11
தன் பக்கத்தில் யாரோ அமரும் அரவம் கேட்டு எழுந்து பார்த்தான் ஆஷிஃப்...
கண்களை சிமிட்டி அழகாய் தலை சாய்த்து சிரித்தபடி பார்த்தாள் ஆஷா...
கண்ணங்களில் கண்ணீர் வழிய பார்த்திருந்தவனின் கண்ணீரை துடைத்து..நீ அழாதே...நான் இனி உன் தோழி...சரியா?? என கேட்க...
சிரித்த படி தலையசைத்தான் ஆஷிஃப்..
இதனை பார்த்து கொண்டிருந்த அம்ஜத்...
ஆஷா...இவன் கூடெல்லாம் பேசாதே, இவன் ம்ம்மா தான் எங்க வீட்டு வேலைக்காரி என கூறினான்..
என் வாப்பா கூட மளிகைக் கடை தான் வைத்திருக்காங்க..
பின்னாடி என் மேல வெங்காயம் வாடை வருது மல்லி வாடை வருதுனு சொல்லுவீங்கலா?? என புத்திசாலித்தனமாக கேட்டு...வா ஆசிஃப்...நாம்ம போய் விளையாடுவோம் என கையை பிடித்து இழுத்து செல்லும் நேரம்..
அ...து...இ...ல்லை சாரி ஆஷா....சாரி ஆசிஃப்....நாங்களும் உங்களோட விளையாட வரோம் என கூறி அவர்களுடைய நண்பர்களும் சென்றனர்..
எங்கே செல்வது?? என்ன செய்வது?? என அவன் சிந்தித்து கொண்டிருந்தான்...
என்ன தம்பி சிந்தனை செய்றீங்க??
சரி...உங்களுக்கு ஒரு பெயர் வைத்தால் தான் அழைக்க வசதியாக இருக்கும்...
என்ன பெயர் வைக்கலாம் என ஐயா கேட்க..அவன் எதுவும் சொல்லாமல் விழித்தபடி இருந்தான்..
ம்ம்ம்...நானே உங்களுக்கு ஒரு நல்ல பெயரா வைக்கிறேன் என கூறி கதிரேசன் என பெயரிட்டார்..
சரி வாங்க தம்பி...நம்ம வீட்டுக்கு செல்லலாம் என கூட்டி சென்றார்..
வாங்க தம்பி.. எப்படி இருக்கீங்க??
உட்கருங்க தம்பி என்று நலம் விசாரித்தார் பர்வதம்..
மா நந்தினி...தம்பி க்கு குடிக்க மோர் கொண்டாமா என்க ஒரு அழகு பதுமையென 19 வயது பருவச் சிட்டு மெல்லிய இடையுடன்..பாவடை தாவனி அணிந்து..நெற்றியில் ஒற்றை பொட்டு வைத்து..கூந்தலில் மல்லிகை சரம் சூடி..
கால்களில் கொலுசு அணிந்து மெலிதாய் சத்தம் வர மோர் கொண்டு வந்து குடுத்தாள்...
ஒரு பார்வை பார்த்தவனின் மனதில் ஏதோ தோன்ற மோரை கையில் எடுத்தவுடன் திரும்பி கொண்டான்..
மோர் குடித்து கொண்டிருக்கையிள்... வெளியில் கார் சத்தம் கேட்க ஏதோ தலையில் மின்னல் வெட்ட தலையை பிடித்து கொண்டான்...
என்ன தம்பி? ? என்ன செய்து??
என ஐயா கேட்டு கொண்டிருந்த நேரம்...என்னாச்சி ஐயா என்ற படி உள்ளே வந்தான் செல்வம்...
வா பா..கதிர் தம்பிய உன் அறையில் ஓய்வு எடுக்க வை பா என்றார்..
சரி என கூட்டி சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு இருவரும் கீழே சாப்பிட்டு விட்டு...பொடி நடையாய் உலாவி விட்டு வரலாம் என செல்வம் அவனை கூப்பிட்டு சென்றான்..
அவன் அமைதியாக நடந்து வர..அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வர செல்வம் பேச்சுகுடுத்த படி வந்தான்...
இவனும் கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் க்கு ஒத்துழைக்க...நான் யார்?? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?? என அவன் கேட்க..
இந்த ஊரில் பெரிய குடும்பம் தான் எங்க குடும்பம்...எங்க ஐயா பெயர் ரத்தினவேல், அம்மா பெயர் பர்வதம் அம்மையார்... என் பெற்றோர்க்கு நானும் என் தங்கையும் மட்டும் தான்.. என் பெயர் செல்வம்...என் தங்கையின் பெயர் நந்தினி..
5 வருடங்களுக்கு முன்னால்...நந்தினிக்கு 14 வயது, எங்க ஊரில் பெண்களுக்கு சின்ன வயசுலயே திருமணம் பண்ணிருவாங்க...
என் தங்கை தான் எங்க வீட்டு இளவரசி..
என் தங்கைக்கு பெரிய இடத்திலிருந்து சம்பந்தம் வந்தது...
நந்தினிக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்..
அதனால் திருமணம் வேண்டாம் என கூற நம்ம ஊருல பெண்களுக்கு படிப்பு சரிப்பட்டு வராது என புத்திசொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்..
சீறும் சிறப்புமாக என் தங்கையின் நிச்சயதார்த்தம் வேலை நடந்தது..
நிச்சயதார்த்ததிர்க்கு முதல் நாள் குடும்பத்சோடு குலதெய்வ கோவில் க்கு செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட அமர்ந்தோம்..
நாங்கள் சாப்பிடுற நேரம் பார்த்து எங்க வீட்டு குழந்தை தவழ்ந்து வெளியே சென்று விட்டது..
நாங்க யாரும் பிள்ளைய கவனிக்காம சாப்பிட்டு கொண்டிருந்தோம்..
அந்த நேரம் பிள்ளையை யாரோ தூக்கி கொண்டு போக பார்க்க.. நீங்க அவனை அடித்து பிள்ளையை வாங்கிடீங்க..
இங்கு நாங்கள் பிள்ளையை கானோம் என தேடும் போது நீங்கள் பிள்ளையை கொண்டு வந்து என் அண்ணனிடம் கொடுக்க.. பிள்ளை உங்க கிட்ட ஒட்டிகிட்டு வராமல் இருந்தது..
நீங்கள் பிள்ளையை கொஞ்சி விட்டு குடுத்துட்டீர்கள்..
பிறகு நாங்க வாகணத்தில் செல்லும் போது நீங்களும் உங்க காரில் வர எங்க பிள்ளை ஜன்னலை தட்டி பேசி உங்களை பார்த்து சிரித்து கொண்டு வந்தது.. எதிர்பாராமல் குறுக்கே வந்த ஒரு லாரி தவறுதலாக எங்க வாகணத்தில் மோத வரவும்..பதற்றத்தில் நீங்க உங்கள் காரை முன்னாடி ஓட்டி வர..அந்த லாரி உங்க காரை மோதி வீசியது..
எங்க ஊரில் மூலிகை மருத்துவம் செய்வதால் அங்கு வைத்தே உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு எடுத்தோம்...
5 வருடமாக சிகிச்சை அளித்து இப்போது தான் பலன் கிடைத்திருக்கிறது..
ஆனால் உங்களுக்கு பழைய நினைவுகள் எப்பொழுது வரும் என்று மட்டும் உறுதியாக எங்களுக்கு தெரியவில்லை..
அதுவரை நீங்க எங்க வீட்டுலயே இருங்க என செல்வம் கூறினான்...
Sry..sry..sry...sry frndz..
Yen sissy ku mrg..naan yen native place ku poitaen...adhaan late ud...
Sry frndz😯😯
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro