பெண் குழந்தை
கண்ணின் மணிபோல் என்னை
கருவறையில் காத்தவளே...!
பத்து மாதம் பக்குவமாய்
வைத்து சுமந்தவளே...!
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா...?
பெண்ணென்ற கலக்கமா
பெற்றவளே உன் நெஞ்சில்!
கள்ளமில்லாத தாயே உன்
உள்ளம் நினைப்பதென்னவோ...?
நெல்லின் மணிகொண்டு
நெஞ்சை நிறுத்தவா?
கள்ளிப்பால் வார்த்து
கல்லறை படைக்கவா?
இதற்காகவா இவ்வளவு
கஷ்டப்பட்டாய்.......
உயிர் கொடுத்து உருவாக்கிய
நீயே
உயிரை பறிப்பது நியாயமா...?
வேண்டாம் தாயே இந்த
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லை என்றால்...
அரசுத்தொட்டியில்
போட்டுவிடு தாயே...!
ஏன் இந்த கொலை முடிவு...?
நீயும் ஒரு பெண்தானே....?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro