34
ப்ரியா கூறியதை கேட்ட அர்விந்துக்கு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினான்.அவன்
"என்ன சொல்ர ப்ரியா.எனக்கு புரியல" என்றவனை
"அர்விந்த், நீங்க என் காதல புரிஞ்சிப்பீங்க என்று ரொம்ப எதிர்ப்பார்ப்போட இருந்தேன்.ஏன் அன்னைக்கு நிஷா மாடிப் படியில இருந்து கீழே விழப்பார்க்காம இருந்திருந்தா நா இன்னமும் அதே எதிர்பார்ப்போட இருந்திருப்பேன். ஆனா உங்களுக்கு என் மேல காதல் தானா வரல்லயே அர்விந்த்.நிஷாவ காப்பாத்தினதாலதானே நீங்க இப்ப என் மேல பரிதாபப்பட்டு இப்படி பேசுரீங்க.நேத்து இரவு நீங்க ரம்யா கூட பேசினத நான் கேட்டேன் . ஏன் இவ்வளவு நாளா உங்கள நாய்க்குட்டி மாதிரி சுத்தி சுத்தி வந்தப்போ வராத காதல் இந்த இரண்டு நாள்ள வந்திச்சா.ப்ளீஸ் அர்விந்த் என்ன டிவோர்ஸ் பன்னிடுங்க.உங்கள் கெஞ்சிக்கேட்டுகிறேன்" என்றவளை
"ப்ரியா ,தப்பு மேல தப்பு பன்ற.இப்படி பன்னாத.வாழ்க்கைல எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது" என்றான்
அதற்கு அவள்"அர்விந்த் காதல் என்பது அனுதாபத்தாலயோ அல்லது பச்சாபத்தாலேயோ வரக்கூடாது.மனசுல இருந்து வரனும் .உங்க மனசுல இருந்து வர்ர காதலுக்காக இன்னும் 100 வருசம் வேணும்னாலும் நான் காத்திருந்திருப்பேன்.ஆனா உங்களுக்கு என்மேல காதல் ,நான் நிஷாவ காப்பாத்தினதாலதானே வந்திருக்கு.இந்த பரிதாபத்தால வந்த காதல் வேணாம் அர்விந்த் எனக்கு.இதுக்கு அப்புறமும் உங்களுக்கு என்மேல உண்மையா காதல் வந்தா கூட எனக்கு சந்தேகமாத்தான் இருக்கும்.நீங்க இனிமே எனக்கு எது செஞ்சாலும் நீங்க என்மேல உள்ள அனுதாபத்துல செய்றீங்களா,இல்லைன்னா என்மேல உள்ள காதல்ல செய்றீங்களானு சந்தேகம் வரும்.அதே போல நான் நிஷாக்கு ஏதும் நல்லது பன்னா கூட உங்கள இம்ப்ரஸ் பன்னத்தான் நான் பன்றேன்னு நீங்க நினைச்சிடுவீங்கலோ அப்படின்னு எனக்கு தலையே வெடிச்சிடும்.நான் ஏதும் முடிவெடுத்தேன்னா அது லேசுல என் மனச விட்டு போகாது.சோ ப்லீஸ், என்ன விட்றுங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க இன்னொரு பொண்ண கல்யானம் பன்னிக்கோங்க.ஏன் ரேனுவ கூட நீங்க கல்யானம் பன்னிக்கோங்க .அவளும் உங்கள ரொம்ப விரும்பினா. ஆனா அவள சரி மனசால காதலிங்க.அனுதாபப்பட்டு காதலிக்காம.ஏன்னா என்னைப் பொருத்த வரைல அனுதாபத்துல வார காதல் பிச்சை எடுத்து ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரி"
என்றவளை முறைத்தவன்"இப்போ நீ என்னதான் சொல்ல வர்ரே"என்றான்
"அர்விந்த் ப்ளீஸ் என்ன ரூட் ஆஹ் பேச வைக்க வேனாம்.உங்களுக்கு டிவோர்ஸ் கொடுக்க முடியுமா முடியாதா.இனிமே உங்க கூட ஒரே வீட்ல நான் இருக்க மாட்டேன்" என்றவளை முறைத்த அர்விந்த்
"நீ என்ன வேனா பன்னிக்கோ ப்ரியா.ஆனா நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்" என்றவனை டைனிங்க் டேபிள் மீதிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்து
"இப்போ எனக்கு டிவோர்ஸ் தரல்ல என் கழுத்த அறுத்துக்குவன். .ஐ டோண்ட் வாண்ட் டு லிவ் வித் யூ.இந்த பிச்சை போட்டு வார காதல் எனக்கு வேனாம். உங்க கூட வாழ எனக்கு பிடிக்கல. அப்படி நீங்க என்ன கட்டாயப்படுத்தினா நான் செத்துப்போறேன்"என்றால் ப்ரியா. அர்விந்தோ பதறி
"ஹேய் என்ன பன்ற.லூசா நீ.சரி நான் டிவோர்ஸ் கொடுக்கிறேன்.கத்திய முதல்ல கழுத்தில இருந்தி எடு" என்றவனை அவள்
"நீங்க இப்போ நிஷா மேல சத்தியம் பன்னுங்க.நான் எடுக்கிறேன்"என்றாள்.கண்டிப்பாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவன்
"சரி நான் நிஷா மேல சத்தியமா சொல்ரேன்.உனக்கு நான் டிவோர்ஸ் தர்றேன்.ஆனா 6 மாசத்துக்கு அப்புறமா.அது வரை நீ இந்த வீட்டுல என் கூட இருக்கனும் .அதை விட முக்கியமானது டின்னர் எத்தனை மனியானாலும் நம்ம மூனு பேரும் ஒன்னாத்தான் சாப்பிடனும்.இதுக்கு நீ சரின்னு சொன்னா நீ கேட்டத நான் செய்றேன்" என்றான்.
அவளுக்கு இது ஒன்றும் பெரிய விடயமாக தோன்றாததால் அவளும்
"சரி நீங்க சொன்ன மாதிரியே பன்னலாம்.ஆனா நான் எங்க போறேன்,யார்கூட போறேன் ,என்ன பன்றேன்னு எந்த கேள்வியும் கேட்க கூடாது "என்றவளிடம் இதன் விபரீதம் புரியாமல் அவனும் சரி என்றான் .
"இதுல இன்னொரு முக்கியமான விசயம் இது நம்ம இரண்டு பேருக்குள்ள மட்டும்தான் இருக்கனும்"என்று ப்ரியா கூற அவனும் அதை ஆமோதித்தான்.
இப்படியே ஒரு வாரம் நகர ப்ரியா நிஷாவை கொஞ்சமேனும் கவனிக்கவில்லை.இது அர்விந்துக்கு மிகவும் வேதனை அளித்தது.இப்படியே இருக்க ப்ரியா ஆபிஸ் செல்வதை முழுவதுமாக நிறுத்தினாள்.மீண்டும் அர்விந்துக்கும் ப்ரியாவுக்கும் இடையில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உணர்ந்த ரம்யா
"அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வெச்சு நீ அவள லப் பன்றதாதானே சொன்ன.இப்போ என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும். என்னடா நடக்குது உங்களுக்குள்ள.மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா.இந்த வாட்டி யாரு.வேதாளமா இல்ல வேதாளியா"என்றால் நக்கலாக.
அதற்கு அர்விந்த் "ஓய் ஸ்டாப் இட் யா.அப்படிலாம் ஒன்னுமில்லை.அப்பறமா இது பத்தி அவகிட்ட எதுவும் பேசாதா.ஓக்கே"என்று கூறி முடிக்க அறைக்குள் நுழைந்த சங்கீதா
"டேய் மாப்பிள,என்னோட ஆள தள்ளிக்கிட்டு போய்ட்ட.சரி எப்போ எங்களுக்கு குட்டி ப்ரியாவ கொடுக்க போற..ரொம்ப நாள்ளாம் வெய்ட் பன்ன முடியாது மாப்பு"என்றவளிடம்
"முதல்ல நீங்க இரண்டு பேரும் ஒழுங்கா உங்க குட்டிங்கள வெளில கொண்டு வார வழிய பாருங்க"என்றான்.
இப்போது சங்கீதாவும் ரம்யாவும் கர்ப்பமாகி இருந்தார்கள்.இருவருக்குமே முதல் குழந்தை என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தனர்.இருவரும் இப்போதெல்லாம் ஆபிசிற்கு வந்தாலும் அர்விந்த் அவர்களுக்கு பெரிதாக வேலை ஒன்றும் கொடுப்பதில்லை.
இது இப்படி இருக்க ரேனு மற்றும் அர்விந்தால் எல்லா வெலைகளையும் நிர்வகிப்பது கடினமாக இருந்தது.அர்விந்தின் சித்தி பையன் தீபக் யூ எஸ் சில் Interior Desing Masters முடித்திருந்தான்.கம்பனியில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து அவனை அவர்களின் கம்பனிக்கு இனைத்துக்கொள்ள சம்மதத்தை பெற்று ப்ரியாவிடம் கேட்க அவளோ இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர்களின் இஷ்டம் என்று கூறிவிட்டால்.
தீபக் இந்தியா வர அவனை பிக்கப் செய்வதற்கு சங்கீதாவும் அர்விந்தும் ஏர்போர்ட் சென்றனர்.5 அடி 11 அங்குல உயரத்தில் செம ஸ்மார்ட்டாக ஒருவன் வர சங்கீதா
"நம்ம கல்யானம் பன்ன அப்புறமா எங்க இருந்துதான் இப்படியெல்லாம் வாரானுங்களோ.சோ சேட் சங்கீதா" என்று தனக்கு தானே கூறிக்கொள்வது போல் அர்விந்திடம் கூறினால்.இதைக்கேட்டு புன்னகைத்த அர்விந்த்
"ஏன் சங்கி அன்னைக்குதானே ஏதோ நாந்தான் ரொம்ப அழகா க்யூட்டா இருக்கேன்னு சொன்ன.இபோ இவனா "என்றதுக்கு சங்கீதா
"டேய் நீ க்யூட்தான்.இல்லைன்னு சொல்லலயே.ஆனா அவன பாரு ஜிம் போவான் போல.பாடிய என்னமா வெச்சிருக்கான் "என்றவள்
"டேய் உனக்கு ஒன்னு தெரியுமா, காலேஜ்லயே நான் உன்ன மடக்கியிருப்பேன்.என்ன இந்த லூசு ப்ரியாதான் ஒரு நாள் நீ அவ அப்பா கூட பேசிகிட்டிருந்தப்போ மாமனாரும் மருமகனும் எப்படி பேசுராங்க பார்த்தியா என்று என்னை குழப்பிவிட்டா.நான் வேற நீயும் ரம்யாவும்தான் லவ் பன்றீங்களோன்னு நினைச்சேன்.ஆனா அந்த ஊமைக்கொட்டான்தான் உன்ன லவ் பன்னிருக்கா.ஆனா ஏன் அவ உன்ன பிடிக்காதமாதிரி நடந்துகிட்டான்னுதான் புரியலடா" என்றவளை அர்விந்த் அதிர்ச்சியாக
"என்னது ப்ரியா என்னை காலேஜ்ல இருந்தே லவ் பன்னாலா.அப்புறம் ஏன் இப்படிலாம் பிஹேவ் பன்றா.ஆரம்பத்துல வேனும்னா நான் மைதிலிய கல்யாணம் பன்னேன்னு கோவத்துல அப்படி நடந்திருக்கலாம்.ஆனா இப்போ ஏன் இப்படி நடந்துக்கிறான்னுதான் புரிய மாட்டேங்குது.சரி விட்டு பிடிப்பம்.இன்னும் 6 மாசம் இருக்கே"என்று தன மனதுக்குள் நினைத்தவனை நோக்கி வந்த அந்த அழகான ஜிம்பாடி பாய் அர்விந்திடம் வந்து அவனை அணைத்து
"ப்ரோ எப்படி இருக்கீங்க.உங்க இரண்டு கல்யானத்துக்குமே எங்கள கூப்பிடல.சோ பேட்"என்றான்.
சங்கீதாவுக்கு இவந்தான் தீபக் என்று புரிய
"டேய் இதுவாடா உன் சித்தி பையன் தீபக்.சரி.இனிமே நம்ம ஆபீஸ் பொன்னுங்க எல்லோருமே டைமுக்கு வருவாளுங்க.எவளுமே லீவே போட மாட்டா.ஓவர்டைம்கு கூட காசு வாங்காம ப்ரீயா வேலை செய்வாலுங்க" என்று தன் வழமையான காமடி சென்சில் பேசினால்.இதைக்கேட்ட அர்விந்தும் தீபக்கும் சிரிக்க உடனே தீபக்
"யூ ஆர் சங்கீ ரைட்.ச்ச்சா என்னம்மா அழகா இருக்கீங்க.உங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி அவருக்கு வேற ஒரு பொண்ன செட் பன்னிட்டு நம்ம கல்யானம் பன்னிக்கலாமா"என்றவனை அவள் அட இவன் நம்மல விட பெரிய வாயாடியா இருப்பான் போலயே என்று மனதுக்குள் என்னிக்கொண்டாள்.உடனே அர்விந்த்
"ஏய் பக்கிங்களா வந்ததுமே ஆரம்பிக்காம முதல்ல வீட்ட போய் நீ ரெஸ்ட் எடு .அப்புறமா மத்ததெல்லாம் பார்க்கலாம்.ஆ..சங்கீ இவன்கிட்ட கொஞ்சம் கவனமாவே இரு.இவன் பேசுரதுல உன்னை விட கில்லாடி.பார்த்து சூதானமா இருந்துக்க"என்றவனை தீபக்
"டேய் நான் ஒன்னும் டயர்ட்டா இல்லை.உனக்கு உன் புதுப் பொண்டாட்டிய பார்க்கனும்னா கிளம்பு.சாரி சாரி என்னையும் கூட்டிக்கிட்டு கிளம்பு .எனக்கும் அண்ணிய பார்க்கனும்" என்றான்.
தீபக் அர்விந்தைவிட ஒரு வயது இளையவன்.இருந்தாலும் அவன் அர்விந்தை அண்ணா என்றே கூப்பிடுவான்.
காத்திருக்கலாம் ,தீபக்கின் வரவு நல்லதா இல்லை கெட்டதா நம் கதையின் பாத்திரங்களுக்கு ஏற்படப்போகின்றாது என்று.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro