Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

34


சிராஜ் வந்ததில் பெரும் ஆனந்தம் அடைந்தனர்..ஃபரிதாவின் பெற்றோர்..

அதே அளவு சந்தோஷத்தை சிராஜின் சொந்தங்களும் அடைந்தனர்..

இத்தனை ஆண்டுகள் தன் பேரன் பட்ட கஷ்டத்தை நினைத்து மிகவும் வருந்தினார்..

அவனுடைய பிள்ளையை நினைத்து மேலும் வருந்துபவருக்கு தைரியம் கூறியவன்..என் பிள்ளையை நான் கண்டுபிடித்து கொண்டு வருவேன்..
வந்தே தீருவேன்..
நாங்க பட்ட கஷ்டத்துக்கு சீக்கிரம் முடிவு வந்துரும் என எழுந்து சென்றான்..
.
.
தம்பி...நீங்க இனி எங்க கூடவே இருங்க என ரஹ்மான் கெஞ்சி கேட்க முதலில் மறுக்க நினைத்தவன்...பிறகு சம்மதம் தெரிவித்தான்..
.
ஃபரிதா...நான் கிளம்பறேன் என சொன்னவனை புரியாமல் பார்த்தவள் இங்கே இருந்து போலீஸ நம்பிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது..

ஒரு ஃபோட்டோ கூட இல்லை...அவங்க எப்ப பிடிக்கிறது...நாம்ம எப்ப பார்க்கிறது..
நான் போய் என் பிள்ளையை கண்டுபிடித்து கையோடு கூட்டிட்டு தான் வருவேன்..

வந்தா...என் பிள்ளை கூட தான் வருவேன் என அழுத்தி சொன்னவனை அதிர்ச்சியாக பார்த்தவள்..

ஏங்கே...வேணாம்ங்க என தடுத்து நிறுத்துபவளை முறைத்தவன்...அவள் கையை தட்டி விட்டு செல்ல..

எங்கடா கிளம்பிற என்றபடி அவனின் அப்பா(தந்தையின் தந்தை) வர...

அவன் அமைதியாக நிற்க...

பிள்ளையை தேடி போறேனு சொல்லுறாங்கப்பா..
ஒரு ஆதாரமும் இல்லாம எங்க போய்...எப்படி கண்டு பிடிப்பாங்க என அழுதபடி ஃபரிதா சொல்ல..

என்னடா...இதெல்லாம்...அறிவோட தான் பேசுறியா என்று கேட்டவரை...

என்னப்பா செய்ய சொல்லூறீங்க...எனக்கு என் பிள்ளை வேண்டும் ப்பா என தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து தன் அப்பாவின் மடியில் படுத்து அழுதான்..

அவன் இப்படி செல்ல கூடாது என அனைவரும் சொல்ல எல்லோருக்கும் மறுப்பு சொல்லி கொண்டிருந்தவனை..

சரி..நீ போயிட்டு வா என அவன் அப்பா கூற..

சந்தோஷமாக அவரை நிமிர்ந்து பார்த்து கட்டியணைத்தவனிடம்...ஆனால், ஒரு கண்டிஷன் என கூற..

என்னப்பா என கேட்டவனிடம்...

நீ போ..ஆனால், ஆறு மாதம் அங்க போனா அடுத்த ஆறு மாதத்துக்கு இங்க இருக்கனும்..

அது மட்டும் இல்லாமல்.. உனக்கு ஒரு ஃபோன் தரேன்...நீ எப்பயும் எங்க கூட தொடர்பில் இருக்கனும் என்று கூறியவரிடம் வேறு வழியில்லாமல் சம்மதித்தவன் ஃபரிதாவிடம் இருந்தான்..

ஆனாலும் அவள் மனைவியிடம் அவனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை...

தன் பிள்ளையை தேடும் படலத்தை தொடர்ந்தான்..
.
அவன் முதலில் சென்ற ஊர் சேலம்..
.
அவன் கார் ஓட்டுநராகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு..
அந்த ஊரை சுற்றியும் அங்குள்ள கிராமத்தை சுற்றியும் வந்தான்..
.
அவன் வண்டி ஓட்டும் போது சுற்றி முற்றி பார்த்தே ஓட்டுவதை வழக்கமாக வைத்து கொண்டாலும் நஸிராவையும் செய்யதையுமே தேடி கொண்டிருந்தான்..
.
அதர்க்காக அவர்கள் மேல் பகையென்று சொல்ல முடியாது...
தன் குழந்தை தனக்கு வேண்டும்..
அவ்வளவு தான்..
.
.

இப்படியே தூத்துக்குடி, மதுரை, கேரளா, சாயல்குடி, பெங்களூர், காரைக்குடி, வேலூர் என தன் மனதிர்க்கு தோன்றிய பல ஊர்களுக்கு சுற்றி திரிந்தான்..
.
.
இதர்க்கிடையில் ஃபரிதா ஒரு பையனை பெற்றெடுத்தாள்...
.
தனக்கு ஒரு பையன் பிறந்து அவன் மேல் பாசத்தை காட்டினாலும் அவன் மணம் ஏனோ தன் மகளுக்காக ஏங்கியது...
.
.
தன் மகனிடமும்..உனக்கு ஒரு லாத்தா இருக்கு என சொல்லியே...அந்த பிஞ்சு மணதில் பாசத்தை கிளறி வளர்த்தான்..
.
.
அவனும் ஒவ்வொறு தடவை தன் தந்தை கைபேசியில் பேசும் போதும் ஊருக்கு வரும் போதும் லாத்தாவ எப்ப கூட்டிட்டு வருவீங்க என கேட்டு நச்சரிப்பான்..
.
.
சிராஜ் இராமநாதபுரம் வரும் போது அவன் மகன் ரஜாக் கு ஒன்பது வயது..
.
.
.
ஹ்ம்ம்..தான் துஆ கேட்டு விட்டு பிள்ளையை தேடும் வேளையை சளைக்காமல் நம்பிக்கையுடன் தொடர்ந்தான்..
.
.
.
என்னன்னா இன்னைக்கு ஜாலியா இருக்குமா...அங்க என்ன நடக்கும் என ப்ரஸி ஆஜித்திடம் கேட்ட படி வர..

ஈஈஈஈ...ப்ரின்ஸி நடக்கும்...சார் நடக்கும்..மேம் நடக்கும்..நான் நடப்பேன் என்று சொன்னவனை முறைத்தவள் ஆடு நடக்கும்..மாடு நடக்கும்...ஏன் ப*** என இழுத்தவள்.. அது கூட நடக்கும் என அர்ஜுனை பார்க்க..

அவனோ...இவ இப்படி வாயாடியா இருக்கிறாலே...இவள கட்டிக்கிட்டா பின்னாடி கஷ்டம் போலயே என யேசித்த படி முழித்தவன்...சுற்றி இருந்தவர்களின் சிரிப்பு சத்தத்தில் அமைதியானவன்..

இருந்தாலும் உனக்கு தைரியம் தான் சீனியர்னு கொஞ்சம் ஆச்சும் பயம் இருக்குதா என கேட்ட வினையிடம்..

ஈஈஈஈ...நாம்ம தான் இப்ப ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே அண்ணா என்றவளை ஹிஹி...அப்பயும் இந்த அண்ணனை விட மாட்டிக்கிறியே மா என நொந்து கொண்டான் ப்ரவீன்..
.
.

எப்படியும் அவர்களிடம் சாரி கேட்ருவோம் என்றபடி வந்தான் அவன்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro