#29 அன்புள்ள அப்பாவுக்கு
நீ என் இதயத்திற்கு
எவ்வளவு நெருக்கமானவன் என்று
என்னை விட்டு பிரியும் வரையில்
அறியவில்லை..
எனக்கு தேவையான
அனைத்தையும் கற்று தந்தாய்
ஆனால் நானோ நீ என்னை விட்டு
செல்லும் வரையில்
எதையும் மனதாரக் கேட்கவில்லை..
நீ தந்த அளவற்ற அன்பு
இன்று எவ்வளவு போராடியும்
மீண்டும் கிடைக்கவில்லை..
இன்று நீ என்னருகில் இல்லை
இனி உன்னை காணப்போவதில்லை
என இதுவரை என்னால்
நம்பமுடியவில்லை..
உன்னுடைய ஞாபகங்கள் என்றும்
என் நெஞ்சோடு..
நீ சொல்லிக் கொடுத்த பாடங்கள்
என்றும் என் வாழ்வோடு..
என்னால் உன்னை
பார்க்க முடியாதபோதும்
நீ என்னை
பார்த்துக் கொண்டிருப்பதை
அறிவேன்..
என் வாழ்நாள் முழுக்க
நீ என்னோடு இருப்பாய்..
என்னை வழிநடத்த
என்னை அரவணைக்க
என்னை அன்பு செய்ய..
உன்னை மீண்டும் காணும்
ஏக்கத்தோடு காத்திருக்கும் நான்,
உன் அன்பு மகள்..
************************************
sridevisa This is for you.. I have written this since you asked me.. Hope u would like it.. Sorry if its not up to your expectation..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro