காதல் கிரிக்கெட்டு - 11
தலைக்கு மேல கோபம் வருது ஆனாலும் வெளி காட்டலையே...
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலையே...
லிரிக்: ஹிப் ஹாப் தமிழா.
கடவுளே எப்படியாவது என்னை காப்பாத்திடு என்றவாறு நான் கண்களை திறக்க அது நேராக பார்த்ததோ எனக்கு மிகவும் பழக்கப்பட்ட எப்போது குறையாத கோபத்துடன் இருந்த அந்த கேரமல் நிற கண்களை தான்...
அய்யோ மாட்டுனேன் மாட்டுனேன் இன்னைக்கு நான் மர்கயா தான் சும்மா பேசுனாலே டிவோர்ஸ் கேப்பான் இப்போ நான் பன்னதெல்லாம் தெரிஞ்சா வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினாலும் பூட்டிடுவான்....
அதைவிட மோசமா.....என்னை வீட்டுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வச்சிட்டானா??? ஐயோ நான் என்ன பண்ண? ஏதாவது யோசி யாஸீன்...
ஆனால் நான் யோசித்து முடிப்பதற்கு முன்னாள் அவனே என் முன்னால் வந்து நின்று "இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?" என்று சந்தேக கண்ணுடன் கேட்க்க என் தலையில சக்கரம் சுற்றியவாறு தான் இருக்கிறது இன்னும் பதில் மட்டும் வரவில்லை...
"அ..அது-"என்று நான் திக்கி திணற..
அதற்கு முன் அவன் அடுத்தடுத்து கேள்விகளை கேட்க்க தொடங்கினான்,
"உனக்கு எப்படி என் ஆஃபீஸ் இதுன்னு தெரியும்? இவ்ளோவ் மழையில் இந்த நேரத்துல நீ இங்க தனியா என்ன பண்ணற?" என்று அவன் அடுத்தடுத்து கேள்வி குண்டுகளை வீச ஆரம்பித்தான்,
'இருடா இன்னும் ஒரு கேள்விக்கே பதில் தெரியல இத்தனை கேள்வி கேட்டா மூலை ஓவர் லோட் ஆகுது' என்று மனதிற்குள் நான் பேசி கொண்டிருந்த நேரத்தில்...
அவன் என் பதிலுக்காக அந்த கூர் பார்வையை வைத்து என் தலைக்குள் துளை போட்டு கொண்டிருக்க என்னால் யோசிக்க முடியாமல் நான் திரு திரு வென முழிக்க அவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்...
"என் கூட பேச நீ ஆஃபீஸ் வரைக்கும் வர தேவை இல்லை யாசின் ஓர் msg இல்லனா கால் பண்ணி இருக்கலாமே"
முதலில் என்னை கண்டு பிடித்து விட்டானோ என்று வயிற்றை கலக்க ஆரம்பித்த எனக்கு அவன் பிறகு சொன்ன வார்த்தைகள் தான் மூலையில் பளீர் என்று பல்ப் எரிய வைத்தது,
"ம்ம்...ஆமா உன்னை பார்க்கத்தான் வந்தேன்"
என்றதோடு எனக்கு வார்த்தைகள் கிடைக்காமல் போய் நான் திருத்திருவென முழிக்க..
அவன் என்னை குழப்பத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்,
நான் இன்னொரு முறை முயற்ச்சி செய்தேன்,
"ஆமா நான் உன்னை பார்க்க தான் இவ்வளவு தூரம் வந்து வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு பேய் மாதிரி நாடு ராத்திரி வந்து காலைல காணாமல் போயிடற...உனக்கு என்னதான் பிரச்னைன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்"
'அப்பாடா எதையோ சொல்லி சமாளிச்சாச்சி...'
அவனும் புருவங்களை சுருக்கியவாறு தரையை பார்த்துக் கொண்டு பின் கழுத்தில் கை வைத்தவன் மீண்டும் என்னை பார்த்து விட்டு "ஓகே கார்ல ஏறு இந்த மாதிரி நேரத்துல எல்லாம் தனியா சுத்தறது நல்லதில்லை இனி இப்படி பண்ணாத" என்றவாறு அவன் காரின் கதவை திறந்தான்...
"நான் மட்டும் தான் தப்பு பன்னேனா? அப்போ நீ?" என்று நான் அவனை பார்த்து கேட்க்க...
என் முகத்தில் அவன் கார் கதவை மூட எனக்கு குழப்பத்துடன் சேர்ந்து கோபமும் வர ஆரம்பித்தது,
பிறகு அவன் இன்னொரு புறம் வந்து அமர்ந்து தலையில் இருந்த மழை நீரை தட்டி விட்டு என்னை காணாமல் முன்னாள் இருந்த கண்ணாடியை பார்த்துக் கொண்டு,
"நான்...நானும் உன்னை அவோயிட் பன்னது தப்பு தான்..."
'அப்படி வா வழிக்கு'
பிறகு ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு அந்த முத்தான வார்த்தைகள் அவன் வாயிலிருந்து சிதறின,
"i'm sorry" பிறகு மீண்டும் அவன் தலையை கோதி விட்டு என்புறம் திரும்பிபேச ஆரம்பித்தான்,
"அதுக்காக நீ இப்படி night timeல தனியா--" அத்துடன் அவன் பேசியது எதுவும் விளங்கவில்லை,
எனக்கு விளங்கியது எல்லாம் என் இதயத்துடிப்பு தான், கண்களில் தெரிந்தது எல்லாம் அவன் முகம் தான் அவன் முடியிலிருந்து வழிந்து அவன் கன்னகளில் இருந்து கழுத்திற்கு ஓடிக் கொண்டிருந்த அந்த நீர் துளிதான்...
"யாசின் நான் சொல்லறது புரியுதா?" என்ற வார்த்தைகள் தான் என்னை அந்த அழகான கனவில் இருந்து எழுப்பியது...
"ஆ...ஹ..ம்ம்ம்...நல்லா புரியுது ரிஸ்" என்று நான் என் தலையை வானத்திற்கும் பூமிக்குமாக கழுத்து சுளுக்கும் அளவிற்க்கு ஆட்ட அவன் காரை ஸ்டார்ட் செய்தான்...
ஸ்டார்ட் செய்த சில நிமிடங்களுக்கு மௌனமாய் இருந்தவன் பிறகு அங்கு இருந்த screen எதையோ தடவி விட்டு யாருக்கோ கால் செய்தான் ஸ்பீக்கரில் இருந்ததால் குரலை வைத்து அது அவன் மேனஜர் என்று தெரிந்து கொண்டேன்...
"but சார் நீங்க தான் மழையா இருந்தாலும் பரவாய் இல்லை என்று டின்னருக்கு ஓகேனு சொன்னிகளே சார்" என்று மறுபக்கத்தில் இருந்து குரல் கேட்க்க
அவனோ அந்த கிலட்ச்சை நகத்திக் கொண்டு இன்னொரு கையில் ஸ்டாரிங்கை பிடித்தவாறு அதே வெற்று முகத்துடன் "இப்பவும் நான் தானே சொல்லேறேன்...டின்னேரை கேன்சல் பண்ணிடுங்க" என்றதோடு அழைப்பை கட் செய்தான்,
"so உனக்கெப்படி என் ஆஃபீஸ் தெரியும்?" என்று ஆரம்பித்தான்...
"ம்ம்...fa..farah சொன்னா" என்றவாறு நான் ஒரு அசட்டு சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொல்ல
அவனோ முதலில் புருவத்தை சுறுக்கியவன் பிறகு தலையை ஆட்டிக்கொண்டு மீண்டும் அமைதியானான்...
வீட்டிற்கு வந்ததுடன் நாங்கள் இருவரும் அவரவர் அறைக்குள் புகுந்து விட குளித்து விட்டு வந்த நேரத்தில் அவன் அந்த சமையலறையில் நான் மிக குறைவாகவே கண்டுள்ள அந்த அமைதியான முகத்துடன் ஒரு professional cook கை போல அந்த panனை கையில் வைத்து சிக்கனை மேலே போட்டு அதில் பிடித்துக் கொண்டிந்தான்...
நானோ அவனை எப்போது பார்க்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை கடேசியாய் அவன் எல்லாம் செய்து முடித்து விட்டு குளிக்க செல்லும்போது தான் சுயநினைவிற்கு வந்தேன்...
பிறகு வேறு வழி இல்லாமல் இந்த பாலாய் போன நூடுல்சை செய்து கொண்டு சிக்கன் வாசம் எனக்கு வரும்போதேல்லாம் அவனை திட்டிக்கொண்டு அதை செய்து முடித்து சாப்பாட்டு மேஜையில் வந்து வைத்து சாப்பிட ஆரம்பித்தேன்...
முன்னாள் மேஜையில் இருந்த அந்த ஆப்பிள் பழத்தை பார்த்துக்கொண்டே முதல் கரண்டியை எடுத்து என் வாய்க்குள் திணித்தேன்...
பிறகு மீண்டும் சிக்கன் மனத்தை முகர்த்து கொண்டே சோகத்துடன் இன்னொரு முறை கரண்டியை பாத்திரத்திற்குள் விட வெறும் தரை தான் தட்டியது...
தான் சாப்பிட பாத்திரத்தயோ அதில் இருந்த அந்த நூடுல்ஸ்சயோ காணோம்...
எங்கு என்று தேடிய போது தான் அந்த பாத்திரம் அவன் கையில் இருக்க அதை அவன் குப்பையில் போடுவதை கண்டேன்...
"hey...hey..hey..என் dinner" என்று நான் அலற அவனோ கண்ணை உருட்டிவிட்டு இன்னொரு தட்டை என் முன் வைத்தான்...
அதில் சற்று முன் என் கனவில் நீந்தி கொண்டு இருந்த அந்த சிக்கெனும் அதற்கு சைடு டிஷ்ஷாக சப்பாத்தியையும் வைத்திருக்க என் கண்ணிலிருந்து ஆனந்த கண்ணீர் வராதது தான் குறைச்சல்,
அதே நேரத்தில் என் உணவும் என்னை வா வா என்று அழைத்துக் கொண்டிருக்க அப்போது தான் பேசுவதற்கு நல்ல நேரம் என்று என் மூலை நினத்திரிக்கும் போல...
'என்ன யாஸீன் இத்தனை நாளா உன்னை ஒரு human ன்னு கூட நினைக்காமல் உனக்கு சாப்பாடு செய்து தராமல் உன்னை ignore பண்ணி இருக்கான் திடீர்னு வந்து சிக்கனை முன்னால நீடினால் உடனே நீ கொஞ்சம் கூட இந்த வெக்கம் மான-'
'sorry மைண்ட் வொய்ஸ் பட் எனக்கு பசிக்கிது'
என்று என் மூலையில் உள்ள அந்த குரல் பேசி முடிப்பதற்குள் என் வாய்க்கு அந்த சாப்பாடு பாதி வழியில் போய் கொண்டு இருந்தது....
'Okay ஒத்துக்குறேன் எனக்கே என்னை நினைச்ச கொஞ்சம் கேவலமாக தான் இருக்கு'
அவன் என் முன்னால் இன்னொரு தட்டுடன் வந்து அவனும் அமர்ந்தான்...
"ஏன் இப்படி நூடுல்ஸ் ஜன்க் foods எல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குற" என்று அவன் வாயில் இருந்த உணவை விழுங்கி விட்டு சொல்ல எனக்கோ அப்போது தான் கோபம் வர ஆரம்பித்தது...
"என்ன ஜோக் பண்ணறியா உனக்கு தெரியாதா எனக்கு சமைக்க தெரியாதுன்னு, சும்மா ஏன் என்னை வெறுப்பு ஏத்துர" என்று நான் கேட்க்க அவனோ அதற்கு கண்ணை உருட்டி விட்டு...
"அது எனக்கு தெரியும் ஜீனியஸ் நான் தினமும் உனக்காக பிரிட்ஜ்ல வச்சிட்டு போற சாப்பாட சூடு பண்ணி சாப்பிடறதுல என்ன வந்தது?" அவன் கேட்ட உடனே 'அடச்ச்சே அது எனக்கு தானா?' என்று தலைக்குள் ஒரு குரல் கேட்டது...
"அது நீ வேற என் கூட சண்டை போட்டு கோவமா இருக்க அப்பப்போ இங்க இருக்காதா boyfriend பத்துக்கான்னு எல்லாம் சொன்னியா அதுதான்... நீ எங்கே எனக்கு வச்சிருக்க போற...அது உனக்காக சமைச்சு வைத்ததோன்னு நினைத்து...அப்படியே வச்சிட்டேன்"
நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்வையின் கூர்மையும் பல் கடிக்கும் சத்தமும் அதிகமாகி கடேசியாக நான் பேசி முடித்தவுடன் அவன் பேச ஆரம்பித்தான்...
"என்னை பார்த்தா என்ன சீரியல் வில்லன் மாதிரி இருக்கா? உனக்கு சோறு தண்ணி தராமல் கஷ்ட படுத்துறதுக்கு" என்று அவன் இன்னும் பல்லை கடித்தவாறு என்னை பார்த்துக் கொண்டு இருக்க எனக்கோ என்ன சொல்வதென்று தெரியாமல் வெறும் காற்றை விழுங்கி கொண்டு இருந்த கடேசியாக வாயை திறந்தேன்...
" maybe நான் தான் misunderstood பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்... அதுக்கு எதுக்கு இப்படி மோரைக்கிறே எனக்கு பயமா இருக்கு ரிஸ்"
என்றவாறு நான் என் முன்னிருந்த உணவை பார்த்துக் கொண்டிருந்தேன்,
'சாப்பிடவா வேணாமா சாப்பிட்டா திட்டுவானோ அல்ரெடி கோபமா இருக்கான் அவன் சாப்பிடற வரைக்கு வெய்ட் பண்ணுவோம்'
என்று மனதில் நினைத்துக் கொண்டு மீண்டும் அவனை கண்டேன் இந்தமுறை அவன் என் முகத்தில் துளை போடுவதை நிறுத்து விட்டு என்னை சாப்பிட சொல்லி செய்கை காட்ட மீண்டும் இருவரும் உண்ண ஆரம்பித்தோம்...
-------
அன்று கார் வருவதற்கு நேரம் ஆனதால் நாங்கள் நால்வரும் கேன்டீனில் அமர்ந்து இருக்க,
Harryயும் farahவும் மிக தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தந்தார்கள்,
நானும் fazi யும் மொபைலில் guns of boom வியாடிக் கொண்டிருக்க அவள் போடும் சத்தத்திற்கு வழியில் போன்றவர்கள் எல்லோரும் எங்களுக்கு வினோத பார்வை வீசியவாறு சென்று கொண்டிருந்தனர்,
திரும்பவும் நான் ஆட்டத்தில் மறுபடியும் தோற்து விட்டு என் தோல்வி மூச்சுடன் டேபிளில் தலையை சாய்க்க அவள் இன்னொரு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள்...
"நீங்க எல்லாம் வீட்லயும் அப்போ இந்த ப்ளாக் ட்ரெஸ் தான் போட்டுட்டு இருப்பீங்களா?" என்ற என் ஹிஜாபை பற்றி விசாரித்து கொண்டு இருந்த ஹரிணியின் குலப்பமடைந்த குரல் என் காதில் கேட்டது...
"இல்ல வீட்ல எல்லாம் கேசுவலாதான் ட்ரெஸ் பண்ணி இருப்போம் ப்ரோதேர்ஸ் அப்பாக்கு எல்லாம் இந்த ரூல் இல்ல" என்று farah அவளிடம் கூறினாள்...
"அதுதானே நானும் first இவள பாத்தப்ப....i was like இவள் இந்த பிளாக் thingyல டிசைன் போடவா இங்க படிக்க வந்திருக்ககுர மாதிரி யோசிச்சிட்டு then i was like how rude of you harini ன்னு நிறுத்திக்கிட்டேன்"
"இன்னும் நீ ரூடா தான் பேசுற harry" என்று நான் டேபிளில் படுத்துக்கொண்டு சத்தம் எழுப்ப,
"Its okay now இப்போ நீ என் friend ஆயிட்டே.." என்று அவள் கூறிட நானோ கண்ணை உருட்டியவாறு "unfortunately" என்று நான் முணுமுணுக்க அவளோ நான் சொன்னது கேட்காதது போல் என் பக்கம் திரும்பாமல் farah வின் பக்கம் திரும்பிய படியே பேசிக்க9ண்டு இருந்தாள்....
"harry அப்போ உனக்கு எப்படி இந்த டிசைனிங் மேல எல்லாம் இண்ட்ரஸ்ட் வந்தது? என்று fazi அவளிடம் கேட்க்க,
"அந்த கொடுமையை ஏன் கேக்குற, எங்க அம்மா fashion designer என் அக்காக்கு அது ஒத்து வராததால் எங்க பொடீக்கிற்கு நான் தான் ஹெல்பராக இருந்தேன் அங்க நான் ஒரு தடவை time பாஸ்க்கு கிழிச்சு வெச்ச துணியெல்லாம் ரொம்ப நல்ல இருக்குன்னு என்னை என் அம்மா இங்க அனுப்பி வச்சிடாங்க, இங்க வந்து பாத்தா எல்லாம் லெட்டர்ஸும் நம்பரசுமா இருக்கு ஒரு டேஷும் புரிய-"
அவள் உலரிய கதை திடீரென்று நின்று போனது...
"என்ன நம்ம காலேஜ்ல புதுசா male மொடேல்ஸ்க்கு ஏதாவது ஆடிஷன் நடக்குதா" என்று என் காதில் வந்து முணுமுணுக்க நான் அவள் எதை பற்றி பேசுகிறாள் என்று யூகிக்கும் முன்பே...
"அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவ படப்போகுது நான் போய் என்னனு பாத்துட்டு வர்றேன்" என்று அவள் எழ அவள் யாரை பார்த்து கூறுகிறாள் என்று நான் அவள் காட்டிய திசையில் பார்த்த பிறகுதான் அது எனக்கு பழக்கப்பட்ட male models தான் என்று புரிந்தது...
"harry அப்பறம் ரொம்ப வருத்த படுவ வேணாம்" என்று அவளை இழுத்து வைத்து அவள் காதுக்குள் சொல்ல
"இங்க எனக்கு தெரியாம என்ன குசுகுசு" என்று அவள் நோட்டில் எழுதிக்கொண்டே farah கேட்டாள்...
"ஒன்னும் இல்ல உன் புருஷன் வந்துடான்னு நாங்க கெளம்பணும்னு சொல்லிட்டு இருந்தேன்" என்று நான் லாஜிக் இல்லாமல் பேசியதை கூட கவனிக்காமல் அவள் கணவனை காண திரும்பினாள் என் மறு தோழி..
இங்கு இன்னொரு தோழியின் முகமோ இனிப்பை பறித்த குழந்தை போல் ஆனது,
"அவள் புருஷன் அந்த பிளாக் டீஷர்ட் hottie தானே இட்ஸ் ஓகே நான் இன்னொருத்தன பாதுக்குறேன்" என்று அவள் கூற,
"இல்ல அது அவள் ப்ரதேர்" என்று நான் தெளிவு படுத்த அவள் கிட்டதட்ட அழுவது போல் முகத்தை மாற்றி கொண்டு,
"அவள் புருஷன் அந்த grey eyed-mouth-watering-hot guy தான்னு மட்டும் சொல்லாதே வேற யாராவது பின்னால வருவங்கன்னு சொல்லு pleeeeeeseee" என்று அவள் கெஞ்ச நானோ அவளுக்கு ஆறுதலுக்கு தூளை தட்டி விட்டு "you are too late" என்று நான் கூறினேன்...
அதை கவனிக்காத என் மறுதோழி அவள் கணவனை பார்த்து புன்னகையுடன் வரவேற்கிறாள்..
"fazil நீ எங்கே இங்க?" என்று பாதி ஆச்சர்யத்தில் பாதி ஆனந்தத்தில் கூற இங்கு இவளோ அப்போது தான் சோகத்தில் மூழ்கி எழுந்து வந்து...
"ஓகே பரவா இல்ல பக்கத்துல இருக்க அவள் ப்ரோதேர் கூட நல்லா தான் இருக்கான் நான் வேணுன்னா அவன் கிட்ட பேசிக்கிறேன்" என்று அவள் என்னிடம் கூறி அதற்கு நான் பதிலளிப்பதற்கு முன்...
Asfaவோ பக்கத்து நாற்காலியில் மும்பரமாக game விளையாடி கொண்டிருந்த fazi யின் மொபைலுக்குள் கைவிட்டு அவள் ஆட்டத்தை குளப்பிவிட அவளோ யாரென்று கோபத்துட திரும்பி "உண்ணே....நீ எதுக்கு இங்க வந்தே நான் கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்குறது கூட பொறுக்களையா உனக்கு? எருமை" என்று கோபத்தில் வெடிக்க,
"யாரு வர்றா போறேன்னு கூட தெறியாம விளையாடிக்கிட்டு இருக்கே, நீ எல்லாம் எங்க படிச்சி கிழிகிச்சு- " என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே,
"ஹஹஹஹஹ, பேசுறது யாருன்னு பாரு mr.game maker அது தான் யாருக்கும் உன் கேம்ஸ பிடிக்கவே மாட்டேங்குது" என்று அவள் அவனை வெறுப்பேற்ற,
"excuse me என்னோட லாஸ்ட் game..."என்று அவர்கள் பேசிக்கொண்டே போக, நான் என் தோழியை திரும்பி பார்க்க அவளோ முகத்திற்கு நேராக விரல்களை நீட்டி என்னை நிறுத்தியவாறு...
"வேணாம் எதுவும் சொல்ல வேணாம் போதும்" என்று கூற, எனக்கோ வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை,
"சீரியஸ்லி யாசின் அல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன் சிரிக்காத" என்று அவள் கோபமாக கூற எனக்கு இன்னும் சிரிப்பு வந்தது,
"போங்கப்பா நான் ஏதாவது மதர் தெரசா மாதிரி நண் ஆகிட போறேன்" என்று அவள் புலம்ப அதே நேரத்தில் farah பாதி வழி தன் கணவனுடன் போக திரும்பிய என் தோழி என் புறம் திரும்பி...
"இன்னைக்காவது என் கூட வர்றியா?" என்று அவள் கேட்க்க நானோ கொஞ்சம் உருத்தலுடன்,
"இல்ல நான் harry கூட போய்கிறேன் எங்களுக்கு ஒரு ப்ரொஜெக்ட் இருக்கு அவள் வீட்ல தான் பண்ண போறோம்" என்று நான் எப்போதும் போல அவளிடம் இன்னொரு பொய்யை கூற...
"இப்போ எல்லாம் ரொம்ப பிஸியா தான் இருக்க யாஸீன்...அம்மா வேற தினமும் ஒரு தடவ உன்னை மறக்காம கேட்டிடுறங்க... ஒரு நாளைக்கு வந்து பாத்துட்டு போ " என்றவாறு அவள் மீண்டும் கிளம்ப ஆரம்பித்தாள்,
"கண்டிப்பா இந்த projectல இருந்து freeயான உடனே அத்தையை வந்து பாக்குறேன் அத்த கிட்ட எனக்காக மிஸ் யூ சொல்லிடு... நான் வந்தால் எனக்கு பிரியாணி வேணுன்னு சேர்த்து சொல்லு....bye farah" என்று கூறி வழி அனுப்பிவைக்க...
அவள் போகும் பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு பெருமூச்சை விட அருகில் நின்றவளோ,
" உனக்கு அவனை பிடிச்சிருக்குகிறது எல்லாம் ஓக்கே யாஸீன் இருந்தாலும் அவனை தினமும் பக்கணும்னு அவன் இருக்குற ஆஃபீஸ்ல போய் சேர்றது அதுக்காக farah கிட்ட போய் சொல்லறது உன் familyய அவோயிட் பண்ணறது எல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உனக்கு? அப்போ farah உன்னோட cosineனா நானும் நீங்க just ஸ்கூல் friendsனு நினைச்சேன்" என்றவாறு என்தோழி farah சென்ற திசையின் மீது கண்ணை வைத்த வாறு கூறினாள்,
farah கிட்ட அவன் கிட்ட எல்லாம் பொய் சொல்ல எனக்கும் கவலையாதான் இருக்கு ஆனால் farah கிட்ட நான் அங்க வேலை செய்யறதை சொன்னால் எங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்...
அவளுக்கு அதெல்லாம் தெரிஞ்சா அவள் கஷ்ட படுவா அதான் எதுக்கு..
அப்பறம் ரிஸ் கிட்ட சொல்லாததுக்கு காரணம் I'm just plainly embarrassed என்கிறது மட்டும் தான் ஒரே காரணம்'
"நீ வேற நான் ஒன்னும் வேணுமென்று எல்லாம் familyஅ அதுவும் அத்தையை.... சான்ஸே இல்லை... நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தப்ப எல்லாம் அவங்க தான் எனக்கு பெரிய...நீ நினைக்கிறதவிட என் family எனக்கு ரொம்ப precious" என்றவாறு நான் அவளுக்கு பாதி பதில் அளிகத்தேன்..
அவளும் தலை ஆட்டிக்கொண்டே அவள் முன்னிருந்த மேஜையில் தலை சாய்த்துக் கொண்டாள்...
------ ---
"சீக்கிரம் போ harry...அந்த acceleratorர இன்னும் நல்லா திருகு" என் தோழியின் பைக்கின் பின்னால் அமர்ந்தவாறு ரிஸ்வான் எனக்கு முன்னால வீட்டுக்கு போய் சேர்ந்திட கூடாதுன்னு வேண்டிக் கொண்டிருக்கிறேன்,
"சும்மா இறுடி இந்த இடத்துல இதுக்கு மேல வேகமா போக கூடாது" என்று அவள் பைக்கின் அந்த சைடு மிரரை சரி செய்த வாறு என்னிடம் சொன்னாள்...
எனக்கு இருக்குற பதற்றத்தை கொஞ்சம் குறைப்பதற்காக நான் வேற எதிலாவது கவனம் செலுத்த வேண்டும் என்று பேச ஆரம்பித்தேன்...
"சரி இப்ப எல்லாம் என்ன உன்னை கஃபே பக்கமே காணோம் உன் பரிஸ்டா ஹீரோவ விட வேற யாரையாவது அழகா பார்த்துட்டியா?" என்று நான் கேட்க்க அவளோ ஒரு பெரிய பெருமூச்சுடன் அவள் முகம் கொஞ்சம் சீரியஸ் ஆனது...
"அந்த கொடுமையை ஏன் கேக்குற அன்னைக்கு நம்ம வந்துட்டு போய் 2 நாளிலையே அவன் வேலையை விட்டு போய்ட்டானாம், வேற யாரிடமாவது அவன் எங்க இருப்பான்னு விசாரிக்கலாம்னு பாத்தா அவனை பற்றி யாருக்கும் ஒன்னும் தெரியல" என்று அவள் சோகமாய் கூறியதற்கு நான் சிரிக்க அவள் மூலங்கையால் எனக்கு ஒரு குத்து விட்டு விட்டு,
"நான் இங்கே எவ்ளோவ் சோகமா என் கதையை சொல்லிக்கிட்டிருக்கேன் உனக்கு சிரிப்பு வருதா?" என்று அவள் கேட்க்க நானோ மீண்டு சிரித்துக்கொண்டே...
"சரி சரி விடு விடு crush தானே ஒண்ணு போனா இன்னொன்னு வந்துகொண்டே இருக்கும் என்னவோ 4 அஞ்சு வருஷம லவ் பண்ண மாதிரி feel பண்ணற" என்று நான் அவளிடம் கூற...
அவளோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க எனக்கோ சந்தேகம்வர ஆரம்பித்தது...
"ஏய் என்னடி அமைதியா இருக்க உண்மையாவே அவனை லவ் பண்ணி கிண்ணி தொழச்சிட்டியா என்ன?" என்று நான் கேட்க்க அவளோ ரெட் சிக்னல் விழுந்ததால் வண்டியை நிறுத்தி விட்டு தலையை களைத்து விட்டவாறு...
"அதில்லை யாஸீன் அவன் வேலையை விட்டு போறதுக்கு முந்தின நாள் நான் எப்பவும் போல அவன் வேலை முடிஞ்சப்பரம் அவன் கூட பேச போனேன்னா..
அப்போ எப்போதும் போல அவனும் என்னை மதிக்காமல் நடந்து போனானா...அப்போ 4 தடியனுங்க யாஸீன் இவ்வளவு பெரிய உருட்டு கட்டை, அவனை அடி அடின்னு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல யாஸீன், அவன் என்ன ஓடிபோய்டுன்னு சொன்னான் பட் நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு போனேன் என்ன தள்ளி விட்டுட்டு இப்போ போக போறியா இல்லையான்னு கத்த ஆரமிச்சான், நான் என்ன பண்றதுன்னு முடிவுப் பண்ணறதுக்கு முன்னால ஒரு தடியன் என் பின்னால வர ஆரம்பிச்சான்னு நான் ஓட ஆரம்பிச்சிட்டேன்..." என்று அவள் கிட்டத்தட்ட கலங்கிய கண்களுடன் கூறினாள்
"அப்பறம் என்னாசிச்சு" என்று நான் கேட்க்க
அவளோ அவள் விரல்களை பார்த்துக் கொண்டு "அப்பறம் என்னாச்சு போலிஸ் கிட்ட கம்ப்லைன் பண்ணேன் அங்க அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்களன்னு சொன்னாங்க ஆனால் அடுத்த நாள் நான் அந்த இடத்துல போய் பார்த்த போது காய்ந்து போன blood பார்த்தேன் அப்பறம் எல்லாரு கிட்டயும் விசாரிச்சேன் but யாருக்கும் ஒன்னும் தெரியல...எல்லாரும் எல்லாமே நார்மலா இருக்குற மாதிரி நடந்துக்குறாங்க ஆனால் அவனை மட்டும் காணோம்.. இல்லாத மாதிரி மரஞ்சி போய்ட்டான்" என்று அவள் சொல்லி முடிக்கவும் கிறீன் சிக்னல் விழவும் சரியாக இருந்தது...
கொஞ்சம் நேரம் இருவரும் எதுவும் பேசவே இல்லை பிறகு நான் பேச ஆரம்பித்தேன்,
"இதை ஏன் நீ முதலிலேயே என் கிட்ட சொல்லவில்லை?" என்று நான் கேட்ததற்கு,
"நீயே உன் கேரமல் ஒன் சைடு லவ்வரோட எந்நேரமும் சோகமா திரியிற அதுதான் எதுக்கு இது வேறன்னு" என்று அவள் சொல்லி முடிப்பதற்க்கு முன்னால் கார்கள் வரிசை கட்டி நியப்பதை பார்த்து விட்டு வேறு வழி இல்லாமல் மீண்டும் அவள் வண்டியை நிறுத்தினாள்,
"என்னாச்சு ஏன் முன்னால இவ்ளோவ் கார் நிக்குது" என்று நான் கேட்க்க
"தெரில வா விசாரிச்சி பார்ப்போம் என்றதோடு கார் இடைகளில் புகுந்து முன்னாள் போய் நின்றவாறு அருகில் இருந்தவனிடம் என்னவோ அவள் இந்தியில் கேட்க்க அவனும் என்னவோ பதில் கூறினான்,
"என்ன சொல்லறான் அந்த இந்திக்காரன்?" என்று நான் அவளை சுரண்டினேன்,
"ஏதோ drug dealersச போலீஸ் தேடிக் கொண்டு இருக்காம் அதுனால எல்லா ஆட்களை செக் பன்னுராகலாம் so time ஆகும்னு புலம்புறான்" என்று அவள் கூறியவுடன் தான் முன் நின்ற காக்கி சட்டையை நான் கவனித்தேன் அப்போது தான் என் கணவனின் ஞாபகம் மீண்டும் வந்தது,
"அய்யோ இப்போ என்ன பண்ணறது harry நான் இப்போ வீட்டுக்கு போகணுமே"
"ஏன் கொஞ்சம் லேட்டா ஆகி போனால் என்ன எந்த ட்ரெயின்ன மிஸ் பண்ணிட போற" என்று அவள் கேட்க்க
இதுக்கு நான் இவள் கிட்ட என்னனு காரணம் சொல்லுவேன்... என் புருஷன் அவன் ஆபீஸ்ல நான் வேல பார்க்கின்றதை கண்டு பிடிச்சிடுவான்னா?
அதுக்கு முதலில் இருந்து முழு கதையும் சொல்லணுமே...
இப்படி நான் என் கிட்டயே பேசிக்கிட்டு இருந்தப்ப தான் எங்க முன்னால ஒரு ஏட்டு நேரா... harry கிட்ட வந்து பேசுனாறு...
"அம்மா நீ முன்னால போகலாமாம் உங்களை ஏசி சார் விட சொல்லிட்டாரு" என்று கூற எனக்கோ பெரிய ஆச்சரியம்,
Maybe harryக்கு தெரிஞ்ச ஆளா இருக்கும்,
"harry உனக்கு அசிஸ்ஸ்டாண்ட் கமிஷனர் சாரை தெரியுமா" என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய தொடங்கிய அவளை நான் கேட்க்க
அவளோ "hey லூசு நானும் இங்க ஷாக் ஆகி தான் நின்னுட்டு இருக்கேன்" என்று அவளும் கூற
நானோ யார் இந்த ஏஸி என்ற சந்தேகத்தில் அங்கும் இங்குமாய் தேட
harry அவள் தொண்டைக்குள் ஏதோ எலி சிக்கிக்கொணவாறு சத்தம் போட்த்துக்கொண்டு சடன் பிரேக் அடிக்க நான் அவளை திரும்பி பார்க்த்தேன்...
அவளோ முன்னாள் எதையோ பார்த்து மலைத்து கால்சிற்பம் போல் நிற்கிறாள்,
Harry potterஅ surprise பண்ணற அளவுக்கு யாருக்கு திறமை இருக்கு என்று நினைத்தவாறு அவள் பார்க்கும் திசையை நோக்கி நானும் பார்க்க
.
.
.
எங்களுக்கு முன்னால harry இவ்வளோவு நேரம் புலம்பிக் கொண்டிருந்த அதே ஆள்...
ஆனால் இவன் ஏன் காக்கிசட்டை போட்டு இருக்கான்?...
'wait a minute அவன் உண்மையாவே அவளை பார்த்து கண்ணாடிச்சானா? இல்ல இது என் மன பிராந்தியா'
நான் என் மனப்புலம்பளை முடிப்பதற்குள் அவள் வண்டியில் பறக்க ஆரம்பித்துவிட்டாள்...
கொஞ்சம் தூரம் போன பிறகு...
"யாஸீன் என் கண்ணு முன்னால போலீசை uniformல இருந்தவன் எனக்கு மட்டும் தான் தெரிஞ்சான இல்லை உனக்கும் தெரிஞ்சானா" என்று அவள் என்னிடம் கேட்க்க..
"அவன் உண்மையாவே உன்னை பார்த்து கண்ணாடிச்சானா" என்று அவளிடம் நான் இன்னொரு கேள்வியை கேட்டேன்....
"அது உனக்கும் தெரிஞ்சிதா? இப்போ நான் என்ன பண்ணனும்" என்று அவள் என்னை கேட்க்க.
"i think இனிமேல் நீ ஒன்னும் பண்ண தேவை இல்லைன்னு நினைக்கிறேன் அவனே பண்ணிப்பான்" என்றதோடு அமைதியானேன்...
அப்போது தான் மழை பெய்ய ஆரம்பித்தது...
----------------
அடுத்த நாள் காலை அவனுக்காக நான் டீ குடிக்காமல் காத்து கொண்டிருந்தேன் ஆனால் அவன் அறையிலிருந்து வெளியேறவில்லை,
இன்னும் நேரம் ஆகியும் அவன் வராமலிருக்க மிகுந்த ஏமாற்றத்துடன் நானும் அந்த டீயை கையில் எடுக்காமல் கல்லூரிக்கு தயாராக சென்றேன்,
நான் கல்லுரிக்கு செல்லும் நேரம் வந்தும் இன்னும் அவன் வெளியேறாமல் இருக்க அப்போது தான் முதலில் சந்தேகம் வந்தது…
ஆஃபீஸ் போய் இருப்பானோ என்று நினைத்து hangerரை திரும்பி பாரக்க அங்கோ அவன் கார் சாவியும் வீட்டு சாவியும் ஜோடியாக தொங்கி கொண்டு இருக்க எனக்கு சந்தேகம் அதிகமானது,
எனக்கோ அவன் அறைக்குள் கால் அடி எடுத்து வைக்க தாக்கம் இருந்தாலும் அவனிடமிருந்து சத்தமில்லாமல் இருப்பது இன்னும் பயத்தை ஏற்படுத்தியது …
இதுவரை நான் இங்கு குடி எரிய ஆறு மாதங்களில் அவன் இப்படி தாமதம் ஆனதே இல்லை,
எனவே ஒரு வழியாக தைரியத்தை வரவலைத்தவளாக அறைக்குள் அடி எடுத்து வைத்தேன்…
அவனோ இன்னும் போர்வையோடு சுருண்டப்படி உறங்கிக் கொண்டிருந்தான் எனக்கோ என்னவோ சரியில்லாதது போல ஒரு உணர்வு...
அவன் பெயரை இருமுறை அழைத்தும் பதில் இல்லாததால் அவன் தோலை குலுக்க அவன் உடலில் இருந்து வரும் வெட்பத்தை கைகளில் உணர்ந்த எனக்கு முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது…
அப்போது தான் நேற்றிரவு அவன் மழையில் நனைந்து வந்து நின்றது கண்முன் வந்து சென்றது…
“ரிஸ் எதுக்குடா இப்படி நனைந்து போய் நிக்கற மழைல விழையாடுற்றதுக்கு குழந்தையா நீ?” என்று கேட்ட எனக்கு எப்போதும் போல சுடு பார்வை விட்டவன்…
“ஆமா என்கிட்ட சொல்லு… காலேஜ் விட்டு எவ்வளவு நேரம் ஆகுது மணி 9 ஆகியும் நீ ஏன் வீட்ல இல்லை farahக்கும் எங்க இருக்கென்னு தெரியல என் அம்மா அங்க அழ ஆரமிச்சிடாங்க முதல்ல அவங்களுக்கு போய் கால் பண்ணு போ” என்று அவன் கேட்ட உடன் தான் எனக்கு அவன் என்னை தேடி வெளியே போய் இருக்கிறான் என்பது உறுத்த ஆரம்பித்தது,
அப்பறம் அத்தை...அய்யய்யோ..
நான் உடனே போய் போனடிக்க போய்விட்டேன்…
நான் போனை வைக்கும் போது அவன் ஹாலில் ஈர உடைகளை மாற்றிவிட்டு அதே ஈரம் படிந்த முடியை துவட்டாமல் என்னை குழப்பத்துடன் பார்த்தவனாக...
“harry யாரு?” என்று கேட்க்க எனக்கோ என் கவனம் முழுக்க அவன் தலை ஈரமாய் இருப்பதை பற்றி இருக்க அவன் கேட்டது எனக்கு வெறும் குழப்பதையே தந்தது...
“இல்ல அம்மு கிட்ட நீ எங்கன்னு கேட்டப்போ நீ harry வீட்டில் இருந்தாலும் இருப்பேன்னு சொன்னாள் இப்போ அம்மா கிட்டயும் அதை தான் சொன்னே அதுதான்?...” என்று அவன் கேள்வியுடன் பார்த்தான்.
“ஒஹ் அதுவா harry என் friend நீ எதுக்கு இப்படி தலையை துவட்டாமல் நிக்கிற ” என்று சொல்லிவிட்டு
நான் என் அறைக்குள் சென்று டவலை எடுத்து கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க...
அவனோ இன்னும் எதுவும் சொல்லாமல் எதையோ யோசிப்பது போல் நின்றான்...
நானோ பெரிதாய் எதையும் யோசிக்காமல் அவனை அருகில் இருந்த நாற்காலியில் அமர்த்தி (இப்படி மரம் மாதிரி சீலிங்கை இடித்தால் தான் நான் எப்படி அவன் தலையை துவட்டுவது?) தலையை துவட்டி விட சிறிது நேரம் எதையும் சொல்லாமல் அமர்திருந்தவன் பிறகு பேச ஆரம்பித்தான்.
“so உன் boyfriendடுக்கு உனக்கு ஒரு husband இருக்கிறது தெரியுமா” என்று அவன் குரல் டவளின் பின்னால் இருந்து வர முதலில் குழப்பம் வந்த எனக்கு பிறகு கோபமும் சேர்ந்து வர ஆரம்பித்தது,
‘இவன் உண்மையாவே என்னை வேற பைய்யனை பார்க்க சொல்லறான்...well உனக்கு அது தான் வேணுன்னா…’
“ஆமா ரிஸ் harry என் boyfriend தான் எப்படி கண்டு பிடிச்சே? நானும் எவ்ளோவ் நாள் தான் உன் பின்னாலேயே சுத்துறது” என்றவாறு அவன் மண்டைக்கு ஒரு இடி விட..
.
அவன் “அஹ்ஹ்” என்று போடும் சத்தத்தை ரசித்துக்கொண்டே தொடர்ந்தேன்,
“இந்த பைய்யன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணான் அது தான் கொஞ்சம் நாளைக்கு date பண்ணலாம்னு இருக்கேன் நீ என்ன நினைக்கிற ரிஸ்” என்று நான் கேட்டதற்கு சற்று நேரம் மௌனமாய் இருந்து விட்டு…
“நான் என்ன சொல்ல லூசுத்தனமா கெட்டவன் எவனையாவது பிடிச்சி சேவைத்துல அடிச்ச பால் மாதிரி என் கிட்டயே திரும்ப வராம எவனாவது இழிச்சவாயனா பாத்து ட்ரை பண்ணு” என்று அவன் கூற நான் மீண்டும் அவன் தலைக்கு இன்னொரு இடி விட்டேன்...
“ஆஹ் வலிக்குது விடுடி நான் போறேன்” என்றவனாக அவன் எழுந்து செல்ல ஆரம்பித்தான்…
நானோ அவன் பின்னால் “ஹே இருடா இன்னும் சரியா துவட்டல..”
என்ற என் முகத்தில் கதவையும் மூடினான்..
“எல்லாம் என்னால தான் என்னால தான் அவன் மழைக்குள்ள அலைஞ்சான்… atleast தலையையாவது ஒழுங்கா துவட்டி விட்டு இருக்கலாம்….ஏன் யாஸீன் இப்புடி சோதப்புற.....
A/N: so unga aasaippadi seekaram aduttha update panniten...padichittu unga karutthukkala padivu pannunga...:-)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro