மகள்கள் ஜாக்கிரதை சில அப்பாக்காளுக்கு
காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.
வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.
சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.
என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்
அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்
ம்ம்ம்
இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்
மகளை பார்த்துக்கொள்ளுங்கள்
தங்களை போன்ற தந்தைகள்
இன்னும் உயிருடன்.
தலைகுனிந்த அவர் முன்
தலை நிமிர்ந்து நடந்தேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro