5
காலையில் எழுந்ததிலிருந்தே மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோஷமும் படபடப்பும் ஒன்று சேர..தமது இஷ்டதெய்வங்களை வேண்டிய படி பூஜை அறையில் இருக்கும் நேரம், கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்க்கையிள்.. அங்கு தபால்காரர் மெட்ராஸிலிருந்து கடிதம் வந்ததாக கூறி நீட்டவும்....அது தன் மகளிடமிருந்து தான் வந்திருக்கும் என்பதை அறிந்த செல்வி...திலீப்பை கூப்பிட்டு வாசித்து காட்ட சொல்லி கையில் குடுத்தாள்.. அவன் வாசிக்க ஆரம்பிக்க... அதிலே சில நல விசாரிப்பிர்க்கு பின் திலீப்பின் தங்கை கவிதா கர்பமாக இருக்கிறாள் என்று குறிப்பிட்டிருந்தது...
இதை கேட்ட செல்வி அளவில்லாத சந்தோஷத்தில்... இருக்கிற எல்லா தெய்வங்களையும் வேண்டி கொண்டாள்..
இங்கு ஃபரிதாவிர்க்கு நாள் தள்ளி போயிருப்பதாக கூறி சிராஜை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்...😍😍
அவனோ தன் மனைவியை கூட்டி சென்று நாற்காலியில் அமர்த்தி...அவளின் வலது காலை பிடித்து கொலுசு அணிவித்து, நான் முதன் முதலில் உனக்கு என்று ஆசையாக வெள்ளியில் கொலுசு வாங்கிய நேரமோ?? என்னவோ??
நம் குழந்தை உன் வயிற்றில் தரித்திருக்கிறது என்று கூறி காலில் முத்தம்மிட்டான்..😙😙
பின் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து விட்டு உறுதி படுத்திய பின்னரே இனிப்புகள் வாங்கி திலீப் வீட்டுக்கு சென்று குடுத்து, நல்ல விஷயத்தை சிறிது வெட்கத்துடனே ஃபரிதா சொல்ல... வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் அவர்களும் இனிப்பை குடுத்து தங்களின் இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்தனர்..😍😍😍
(அட... அதாங்க!!
ஃபரிதா, கவிதா கர்பமாக இருக்கிறார்களே)
நஸிரா விடம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஃபரிதா சொல்ல...தன் கஷ்டத்தையும் மறந்து(மறைத்து) சந்தோஷமடைந்தாள்..
ஃபரிதாவை நஸிரா நன்றாக பார்த்துக்கொண்டார்...அவளுக்கு தேவையானது எல்லாம் பார்த்து பார்த்து செய்து குடுத்தார்...😍😍
சிராஜோ தனக்கு பெண் பிள்ளை தான் என்று கூறி கொண்டு...பெண் பிள்ளை பெற்றால் சும்மாவா??
பெண் பிள்ளைக்கு தான் அதிக செலவே என்று கூறி இப்போதிருந்தே தன் பிள்ளை வசதியாக தான் வாழ வேண்டும் என்று கிடைத்த வேலைகள் அனைத்தயும் செய்து சிக்கனமாக இருந்து பணத்தை மிச்சம் பிடித்து பிடித்து ஃபரிதாவிடம் கொடுத்து வைத்தான்..
வேலை இடையிலும் தன் மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான்..
மனைவி கஷ்டப்படுவதை பார்த்து பொருக்க முடியாமல் இரவிலும் பகலிலும் தொழுது தொழுது அல்லாஹ்விடம் துஆ கேட்டான்..
(என்னப்பா செய்வது...கஷ்டம் வந்தா தானே நம்மல படைச்சவனயே நினைக்கிறோம்)
மாதங்கள் கடந்தன... ஃபரிதாவின் வயிற்றில் குழந்தை துடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்த ஃபரிதா மிகவும் சந்தோஷம் அடைந்தாள்...இதை கேட்ட நஸிரா கண்கலங்கினார்..குழந்தையின் துடிப்பை காது குடுத்து கேட்டவர்...தானே தாய் ஆகிவிட்டோம் என்பது போல பூரித்துப் போனார்...
கண்ணுக்கு தெரியாத சிசு...தான் சுமக்காத சிசுவின் மேலே...தான் பெற்றால் கூட வைத்திராத அளவு அன்பை வைத்திருந்தார்...தன் கணவரிடமும் தான் சுமக்காத சிசுவை பற்றியே சொல்லி கொண்டிருப்பார் நஸிரா..
அவருக்கோ நஸிராவை பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாகவும் மற்றொரு பக்கம் பயமாகவும் இருந்தது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Friends...Last ud la kaetrundheenga...
Muslim girls flowers vaipaangalaanu..
Flowers vaikalaam..
Marriage aahaadha oru girl poo vachitu veliya pohum bodhu andha girl ah cross panra yaaraavudhu oru boy andha poo manakudhunu manasaala ninaichaaalum adhu thavaru nu Islam solludhu...
adhaan Muslim girls mostly veliya pohum bodhu poo vaika maataanga...
And marriage aanavanga, avanga hussy kooda veliyae pohum podhu, avanga hus aasaipattaal vaikalaam...
Idhula yendha thavarum kidaiyadhu
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro