23
என்னப்பா...என்னாச்சி...அப்படி என்ன தீவிரமா யோசிச்சிட்டு இருக்கே...உனக்கு க்ளாஸ் இல்லையா என கேட்ட ஃபரிதாவிடம்... ஹ்ம்ம்...இல்லை..ஃப்ரீ க்ளாஸ் தான் என கூறியவள் அப்புறம் மஞ்சுக்கு கல்யாணம் நிச்சயமாச்சினு சொன்னேன்லே என ரேகா கூற ஆமா..அதுக்கு என்ன...ஹ்ம்ம்..நெக்ஸ்ட் மன்த் மேரேஜ்...அப்புறம் என் டெலிவெரி.. நெக்ஸ்ட் மன்த்ல இருந்து த்ரீ மன்த்ஸ்க்கு லீவு போடனும் போல என்க அதுக்கு என்ன பன்ன முடியும்... மேரேஜ் உன் தங்கச்சிக்கு...நீ போய் தானே ஆகனும் என பேசி கொண்டிருக்க...கைபேசி அழைக்கவும் மஞ்சு தான் கால் பன்னுரா என கூறி எடுக்க ஹேய் ஸ்பீக்கர்ல போடு என ஃபரிதா கூற ஸ்பீக்கரில் போட்டாள்...
ஹாய் கல்யாண பொன்னு...எப்படி இருக்கே?? என் கிட்டைலாம் ஒரு வார்த்தை கூட சொல்லலைலே என்க ஐயோ..அப்படிலாம் இல்லைக்கா...நீங்க இல்லாமையா...கண்டிப்பா வரனும்க்கா என்க...
ஓய் மஞ்சு..நான் வரலன்னா ஏதோ கல்யாணத்த நிறுத்துற மாதிரி பேசுறே என்க அந்த பக்கம் அமைதியாக இருக்கவும் என்ன வாளு சிரிக்கிராப்ல இருக்கு என்க ஈஈஈஈஈஈ...கண்டு பிடிச்சிடீங்கலா என கூற..இப்படியே ரேகா, ஃபரிதா மற்றும் மஞ்சு பேசி கொண்டிருக்க...
சரி செல்வம் எங்கே என ஃபரிதா கேட்க...இங்க தான் இருப்பாங்க என கூறி திரும்பி பார்க்க அங்கே செல்வமும் கதிரும் இருந்தனர்...
மாமா...ரேகாவும், ஃபரிதா அக்காவும் லைன் ல இருக்காங்க என்று ஸ்பீக்கரில் போட ஹாய் மாப்பிள்ளை...ஒரு வழியா காதலை சொல்லிட்டீங்க போல என ஃபரிதா கேட்டு செல்வமும் பதிலடி குடுக்க...
குரலை மட்டுமே கேட்ட கதிருக்கு உடம்பே சிலிர்த்தது...இது ஏதோ நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க குரல் மாதிரி இருக்கே...ஐயோ...யோசிக்க யோசிக்க எதுவுமே நியாபகம் வர மாட்டிக்குதே...
இவங்க நம்மளுக்கு கண்டிப்பா தெரிஞ்ச மாதிரி இருக்கே என யோசித்தவனுக்கு தலை வலிச்சது தான் மிச்சம்..
இப்படியே நாட்கள் நகர திருமணத்திற்கு தேவையான பட்டு புடவை, நகை, மாப்பிள்ளை வேஷ்டி என ஓவ்வொன்றாக எடுக்க...மஞ்சுவும் செல்வமும் தங்கள் காதலை பகிர்ந்தாலும்.. கதிரும் நந்தினியும் பேசிக்ககூடவில்லை...
பத்திரிகையும் அடித்து வந்தது.. மிக பெரிய மண்டபத்தை ஏற்பாடு செய்தனர்.. பெரிய வீட்டு செல்வங்களான இரு ஜோடி களுக்கும் திருமணம் என்பதால் ஓவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தனர்...
திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க சொந்த பந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர்..
எனக்கு தெரியாது ஃபரிதா...நீ வந்து தான் ஆகனும்...என் மாப்பிள்ளையும் பெங்களூர் போய்க்கிறாங்க...இந்த நேரத்திலே தனியா போக முடியாதுல...என் செல்லம்ல என ரேகா கெஞ்சி கொண்டிருக்க...
சரி சரி...உனக்காக இல்லை...என் செல்லக்குட்டிக்காக வரேன் என கூறி தங்களுக்கு தேவையான விடுப்பை கல்லூரியில் எடுத்து விட்டு...ஃபரிதாவின் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி சம்மதிக்க வைத்து... பத்து நாளுக்கு தேவையான துணிகளை எடுத்து விட்டு இருவரும் காரைக்குடியை நோக்கி வாகனத்தில் சென்றனர்...
ஹேய்..இந்த ஊரு ரொம்ப அழகா இருக்கு டி என்றவளை ஹ்ம்ம்..நான் தான் உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேனே...நீ தான் வரவே மாட்டே என்றவளிடம் சரி, சரி...சளிச்சிக்காதே...இன்னும் எவ்வளவு தூரம் போகனும் என்க இதோ வந்திருச்சி என கூற இருவரும் இறங்கினார்..
அம்மா...அக்கா வந்துருச்சி மா என கூறி மஞ்சு வர ஏய்..உனக்கு தானே டி கல்யாணம்...உன்னை பார்க்க பொன்னு மாதிரியே தெரியலயே என ஃபரிதா கேட்க மற்றவர்களும் அதை ஆமோதித்து பேச எல்லோரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா...உங்களுக்குலாம் அப்புறம் இருக்கு என உதட்டை சுளித்து உள்ளே செல்ல...இருவரையும் நலம் விசாரித்து மற்றவர்கள் அழைக்க...
மேலே இருந்து இவர்களை பார்த்திருந்த கதிர் ஏதோ யோசனையில் இருக்க...
தனக்கு நெருக்கமானவர்கள் யாரோ பக்கத்தில் இருப்பதாக தோன்றி சுற்றி முற்றி பார்த்த ஃபரிதா...பாவம்...மேலே பார்க்கவில்லை...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro