30
கல்லூரியின் முதல் நாள் அன்று அதிகாலையிலே எழுந்து சுப்ஹு தொழுது...யா அல்லாஹ்..இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே..நான் நல்லா படிக்கனும்...
எனக்கு ஏதோ பதட்டமா இருக்கு..
எந்த ப்ராப்ளமும் என் லைஃப்ல வந்துர கூடாது..இப்ப மாதிரியே நான் எப்பயும் ஹேப்பியா இருக்கனும் அல்லாஹ்..
எப்பையும் நீ எனக்கு துணையா இரி அல்லாஹ் என துஆ செய்து ஓதி கொண்டிருந்தாள் மரியம்...
என்ன இது...நம்மளுக்கு தூக்கமே வரமாட்டிக்குது..இந்த பக்கி என்னன்னா கும்பகர்ணன் மக மாதிரி தூங்குதே என புலம்பியவள் ஹேய் டார்லிங் கெட் அப் டி என்க கெட் அப் இயர்லி இன் த மார்னிங் என தூக்கத்திலே புரண்டு படுத்தவளை அடி சாத்தானே...ஏதோ படிக்கிற பிள்ளை மாதிரி பொலம்புது பக்கி...கேஜி படிக்கும் போது படிச்சத இப்ப உளறிக்கிட்டு இருக்கு..
இது சரிப்பட்டு வராது...நாம்ம போய் ரெடியாகலாம் என நினைத்து காலை வேளையை முடித்து குளித்து அழகான பேபி பிங்க் நிறத்தில் லான்ங் சல்வார் அணிந்து அதுக்கு டெகரேஸன் ஆல்ட்ரேஸன் என எல்லாம் முடித்து தயாராகி வர...
இன்னும் ப்ரஸிலா தூங்கி கிடப்பதை பார்த்து கடுப்பானவள் அவளின் மேல் தண்ணீரை ஊற்ற பதறியடித்து எழுந்தவள் கோவத்துடன் அவளை கத்த நினைத்தவள்...
அவளை பார்க்க...அவள் தேவதையாக இருக்க... அட ச்சே...வாழ்க்கைல நான் பொண்ணா பிறந்ததற்கு இப்ப தான் டி வருத்தப்படுறேன் என்றவளை ஏரிட்டு பார்க்க...
ச்சே...செம ஃபிங்கர் தான் டி நீ...உண்மையா சொல்ரேன்...நான் மட்டும் பாயா(boy) இருந்தா என உதட்டை குவித்து கண்ணடிக்க...அட ச்சி...அசிங்கம் பிடிச்சவளே...போய் ரெடியாகு டி என அவள் உடுத்திருந்த ஆடையை போல் மற்றொறு ஆடையை அவளிடம் குடுத்து அனுப்பி வைத்தாள்...
இவர்கள் இருவருமே சில முக்கியமான தினங்களில் ஒரே போல் ஒரே நிற ஆடையை அணிவது உண்டு..
(இது நம்ம ப்ரஸிலா வோட வேலை தான்..
சின்ன வயதிலேயே தனக்கு ஒரு ஆடை எடுத்தாள் மரியம்க்கும் வேண்டும் என எடுத்துக் கொண்டு வருவாள்..
அவளின் தந்தை துணி கடை வைத்திருப்பதால் மரியமிடம் பாதிக்கு மேல் ப்ரஸிலா வின் தாய் கின்ஸிலி குடுத்ததாக தான் இருக்கும்)
இன்றும் அதே தான்...
இவர்கள் கல்லூரியின் உள்ளேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுதி இருக்க...இந்த இரு விடுதிக்கும் நடுவிலே பொதுவாக உணவகம் இருக்க..இருவரும் காலை உணவு சாப்பிட வந்தனர்...
மரியம் அங்கே இருக்கும் சாப்பாடு மேஜையில் அமர...இருவருக்கும் சாப்பாடு வாங்க ப்ரஸிலா சென்றாள்..
அங்க இருந்து சுற்றி பார்க்க இவள் மட்டும் தான் முஸ்லீமாக இருந்தாள்...
கல்லூரியின் உள்ளே நுழைந்ததும் ஃபர்தா போட அனுமதியில்லை என்பதால் தன்னுடைய துப்பட்டாவை தலையில் சுற்றி இருந்தாள்..
என்னதான் தைரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உதறலாகவே இருந்தாது..
அப்படியே சுற்றி பார்த்த படி இருந்தவளிடம் ஓய்...என்ன..எங்க இடத்தில இருக்கிறே என்ற சத்தம் கேட்கவும் எதிரில் இருந்தவர்களை பார்த்து விழிக்க..
அங்கு நான்கு பசங்களும் இரண்டு பொண்ணுங்களும் இருக்க...
வாவ்...செம்மயா இருக்காலே என அவர்களிள் ஒருத்தி கூற...
ஓய்..வழக்கமா இந்த டயலாக்க நாங்க தானே சொல்லுவோம்...நீங்க அத பார்த்து வயிற்றெரிச்சல் படுவீங்க..
அது தானே நடக்கனும்..
இப்ப என்ன நீங்களே சொல்லுறீங்க என அவர்களில் ஒருவன் கேட்க...மற்றவள் அதர்க்கு வாய் கொடுக்க..
மரியமோ பதற்றத்துடன் நிற்க..இவளை பார்த்தவன்..
ஹேய்..இங்க பாரு..எங்கள பார்த்து நீ பயப்பிடற அளவுக்கு நாங்க ஒன்னும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்லாம் இல்லை...
என்ன இந்த காலேஜ் சீனியர் அவ்வளவு தான்...
ஐ எம் ஆஜித் என அவன் கை கொடுக்க..
இவள் விழித்து கையை இருக்க மூடி கொள்ளவும்...
ஓ..நீங்க கை கொடுக்க மாட்டீங்களே...
ஹான்...அஸ்ஸலாமு அலைக்கும் என மற்றொருவன் கூற மெல்லிதாக புன்னகைத்தவள் வ அலைக்கும் முஸ்ஸலாம் என கூற நான் வினை..இவன் ப்ரவீன், ஆன்ட் இவன் அர்ஜுன், இவன் ஆஜித், இவள் மையூரி அப்புறம் இது ஷாலினி என அறிமுகப்படுத்த இவளும் முழுதாக பயம் நீங்கி சிரிக்க..
உங்க நேம் என மையுரி கேட்க...மரியம் என சிரித்தாள்...ஓகே.. இப்ப இங்கே இருந்து சாப்பிடலாம்லே என சிரித்தபடி ஆஜித் கேட்க சிரித்தபடி தலையசைத்தாள்..
ஏன் டி...நின்டுட்டு இருக்குறே என்றபடி ப்ரஸிலா வர..ஒன்னும் இல்லை....சும்மா தான் என தயங்க...
ஹேய்...இப்படி உட்காருங்க என ஷாலினி கூறவும் இருவரும் அமர...எல்லோரும் உண்ண ஆரம்பிக்க..நீங்க இரண்டு பேரும் சிஸ்டர்சா என கேட்க..
நாங்க ஃப்ரெண்ட்ஸ் தான் என கூற ப்ரஸிலாவிடமும் தங்களை அறிமுகப்படுத்தி... தங்களை பற்றி பேசிய படி சாப்பிட்டு முடித்தார்கள்...
Hi frndz..
Naan clg ah pathi yeludhum bodhu yenaku yen frndz than niyaabagam vandhuchu..and yepdi yeludha poraenu thaerila..
Yevlo clg story padichaalum yenaku yen dubakoor frndz madhiri varaadhu..
Naan ungala rmba miss panraen d...
Love u lots d nd miss u rowdies😍😍😘😘😘
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro