48
தன் கூடவே வைத்திருந்த ஆஷிஃப் வாங்கி தந்த டெடியை எடுத்து பேச ஆரம்பித்தாள் மரியம்...
இன்னைக்கு என் பெர்த் டே டா...ஒரு விஷ் பன்னியா நீ...இந்த ஆஷாவ நீ மறந்துட்டியா??
ஹ்ம்ம்...உனக்கு என்ன??
ஃபாரீன்ல போய் ஜம்முனு இருப்பே...என்னைலாம் எப்படி நியாபகம் இருக்கும் என டெடியை பிடித்து கொஞ்சியவள்..
ஹேய்...ஆஷிஃப்..என் வாழ்க்கைலயே இந்த பெர்த் டே தான் ரொம்ப ஸ்பெசலா போச்சி...
ஆனால், நீ ஒரே ஒரு விஷ் பன்னிருந்தா அதை விட ஸ்பெசல் எனக்கு எதுவுமே இல்லை என டெடியின் பளிங்கு கண்ணை தொட்டவள்..
இன்னொன்னு தெரியுமா??
இன்னைக்கு ஒரு இடியட்...என்னை ரொம்ப திட்டிட்டான்...அசிங்கமா பேசிட்டான்...நீ மட்டும் அந்த இடத்துல இருந்தா அவன் மூஞ்சை உடைச்சிருப்பா...நீ இல்லாத தைரியத்துல அந்த பக்கி திட்டிட்டு போயிடுச்சி என அந்த டெடியை எடுத்து தன் மேல் வைத்தவள்..
ஹ்ம்ம்...சரி வா..நாம்ம தூங்கலாம்...ஹ்ம்ம்...உன்னை கட்டி பிடிச்சிட்டு தூங்கவா?? இல்லை...இல்லை...நீ உன் கைய கால வச்சிட்டு சும்மா இருக்க மாட்டே.. சோ, இப்படி படுத்துகோ என கூறியவள் பக்கத்தில் டெடியை வைத்து தூங்கினாள்😍😂..
.
.
.
அடுத்து சில நாள் எப்பையும் போலே கலாட்டா, பாடம் என நகர...
ஆஷிஃப் அதிகமாக ஆஷாவிடம் வாட்பேடில் பேசா விட்டாலும் சிறு சிறு வார்த்தைகள் பேசிக் கொண்டார்கள்..
அர்ஜூன் ப்ரஸியின் பார்வை பரிமாற்றங்களும் அதர்க்கு ஏற்ப்ப செல்ல..அதை சிவாவும் கவனித்து தான் கொண்டிருந்தான்...
அர்ஜூனை ஏதாவது செய்யனும் என யோசித்து கொண்டிருந்தான் சிவா...
அர்ஜூனுக்கும் ப்ரஸிக்கும் நடுவில் இதை வழர விட கூடாது என வில்லங்கமாக யோசித்தான் சிவா..
.
.
.
இன்றைக்கு நஸிரா, செய்யது கல்யாண நாள் என்பதால் காலையிலயே அவர்களுக்கு கைப்பேசியில் வாழ்த்து கூறியவர்கள்...
இன்று ஒரே மாதிரி ட்ரெஸ் போடலாம் என சிகப்பு நிற சல்வாரை ப்ரஸி எடுக்க....மரியமும் அதையே போட்டு கொண்டாள்...
இந்த பக்கீஸ்...காலேஜ்ல பாதி நாளு ஒரே மாதிரி தான் போட்டு வருதுங்க என ஷாலினி கூற எல்லோரும் ஆமோதித்தார்கள்...
அவர்களிடம் சென்று வழக்கமாக அடிக்கும் அரட்டையை அடித்து விட்டு...அவர்அவர்கள் வகுப்பிர்க்கு சென்றார்கள்..
.
.
ஹேய்...எனக்கு ஒரு மாதிரியா தலைலாம் சுத்துராப்ல இருக்கு என சுதா கூற அவளை மரத்தடியில் அமர வைத்து தண்ணீர் குடுத்தவர்கள்...
நீங்க இங்கே இருங்க...நாங்க போய் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரோம் என ப்ரஸியும் மரியம்மும் நகர்ந்தார்கள்...
ப்ரஸி கேண்டீன் பக்கம் செல்வதை கவனித்த சிவா...அவர்கள் பின்னால் சென்றான்..
.
.
எப்பா... இன்னைக்கு செம பசியா இருக்கு...ஏதாச்சிம் சாப்பிட்டுட்டு க்ளாஸ் க்கு போலாம் என்றபடி கேண்டீன்க்கு சென்றான் அவன்..
.
.
இன்னைக்கு ப்ரஸி கிட்ட காதலை சொல்லிரலாம் என யோசித்தபடி வந்தவன்...
அங்கே சுதா, சந்தியா மற்றும் ஷிவானியை பார்த்தவன்... ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...என்ன ரெண்டு டிக்கெட் கம்மியா இருக்கு என்றபடி அர்ஜுன் வர...
ஹ்ம்ம்...ரெண்டு பேரும் கேண்டீன் போயிருக்காங்க...இந்த குரங்கு மார்னிங் சாப்பிடாம வந்து...முடியாம கிடக்குது என ஷிவானி கூற...சுதாவை முறைத்தவன்.. அவர்களிடம் பேசி விட்டு கேண்டீனை நோக்கி நடந்தான் அர்ஜுன்..
.
.
ரேகா...வா...ஏதாச்சிம் சாப்பிட்டுட்டு வரலாம் என ஃபரிதா அழைக்க.. ஏன்..மார்னிங் சாப்பிடலயா என்றபடி வந்த ரேகாவிடம்...எங்க வீட்டுல ஒரு அறுந்த வாழு இருக்கே...அதை வச்சிட்டு எங்கே சாப்பிட...காலைல எந்திரிச்சா அதை ரெடி பன்னி ஸ்கூல்கு அனுப்புறதுக்கே டைம் சரியா இருக்கு என ஃபரிதா கூற...ஹாஹா..சரி சரி...இந்த புக்ஸ நம்ம டிப்பார்ட்மென்ட்ல வைச்சிட்டு போலாம் என ரேகா சொல்ல...இருவரும் டிப்பார்ட்மென்ட்க்கு சென்றனர்...
.
.
மரியம்...நான் வாஷ் ரூம் போயிட்டு வரேன் என கேண்டீன்க்கு அருகில் இருக்கும் வாஷ் ரூம்க்கு ப்ரஸி செல்ல...
சரி...நான் இப்படி இருக்கிறேன் என்றபடி அமர சென்றவள்...ச்சே...சரியான வெயில் என சுற்றி முற்றி பார்த்தவள் யாரும் இல்லாமல் இருக்க...அவளுடைய துப்பட்டாவை எடுத்து நெஞ்சை மறைத்து இரு தோளிலும் போட்டவள்... முகத்தை துப்பட்டாவல் துடைக்க...
பின்னாலிருந்து பார்க்க ப்ரஸி போல் இருக்கவும்...கோவமாக பார்த்தவன்... பின்னிரிந்து வேகமாக அவளின் முதுகு பக்கமாக சிவா இழுக்க...இதை சற்றும் எதிர்பார்க்காத மரியம் சிவாவின் மேலே விழ...அவளின் துப்பட்டா அவள் முகத்தை மறைத்தன...
ப்ரஸியை பார்க்க ஆசையாய் வந்த அர்ஜூன்....ப்ரஸியை பின்பக்கமாக சிவா கட்டிபிடித்ததை போலும் அவன் நெஞ்சில் ப்ரஸி சாய்ந்து கிடப்பதை போலவும் பார்த்தவன்.. தலையில் இடி விழுந்ததை போல உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜூன்...
பிடித்து இழுத்தவனின் திடீர் செய்கையில் அதிர்ந்தவள் முகத்தை இரு பக்கமும் ஆட்டி எழும்ப முயல...அவள் முகத்தை ஆட்டியதால் அவள் முகத்தில் மேல் இருந்த துப்பட்டா விலக..
பசிக்கு சாப்பிட வந்தவன்..
அவள் இப்படி ஒருத்தன் மேல் விழுந்து கிடப்பதை அருவருப்பாக பார்த்தவன்... ச்சே...பொண்ணா இவ...இவ்வளவு அசிங்கமா அவன் மேல படுத்து கிடக்குறா...என்னை மாட்டி விட்டு அவனுக்கு இடம் குடுத்திக்குறா..வெளியே அழகு...உள்ளே அழுக்கு...ச்சை...என்றபடி நகர்ந்தான் அவன்...
ஹேய்...ப்ச்ச்...விடுங்க..யாரிது என மரியம் எகிற...அவளின் குரலை கேட்டவன்...ச்சே...ப்ரஸினு நினைச்சி தப்பா நடந்துக்க வந்தா...அவ ஃப்ரெண்டு இருக்காலே என நினைத்தவன் அவளை முன் பக்கமாக தள்ளி...அவனின் முகத்தை பார்க்க முடியாத வண்ணம் ஓடி விட்டான் சிவா...
என்ன நடந்துச்சி என சுதாரித்து எழுந்தவள்...சுற்றி முற்றி பார்க்க...அப்பொழுது தான்..தன் நிலையை உணர்ந்தவள் இரு கால்களையும் பின்பக்கமாக அடி எடுத்து வைத்து பின்னால் இருந்த மதலில் சாய்ந்த படி அமர்ந்து அழுதால் மரியம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro