29
மேல்நிலை(+2) படிப்பு கலை பிரிவில் நன்மதிப்பு எடுத்த மரியம்...
நஸிராவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்...
மரியம்: ம்மா...ப்ளீஸ் மா ...
நஸிரா: அதெல்லாம் முடியாது..முடியவே முடியாது..
மரியம்: ஏன் மா...நான் உன் பிள்ளை தானே..என் ஆசையை நீ தானே மா நிறைவேத்தனும்..
நஸிரா: ஹேய்..செல்லம்...பேசாமா நல்ல பையனா பார்த்து கல்யாணம் பன்னி வச்சிரவா??
மரியம்: ஹ்ம்ம் சரி.. அப்படியே நடக்கட்டும்..
உனக்கு கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்தில எனக்கு ஃப்ரீடம் கிடைக்கும்..
அது சரி... புது வாப்பா...உன் செய்யத விட அழகா இருப்பாங்களோ என கண்ணடிக்க..
செய்யது: அப்ப எனக்கு விடுதலை என கேலியாக பேச...
நஸிரா: உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடிச்சி..அதான் இப்படி பேசுறா.. அந்த மணுசனும் இதுக்கு ஜால்ரா வேற...
மரியம்: ம்மா..நீ இப்பவே ஓகே சொல்லு மா.. உன் மாப்பிள்ளைக்கு ஒரு பொண்ணு பார்த்து கட்டிவச்சிடலாம்...
அவர் காலத்துக்கும் கஷ்டப்படட்டும்...
அடி பாவி...பெத்தவங்க கிட்ட இப்படியா டி பேசுவே...இருந்தாலும் உனக்கு கொழுப்பு கூட தான் டி என்றபடியே வந்தாள் ப்ரஸிலா..
அப்படி சொல்லு மா...பொண்ணுனா இப்படி இருக்கனும்...இங்கையும் ஒன்னு இருக்கே...
பெத்தவங்க சொல்லு பேச்ச கேக்காத அடங்காபிடாரி என நஸிரா கொஞ்சம் கோவமாக பேசி கொண்டு போக...
மரியம் கண்கலங்க அவளின் அறைக்குள் புகுந்தாள்..
குளிர்சாதன பெட்டியிலிருந்து மாஜா( maaza)வை எடுத்தவள் வாயில் வைத்து ருசித்தபடியே என்ன ப்பா நடக்குது இங்கே என்றபடி செய்யதின் அருகில் அமர்ந்தாள் ப்ரஸிலா...
அவர் நடந்ததை சொல்லி கொண்டிருக்க.. நீயே சொல்லு மா...நான் சொல்ரது சரி தானே என நஸிரா கேட்க திருதிருவென விழித்தாள்...
பாவம்..அவள் போட்ட அஸ்திவாரம் தானே..
அவ சின்ன பொண்ணு...இருந்தாலும் நீ கடுமையா நடந்துக்காதே... அவள் ஆசைபடி விடு...நான் பார்த்துக்குறேன் என தன் ஆசை மகளை சமாதானம் படுத்த சென்றார்...
ஏதோ தோன்ற மரியமின் அறைக்கு நஸிரா செல்ல...
குட்டி மா...நாம போட்ட ப்ளேன் சக்ஸஸ் தான்.. உன்னால தான் என் பிள்ளை அழுகுறா.... என் பிள்ளை ஆசைபடி தான் எல்லாம் நடக்கனும்னு கோவமா பேசுர மாதிரி நடிச்சிட்டு வந்துட்டேன்...எப்படிடிடி என செய்யது கேட்க...
நெத்தியடி என பின் பக்கம் இருந்து பதில் வரவும் மரியம் தலையிலடித்து கொண்டாள்..
தன் மனைவியின் குரலை கேட்டு ஈஈஈஈ...நம்ம செல்லத்துக்காக தானே என இழிக்க...போதும்..நான் தான் அவள படிக்க சரினு சொல்லிட்டனே என கூறி நஸிரா முறைக்கவும்...
அவள் ப்ரஸிலாவுடன் சென்னையில படிக்கனும்னு நினைக்கிறா...அது தப்பா என ஆத்திரத்தில் வார்த்தையை விட..
இது எப்ப என்பது போல ப்ரஸிலாவை பார்க்க அவள் உதட்டில் உள்ள மாஜா மூக்கில் ஏறியது...
ஹேய்...பார்த்து டி என பதற்றத்துடன் அவள் தலையில் தட்டிய மரியம்...
ம்மா...நீ சொல்ரது சரி தான்...இங்கயும் காலேஜ் இருக்கு தான்...நான் சென்னையில படிக்கனும்னு ஆசைப்படுறேன்...
நான் இந்த உலகத்த பார்க்கனும் மா...
நாளு விஷ்யத்த கத்துகனும் மா
கொஞ்சம் என்னை விடுங்க..
இதே ஊர்ல வேண்டாம் மா..
ப்ரஸிலா வீட்ல சம்மதிச்சிட்டாங்க..
நீங்களும் ஓகே சொல்லுங்க மா...ப்ளீஸ் என கெஞ்ச...
விடு நஸிரா...அவ போயிட்டு வரட்டும்...அவளுக்கு நம்மள தவிர யாரும் இல்லை...நாளைக்கு நம்மளுக்கு ஒன்னுனாளும் அவ தைரியமா இருக்கனும்..
நாம்ம அவ கூட இல்லாட்டியும்...துணிச்சலா இருக்கனும் டா...நாளு இடத்துக்கு போன தான்...நாளு விஷ்யத்த கத்துக முடியும் என அப்படி இப்படி பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விட்டார்...
நஸிராவும் செய்யதும் சென்னையில் ப்ரஸிலாவை சேர்த்திருக்கும் **** இணை கல்லூரியில் மரியமை சேர்த்தனர்..
நாளை கல்லூரி திறக்க இருக்க விடுதியில் விட்டு விட்டு பல பல புத்திமதிகளை சொல்லி கொண்டிருந்தார் நஸிரா...
பாவம்...இவளுடன் சேர்ந்த பாவத்திற்க்காக ப்ரஸிலாவும் காதில் இரத்தம் வராத குறையாக அனுபவித்தாள்...
இவர்களை நஸிராவிடம் இருந்து காப்பாற்றுவதர்க்காக அவ்விடத்தை விட்டு வெளியே இழுத்து சென்றார் செய்யது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro