Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

42

"ஒர் பொண்ணுக்கு தன்னோட வாழ்க்கைல ஒரு நல்ல ஆண் மகன பார்க்குறது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்.அப்படியே ஒரு நல்ல ஆம்பள ஒன்னு தோழனா கிடைப்பான் இல்ல காதலனா கிடைப்பான் இல்லன்னா கணவனா கிடைப்பான்.எனக்கு தோழனா கிடைக்குற பாக்கியம் கிடைக்கல.காதலனாவும் கிடைக்கல.ஆனா நல்ல கணவனா கிடைச்சிருக்கு.மைதிலிக்கு நல்ல தோழன் அமைஞ்சது ஆனா நல்ல காதலன் அமையல்ல.ரம்யாக்கு நல்ல தோழன் நல்ல கணவன் கிடைச்சது.நல்ல தோழன் ,நல்ல காதலன் ,அருமையான கணவன் இது மூன்றுமே ஒன்னா அமைஞ்சது ரேனுவுக்கு மட்டும்தாண்டா.அவ மனசு போலவே அவளுக்கு எல்லாமே நல்லதாவே கிடைச்சது.ஆனா ஒன்னு மைதிலி லைப்ல நல்ல நண்பன் கிடைச்சா மிஸ் பன்னிடக்கூடாது.உங்க தாத்தா ,அப்புறம் தீபக் தாத்தா மாதிரி "என்று நம் அர்விந்த் ரம்யாவின் தோழி மைதிலி 15 வயதில் எப்படி இருந்திருப்பாலோ அவளை அப்படியே உரித்து வைத்தது போல் இருந்த குட்டி மைதிலியிடம் 63 வயதான ப்ரியா தன் வாழ்க்கை கதை முழுவதையும் சொல்லி முடித்தால்.

இதைக்கேட்ட மைதிலிக்கு கண் கலங்கியது.தன் பாட்டியை இறுக்கி அணைத்தவள்

"சரி பாட்டி.நீங்க கடைசிவரைக்கும் தாத்தாவ ஆரம்பத்துல அதாவது இண்டர்வியூ வந்தப்போ இருந்து ஏன் வெறுத்தீங்கன்னு சொல்லவே இல்லையே" என்று தன் உதட்டை சுழித்தவளுக்கு அவளது வலது மேல் உதட்டில் இருந்த மச்சம் மிகவும் அழகாக இருந்தது.தன் பாட்டி மைதிலிக்குப்பின் தாய் நிஷாவுக்கு இருந்தது இப்போது பேத்தி மைதிலிக்கும் இருந்திருந்தது.

"அட நீயாச்சும் கேட்டியேடா இத " என்று ப்ரியா சின்னதொரு ப்ளாஷ்பேக்குக்கு சென்றால்.

40 வருடங்களுக்கு முன்.....

அர்விந்த் சென்றிருந்த அதே இண்டஸ்றியல் டிரைனிங்கிற்கு இவளது சப்ஜக்ட்டுக்காக ப்ரியாவும் சென்றிருந்தால்.ஒரு நாள் எல்லோருக்கும் ப்ரேக் டைம் கிடைக்க எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.அந்த நேரத்தில் அர்விந்தும் அவனது தோழர்களும் ப்ரியா இருந்த பெஞ்சுக்கு அடுத்த பெஞ்சில் இருந்து அர்விந்தை கலாய்த்துக்கொண்டிருந்தனர்.

"டேய் அர்விந்த் ,நீ பன்றது கொஞ்சம் கூட சரியில்லடா.நம்ம காலேஜ்லயே அழகான பொண்ணுன்னா அது மைதிலிதான்.அடுத்ததா நம்ம ரம்யாவ சொல்லலாம். ஆனா அவளுங்க உன்கூட மட்டும்தான் பேசுவேன்னு இருக்குறதெல்லாம் ரொம்ப ஓவர்டா.அட்லீஸ்ட் எங்களுக்கு ஒரு இண்ட்றோவாச்சும் குடுடா. நாங்க என்ன லவ் பன்றதுக்கா கேட்கம் "என்ற தன் நண்பனை அர்விந்த்

"டேய் அவளுங்களுக்கு பிடிக்கலன்னா நான் என்னடா செய்ய.உனக்கு அவள லவ் பன்னனுமா தாராளமா பன்னிக்க.அவ ஒக்கே சொன்னா கல்யானம் கூட பன்னிக்க.எனக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்ல.உனக்கு என்ன இப்ப ,நாங்க லவ் பன்றமா இல்ல வெறும் ப்ரெண்ட்லியா இருக்குறமான்னு தெரியனும்.அடேய் இவனே நீ அவள பத்தி கவிதை எல்லாம் கிறுக்கி திரியிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா .நீ அவள லவ் பன்னு இல்ல கல்யாணம் பன்னு.ஏன்னா நான் அவள லவ் பன்ன போறதுமில்ல கல்யாணாம் பன்ன போறதுமில்ல.அவ என்னோட உயிர்த்தோழிடா.ப்ரெண்டை போய் எப்படிடா நான் லவ் ,கல்யாணம் எல்லாம் பன்ன முடியும்.சில பேருக்கு ப்ரெண்டையே லவ் பன்னி கல்யாணம் பன்றது சரியா இருக்கலாம்.அத தப்புன்னு நான் சொல்லமாட்டேன்.ஆனா என்னால என் ப்ரெண்ட லவ் பன்னவும் முடியாது கல்யாணம் பன்னிக்கவும் முடியாது"என்றவனை அவனது நண்பன்

"மச்சி தாங்க்ஸ் பார் யுவர் க்ளாரிபிகேசன்.உன்னால எனக்கு ஏதும் ரெக்கமண்டேசன் பன்ன முடியுமா"என்று பாவமாக கேட்ட தன் நண்பனை முறைத்த அர்விந்த்

"டேய் நீ லவ் பன்னா..நீயே ப்ரெபோஸ் பன்னு.ஓக்கே.இன்னொருத்தன தூது விட நினைக்காத.அதுவும் அந்த மாதிரி எங்கிட்ட கேட்காத .ஏன்னா அது மட்டும் நான் கண்டிப்பா பன்னவே மாட்டேன்" என்றவனை

"சரிடா.ஊருக்கு போய் முதல் வேலயா அவகிட்ட என் காதல சொல்ரேன்.என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்" என்ற தன் நண்பனை அர்விந்த்

"போடா பேக்குப் பயலே.உனக்கு இந்த 2 வருசத்துல எத்தனையாவது காதலோ.மைதிலியாச்சும் உன் காதல ஏத்துக்கிறதாவது .எனி ஹௌ டிறை யுவர் லெவல் பெஸ்ட்" என்றவனை

"போடா.நான் வேனாம்னா சொல்ரேன்.நான் ஒவ்வொருத்தியா லவ் பன்னா யாருமே நம்மல கண்டுக்கவே மாட்டேங்குறாலுங்க.இதுல ஏதோ நான் ஒவ்வொருத்தியா ஏமாத்துற மாதிரி சொல்ர.சரி பார்க்கலாம் ஊருக்கு போய் என்னாகுதுன்னு"என்று அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு நகர பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருந்த ப்ரியாவுக்கு இப்போது மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.

அர்விந்தும் மைதிலியும் காதலிக்கிறார்களோ என்ற எண்ணம் இவளுக்கும் இருந்தது.ஆனால் அதை அர்விந்த் தன் வாயாலேயே தெளிவுபடுத்தியது அவளுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது.ஊருக்கு போனதும் தானும் தன் காதலை அர்விந்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

ப்ரியா அர்விந்தை முதலில் கண்டது தன் தங்கையின் தோழனாக.ஆனால் அவளின் மனம் அவனை நோக்கி எப்படி சென்றது என்று அவளுக்கு புரியவில்லை.அவன் கண்ணியமாக பெண்களிடம் பழகும் விதமா அல்லது அவனது நேர்கொண்ட செயற்பாடுகளா எது என்று அவளுக்கு புரியவில்லை.ஒரு வேலை கண்டதும் காதலாகக் கூட இருக்கலாம்.பேதை மனது இதை எதையும் அறியவில்லை.அவன் மனதில் அர்விந்த் புகுந்திருந்தான் எப்படி,எதனால் ,எவ்வாறு என்று அவளால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.ஆனால் இது வரை அவனுடன் ஒரு வார்த்தை கூட அவள் பேசியதில்லை.

அடுத்த நாள் எல்லோரும் டிரைனிங்க் முடித்து ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் வைத்து ப்ரியா கண்டதும், கேட்டதும் அவளை ஆத்திரம் கொள்ளச்செய்தது .அவள் அப்படி என்ன கேட்டால்...

( பார்க்க 24 பாகம்...ப்ரியா கேட்டது இந்த சம்பாசனைகளை மட்டுமே)

நான் அவன உண்மையா காதலிச்சண்டா அர்விந்த் ஆனா..." என்றவளை

இறுகிய முகத்துடன் "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.இப்போ நான் சொல்ரதுக்கு நீ ஒக்கே சொல்லித்தான் ஆகனும் " என்றவனை

லேசான விசும்பலுடன் "என்ன "என்றாள்.

"உன்னை நான் கல்யானம் பன்னிக்கப் போறன்.உனக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்கிறது எல்லாம் எனக்கு பிரச்சினை இல்ல.இப்போ நீ இதுக்கு சம்மதிக்கல்ல அப்புறம் நான் மனிசனாவே இருக்க மாட்டன்.இப்ப நீ என்கூட என்வீட்டுக்கு வார.நாளைக்கே நமக்கு கல்யானம்.அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்.உனக்கிருக்குறது உன் பெரியம்மா மட்டும்தானே அவங்க கிட்ட எங்கம்மா பேசுவாங்க சரி.இப்ப நீ கிளம்பு போலாம்" என்றவனை

"இல்ல அர்விந்த் ,நான் என்ன சொல்ரேன்னா.."என்றவளை அர்விந்த் விட்டான் ஒரு அறை.

"வாய மூடிக்கிட்டு கிளம்பு .என்ன கொலைகாரனா மாத்தாத.இனிமே எல்லாமே நான் மட்டும்தான்.சரியா.இனிமே எவனும் நமக்கு இடைல வர முடியாது." என்றவனை மறுத்து பேச பயந்து விழிகளில் கண்ணீருடன் "சரி "என்றாள்.

இதை கேட்ட ப்ரியாவுக்கு தன் உலகமே காலடியில் உடைந்து சுக்கு நூறாகுவதை போல தெரிந்தது.சரி நாளை மறுநாள் காலேஜ் சென்று அர்விந்திடமே நேரடியாக இதைப்பற்றி பேசலாம் என்று இருந்தவளுக்கு அடுத்த இடி அவர்கள் இருவரும் யாருக்குமே கூறாமல் ஏன் அவர்களின் உயிர் தோழி ரம்யாவுக்கு கூட கூறாமல் ஊரைவிட்டு போனது பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.

"அன்னைக்கு ஏதோ பெரிய நல்லவனாட்டம் அவன் ப்ரெண்ட் கிட்ட பேசிட்டு இன்னைகு அவ இன்னொருத்தன விரும்புறான்னதும் அவள வற்புறுத்தி கல்யாணம் பன்ன இவனெல்லாம் ஒரு ஆம்பளா..த்த்த்த்தூ"என்று மனதுக்குள்ளேயே திட்டியவள்

"அரவிந்த் இதுக்கு அப்புறம் என் கண்ல பட்டுடாத.கண்ல பட்ட,அப்புறமா உனக்கு நான் நரகத்த காட்ட வேண்டியிருக்கும் "என்று கறுவிக்கொண்டால்.

--------

"இதுதாண்டா நடந்துச்சி" என்ற ப்ரியாவை மைதிலி

"உங்க தாத்தா மேல நான் வெச்சிருந்த கண்மூடித்தனமான காதல் என்ன யோசிக்க விடல்லமா.என் மனசுல அப்போ எல்லாம் ஓடின ஒரே விசயம் உங்க தாத்தா மைதிலி பாட்டிய மிரட்டி கல்யானம் பன்னிகிட்டாரு.அது ஒன்னுதான் என் மனசுல இருந்திச்சு.இது முழுக்க முழுக்க என்னோட தவறுதான்.ஆனாலும் அதை தெளிவு படுத்திக்கொள்ள உங்க தாத்தாவும் இல்ல மைதிலி பாட்டியும் இல்ல.ரம்யா பாட்டிக்கும் எதுவுமே தெரியல,அவங்களும் இப்படி நடந்ததனால ரொம்ப கவலைல இருந்தாங்க.என்னால அவங்க கிட்ட போய் என்ன நடந்திச்சினு கூட கேட்க முடியல.ஆனா நான் உண்மைலயே என்ன நடந்திருக்கும்னு யோசிக்காம அப்படி முடிவு செஞ்சது எவ்வளவு பெரிய தவறுன்னு பிறகு புரிஞ்சிக்கிட்டேன்.நீ எப்போமே என்ன மாதிரி யோசிக்காத.உன் தாத்தா,ரேனு பாட்டி மாதிரி யோசி.அப்போதான் உன் வாழ்க்கைல நீ சரியான முடிவுகளை எடுக்க முடியும்.நான் ஏன் அப்படி சொல்ரேன்னா ப்ரியா பாட்டி எப்போமே ஒரு லூசுடா"என்று தன்னைத்தானே மட்டம்தட்டி பேசியவளை மைதிலி கண்கள் கலங்க

"பாட்டி, இப்ப கூட நீங்க பன்னதுதான் தப்புனு சொல்ரீங்க.ஆனா எந்த பொண்ணா இருந்தாலும் தான் ஒருத்தன ஒரு தலையா காதலிச்சு.. அவன் முதல் நாள் அன்னைக்கு தன் தோழிய காதலோ இல்லன்னா கல்யானமோ பன்ன மாட்டேன்னு சொல்லிட்டு அடுத்த நாளே அவள மிரட்டுற மாதிரி பேசி கல்யானம் பன்னி, திடீர்னு ஊரை விட்டு அதுவும் அவங்களோட இன்னொரு க்லோஸ் ப்ரெண்ட்கிட்ட கூட சொல்லாம போனா என்ன பாட்டி செய்வா.நானா இருந்திருந்தேன்னா கோவத்துல அவன தேடிப்போய் கொன்னிருப்பேன் .தாத்தா தன்னோட ப்ரெண்டோட பேரு கெட்டுட கூடாதுன்னு மைதிலி பாட்டிய கல்யாணம் பன்னாரு.அது க்ரேட்தான்.ஆன நீங்க உங்க காதலுக்காக காதலனையே தூக்கி எறியப்பாத்தீங்களே ...எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரில பாட்டி.அம்மாக்காகவும் தாத்தாக்காகவும் எவ்வளவு தியாகம் பனியிருக்கீங்க.அதுவும் உங்களுக்கு குழந்தை கிடக்காதுன்னு தெரிஞ்சதும் நீங்க பன்னதெல்லாம் ..சிம்ப்ளி ஹெட்ஸ் ஆப் யு.அன்னைக்கு அந்த கௌசிக் உங்கள நாசம் பன்னுவானு தெரிஞ்சும் போனீங்களே...ஏன் பாட்டி உங்க வாழ்க்கைல நீங்க உங்களுக்கு என்று எதுவுமே செய்ய மாட்டிங்களா."என்றவளை

"அப்படி இல்லம்மா.என் வாழ்ழ்கையே உங்க தாத்தாவும் உங்க அம்மாவும்தான்.சோ அவங்களுக்காக நான் எது செஞ்சாலும் அது எனக்கு செய்யிர மாதிரிதாண்டா"என்றவளை மைதிலி அணைத்து

"ஐ லவ் யூ பாட்டி"என்றாள்.

அர்விந்த் அவர்களிடம் வந்தவன் "எவடி என் பொண்டாட்டிக்கு லவ் யூ சொல்ரது.கொன்னுடுவன் பாத்துக்க" என்றவனை மைதிலி முறைத்து பின்

"ஐ லவ் யூ டூ தாத்தா"என்று அவனையும் அணைத்தாள்.இதை எல்லாம் உள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நிஷா எல்லோரையும் உள் அழைக்க அன்று அவர்கள் வீட்டில் ரேனு-தீபக் மற்றும் அவர்களது 8 பிள்ளைகள்,சங்கீதா-சுரேஷ்,ரம்யா -அவளது கணவன், கடைசியாக ரேனுவின் ஆர்பனேஜ்ஜிற்கு முழு மருத்துவ உதவியும் செய்யும் சாதனா-ப்ரசாத் ( நிவேதா மகதியின் அனுமதியுடன் எப்படி சாதனாவ என் கதைல கொண்டுவந்தேன்) என எல்லோருக்கும் விருந்து தயார் செய்யப்படிருந்தது.

இந்த வருட சிறந்த சமூக சேவையாளர்களுக்கான விருது சாதனாவுக்கும் ரேனுவுக்கும் அவர்களது அனாதை இல்ல பராமரிப்புக்காக ஜாயிண்ட்டாக கொடுக்கப்படிருந்தது.மொத்தமாக அவர்கள் இப்போது 47 ஆசிரமங்கள் நடத்தி வருகின்றார்கள்.

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த கார்த்திக்

"அம்மா "என்று ப்ரியாவை கட்டிக்கொண்டான்.ஆம் ப்ரியாவுக்கும் அர்விந்திற்கும் 13 வருடத்தின் பின் கிடைத்த தவப்புதல்வந்தான் கார்த்திக்.அடுத்த மாதம் இவனுக்கும் நம் சாதனாவின் மகள் வாசுகிக்கும் திருமணம்.சாப்பிங்க் சென்றிருந்த வாசுகியும் அவன் கூட வந்திருக்க கார்த்திக்கோ சாதனாவ பார்த்து

"எப்படி இருக்கீங்க அத்தை"என்றவனை

"நல்லா இருக்கேன்பா "என்றால் சாதனா மெல்லிய குரலில்.

12 வருடங்கள் குரலை இழந்திருந்த சாதனா 2030 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம் தன் குரலை மீளப்பெற்றால்.

எல்லோரும் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருக்க ஒரே ஒரு ஜோடி மாத்திரம் மிஸ்ஸிங்.அது நம்ம சுரேஸ் சங்கீதா தான்.சரியாக நாம் அவர்களை நினைவு கூறும் தருனம் சங்கீதாவும் சுரேஷும் சிரித்துக்கொண்டே எண்ட்ரி கொடுத்தனர்.

வழமைபோல சங்கீதா "டேய் கார்த்திக் எப்டிடா இருக்க ஸ்மார்ட் பாய்"என்றவள் தன வழமையான புரானத்தை "ச்சே என்னமா இருக்கான் நம்ம பய"என்று தனக்கு மட்டும் கேட்பது போல எல்லொருக்கும் கேட்க கூறினால்.உடனே ரேனு

"ஏண்டி கிழவி.அன்னைக்கு அர்விந்த் அப்புறம் தீபக் இப்போ கார்த்திக்க்கா.உன்ன"என்று அடிக்க வந்தவளை

"போடி இவளே எத்தனை பேரு வந்தாலும் என் உள்ளம் கொள்ளை கொண்ட கள்வன் இவந்தாண்டி"என்று சுரேஷை பார்த்து கண்ணடிக்க சுரேஷ் அவளை காதலாக பார்த்தான்.அதற்கு அர்விந்த் உடனே

"அடேய் உடனே எங்க வீட்டு ரூம கேட்டுடாதடா"என்றவனை ப்ரியா

"என்னங்க பேசுரீங்க சின்ன பசங்கள வெச்சுக்கிட்டு "என்றாள்.

இப்படியே எல்லோரும் ஒருவரை மற்றவர் வழமை போல கேலி பேசிக்கொண்டிருக்க கார்த்திக் வாசுகியை கண்களில் காதல் மின்ன பார்க்க அந்த நாள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இது போலவே என்றும் அவர்களின் வாழவு சிறப்பாகவே இருக்க................வாழ்த்தும் நான்............................

----------முற்றும்--------(உண்மையாவே முடிந்தது).

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro