42
இவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்து மீளவே நிமிடங்கள் ஆனாலும்...அடியில் சுருண்டு கிடந்தவனை தரதரவென இழுத்து மாடியில் இருந்து கீழே செல்ல...அவனோ வழியில் கத்தியபடியே இருந்தான்...
ம்மா என வீடே அதிரும் படி கத்த...வீட்டில் இருந்தவர்கள் என்னவோ ஏதோ என அலறியபடி வந்தனர்..
முஸ்லி...மேலே பானு இருக்கிறா...எழுப்பி கூட்டிட்டு வா என ரியாஜ் கூற...சரி மச்சான் என சென்று விட்டாள் முஸ்லிஹா..
மற்றவர்கள் ரியாஜையும் அவனையும் மாறி மாறி பார்க்க...ஜைனம்ப் முகத்தில் ஈ ஆடவில்லை...
டேய்...யாருடா இது...இவன் எப்படி நம்ம வீட்ல...அதுவும் இவ்வளவு ரெத்தகளரியா என ரியாஜின் தாய் கேட்க...
சொல்லுங்க... கேக்குறாங்களே...ஏன் அமைதியா இருக்கீங்க..நான் தான் என் சொந்த காகா மகனோட பொண்டாட்டியை இவனுக்கு கூட்டி குடுத்தேன்...நான் தான் என் காகா மகளையும் கூட்டி குடுத்தேனு சொல்ல வேண்டியது தானே என ரியாஜ் ஜைனம்பை பார்த்து கூறி முடிக்க ரியாஜின் கண்ணம் பழுத்தது...
டேய்...யார பார்த்து என்ன டா சொல்லுறே...அவ உங்க வாப்பாக்கு தங்கச்சி டா...உனக்கு மாமி...அத நீ மறந்துட்டியா என ரியாஜின் தாய் கேட்க...
சொல்லு டா நாயே...என்ன நடந்துச்சினு என ரியாஜ் அவனை அடிக்க... ஐயோ அடிக்காதீங்க...நான் சொல்லுறேன் என பதரியவன் நடந்த அனைத்தையும் கூறினான்...
இதை கேட்ட ரியாஜின் தாய் அதிர்ச்சியாக இருக்க...அடுத்த அதிர்ச்சியாய்...
ஆமா...நான் தான் இதெல்லாம் செய்ஞ்சேன்...மாப்பிள்ளையை விட்டு பிரிஞ்சி வந்துட்டானு என்னையும் என் பொண்ணையும்..என் காகா சேர்த்துக்குட்டாலும்...எங்களுக்குனு என்ன தந்தாங்க...
வாங்குற சொத்தெல்லாம் உனக்கும் உன் தங்கச்சிக்கும்னு வாங்கிட்டு எங்கள அம்போனு விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு..
சரி...சொத்து தான் இல்லை...என் பொண்ணு ஆசைப்பட்ட உன்னை அவளுக்கு கட்டிவச்சி பாதி சொத்தையாவுது அடையலாம்னு பார்த்தா...நீ ஒருத்திய காதலிச்சி கல்யாணம் பன்னிக்கிட்டு ஒரு பையனையும் பெத்துட்டு சந்தோஷமா இருப்பா...
அதை பார்த்துட்டு நாங்க பொறுமையா இருக்கனுமோ??
அதான் பல நாள் போட்ட திட்டம் படி.. எல்லாம் கச்சிதமா முடிஞ்சுத்து...அப்படியே உன் தங்கச்சியையும் இவன் சீரழிச்சிருந்தா...அவளும் தூக்குல தொங்கிருப்பா...சொத்தும் எங்களுக்கு கிடைச்சிருக்கும் என கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கொடூறமாக பேசியவளின் இரன்டு கண்ணத்தில்லயும் மாற்றி மாற்றி அறைந்த ரியாஜின் தாய்..
உன் காகா...மௌதாபோற(இறக்குற) நேரத்துல கூட என் தங்கச்சியையும் என் தங்கச்சி பிள்ளையையும் பத்தரமா பார்த்துக்குங்கனு சொல்லிட்டு உங்க நினைப்பில தான டி வஃபாத்(இறந்துட்டாங்க) ஆனாங்க..
அவரோட பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்க உனக்கு எப்படி டி மனசு வந்துச்சு...உனக்கும் ஒரு பொண்ணு இருக்காலே டி என மாறி மாறி அறைந்தவரின் முடியை கெத்தாக பிடித்த ஜைனம்ப்...
அந்த பழைய கால வீட்டில் உள்ள தூனில் ரியாஜின் தாயின் நெற்றியை வேகமாக இடித்து தள்ள...
ரியாஜ் சுதாரிப்பதர்க்குள்...ஜைனம்ப் மறுபடியும்...ரியாஜ் தாயை அந்த தூனில் தள்ள...
ஏய் என கத்தியபடி ஜைனம்பை அடிக்க செல்ல...அதர்க்குள் ரியாஜின் தாய் அவன் மடியில் இரத்த வெள்ளத்தில் வஃபாத் ஆகி கிடந்தார்...
உன்னை சும்மா விட மாட்டேன் என ஜைனம்பின் கழுத்தை ரியாஜ் நெரிக்க போக...
ஹலோ மச்சான்...இங்க பாருங்க...உங்க அருமை தங்கைய என விஷமமாக முஸ்லி கூற..
ரியாஜ் அவர்களை பார்க்க...பானு போதை மயக்கத்தில் இருந்து விடுபடாமல் அறை குறை மயக்கத்தில் இருக்க...அவளை மேல் மாடி படிக்கட்டில் நின்ற படி..பிடியின் அந்த பக்கமாக பானுவின் தலையை வைத்து நிறுத்தி இருந்தாள்...
ஹேய் பானு, பானு, பானு மா என கத்தியவன்..
ஏய் முஸ்லி...வேண்டாம் டி...அவ உன் கூட ஒரு தோழி மாதிரி தானே பழகுனா...அவள விட்று டி என ரியாஜ் கூற...
நான் விட்டா...இவ கீழே விழுந்துருவாலே...சோ, இப்ப நீ என்ன செய்யுறேனா...எங்க ம்மா தர பத்திரத்தில சைன்( sign) பன்றே என முஸ்லி வில்லிதனமாக கூற...
ஹேய்...என்ன சொல்றே என கேட்ட ரியாஜிடம் ஹ்ம்ம்...சொத்த எழுதி குடுத்துட்டு உன் தங்கச்சிய கூட்டிட்டு போ என முஸ்லி கூற...
வேற வழி இல்லாமல் ஜைனம்ப் குடுத்த பத்திரத்தில் சைன் பன்னிவிட்டு அவன் தங்கையை நோக்கி வர...
கொஞ்சமும் இரக்கமில்லாமல் பானுவை மேல் மாடியில் இருந்து தள்ளி விட்டாள் முஸ்லி..
பானு என கத்தியபடி அவள் அருகில் ஓட...பரிதாபமாக அவள் உயிர் உடலை விட்டு வெளியேறியது..
.
.
.
.
ஒரே நேரத்தில் தாய்யையும் தங்கையையும் இழந்தவன் என்ன செய்யிரோம் என்பது கூட தெரியாமல் இருவரையும் பக்கத்தில் இருந்த இளநீர் வெட்டும் அருவாளை எடுத்து சரமாரியாக தாக்கி கொன்றான்..
முஸ்லியும் ஜைனம்பும் துடி துடிக்க இறந்த பிறகே...தான் செய்த காரியத்தின் வீரியத்தை புரிந்தவன்...ஃபாத்திமாவையும் ஆஷிஃப் பையும் மனதில் நினைத்து அழுதவன்... காவல் நிலையத்திர்க்கு சென்று நடந்ததை கூறினான் ரியாஜ்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro