்ப கண்டுக்காத மாதிரி அவளை பாறேன்...அமைதியா எழுதிட்டு இருக்குறவ..அப்படியே என்னை பார்ப்பா என ஆஷிஃப் கூறவும்..ஆமா, இவரு பெரிய மன்மத ராசா...இவர அப்படியே அந்த ரோஜா மொட்டு பார்த்து விரிய போகுதாக்கும் என கூறி முடிக்கும் முன்பே மரியம் ஆஷிஃபை பார்க்க...விரிஞ்சிடுச்சி டா என வாயை பிளந்தான் ரன்வா...
.
.
.
.
அடியேய்....சௌமி...இதுலாம் ஒரு மூஞ்சி..
இவனைலாம் சைட் அடிக்கிறதயே சகிச்சிக்க முடியலே...இதுல ஹீரோ லெவல்க்கு பில்டெப் வேற குடுக்குறே என்றவளை சௌமி துரத்திக் கொண்டிருந்தாள்...

அடேய்...கிரவுண்டுக்கு தான் வர்ரேன் என்று கைப்பேசியில் பேசியபடி வந்த ஆஜித்தை... சுற்றி வந்தவள், உன்மையை சொன்னா ஒத்துக்க டி என ஆஜித்தின் பின் பக்கம் சென்று.. தோளில் இருந்து எட்டிப்பார்க்க...
ஏய், மரியாதையா இந்த பக்கம் வந்துரு டி...என் ஆளுக்கு என்ன டி குறை...எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கிறான் என சௌமி ஆஜித்தின் முன்னாள் நின்று கூற...

ஆஜித்தை தன் பக்கமாக திருப்பியவள்..
ஹேய்..உன் கண்ணு என்ன குருடா??
இவன மாதிரி ஒரு ஆணழகன பக்கத்தில வைச்சிட்டு எவனையோ அழகுனு சொல்லுறே என ஆஜித்தை பார்த்து கண் அடித்தவளை புரியாமல் பார்த்தவன்...அடியேய்...உன்னை என சௌமி துரத்த.. பழுப்பு காட்டி ஓடியவளை...சாரா என கத்திகொண்டு ஓடினாள் சௌமியா...

சாரா என மெலிதாய் அழைத்தவன்...அழகான பேரு என மனதில் நினைத்து...அவள் சென்ற திசையை பார்த்தான் ஆஜித்....
( Navasara2523 ஆஜித்தை மனதார காதலித்த ஆஜித்தின் காதலி😂😂😂....யாரும்...பொறாமை படாதீங்க பா😂😂😂)...
.
.
.

லைப்ரரியில் எடுத்த புத்தகத்தை திருப்பி குடுக்க வந்தவள்...யாரோ நமக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருக்குதே என யோசித்தபடி சென்று பார்க்க...அங்கு முதுகு காமித்த படி அமர்ந்திருந்தவனின்...

அருகில் சென்று அமர்ந்தவள், கைப்பேசியை பார்த்த வண்ணம் இருந்தவனை...ஒரு நிமிடம் பார்த்தவள்...அப்படி என்னத்தை தான் பார்க்குறான் என் நினைத்து அந்த கைப்பேசியை எட்டி பார்த்தவள்...

இது தான் மாலதி பாப்பா வா?? என குரல் வந்த திசையை பார்த்தவன்...நீ எப்ப இங்கே வந்தா...நான் உன்னை கவனிக்கவே இல்லையே என ப்ரவீன் கூற...ஹ்ம்ம்...ஆமா...நான் வரும் போது நீ ஃபோனையே கண் கலங்க பார்த்துட்டு இருந்தா...அதான் நானும் அமைதியா உட்கார்ந்துட்டு இருந்தேன் என்றவள் இந்த ஒரு ஃபோட்டோ தான் இருக்கா?? என கேட்டவளிடம்....ஹ்ம்ம்...ஆமா...இது நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது ஆஜித் பேர்த் டேல எடுத்தது...ஃபோட்டோல இருந்து ஃபோன்ல ஏத்திக்கிட்டோம் என்றவன் சிறிது நேரம் தயங்கினான்...

என்ன ஆச்சி...ஏன் ஏதோ கேட்க தயங்குற மாதிரி முழிச்சிட்டு இருக்கிறா என்றவளிடம்...

இல்லை...இன்னைக்கு மாலதி பாப்பா நியாபகமா இருக்கு என கூறியவன்...தட்டு தடுமாறி நா....ன் உ... என கூறியவன் சிறிது தயங்கி...உன் மடில படுத்துக்கவா என கேட்க....அவனை ஒரு இதமான பார்வை பார்த்தவள் சம்மதமாக தலையசைத்ததும்...

(சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது

சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை,வெளிச்சத்தை போல

அது சுதந்தரமானது அல்ல

ஈரத்தை இருட்டினை போல

அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல)

அவளின் மடியில் அமைதியாக படுத்து ப்ரவீன் கண்களை மூடி இருக்க...
ப்ரவீனின் முடியை கோதி விட்டாள் சந்தியா...
இருவரும் எதுவும் பேசும் நிலையில் இல்லாமல் மௌனத்தையே சுகமாக தத்தெடுத்தனர்...
(நாமலும் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்)..
.
.
.
ரமலான் வர இருப்பதால் வீட்டை துடைத்து, ஒட்டரை அடித்து, சுத்தம் செய்து...பழைய ஆடையை ஒதுக்கியபடி இருந்தவளுக்கு அது கண்ணில் பட்டது...
.
.
காதல்னு ஒரு வார்த்தை சொன்னதோட சரி...
அதுக்கப்புறம் எதுவும் இல்லை...
கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சி...
இதோ வரேனு சொன்னதோட சரி...
இன்னும் தான் வராங்க என தவித்துக்கொண்டிருந்தா#....
.
.
.
.
.
.
.
.
.
......
Hi frndz...

Pray for kerala...

Innum 2 days power cut nu sollirukaanga...
Mazhai nikkira madhiri illa..
Yen dad um anga than irukaanga..
Neenga pray pannunga frndz😢😢...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro