14
ம்ம்மா இங்க பாருங்க மா...ஆஷா என் கூட பேச மாட்டிக்கிறா என பள்ளிக்கு மதியம் சாப்பாடு கொண்டு வந்த நஸிராவிடம் புகார் செய்து கொண்டிருந்தான் ஆஷிஃப்..
தோசையை எடுத்து தீத்திவிட்டபடியே ஏன் ஆஷா?? ஏன் உன் ஃப்ரெண்ட் கூட பேச மாட்டிக்கிறா என கேட்டுக் கொண்டு ஆஷிஃப் க்கும் தீத்திவிட்டார்...
ஆஷிஃப் வீட்டு கஷ்டத்தை தெரிந்தவர்...ஆஷிஃபையும் தன் பிள்ளையாக பாசம் காட்டினார் நஸிரா...
நஸிராவிர்க்கு சொல்லவா வேண்டும்...
தனக்கென்று ஒரு குழந்தை இல்லையென்றாலும் பிற குழந்தைகளை தன் குழந்தையாக பார்ப்பார்...
(அது என்ன??
இருக்குறவங்களுக்கு ஒரு வீடு...இல்லாதவங்களுக்கு ஒன்பது வீடு...
அதே தான்)
ம்ம்மா..அவன் சும்மா சொல்ரான் மா...நான் பேசுவேன் மா என கூறியவள்...
ம்மா.. எங்களுக்கு ஆன்வெல் டே வருது மா என்க...அப்படியா நீங்க எதுல சேர்ந்துக்கறீங்க?? என நஸிரா வினவினார்..
ம்மா..நான், ஆஷா என் கூட பேசலேனு என் பேரயும் ஆஷா பேரயும் "ஜோடி புறா" ல குடுத்துட்டேன்..
ஆனா, அதுல என்ன செய்றதுனே எனக்கு தெரியல மா என்று தலையை தொங்க போட்டு கொண்டான் ஆஷிஃப்...
சரி..இதுக்கு ஏன் பா இப்படி இருக்கிற..
நம்ம ஏதாச்சும் யோசிச்சு சூப்பரா அசத்திருவோம் என்க குட்டீஸ் இரண்டும் சந்தோஷமாக தலையாட்டினார்கள்...
.
.
.
.
.
ஏய்யா செல்வம்...இங்க கொஞ்சம் வாய்யா என பர்வதம் அழைக்க...
ம்ம்ம்...சொல்லுங்க மா என்றபடி வந்தான் செல்வம்...
சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...
சாப்பிட்டுட்டு அந்த கதிர் தம்பிய டவுன் க்கு கூட்டிட்டு போய் அந்த தம்பிக்கு தேவையான உடுப்பு(dress), வேறேதும் தேவைனா பார்த்து வாங்கிட்டு வாய்யா என்றார் பர்வதம்...
சரி மா...நாங்க அங்கயே சாப்பிட்டுக்றோம் என கூறி கதிரை அழைத்து சென்றான்..
அங்கே தங்களுக்கு தேவையானதையும் வீட்டிற்கு தேவையானதையும் இருவருமாக வாங்கி முடிப்பதற்குள் மதியம் 3.30 ஆகிவிட்டன..
பசி வயிற்றைக் கிள்ள...ஏதாவது சாப்பிடலாம் என்றாலும் அந்த நேரத்தில் சாப்பாடு கிடைக்காமல் போக..ஒரே ஒரு உணவகத்தில் ப்ராட்ட இருப்பதாக கூற அங்கே சென்று அமர்ந்தனர்...
சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் பாங்கு சொல்லும் ஓசை கேட்க...
கையில் எடுத்த உணவை அப்படியே வைத்து விட்டு பாங்கின் ஓசையை செவிசாய்த்து பாங்கிர்க்கு பதில் கூறி கொண்டிருந்தான் கதிர்...
நமக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று குழம்பி கொண்டிருந்தவனை பார்த்த செல்வம்....என்னாச்சி கதிர் சாப்பிடுங்க என கூறவும் யோசனையுடனே சாப்பிட்டான்..
.
.
ஐயா...ஊர் தலைவர்லாம் ஒன்னா சேர்ந்து வந்திருக்காங்கயா என மாரி கூறவும்...
குடிக்க ஏதாச்சும் கொண்டு வர சொல்லு என கூறியவர்...
வந்தவர்கள் வணக்கம் ஐயா என கூற...ஹ்ம்ம் அமருங்க என ஐயா கூறினார்...
ஐயா...திருவிழா க்கு தேதி குறிச்சிக்றோம் என வந்திருப்பவர்களில் ஒருவர் கூற...
ஐயா தலையசைக்க..
மாசி மாதம் பத்தாம் தேதி என கூறி
ஒரு மாதம் தான் இருக்கு...
ஊர்காரங்க கிட்ட பணம் வசூல் பன்ன இப்ப ஆரம்பிச்சா தான் சரியா வரும் என்றார்...
மாரி மோர் கொண்டு வந்தான்...
மோர் குடிச்சிட்டு இருங்க...இப்ப வரேன் என கூறி சென்று 20000 ரூபாயை எடுத்து வந்து அவர் வீட்டு பங்காக குடுத்தார்...
.
.
.
.
.
ஃபரிதா தன் பெற்றோருடன் திருச்சி க்கு வந்தாள்...
தான் பெற்ற பிள்ளை இனி தன் கூடவே இருப்பாள் என பல பல ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வந்து நஸிராவின் வீட்டு கதவை தட்ட...
வேற யாரோ கதவை திறந்தாரு..
நஸிரா லாத்தா எங்கே என வினவினாள்...
நாங்க புதுசா குடி வந்திக்றோம் என கூறி அவளின் தலையில் பெரிய இடியை இறக்கினார்...
கண்களில் கண்ணீர் முட்ட அக்கம் பக்கத்தில் விசாரிக்க...
உங்க பிள்ளையை தன் பிள்ளையாக கருதி நஸிரா செய்து வாழ்க்கையில் நடந்தவற்றையெல்லாம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூறினர்...
இப்ப எங்கே இருக்காங்க என வினவ தெரியாது என்ற பதிலையே பரிசாக பெற்றாள்...
அங்கே இருந்து திலீப் வீட்டுக்கு சென்றார்கள்...
நாங்கள் திருச்சிக்கு வந்ததும் உங்களை பார்க்க தான் வந்தோம்...
அங்கே நீங்களும் இல்லை...அவர்களும் இல்லை...
பக்கத்தில் விசாரிக்க நடந்தவற்றை கூறினார்கள்...
பிறகு எங்கள் முதலாளியுடன் காவல் நிலையத்திற்க்கு சென்று விசாரித்தோம்..
அவர்கள் விசாரித்ததில் பழுதான கார் மட்டுமே கிடைத்தது...சிராஜை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் திலீப் கூறி முடிக்க
கதரி அழுதாள் ஃபரிதா...
ம்மா...அவரும் இல்லை...என் பிள்ளையும் இல்லை..
நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன மா செய்ய...
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சு மா என புலம்பி அழுதவளை தேற்ற வழிதெரியாமல் இருந்தனர்...
ரஹ்மான் காவல் துறையினரிடம் புகார் குடுத்தார்...
அவர்களுடைய புகைப்படத்தை அதிகாரி கேட்க...
பாவம்!! அவர்களின் புகைப்படம் யாரிடமும் இல்லை..
.
.
.
.
.
ஹேய் ஆஷா...இங்க பாரேன்...
அது எப்படி உன் பேரும் என் பேரும் ஒரே மாதிரி இருக்குலே...
ஆஷா...ஆஷிஃப் என கூறி சிரிக்க..
ஏய்...என் பேரு ஆயிஷா...மரியம் ஆயிஷா...
என்னை எல்லோரும் ஆஷானு கூப்பிடுவாங்க...அவளோ தான் என கூறவும்...
எப்படியோ ஆஷா னு வருதுலே என கூறி சிரித்தான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro