49
ஹேய் ஃபரிதா...அங்கே பாரேன்...யாரோ அழுதுகுட்டு இருக்காப்லே இருக்கு என ரேகா கூறவும்...யாரா இருக்கும் என யோசித்த படி அழுதவளை நோக்கி ஃபரிதா செல்ல ரேகாவும் சென்றாள்...
அங்கு... இரு முட்டுகளுக்கும் மேல் தலையை வைத்து குனிந்து அழுதபடி மரியம் இருக்க...பக்கத்தில் சென்ற ஃபரிதாவும் ரேகாவும் அழுது கொண்டிருந்தவளுக்கு சமமாக அமர்ந்தனர்..
அழுது கொண்டிருந்தவளின் தோளில் ஃபரிதா கை வைக்கவும்...ஏர்கனவே பயத்தில் இருந்தவள் பதரியடித்து வேகமாக தலையை தூக்கி கத்த வந்தவள்.. அந்த இடத்தில் ஃபரிதாவை கண்டதும் தாயிடம் அடைக்கலம் புகும் கன்று குட்டியை போல் ஃபரிதாவை இருக்கி அணைத்து கொண்டாள்...
ஆனால், மரியமின் அழுகை மட்டும் நின்றபாடில்லை... ஹேய்...மரியம் என்னாச்சி.. ஏன் இப்படி அழுகுறே என கேட்டவளின் உணர்வும் சொல்ல முடியாத கட்டுக்குள் சிக்கி தவித்து கொண்டிருந்தது..
ரேகாவும் என்னாச்சி என்றபடி அருகில் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தாளும்... மரியம்க்கு ஏனோ ஃபரிதாவை விட்டு பிரிய மணம் இல்லாமல் அப்படியே கட்டியபடி இருந்தாள்...
ஹேய்... மரியம்..ஏன் அழுதுட்டு இருக்கிறே என்றபடி வந்த ப்ரஸியை பார்த்த ரேகா...
நாங்க வந்ததுல இருந்து அழுதுட்டு தான் இருக்கா...ஏன் அழுகுறானு கேட்டாலும் சொல்ல மாட்டிக்கிறா என்றவளிடம் நோ மேம்...நான் இப்பதான் அவளை இங்க இருக்க வச்சிட்டு வாஷ் ரூம்க்கு போனேன்...அதுக்குள்ள என்ன ஆச்சினு தெரியலயே என்று கூறிய ப்ரஸி என்ன ஆச்சி மரியம்...ஏன் இப்படி அழுவுறா என மரியமை எழுப்பி கேட்டாள்...
எனக்கு எதுவுமே தெரியாது...நான் உனக்காக இங்கே வெயிட் பன்னிட்டு இருந்தேன்...அப்ப யாரோ என் பின்னாடி வந்து என்னை இழுத்தாங்க... அப்புறம் என் ட்ரெஸ்ஸ என கூறி தன் முதுகின் பக்கம் கையை வைத்து பிடித்தவள் மறுபடி அழுகவும்... ஹேய் அழாதேமா...வேற எதுவும் என இழுத்த ஃபரிதாவிடம் நோ மேம்...நோ மேம் என வேகமாக தலையாட்டிய மரியமை சமாதானம் படுத்தினார்கள்...
நீ முகத்தை பார்த்தியா என கேட்ட ப்ரஸிடம் இல்லை..அது யாருனு தெரியலே... கையை மட்டும் தான் பார்த்தேன்...அது ஒரு பையன்...அவன் கோல்ட்ல க்ளோஸ்ட் வாட்ச் கட்டிருந்தான் என அழுத படியே கூற..ஏதோ சொல்ல வந்த ப்ரஸியிடம்...நீ போய் வேற ட்ரெஸ் எடுத்துட்டு வா மா என ஃபரிதா கூற...சரி மேம் என்றபடி விடுதியை நோக்கி சென்றாள் ப்ரஸி...
மரியமை ஒரு வழியாக அழுகையை நிறுத்த வைத்து அவளுக்கு..ஃபரிதாவும் ரேகாவும் தைரியம் கூறி கொண்டிருந்தனர்...
ப்ரஸி ஆடையை கொண்டு வரவும்...நீ வாஷ் ரூம்ல போய் மாத்திட்டு வா மா என ஃபரிதா கூற...ஏனோ மரியம்க்கு மறுபடியும் பயம் வர ஃபரிதாவின் கையை இறுக்கி பிடித்து கொன்டாள்...
அவளின் பயத்தை புரிந்து கொண்ட ஃபரிதா... வா மா என மரியமை அழைத்து செல்லவும்...ரேகாவும் ப்ரஸியும் அவர்களுக்கு பின்னால் சென்றனர்..
அவள் உள்ளே போய் ஆடையை மாற்றி கொண்டு வரவும்...நீ ஹாஸ்டல்க்கு போய் எதை பற்றியும் நினைக்காம ரெஸ்ட் எடு மா என ஃபரிதா கூறி...நீ மரியம் கூடவே இருந்துக்கோ மா என ப்ரஸியிடம் கூறினாள்..
இருவரும் சரி என தலையசைத்து விட்டு விடுதியை நோக்கி சென்றனர்...
மரியமை படுக்க வைத்த ப்ரஸி எதுவும் பேசாமல் தலையை வருடி குடுக்கவும்...அந்த நட்பின் வருடலில் சுகம் கொண்டவள் எதுவும் பேச தோன்றாமல் கண்களை மூடி இருக்க... சிறிது நேரத்தில் அப்படியே உறங்கி போனாள்...
.
.
.
ஹ்ம்ம்...ஃபரிதா...நாம்ம இத பத்தி ஹச் ஓ டி கிட்ட சொல்லலாமா என ரேகா கேட்கவும்...இல்லை...வேண்டாம்...எதுவும் நடக்காமயே ஒன்னுக்கு ரெண்டா பேசுற உலகம்...அவ ஆல்ரெடி ரொம்ப பயந்திக்கிறா...இப்ப இத நம்ம சொல்லி எதுவும் தப்பா நடந்துற கூடாது என ஃபரிதா கூறினாள்...
இல்லை ஃபரிதா...இந்த விஷயம் வெளியே தெரிஞ்சிடுச்சுனா நாம்ம தான் கூட இருந்தோம்னு கேள்வி மேல கேள்வி கேட்பாங்க என ரேகா இழுக்கவும்....சிறிது யோசித்தவள் எது வந்தாலும் பரவாயில்லை...பார்த்துக்கலாம் என கூறி ரேகாவின் வாயை அடைத்தாள் ஃபரிதா..
.
.
.
டேய்...என்ன...அர்ஜூன் தெளிவா பார்த்தானா...அவன் ரியாக்ஷன் எப்படி இருந்துச்சி என சிவா கேட்க..
பயன் செம்ம கனவோட வந்தான் டா...நீங்க இருந்த நிலமையை பார்த்துட்டு நொருங்கி போயிட்டான் டா என கூறி குரோதமாக சிறித்தான் மதன்..
அது சரி டா... அர்ஜுன் வருவானு உனக்கு எப்படி தெரியும் என கேட்ட வினீத்திடம்..
ஹ்ம்ம்...அவன் வினை கிட்ட சொல்லிட்டு இருந்தான்...ப்ரஸி கிட்ட லவ்வ சொல்ல போறேனு...அது சரியா என் காதுல விழுந்துச்சி...அதோட உங்களுக்கு மெஸேஜ் பன்னி வர சொல்லிட்டு... அர்ஜூன் வர்ரதுக்கு முன்னாடியே நான் முந்திக்கிட்டேன் என கூறிய சிவா..
இதுல நானே எதிர்ப்பார்க்காத ஒன்னுனா ப்ரஸினு நினைச்சி அவள் ஃப்ரெண்டு மரியம பிடிச்சது தான்...ஆனா, அதுலையும் அவங்க ட்ரெஸ் கோட் என்னை காப்பாத்திச்சி.. நான் நினைச்ச மாதிரி அர்ஜூன் பார்த்தான்...இனி ப்ரஸி பக்கம் கொஞ்சம் கூட திரும்ப மாட்டான் என சிவா கூறி சிரிக்கவும் மதனும் வினீத்தும் சேர்ந்து கொண்டனர்...
.
.
.
மரியம் தூங்கியதும்...சிறுது நேரம் அமர்ந்த படி அவளையே பார்த்திருந்தவள்...அங்கு இருந்து மெதுவாக எழுந்த படி வெளியே வந்த ப்ரஸி...ஒரு மரத்தின் அருகில் இருந்த படிக்கல்லில் அமைதியாய் அமர்ந்து சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தாள்..
அவளை நோக்கி அர்ஜூன் வந்து கொண்டிருந்தான்..
இவன் எதுக்கு இங்கே வர்ரான் என யோசித்தபடி ப்ரஸி எழுந்து கொள்ளவும்...அர்ஜூன் அருகில் வரவும் சரியாக இருந்தது..
என்ன அர்ஜுன் என கேட்ட ப்ரஸியை பார்த்தவன்...ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அதே நேரம் ஆழமாய் பார்த்தவன் ஒரு பெரு மூச்சை விட...
என்னாச்சி அர்ஜூன் என கேட்டவளை நோக்கி முன்னாள் அடி எடுத்து வைத்தான்..
அவனின் செயல் புரியாமல் இருந்தாலும்..அவள் கால் ப்ரஸி சொல்லாமலே பின்னால் அடி எடுத்து வைத்தது...
அடி எடுத்து வைத்த படி பின்னால் சென்றவள் மரத்தில் மோதி நிற்க..
அவளின் அருகில் நெருங்கியவன் அவர்களுக்கு இடையில் நூலளவு கூட இடமில்லாமல் நின்றபடி அவளை பார்க்க..
அவளோ மேல் மூச்சு...கீழ் மூச்சு என எல்லா மூச்சையும் இழுத்து பிடித்த படி நின்று கொண்டிருக்க மெலிதாய் இடையில் கை வைத்தவன் அவனோடு சேர்த்து அவளை அனைத்து காதில் ஏதோ கூறவும் அதிர்ச்சியில் சிலையென நின்றவளை கோவமாக பார்த்தான் அர்ஜூன்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro