கல்லூரி-10
இரண்டு இருக்கையில் நாங்கள் இருவர் மட்டும் தான் அமர்ந்திருந்தோம். ஏதோ அவளிடம் விலகி இருக்க வேண்டும் என்று இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தேன். அதேபோல் அவளும் ஜன்னல் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
மறந்தும் கூட அவளை பார்க்கவில்லை அருகில் இருக்கும் ஜோடியை கூட பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் இவள் என்ன நினைப்பாளோ என்று அமைதியாக அமர்ந்திருந்தேன்.
அம்மாவிற்கு அழைத்து நான் தூங்க போகிறேன் என்று கூறினேன்.
அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றினாலும் பேச பயமாக இருந்தது.
அப்பொழுது தான் வயிற்றில் இருந்த ஒரு பிசாசு முழித்து கொண்டது. கட முடா என்று ஒரே சத்தம்.
இவளுக்காக சாப்பிடாம இருந்தேன் இப்ப பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். அப்படியே அவளிடமும் நீட்டினேன்.
முதலில் மறுத்தாலும் பிறகு இரண்டு எடுத்து கொண்டாள். நானும் " இன்னும் இரண்டு எடுத்து கொள்ளுங்கள் எனக்கு பசியெல்லாம் இல்லை சும்மா தான் சாப்பிடுகிறேன்"
இப்படி சொல்லும் பொழுது வயிற்றில் இருக்கும் அரக்கன் இன்னும் பயங்கரமாக கத்தினான். அவனை இதயத்தில் இருக்கும் காதல் கடவுள் அடக்கினான்.
அப்பொழுது தன் அவள் ஒரு விஷயத்தை கூறினாள் " என்னை உனக்கு ஞாபகம் இல்லையா? நானும் உன் வகுப்பு தான். லேப் இல் உன் அருகில் தான் அமர்ந்திருப்பேன் "
உன்னை மறக்க முடியுமா !! நீ வகுப்பு தோழியா !! மேல!! அதுக்கும் மேல !!!
நான் ஆச்சரிய படுகிற மாதிரி நடித்தேன் ஆனாலும் ஒரு சந்தேகம். பொதுவாக பெண்கள் பசங்களை தெரியாத மாதிரி தானே நடிப்பார்கள், இவள் இப்படி சொல்கிறாள்.
நானும் " உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கிறது ?"
அவளும் " நீங்க தான் அட்டெண்டென்ஸ் எடுக்கும் பொழுது பதில் சொல்லாமல் கனவு கொண்டிருந்தீர்கள் அப்பொழுது பார்த்தேன்"
" ஐயோ ! என்னங்க இப்படி சொல்லிவிட்டிர்கள், நன் லேப் எப்படி செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்"
அவள் சிரித்துக்கொண்டே " பொய் சொல்லாதீர்கள்.வேறு எதையோ நினைத்து சிறிது கொண்டிருந்தீர்கள். அது சந்தோஷத்தில் வரும் சிரிப்பு. இந்த கெமிக்கல்ஸ், சால்ட்,ஆசிட் இதை பார்த்தா சிரிப்பு வருகிறது"
ஐயோ!! கண்டு பிடித்து விட்டாளே என்று சிரித்து கொண்டே " நமது கலாம் அவர்களே கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களே, அதை தான் நானும் செய்தேன்"
" கலாம் வகுப்பறையிலா கனவு காண சொன்னார்கள்"
நானும் சிரித்தேன் அவளும் சிரித்தாள் " சொல்லுங்கள் யார் அவள். பெயர் என்ன ??"
எனக்கு திடுக்கிட்டது, சமாளித்தவாரே " என்னது யார்??"
" லேப் இல் எந்த பெண்ணை நினைத்து சிரித்து கொண்டிருந்தீர்கள்??"
நான் பதறி போய் " நான் அம்மாவை நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் வேற ஏன் இப்படி ??"
அவள் சந்தேக சிரிப்புடன் " சும்மா கதை விடாதீர்கள் , அது அம்மாவை நினைத்தாலும் வரும் சிரிப்பு இல்லை. உங்கள் காதலியை பற்றி சொல்லுங்கள்"
எத்தனையோ படங்களில் கதாநாயகன் கதாநாயகியிடம் , நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் உன்னை தான் என்று கூறுங்கள் என்று சுலபமாக சொல்லிவிடுவோம். இப்பொழுது தான் அந்த கஷ்டம் தெரிகிறது.
முடியவில்லையடா சாமி !!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro