5
குளித்து விட்டு புடவை கட்டி வந்தவளை பார்த்து மோன புன்னகை வீசி "ஹாய்" என்றான் பிரவீன். இவளுக்கு தான் எல்லோர் முன்னும் அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடியாமல் போனது.
"எப்படி தான் காஷுவலா இருக்காரோ. நமக்கு ஏன் அப்படி வரல" தனக்கு தானே யோசித்துக்கொண்டு இருந்தாள் வதனா.
"என்னடி அப்பிடியே நின்னுட்டு இருக்க? கிட்சன்ல வேலை இருக்கு வா" அவளை ஏவினாள் அவள் அம்மா
தாயும் மகளும் சேர்ந்து உணவை தயார் செய்து முடிக்க, அனைவரும் தயாராகி வந்து சேர்ந்தனர் ஹீராவை தவிர.
"அவ இன்னும் எந்திரிக்கலையா? இதே வேலை தான் அதுக்கு எப்பவும். அம்மு அவள போய் எழுப்பி கிளம்ப சொல்லுமா" அவள் அத்தை இவளை பணிக்க ஹீராவை எழுப்ப சென்றாள் இவள்.
"ஹாஸ்டல்ல தூங்கி தூங்கி இதே பழக்கம் அண்ணி அவளுக்கு. போற இடத்துல மிதி தான் வாங்க போறா இவ" அத்தை அவள் அம்மாவிடம் புலம்புவது அறையை எட்டியது, எல்லா அம்மாவுக்கும் இதே கவலை தான் போல என்று சிரித்துக்கொண்டே ஹீராவை எழுப்பினாள்.
"ஹலோ மேடம். மணி என்ன ஆகுது தெரியுமா? எந்திரிக்கிற ஐடியா இல்லையா? நீ எழுந்துகல அப்புறம் அத்தையே வந்து எழுப்புவாங்க, பாத்துக்கோ" என்று அவளுக்கு பீதியை கிளப்பினாள் வதனா.
அத்தை என்ற வார்த்தையை கேட்டவுடன் கண்ணை கசக்கி எழந்தவள் "வேணாம் வேணாம், தோ எழுந்துட்டேன் அண்ணி" என்று தயாராக சென்றாள். ஹீராவிற்கு செமினார் ஒன்று இருக்க அதை முடித்து விட்டு மதியம் இவர்களோடு சேர்ந்து கொள்வதாக சொல்லி அவள் அங்கு கிளம்பினாள்.
மற்ற எல்லோரும் ஒருவழியாக கிளம்பி இரயிலில் பயணப்பட்டனர் மாம்பலத்திற்கு. பிரவினுக்கு நேர் எதிரே வதனாவும் செல்வியும் அமர்ந்தனர், மற்றவர்கள் பக்கத்து வரிசையில் அமர்ந்து வந்தனர். பிரவினையே விழி அகலாமல் இரசித்து கொண்டு இருந்தாள் வதனா. வாட்சப்பில் அவனுக்கு
" தூரமோ தொலை தூரமோ... அருகினில் இருந்தும் தொலை தூரமோ...
உந்தன் விழியில் வீழ்ந்து கசங்கி தவிக்கின்றது மனது...
உன் பிறை சந்தன கீற்றும் என்னை வீழ்த்தி செல்லுதே... 😍😘"
என்று செய்தி தட்டி விட்டாள். பதிலுக்கு அவன் " 😘😘😘 " முத்தங்களை தட்டி விட, இவள் நாணி உதட்டை கடித்து சிரிப்பை அடக்க பார்த்து தோற்று கொண்டிருந்தாள். அவள் அம்மா இதனை கவனித்து விட்டு, "என்னடி லூசு மாறி சிரிச்சிட்டு வர ? ஒழுங்கா வா " என்று அடி தொணியில் மிரட்ட கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள் இவள். ஆனால் அவனை அளவெடுக்கும் வேளையை மட்டும் செவ்வனே செய்தாள். அவனோ இவள் புறம் திரும்பியதாக தெரியவில்லை.
கடையை அடைந்து முதலில் இவளுக்கு புடவை எடுப்பதாக தீர்மானித்து அம்மாக்கள் இருவரும் அந்த துறைக்கு செல்ல இவளை அழைத்தனர். இவளோ அவர்களிடம் "நீங்க நல்லா செலக்ட் பண்ணுவீங்க.. நீங்க இரண்டு பேரும் பாத்திட்டு சொல்லுங்க வரேன்" என்று ஐஸ் வைத்து அவர்களை முன்னே அனுப்பி விட்டு ஆண்கள் பகுதியில் துணி பார்த்து கொண்டு இருந்த பிரவீன் மற்றும் இவள் தம்பி வினோ அருகில் சென்று சேர்ந்து கொண்டாள்.
அப்பாக்கள் இருவரும் பக்கத்தில் தனியாக துணி தேடிக்கொண்டு இருந்தனர். பூனை குட்டியாய் பிரவீன் தேடும் இடங்களில் பின்னாலே திரிந்தாள் வதனா. சிறிது நேரத்தில் அம்மாக்கள் அழைக்க அங்கு சென்றவள், ஐந்தே நிமிடத்தில் ஒரு எளிமையான பட்டுப்புடைவையை தெரிவுசெய்தாள். அவர்கள் இருவரும் இன்னும் மற்ற புடைவைகளை பார்க்க சொல்லி தூண்ட இதே தனக்கு பிடித்து இருப்பதாக கூறி அவர்கள் கையில் திணித்து விட்டு ஆண்கள் துறைக்கே திரும்பினாள்.
அங்கு பிரவீனுக்கு துணி அவ்வளவு பிடித்தமாக இல்லாததால் இவளுக்கு புடைவை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு கடைக்கு சென்றனர். மதிய வேளையில் ஹீராவும் அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டாள். பின் எல்லாருக்கும் துணி எடுத்து வீடு திரும்ப மாலையானது.
அன்று இரவே பிரவீனும் அவன் வீட்டாரும் திரும்ப பயணப்படுவதால் வீடு சேர்ந்ததும் பரபரப்பாக இயங்கிய வதனா, இரவு உணவை அவளே துரிதமாக தயார் செய்தாள். வண்டிக்கு நேரமாக சாப்பிட்டு அவர்களும் விரைவாக கிளம்பி விட்டனர், இரயில் நிலையம் வரை இவளும் அடம் பிடித்து வழி அனுப்பிவிட்டு வந்தாள்.
போகும் வேளையில் பிரவீன் இவளை பார்த்து விடை பெற, இவளுக்கு வயிற்றை பிசைவது போல் இருந்தது அவனை பிரிகையில். இவள் வீடு சேரும் முன் அவனிடமிருந்து செய்தி வந்தது.
" என்ன டல் ஆயிட்ட தூக்கமா "
"ம்ம்ம் லைட்டா.. "
"சாப்பாடு நல்லா இருந்துச்சு. நான் குடுத்து வைச்சவன் 😉"
"நெஜமாவா. அவசரமா பண்ணேன்"
" நல்லாவே இருந்துச்சு. இன்னிக்கு நாள் நல்லா போச்சுல. ஷாப்பிங் டயர்ட்னு"
" ஆமா, நேத்துல இருந்து எல்லார் கூடவும் ஜாலியா போச்சு"
"நான் தான் மிஸ் பண்ணிட்டேன்"
"இனி மிஸ் பண்ணாம பாத்துக்கலாம் 😊.. ம்ம்ம் அப்புறம்.."
"அப்புறம் என்ன?"
"🙄 போயா. உன்னலாம் வச்சிட்டு நான் ரெம்ப பாவம் அத்தான்"
"ஆமா இப்போ நல்லா பேசு. ஆனா நேர்ல பாத்தா வெக்க பட்டு ஓடிரு. உன்ன வைச்சிட்டு நான் தான் பாவம்"
"ஹிஹி.. என்ன செய்ய தானா வருதே"
" வரும்.. டெய்லி நான் தான் நிறைய பூஸ்ட்😘 தரேன். அங்க தான் ஒன்னும் காணோம்"
"நானும் இங்க தரேன் தான? கவிதைலாம் அனுப்பரேன்ல.."
" அது ஹார்லிக்ஸ்.. எனக்கு பூஹ்ட் வேணும் நிறைய"
"என்ன புதுசு புதுசா வருது.."
"ஆமா டெய்லி புதுசு புதுசா வந்தா தான் நல்லா இருக்கும்"
" புதுசா என்ன வரனும் "
"ம்ம்ம்.. ரூம் போட்டு யோசி"
"யோசிச்சு என்ன பண்ண? உங்க கிட்ட தான் ஒரு ரியாக்சனும் இல்லியே..எனக்கு ஒன்னும் புரில போங்க"
" அதாவது ஒன்பது கிரகத்திலயும் தேர்ச்சி பெற்ற ஒருவன், ரொமான்டிக்காவும் பேசலாம்.. எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.. "
" எங்க பேசுங்க கேப்போம் "
" அதான் சொன்னனே.. எப்படி பேசுனாலும் ரொமான்டிக் தான் "
" அது சரி. ஆமா இன்னிக்கு என் கவிதைக்கு என்ன ரியாக்ஸன்?"
" சூப்பரா இருந்துச்சு ஆனா அப்போ என்ன ரியாக்ட் பண்ணனு தெர்ல அதான் சைலண்டா விட்டேன் "
"எனக்கு ஒரு டௌட் அத்தான். ரொம்ப நாளா ஒன் சைடாவே எனக்கு லவ் பண்ற பீலிங். உங்க முகத்த வச்சும் ஒண்ணும் கண்டு பிடிக்க முடில"
"அப்படியா இருக்கு ? சர்வ சக்திகளையும் உள்ள வைச்சிருந்தா முகம் அப்படி தான் இருக்கும் போல "
" அப்பிடியா? நான் தான் உங்கள சைட் அடிசிட்டு இருந்தேன். நீங்க என் பக்கமே திரும்பல.."
" நீ என்ன சைட் அடிச்சது எனக்கு தெரியும். அது பிடிச்சு இருந்திச்சு.. ஆமா நான் உன்ன சைட் அடிச்சத நீ பாக்கலியா.."
" இது எப்போ..எப்ப பாத்தீங்க?"
" நான் தான் சொன்னனே. புருஷன சைட் அடிக்கற பொண்ண பிடிக்கும்னு"
" கேடி... பாக்கறதே தெரியாம எப்படி பாக்குரீங்க ?"
" நீ பாத்தலாம் நான் சொல்லவா.. காலைல 6 மணிக்கு ஸ்டார்ட் ஆச்சு.. அப்புறம் ட்ரெயின்ல, கடைல, இப்போ கார்ல வரும்போது... தென் நடுல மதியம் சாப்பிடும் போது..."
" ஆத்தி.. வெரி டேன்ஜரஸ் பெலோ.."
" அத்தான் உன்ன டெலஸ்கோப்பிக் லவ் பண்றேன் டி... அது உனக்கு போக போக தான் புரியும்😉 "
" நான் நீங்க நார்மலா இருக்கீங்கன்னு நெனச்சேன். எனக்கு தான் பட படன்னு அடிச்சிக்குதுன்னு.."
" அது நார்மல் இல்ல வது. நான் எகஸ்ப்ரஷன்ஸ் கண்ட்ரோல் பண்ணிப்பேன். ஆனா உள்ள எனக்கும் டைனோஸர்லாம் கத்தும்.. "
" ம்ம்ம்.. எப்படி முடியுது அது? நான்லா ரொம்ப எக்ஸ்பிரஸிவ்... சரி நானும் போக போக தெரிஞ்சிக்கறேன்"
" நான் வந்து.. எனக்கே தெரில எப்படின்னு.. "
" உங்க பேஸ் ரீட் பண்ண தான் ட்ரைய் பண்ணிட்டு இருந்தேன் நான்.. ஆனா ஒண்ணும் கண்டு பிடிக்க முடல"
" நான் நீ சைட் அடிச்சன்னு ல நினைச்சேன்.."
" அதும் தான். உங்க குட்டி குட்டி ரியாக்ஸன்ஸ். ஐ காண்டக்ட் வேணும்னே அவாய்ட் பண்ணது எல்லாம் நோட் பண்ணிட்டு தான் இருந்தேன்.. "
" கள்ளி.. நீ என்ன பாக்கும் போதுலாம் என் கவனம் உன் மேல தான் இருந்துச்சு. செம போதை அப்போ... ஃபுல்லா இளையராஜா சாங்கஸ் தான்.. யேலே.. யே லே லே.. பருத்தி வீரன் பாட்டு ஓடிட்டே இருந்துச்சு.. மைண்ட் ல"
"எனக்கு தான் புரியல எதும்.. "
"ப்லாக் காமெடி மாறி.. இதும் புரிஞ்சா செம கிக் டி.. இப்போ தெரிஞ்சுக்க மாமா பத்தி.."
"சொல்லி தாங்க கத்துக்கறேன்"
சுற்றம் மறந்து உன்னையே சுற்றி அலைகின்றன எந்தன் விழிகள்..
நீ பேசுவதும் என் செவியை சேராமல் கண்களும் உன்னையே மொய்கின்றன...
அருகில் இருந்தும் இன்னும் உன்னுடன் ஒன்றிடவே எந்தன் மனமும் வேட்கை கொள்கின்றது...
உந்தன் விரல்களுடன் எந்தன் விரல்களை கோர்க்கவே என் கைகளும் நீண்டு பின் பின்வாங்குகின்றன...
தொலைவில் நெருக்கத்தையும்... அருகில் தொலைவையும் உணர்ந்தேன்...
உன் கள்ளத்தனத்தை அறியாமல் பேதை நானும் சோர்ந்து போனேன்...
இன்று அதை கண்டுகொண்டதால் உள்ளத்தில் உவகை பொங்குதே...
இரகசியமாய் இரசிக்கும் திருடா...
இனி நீயும் என் விளையாட்டை பார்ப்பாயடா 😉😉😉
இனிதே தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro