38
இவனை எதுக்கு டா இங்க கூட்டிட்டு வந்தா என்று கேட்டவரை....
அதான் சொன்னனே மா...பாவம்...யாருமில்லாம தனியா நடு ரோடுல மயங்கி கிடந்தாங்க...இவங்க இங்க இருக்கட்டும் மா என்றவனிடம்..
கண்டவனையும் தங்க வைக்க இது ஆசிரமம் இல்லை என கூறியவரை..
எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர்...பிறவியிலேயே இரக்க குணம் கொண்டவர்...அவரின் பிள்ளைகள் பேரன்களுக்கும் அதையே கற்றுக்குடுக்க..இவர் இவ்வாறு பேசுவார் என யாரும் எதிர்பார்க்காமல் இருக்க...வந்தவர் மட்டும் புரிந்துகொண்டார்..
பரவாயில்லை தம்பி...நான் தான் சொன்னேன்லே...நான் பாவம் செய்ஞ்சவனு...நான் போறேன் என அங்கிருந்து செல்ல...இவனும் அவர் பின்னால் ஓடினான்..
.
.
.
ஓய்...என்ன...சீனியர் கொஞ்சல்ஸ் போல என கேட்ட ஷிவானியிடம் வேண்டாம் டி...ஓடிடு..இருக்குற டென்ஷன்ல உன்னை கொண்ணுடுவேன் என ப்ரஸி கூறி கொண்டிருக்க...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்றபடி அர்ஜுன், ஷாலினி வகுப்பிற்க்குள் நுழைய...
இதோ வந்துட்டாங்க...இவங்களாம் படிக்கவே மாட்டாங்க போல என ப்ரஸி கூற...அத ஒரு படிப்ஸ் சொல்லுதுடா என சந்நியா வாரினாள்...
அடி நாயே...நீ சுதா கூட தானே பேசிக்கிட்டு இருத்தே...இது எப்படி உன் காதுல விழுந்துச்சி என்ற ப்ரஸியிடம்...எனக்கு சுத்தி இருக்குற யாரு பேசுனாலும் கேட்டுடும் என்று சந்தியா கெத்தாக சொல்ல...
ஈஈஈஈ...தூதூதூ...ஒட்டு கேட்டுட்டு என்னம்மா சீன் போடுது பக்கி என ப்ரஸி கூற...ஹி..ஹி...என இழித்தாள் சந்தியா..
.
.
அண்ணா...உங்க ஜோடி சூப்பர்ணா என பின் இருக்கையில் உள்ளவன் கத்தியபடி அர்ஜுன், ஷாலினியை பார்த்து கூற..
அப்படியா...தேங்க்ஸ் தம்பி என கூறியபடி ஷாலினியின் தோளில் கையை போட்டவன் ஓரக் கண்ணால் ப்ரஸியை பார்க்க...
அவளோ பின் இருக்கையில் உள்ளவனை முறைத்தபடி அர்ஜுனை பார்க்கவும்.. அர்ஜூன் தன்னை தான் பார்க்கிறான் என உணர்ந்தவள் ச்சே என தலையில் தட்டி கொண்டாள் ப்ரஸி...
இதை பார்த்தவன் நன்றாக சிரித்து என்ன செய்ய தம்பி...இந்த பூ பரத்க்கு சொந்தமானது என சிரித்தபடி அர்ஜூன் ப்ரஸியை பார்க்க அவளும் சிரித்து விட்டாள்...
(வகுப்பில் உள்ள அனைவரும் தான் சிரித்தார்கள்...ஆனால், நம்ம அர்ஜுன்க்கு ப்ரஸி மட்டும் சிரித்ததாக ஒரு பிரமை போலும்)..
சரி ஃப்ரெண்ட்ஸ்...நாங்க சொல்ல வந்தத சொல்லிடுறோம்...காலேஜ் ஃபர்ஸ்ட் டே சொல்லிருப்பாங்க வாலன்டியர்ஸ் பத்தி..
இன்ட்ரஸ்ட் இருக்குறவங்க நேம் குடுங்க என அர்ஜுன் கேட்க...எத்தனை பேர செலக்ட் பன்னுவீங்கணா என சுதா கேட்க..
ஈஈஈஈ...வாலன்டியர்ஸ்ணா ஏதோ எல்லோரும் தெரிச்சி ஓடுறாங்க...இதுல செலக்ஸன் வேறயா...எத்தனை பேர்ணாலும் ஓகே தான்...செலக்ட்லாம் பண்ண மாட்டோம் என ஷாலினி கூறவும்...
அப்ப நாங்க அஞ்சி பேரு என சுதா கூற...நான் வரலே என்றாள் மரியம்...அப்ப நானும் என்றால் ப்ரஸி..இப்படியே நானும் நானும் என மற்றவர்களும் பின் வாங்க சுதா எல்லோரையும் முறைத்து கொண்டு நின்றாள்..
ஹு...நாங்க வரலே ப்ரோ என சுதா கூற...ஹிஹி..நினைச்சேன் என அர்ஜுன் கூறி..ஆர்வம் இருக்குறவர்களின் பெயரை மட்டும் எழுதி கொண்டு சென்றான்...
( செல்லும் போது ப்ரஸியை பார்த்து கண்ணடிக்க தவறவில்லை...அர்ஜூன் கண்ணடித்ததை பார்க்கவும் தவறவில்லை)..
.
.
ஃப்ரீ ஹார் என மரத்தடியில் அமர்ந்த படி பேசிக் கொண்டிருந்தவர்களிடம்...நான் வாஸ் ரூம் போயிட்டு வந்துரேன் டி என கூறி ப்ரஸி சென்றாள்..
தங்கள் வகுப்பை தாண்டி போன ப்ரஸியை பார்த்தவன் அவள் வரவுக்காக காத்திருத்தான்...அவள் வரவும்...ஹாய் செல்லம் என்றபடி அவளுக்கு வழி மறித்து நின்றான் சிவா...
அவனை பார்க்கவும் கோவம் கொண்டவள் வழி விடுங்க...நான் போகனும் என்றாள்...
வழி விடுறேன்..எனக்கு பதில் சொல்லு என்றவனிடம் அதான் அன்னைக்கே சொல்லிடேனே...பிடிக்கலேனு என கூறியவளிடம்..
எனக்கு பாசிட்டிவ் மட்டும் தான் வேணும் என கூறுபவனை முறைத்தவள்...நான் ஆல்ரெடி ஒரு பையனை லவ் பன்றேன் என்றவள்...அவன் சுதாரிக்கும் முன்னே ஓடி விட்டாள் ப்ரஸி...
.
.
தன் மேல் ஏதோ தண்ணீர் விழுவதாக உணர்ந்தவள்...சுதாரிக்கும் முன் ஒரு பாட்டில் அளவுக்கு தண்ணீர் கொட்டி சிறிதாக நணைந்திருந்தாள் சந்தியா...
என்ன சந்தூ...உனக்கு மட்டும் மழை பெய்ஞ்சிருக்கு என்ற மரியமை அடித்தவள் மேலே கவணிக்க... அந்த க்ளாஸ்ல இருந்து தான் கொட்டிருக்காங்க...இருக்குது அவுங்களுக்கு என கூறி தன் தோழிகளை கூட்டி சென்றாள் சந்தியா..
ஹேய் இங்க என்ன பன்றீங்க என கேட்ட மயூரியிடம்...அக்கா...இது உங்க க்ளாஸா...பாருங்கக்கா...என் மேலே யாரோ இங்கிருந்து வாட்டர்ர ஊத்திட்டாங்க என சந்தியா கூற..
அதான் மேடம் தொப்பு தொப்புனு நினைஞ்சிருக்காங்க என்றபடி வினை வர...
ஈஈஈஈ...இந்தா டவல் என தன் கைகுட்டையை எடுத்து...சந்தியாவின் தலையில் போட்டான் ப்ரவீன்...
இதுக்கு பேரு டவலா என கேட்ட சந்தியாவிடம்...
நீ மட்டும் ஏதோ குளிக்க நனைஞ்ச மாதிரி சொல்லுரே...ஏதோ லைட்டா சாப்ட்டுட்டு கை கழுவுனேன்...உன்னை யாரு அங்க உட்கர சொன்னா என ப்ரவீன் கேட்க...
ச்சீ...உவே...அழுக்கு தண்ணி என சுதா கூற..பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி தான் கொட்டுவாங்களா என்று சந்தியா முறைக்க...
ஈஈஈஈ...சாரி..சாரி செல்லம் என கெஞ்சுவதை போல ப்ரவீன் சொல்ல..
மற்றவர்கள் சிரிக்க..அவன் சாதரனமாக சொன்னாலும்..
செல்லம் என்ற ஒற்றை வார்த்தை அவளை ஏதோ செய்தது..
அங்கிருந்து சிறிது நேரம் சீனியர்ஸிடம் பேசி விட்டு சென்றார்கள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro