மங்கையின் மடல்.
கண்ணீர் துளிகள் சாட்சியாய்
வரைகிறேன் இம்மடலை உனக்காய்
தாயின் கருவரையில்
ஈரைந்து மாதங்கள்
தங்கினேன் சுகமாய்
நான் சுகமாய் இருந்த இருதி தருணம் அதுவோ!
நிம்மதியாய் இருந்த என்னை
ஏன் இப்புவியில் உதிக்கச் செய்தாய்
நீ சோதனைக்காய்ப் பிறந்தவள்
நிம்மதியாய் இருக்கவல்ல என்பதற்காகவா?
பிறந்ததும் என்னென்ன அம்புகள் என்னைத் தாக்கியதோ!
மகிழ்கிறேன்,அவை ஒன்றும் எனக்கு விளங்கவில்லை என்பதற்காய்
நினைவிருக்கும் நாளிலிருந்து
நான் சிரித்த நாட்களை எண்ணியே விடுவேன்
அன்பான வார்த்தை,ஆருதலான அரவணைப்பு
ஆகியன என் வாழ்க்கையில் இல்லவே இல்லை
தாயன்பு நானறியேன்
தந்தைப்பாசம் உணர்ந்திலேன்
மனம் முழுதும் காயம்
அதையென்றால் எண்ண முடியாது என்னால்
தினமும் வடிகிறது என் கண்ணீர்
வற்றாத ஆறாக!
எனக்கே அதிசயம்
"என்னிடம் இன்னும் கண்ணீர் எஞ்சியிருக்கிறதா?" என
இறைவா!!!
இவ்வாறான சோதனைகளை படைத்த நீ
ஏன் அதைத் தாங்கும் மனதைத் தரவில்லை?
என் கண்ணீர் நதியை வற்ற வைக்க வழி செய்!
என் வாழ்க்கைக்கு வர்ணம் சேர்!
என் மனக்காயங்களுக்கு மருந்தளி!
எனக்கென்று ஓர் உலகம் தா!
அதிலேனும் நிம்மதியாய் வாழ்வேன்!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro