கல்லூரி - 4
காலை 6 மணிக்கெல்லாம் கணேஷ் எழுப்பி விட்டான். அதற்கு சாமுவேல் கண்களை திறக்காமலே " டீயை வைத்துவிட்டு போங்க அம்மா 5 நிமிஷம் கழித்து குடிக்கிறேன் "
அதனை கவனித்த கணேஷிற்கு அவன் முதன் முதலில் விடுதிக்கு சென்றது தான் ஞாபகம் வந்தது.
" ஜி இப்ப டீ எல்லாம் கிடைக்காது எழுந்துரிங்க " . ஒரு நொடி வந்து சென்ற கவலையை உணர்ந்த சாமுவேல். பிறகு இதெல்லாம் எதிர் பார்த்தது தானே. எழுந்து கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு பல் விலக்கி, அப்பாவிற்கு தொடர்பு கொண்டு காலையில் இருந்து நடந்ததை கூறினான்.
வாயை நன்றாக சுத்தம் செய்தாயா என்று கேட்ட அம்மாவிற்கு பதில் சொல்லிவிட்டு தூங்கும் தங்கைக்கு காலை வணக்கம் சொல்ல சொல்லிகொண்டிருக்கும் பொழுது அங்கே கணேஷ் வந்தான், " ஜி வாங்க கூட்டம் அதிகமாகுவதற்கு முன்னாடி குளிக்கலாம்"
ஒரு அறை 6 தொகுதிகளாய் பிரிக்க பட்டு 3 கழிப்பறைகள் மற்றும் 3 குளியல் அறைகள் என்று இருந்தது.
கணேஷ் ஒரு பக்கமும் சாமுவேல் ஒரு பக்கமும் சென்றார்கள். அழுக்காக இல்லை என்றாலும் வீடு மாதிரி சுத்தமாக இல்லை.
வாலி கொண்டு வந்ததினால் அதில் குளித்து முடித்து அறைக்கு சென்றான். அறையில் இன்னும் இருவர் தூங்கி கொண்டிருந்தனர்.
எப்பொழுதும் யாரும் இல்லாத தனி அறையில் உடை மாற்றியே பழக்கப்பட்டவன் இன்று சற்று கூச்சத்துடன் துண்டோடு உடை மாற்றினான்.
அப்படியே இவர்களை எழுந்து வெளியே போக சொன்னால் இவர்கள் என்ன என் தங்கையா இல்லை என் பெற்றோரா? ? உடனே எழுந்து வெளியே செல்வதற்கு
சிறிது நேரத்தில் கணேஷும் குளித்து முடித்து சாமுவேல் மாதிரியே அவனும் உடை மாற்றினான். சாமுவேல் பைபிள் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அவன் வாசித்து முடித்ததும் " ஜி சாப்பிட போகலாமா" என்று கணேஷ் கேட்டான்.
சாப்பிட தாங்கள் கொண்டு வந்த தட்டுகளை எடுத்து கொண்டு சென்றால் உணவறைக்கு செல்லும் பாதை அடைக்க பட்டிருந்தது. மணி இன்னும் 7:30 ஆகவில்லை. திரும்பி அறைக்கு வந்து செய்திகள் வாசித்து கொண்டிருந்தோம். மணி அடித்தது. அதாவது மணி 7:30.
இருவரும் உணவறைக்கு சென்றனர். அன்றைய காலை உணவாக வெண் பொங்கல் உடன் தேங்கா சட்னி, சாம்பார் கூடவே வடையும் இருந்தது.
வடை ஒருவருக்கு ஒன்று தான் என்றார்கள். மத்தது எல்லாம் அளவு இல்லை. அதே போல் டீக்கும் அளவில்லை.
இந்த கலவை சாமுவேலிற்கு பிடித்திருந்தது. அப்போ கணேஷிற்கு?? எல்லாமே பிடிக்குமா இல்லை இவனுக்கு பிடித்ததை போடுகிறார்களா என்று தெரியவில்லையே. நன்றாக சாப்பிடுகிறான் இவன்.
உணவிற்காக 25000 கொடுத்துவிட்டோம். நன்றாக சாப்பிட வேண்டியது தானே.
சாபிட்டுவிட்டு இன்னொரு முறை அப்பாவிற்கு தொடர்பு கொண்டு எல்லாத்தையும் கூறினான். இப்பொழுது தங்கை முழித்து விட்டால் அவளிடமும் அதே கதையை கூறினான். 18 முறை கஜினி முஹம்மது போர் தொடுத்த மாதிரி இவனும் அதே கதையை திரும்ப திரும்ப ஒப்பித்து கொண்டிருந்தான்.
திரும்பி வரும் பொழுது தான் அவன் அறையில் இருக்கும் மற்ற இருவரின் பெயர்களை கணேஷிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
கணேஷ் விடுதியில் இருந்து பழகியதால் அவனிடன் நன்றாக பழகினான். மற்ற இருவரும் கேட்ட கேள்விற்கு மட்டும் பதில் சொன்னார்கள்.
அனைவருக்கும் வீட்டு ஞாபகம். என்ன தான் அதிகமா சாப்பிட்டாலும் அம்மாவின் இட்லி போல் வருமா??
வீட்டில் இருக்கும் பொழுது எப்போ பார்த்தாலும் இட்லியா என்று குறை கூறியது ஞாபகம் வந்தது சாமுவேலிற்கு.
அந்த சோகம் அவன் முகத்தில் பிரதிபலித்தது. கணேஷ் கல்லூரிக்கு செல்லலாம் என்றதும் சாமுவேல் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு கல்லூரி செல்ல போவதை கூறிவிட்டு சென்றான்.
வெளியில் வந்த உடனே கணேஷ் கேட்டான் " என்ன ஜி அவள் ஞாபகமா? ஏன் சோகமா இருக்கீங்க ? "
கணேஷிற்கு என்ன கவலை என்று தெரிந்தாலும், அவனை சிரிக்க வைக்க அவளை பற்றி கேட்டான். " ஜி 17 வருடம் பெற்றோர்களுடன் இருந்த நீங்கள் இப்பொழுது அவர்கள் இங்கு இல்லை என்று கவலை படுகிறீர்கள். உங்களை இப்பொழுது யாராலும் சந்தோஷ படுத்த முடியாது ."
ஓர் அரங்கத்தின் அருகே வந்தோம். முதலாம் ஆண்டு மாணவர்கள் எல்லாரும் வந்தார்கள்.அங்கே சாமியார் ஒருவர் கதை சொல்லி கொண்டிருந்தார்.
அவர் மாணவர்களிடம் ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து காமித்து, " இது வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்க்கள் பார்க்கலாம்? " என்று கேட்டார்.
அனைவரும் பதில் கூறினார்கள், அதில் ஒரு மாணவன் மட்டும் எழுந்து அவர் அருகே சென்று அவர் கையில் இருக்கும் ரூபாயை எடுத்து சென்றான். உடனே அவர் " இதை தான் நீங்கள் செய்ய வேண்டும் , செயலில் இறங்க வேண்டும் " என்றதும் நிறைய கை தட்டல்கள் பரிசாக அவருக்கு கிடைத்தது.
அதனை கவனித்த சாமுவேல் அவர்களை அறைய வேண்டும் என்று தோன்றியது.
கணேஷ் " எவன் டா கை தட்டினது " என்ற கத்தினான்.
கல்லூரி பெருமைகளை கூரிகொண்டிருந்தார். அதற்கு கணேஷ் " நம்புகிற மாதிரி பொய் சொல்லுறாங்களா பாரு. MIT அளவிற்கு சொல்லிகொண்டிருகிறார்கள்.இங்கயே இப்படி என்றால் MIT யில் ??"
அதற்கு சாமுவேல் " ஒன்றும் சொல்ல மாட்டார்கள். போய் படிங்க படிக்க தானே வந்தீர்கள் என்று கேட்பார்கள்"
சிரிப்புனூடே அந்த உரை முடிந்தது. பெயர் வாரியாக வகுப்புகள் பிரிக்க பட்டது. கணேஷ் சிவில் 'A ' சென்றான் , நான் சிவில் ' B ' சென்றேன்.
எங்கள் வகுப்பு ஆசிரியர் கல்லூரியை சுற்றி காண்பித்தார். நூலகத்தின் அருகில் வந்ததும் " இது தான் நூலகம். இதனை பயன் படுத்தாவிட்டாலும் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். நம் கல்லூரியில் நூலகம் உள்ளதா என்று கேற்க கூடாது "
அடுத்து IT department அருகில் வந்ததும் அருகில் இருந்த மாணவர்கள் " மச்சான் ! என்ன டா மாடலிங் பகுதி பக்கம் வந்து விட்டோமா எல்லாருமே அழகா இருக்காங்க" என்றான்.
இது போதாது என்று இன்னொருவன் " மச்சான் ! பாரேன், டீச்சர் கூட அழகா இருக்காங்க"
ஏன் டா ஆசிரியரை கூட விடமாட்டீர்களா என்று மனதினுள் திட்டினேன்.
அடுத்து சிவில் department வந்ததும், கூட்டத்தில் ஒருவன் " டேய் ! இது மெக்கானிக்கல் டா. பாரு இதுல பொண்ணுங்களே இல்லை . வாங்க நம்ம departmnet க்கு போவோம் அங்க தான் கொஞ்சமாவது பொண்ணுங்க இருப்பாங்க "
இது ஆசிரியரின் காதில் விழுந்து விட்டது , உடனே அவர் பின்னாடி வந்து " தம்பி இது சிவில் தான்,இங்க பெயருக்கு என்று 4 பொண்ணுங்க தான் இருக்கும் . உள்ளதை வைத்து சரிகட்டிக்கொள்."
முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் தான் இருப்போம். எங்கள் வகுப்பிற்கு வந்ததும், ஆசிரியர் அனைவரையும் அறிமுக படுத்தி கொள்ள சொன்னார்கள். என் முறை வந்ததும் சென்றேன்.
சென்னை என்றதும், ஏன் இங்கு வந்தாய் அங்கே ஏன் படிக்கவில்லை என்று பல கேள்விகள். அனைவரும் அங்கு வருகிறார்கள் அதனால் நான் இங்கு வந்தேன் என்று கூறிவிட்டு வந்தமர்ந்தேன்.
பெண்கள் அறிமுக படுத்திகொண்டிருந்தார்கள். அதனை கவனிக்காமல் அருகில் பேசி கொண்டிருந்தேன் அப்பொழுது சென்னை என்ற வார்த்தை மட்டும் என் காதில் விழுந்தது. ஏன் என்று கேட்டார்கள் " சென்னை எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இங்கு வந்தேன்" என்று அந்த இனிமையான குரல் வேகமாக திரும்பி பார்த்தேன் அவளே தான். நேற்று பார்த்த அதே தேவதை
இப்பொழுது என் மடியில்... இல்லை இல்லை என் வகுப்பில்...
எப்படி சந்திப்பேன் என்று ஏங்கிகொண்டிருந்தேன் இப்பொழுது என் வகுப்பில்!!!
அவள் பெயர் சொல்லியிருப்பாளோ??
பெயர் என்னவாக இருக்கும் ?? நாம் கவனிகவில்லையே.
அருகில் இருந்தவனிடம் அவள் பெயர் என்னவென்று கூறினாள் நினைவிருக்கிறதா என்று கேட்டால் அவன் என்னை பார்த்து சிரித்தான். எனக்கோ கோபம் தலைக்கு ஏறியது.
அவனவன் கஷ்டம் அவனவனுக்கு.
" தெரியாது நானும் கவனிக்கவில்லை" என்றான்.
இனிமேலாவது வகுப்பை ஒழுங்காக கவனிக்க வேண்டும். கொஞ்சம் கூட கவனம் சிதற கூடாது.
******************************************************************
விடுதி முதல் நாள் பற்றி உங்கள் அனுபவம் ??
கல்லூரி முதல் நாள், கல்லூரி பெருமைகளை பற்றி சொன்னார்களா??
வாசித்தமைக்கு நன்றி.
சந்தோசமாக இருக்கவும்.
--யாகப்பர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro