44
அழகாக புன்னகைத்தவள்....தலையை குனிந்து......ஆ... என இழுக்க..
எல்லோரும் அவளின் முகத்தையே ஆச்சிரியமாக பார்க்க...
ஹ்ம்ம்...அது வந்து என இழுத்தவளை...
ஹு...சீக்கிரம் சொல்லு மா...இப்படி அநியாயத்துக்கு வெட்கம் படாதே... தாங்க முடியலே என அர்ஜூன் கூற...
ஈஈஈஈஈ...வெட்கம்லாம் இல்லை...அது சைல்ட் ஹூட் ஃப்ரெண்டு என்றால் மரியம்...
அதுக்கு ஏன் மா இவ்வளவு தடுமாற்றம்..
நீ தடுமாறுறத பார்த்த நாங்க கண்டிப்பா என்னன்னு தெரிஞ்சிக்கனுமே என ப்ரவீன் கூற...
ஃபர்ஸ்ட் நேம் என வினை கேட்க...
ஆஷிஃப் என புன்னகைத்த படி கூறினாள் மரியம்..
ஹ்ம்ம்...குற்றம் நடந்தது என்ன என அர்ஜூன் கேட்க...
விஜை டிவி ல போடுவான் என ப்ரஸி கூற...அவளை முறைத்த அர்ஜூன்...ப்ரஸி அர்ஜூனை கூர்ந்து பார்க்கவும்..அர்ஜுன் சிரித்து விட்டான்..
ஓய்...நீ சொல்லு என ப்ரவீன் கூற அட...நீ சொல்லு பா...எல்லோரும் ஆவலா இருக்காங்களே என ப்ரஸி கூற...
ஹ்ம்ம்...நானும் ஆஷிஃபும் ஒன்னா ஃபர்ஸ்ட் ஸ்டேன்டர்ட் படிச்சோம் என மரியம் கூற...
ஃபர்ஸ்ட் ஸ்டேன்டர்ட்லயேவா என மற்றவர்கள் வாயை பிளக்க...
ஹ்ம்ம்...எஸ்...அவன் ரொம்ப கஷ்டப்பட்ட பயன்...அவனை பசங்க சேர்த்துக்க மாட்டாங்க...நான் தான் பேசுனேன்...நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்..
அவனுக்கு லட்டுனா ரொம்ப பிடிக்கும் என கூறவும் அவளின் முகம் சிவந்தது...
(இதை மற்றவர்கள் கவனித்து கொண்டிருந்தார்கள்)
அவன் பக்கத்துல யாராச்சும் உட்கார்ந்தா கூட எனக்கு கோவம் வரும்...எங்க ம்மா அவன் மேலே பாசமா இருப்பாங்க...
நாங்க ஜோடி புறானு ஒரு கேம் ல கலந்துகுட்டு தோழா தோழா சாங்க் பாடுனோம்...
ஹேய்...அது ஃப்ரெண்ட் ஸிப் சாங்க் தான் என அர்ஜூன் கூற..
அந்த படத்துல தான் அவங்க சேர்ந்துருவாங்களே என ஒரு ஆதங்கத்தில் கத்தியவள் நாக்கை கடித்து கீழே குனிந்தாள் மரியம்...
சைல்டு ஹுட் ஃப்ரெண்டு என ஷாலினி கேட்க ஹ்ம்ம்ம்ம் என இழுத்த மரியமிடம் யூ கண்டினியூ என ப்ரஸி கூற...
இதுலாம் உனக்கு தெரியாதா ப்ரஸி என அர்ஜூன் கேட்க...தெரியாது என மரியமை முறைத்தாள் ப்ரஸி...
அதை கண்டுக்காதவள் போல...
அப்புறம் ஆஷிஃப் ம்மா வஃபாத் ஆனது...லாஸ்ட்டா அவன் எனக்கு டெடி தந்தது...நான் ஆஷிஃப்க்கு ஏ லாக்கேட் போட்ட செயின் குடுத்தது என மரியம் கூற..
ஆஷிஃப் நேம் க்காக ஏ வா என கேட்க...
இல்லை என் நிக் நேம் ஆஷா...சின்ன வயசுல அப்படி தான் எல்லோரும் கூப்பிடுவாங்க...
ஆஷா...ஆஷிஃப்னு தான் ஆஷிஃப் சொல்லுவான்..
அவன் துபாய்க்கு போனதுக்கு அப்புறம் எனக்கு ஏனோ அந்த நேம கேட்க ஒரு மாதிரி இருந்துச்சி என சொன்னவளின் கண்கள் சிறிதாக கலங்கியது...
ஆஷா...நேம் ரொம்ப நல்லாயிருக்கு...நீ அந்த நேம மாத்திக்கிட்டதாலே உன் பக்கத்துல ஆஷிஃப் இருந்தா கூட ஆஷிஃப்க்கு உன்னை தெரியாது என ஷிவானி கூற...அதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள்...
ஹ்ம்ம்...அதுக்கப்புறம் நீ ஆஷிஃப பார்க்கவே இல்லையா என ஆஜித் கேட்க...
இல்லை பார்க்கலை என கூறியவள்...அவனை பத்தி ஒரு சின்ன க்ளூ கூட என் கிட்ட இல்லை என மரியம் வருந்தினாள்...
.
.
.
.
வாப்பாவை உள்ளே அழைத்து சென்றவன்... ரியாஜ் கலைப்பாக இருப்பதால் அவரை தூங்க வைத்தான் ஆஷிஃப்...
அவர் தூங்குனதும் தன் கபோர்டை திரந்தவன்...அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்தவன் ஹேப்பி பர்த்டே ஆஷா என அவர்களின் சின்ன வயது புகைப் படத்தை பார்த்து கூறியவன்...
எல்லோரும் பெர்த் டே பேபிக்கு தான் கிஃப்ட் குடுப்பாங்க...நீ மட்டும் கொஞ்சம் டிஃபெரெண்ட் லட்டூ...நான் என்ன சொல்ல வர்ரேனு உனக்கு புரியலையா???...
உன் பெர்த் டே அன்னைக்கு எங்க வாப்பாவே எனக்கு கிஃப்ட்டா கிடைச்சிக்கிறாங்க...
நான் படிப்ப முடிச்சு கோயம்பத்தூருக்கு வருவேன் லட்டு...அப்படியே உன்னை அல்லேக்கா சென்னைக்கு தூக்கிட்டு வந்துருவேன்...அப்புறம் ஃபுல்லா நீ என் தொல்லைய தாங்கிட்டு இருக்கனும்...
😍😍😍😚😚
ஐயையோ நினைச்சி பார்க்கும் போதே செம்மயா இருக்கே...லவ் யூ டி லட்டு குட்டி என கூறி புகைப்படத்தை பத்திரப் படுத்தியவன்...
ச்சே...இன்னைக்கு காலேஜ்ல வாலன்டியர்ஸ் வர சொன்னாங்களே...மறந்துட்டோமே... சரி அதுக்கு என்ன இப்ப போவோம்...நம்ம காலேஜ்...நம்ம இஷ்டம்..எப்ப போனா என்ன என நினைத்த ஆஷிஃப் கல்லூரிக்கு சென்றான்...
.
.
.
.
.
மழை தூரலாக இருப்பதால் பீச்க்கு இப்ப போனா சூப்பரா இருக்கும் என நினைத்தவர்கள்...
பீச்சுக்கு சென்று அமர்ந்தார்கள்...
நாங்க ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வர்ரோம் என வினையும் அர்ஜுனும் சென்றனர்..
ஆமா ப்ரஸி...நாங்க மார்னிங் வரும் போது சிவா வந்து பேசுனானே...என்ன...எதுவும் ப்ராப்ளமா என சந்தியா கேட்க...
நடந்ததை சொன்னால் ப்ரஸி...
(அவள் அர்ஜுன் என சொன்னதை...பாவம்...இன்னும் அவளே உணரவில்லை..
அதனால் அதர்க்கு முன்னாள் வரை சொன்னாள்)..
ஓ...அப்ப சிவா உன்னை லவ் பன்றான் என மயூரி கேட்க...
ஹ்ம்ம் ஆமா...ஆனால், சிவாவ நல்லா திட்டி தீர்ப்பா ப்ரஸி என கூறி மரியம் சிரித்தாள்...
உனக்கு சிவாவ ஏன் பிடிக்கலே என ஷாலினி கேட்க...தெரியலே ஏனோ பிடிக்கலை என கூறினாள்...
அங்கே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro