19
பர்வதத்திர்க்கு ராஜன் என ஒரே அண்ணன் தான்...பர்வதத்தின் திருமணத்திற்கு பிறகு கணவருடன் காரைக்குடியில் வாழ்க்கையை தொடங்கினர்...
ராஜன் சென்னையிலேயே சுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்...இந்த தம்பதிக்கு ரகு, ரேகா மற்றும் மஞ்சுளா என மூன்று குழந்தைகள்...
இவர்கள் ஆரம்ப காலத்தில் அதாவது பர்வதத்திர்க்கு திருமணத்திற்கு பிறகு பள்ளி விடுமுறை, குடும்ப நிகழ்ச்சி போன்றவற்றில் வந்து போய் இருந்தனர்...
அர்நேரம் ரகு, ரேகா, செல்வம், மஞ்சுளா மற்றும் நந்தினி இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடுவார்..
மஞ்சுளா குட்டி பெண்ணாக அழகாக கவுன் போட்டு நெற்றியில் குட்டி பொட்டு வைத்து முடியை தலையின் முன் பக்கம் விழுமாறு வெட்டி(baby shalini cutting) பார்க்க தேவதையாக இருப்பாள்..
அவளை பார்த்தாலே பிடிக்கும்...
செல்வம் கூட மட்டுமே விளையாடுவாள்...செல்வத்தின் நண்பர்களுடன் அவள் பேசுவது செல்வத்திர்க்கு பிடிக்காது..
ஆதலால் அதிகமாக வீட்டை விட்டு வெளியே செல்ல விட மாட்டான்..
காரணம் கேட்டால்...அங்க பாரு...செம வெயில்.. அங்க போய் நின்னா அந்த காக்கா மாதிரி கருப்பு ஆகிடுவா என கூறி நீ அங்க போய் நில்லு...அப்ப தான் அழகா இருப்பா என சொல்லவும் இல்லை, நான் போக மாட்டேன் என வீட்டிர்க்குள் ஓடி விடுவாள்...
வருடங்கள் நகர, நகர இரு வீட்டினரும் வர போவது குறைந்தாலும் ஊர் திருவிழா, கல்யாண விஷேசம் போன்றவற்றிர்க்கு வந்து போய் இருந்தனர்...
கடிதத்தின் மூலம் நலம் விசாரித்து கொண்டிருந்தனர்...
செல்வம் தனக்கு படிப்பு வரவில்லை என்று விவசாயத்தில் இறங்கினான்..
ஆனால், மஞ்சுளா நன்றாக படிப்பாள்..
அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பருவம் அடைந்தாள்..
தன்னுடன் கைபிடித்து சுற்றி திரிந்தவள் பாவடை தாவனி அணிந்து தலை குனிந்து நிற்பவளை பார்க்கும் போது சொக்கி தான் போனான்.. அவள் செல்வத்தை பார்க்கும் போது மட்டும் ஏனோ வெட்கி போனாள்..
இவர்கள் வந்து போய் இருக்கும் நேரம் ஏனோ செல்வமும் மஞ்சுளாவும் பேசிகொள்வதில்லை...
ஆனால், ஏன் நாங்க பேசி கொள்ள மாட்டிக்கிறோம் என இருவரும் யோசித்ததுன்டு...
ரேகாவிர்க்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட...ஊரில் இருந்து சொந்தங்கள் என அநேகம் பேர் வந்தனர்...
ரேகாவின் உயிர் தோழி ஃபரிதா...இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தனர்...
ஃபரிதா சூழ்நிலை நிமித்தமாக சிராஜை பிரிந்த மூன்றாம் ஆண்டில் ரேகாவிர்க்கு திருமணம் நடக்கவிருக்க...ஃபரிதா ரேகாவின் கூடவே இருந்து அவளின் திருமண வேலையை செய்து கொண்டிருந்தாள்..
ராஜன் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி பங்காக ஒரு பெரிய துனி கடை நடத்தி வருகின்றனர்...
மூர்த்தியின் பெண் ப்ரீத்திக்கு ரகுவை கேட்க.. ராஜன் யோசிக்கவும்..உன் பெண் மஞ்சுளாவிர்க்கு என் மகன் மாதவை திருமணம் செய்து தருவதாக கூறி சம்மதிக்க வைத்தார்..
இவையனைத்தையும் கேட்டு கொண்டிருந்த செல்வம் அமைதியாக வெளியேறினான்..
சோகமாக சென்ற செல்வத்தை..ஒரு கை பிடித்து அறையின் உள்ளே இழுக்க...இழுத்த வேகத்தில் உள்ளே நுழையவும் கதவு சாத்தப்பட்டது..
திரும்பி பார்க்க அங்கே மஞ்சுளா நின்று கொண்டிருந்தாள்...
தனது தோழிகள் தந்த தைரியத்தில் காதலை சொல்ல வந்தாலும்...
ஏனோ தயங்கினாள்..
ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்தவன் இவளின் செய்கையில் லூசா நீ என கூறி பளார் என கண்ணத்தில் அறைந்தான்..
கண்ணத்தில் கை வைத்தவள் அழுகையுடனே வெளியேறியவள் பின்பக்கம் மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்..
ரேகாவின் திருமணம் முடிந்தவுடன் ராஜன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து விஷயத்தை கூற செல்வம் கண்ணை தூக்கி காட்ட...ஒரு வேலை இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி தான் அடிச்சிப்பானோ என யோசித்து கொண்டிருந்த நேரம் நீ என்னம்மா சொல்ரே என அவளிடம் கேட்க... அவள் அமைதியாக இருக்கவும்...அவசரம் இல்லை மா...யோசிச்சு சொல்லு என்றார்..
திருவிழாவிர்க்கு வந்திருந்த மஞ்சுளாவிடம்...
என்ன மா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியாச்சா என கேட்டவனை ஒரு பார்வை பார்த்தவள்...ஹ்ம்ம்..ஆமா மாமா...சம்மதம் சொல்ல போறேன் என சிரித்தவளை முறைத்தவன் அங்கிருந்து சென்றான்..
டேய் மாமா..இருக்கு டா உனக்கு என நினைத்தவள் அவளின் வேலையை ஆரம்பித்திருந்தாள்..
இதுல தான் செல்வம் ஒதுங்கி போனாலும்...மஞ்சுளா அவள் மாமனுடன் காதல் விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro