Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

30

முதலிரவு என்பது ஆண்களுக்கு எத்தகைய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதை விட பெண்ணுக்கே மிகவும் எதிர்பார்ப்பையும் ஒரு வித கலக்கத்தையும் கொடுக்கும்.தன் உயிரினில் பாதியாகப் போகின்றவனுக்கு தன் உடலை அவன் விரும்பும் வகையில் அவனுக்கு காணிக்கையாக்க பெண் தயாராவதென்பது ....சொல்ல வார்த்தைகள் இல்லை.பெண்களை போகப் பொருளாக பார்க்கும் ஒரு சில ஆண்கள் அவர்களின் தியாகங்களை கவனத்தில் எடுப்பதே இல்லை.பெண் என்பவள் உடலியல் சுகத்துக்கான ஒரு பண்டம் அன்று. மாறாக அவள் போற்றி ஆராதிக்கப்படவேண்டிய கடவுளின் உன்னத படைப்பு.

முதலிரவு அறைக்குள் கையில் பால் செம்புடன் உள்ளே சென்ற (எல்லா படத்துலயும் அப்டித்தான்பா காட்றாங்க.அதயே நானும் பாலோ பன்னேன்) ப்ரியா அர்விந்தின் முகத்தை கண்டவள் அபடியே ஆடிப் போனாள்.ஏனென்றால் அவன் முகம் இறுகிப்போய் இருநத்து .இது அவள் எதிர்பார்த்ததுதான் என்ற போதும் நேரடியாக அதை காணும் வேலை அவளுக்கு ஒரு வித கலக்கத்தை கொடுத்தது.என்னதான் கலக்கமாக இருந்தாலும் அவள் செய்தவற்றிட்கு பகரமாக அவன் என்ன செய்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டால்.
அவர்களின் கட்டிலில் குழந்தை நிஷா ஒரு ஓரமாக தூங்க ,ப்ரியாவோ பாலை அர்விந்திடம் நீட்டினால்.அதை வாங்கி ஒரே மிடரில் குடித்து முடித்தவன்

"இங்க பாரு ப்ரியா,முதல்ல ஒரு விசயத்த நல்லா புரிஞ்சிக்க.உன்மேல உள்ள காதல்ல ஒன்னும் நான் உன்ன கல்யானம் பன்னிக்கல்ல.நீ எதுக்கு என்ன கல்யானம் பன்னேன்னும் எனக்கு தெரியல.உனக்கு இன்னும் என்ன பழிவாங்கனும்னு நினைச்சா தாராளமா பன்னலாம்.ஆனா நான் உன்ன பழிவாங்க மாட்டேன்.அதுக்கு மாற்றமா நீ பேசினது வார்த்தைகளுக்கு காலம் பூரா உன்ன கண்ணீர் விட வைப்பேன்.அது நான் உனக்கு கொடுக்க போகும் தண்டனை.ரிவஞ்ச் வேற தண்டனை வேற." என்றவனை ஏதோ கூற அவள் வாய் எடுக்க அவளை பேச விடாமல் அவனே

"எங்கம்மா நாளன்னைக்கு அக்கா கூட யூ எஸ் போறாங்க.உனக்கு எங்க இருக்கனுமோ ஐ மீன் உன் வீட்ல இருக்கனும்னா நானும் நிஷாவும் இங்க வந்துர்ரம்.எங்க வீட்டுக்கு வரேன்னா கூடா எனக்கு ஓக்கேதான், ஆன எங்க வீட்ல வசதிகள் ரொம்ப குறைவு.அப்புறம் என்னடா இவன் அவன் வீட்ல வசதி இல்லைன்னு  நமக்காக யோசிக்கானே என்று நினைக்காத.உனக்கான தண்டனை எப்படி இருக்கும்னு உனக்கு போக போக விளங்கும்.ஆனா நான் உன்ன உடம்பால வருத்த மாட்டேன்.அப்படி பட்ட கீழ்த்தரமான ஆளு நான் இல்லை.உனக்கு மனசோட வலி என்னன்னு புரிய வைப்பேன்.அதுவும் உனக்கு அந்த வலிகள் புரிஞ்சதும் உன்கிட்ட வந்துடுவேன்னு நினைக்காத .அந்த வலிய உனக்கு உன் ஆயுசுக்கும் நான் தருவேன்.இல்ல உனக்கு டைவோர்ஸ் வேனும்னா கூட கொடுத்திட்டு நான் போய்கிட்டே இருப்பேன்" என்றான்.

ப்ரியாவோ மெதுவா "சரிங்க.உங்களுக்கு என்னை என்ன பன்னனும்னு தோனுதோ பன்னுங்க.நான் பழைய ப்ரியா இல்லை.நான் ஏன் அன்னைக்கு அப்படி பேசினேன்னு விளக்கமும் கொடுக்கவும் போறதில்ல.நான் மாறிட்டேன்.அவ்வளவுதான்.நீங்க என்ன ஏத்துக்கிரதா இருந்த ஏற்றுக்கோங்க,இல்லயா உங்களுக்கு எப்படி தோனுதோ அப்படியே பன்னுங்க.அப்புறம் நாம இனி நம்ம வீட்டுல ஐ மீன் உங்க வீட்டுல இருக்கலாம்.ஓலைக் குடிசையா இருந்தாலும் உங்க வீட்டுல இருக்குறதுதான் எனக்கு பெருமை " என்றவளை

எகத்தாளமாக பார்த்தவன் "இந்த வார்த்தைல ஜாலம் வைத்து பேசினா நா மயங்கிடுவேன்னு நினைச்சியா.அது பழைய அர்விந்த்.உன்ன மட்டுமே முதலும் கடைசியுமா காதலிச்ச அர்விந்த்.அப்போ மைதிலிய நீ என்ன மயிரா புடிங்கினன்னு உனக்கு கேட்க தோனும்.நீ கேட்டாலும் ஐ டோண்ட் கேர்.சீ இஸ் மை ப்ரெண்ட்.பெஸ்ட் ப்ரெண்ட்.என்னோட உயிர்த்தோழி "என்று ஆவேசப்பட்டு கோவத்தில் ப்ரியாவின் கழுத்தை பிடித்து நெறித்தவன்

"உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமாடி.நீ எல்லாம்..."என்றவன் அப்போதுதான் அவனின் கை அவள் கழுத்தை நெறிப்பதை உணர்ந்தவன் உடனே தன் கையை விடுவித்து

"சாரி,உன்ன தொடவே கூடாதுன்னு நினைச்சன்.கோவத்துல உன்ன தொட்டுட்டன்.உடம்பால உன்ன காயப்படுத்த மாட்டன்னு சொல்லி 10 நிமிசத்துல நான் இப்படி பன்னதுக்கு சாரி.அதுக்குனு நீ சந்தோசப்பட்டுக்காத.இதைவிட பெரிய பெரிய இடியெல்லாம் உனக்கு இருக்கு.அதுல முதலாவது என்ன தெரியுமா...நீ என் பொண்ணு பக்கத்துலயே வரக்கூடாது.அவள தூக்ககூடாது.அவகிட்ட பேச கூடாது.அப்படி ஏதும் நடந்துச்சி...அன்னைக்கு நீ சொன்ன மாதிரியே நான் மறுபடி கானாம போய்டுவேன்.யாருக்குமே சொல்லாம.அப்புறம் என்ன எங்க தேடியும் கிடைக்க மாட்டேன்" என்றவனை உன்மையில் இடி இறங்கியவளை போல கண்களில் கண்ணீர் வடிய நோக்கினாள்

"இல்லங்க என்னை என்ன வேனா பன்னுங்க ஆன நிஷாகிட்டா......."என்றவளை உதட்டில் விரல்வைத்து "ஷ்ஷ்ஷ்ஹ்ஷ் " என்றவன்

"டோண்ட் கால் ஹர் நேம்.அண்டர்ஸ்டாண்ட்"என்று கூறி படுக்கையில் இருந்த விரிப்பை கீழே போட்டு நிஷாவையும் தன் அருகில் போட்டு தூங்கினான.

ப்ரியாவுக்கோ அர்விந்த் தன்னை விரும்பி திருமணம் புரியவில்லை என்று தெரியும.எப்படியும் தன்னை மனதால் காயப்படுத்துவான் என்பதும் தெரிந்ததே.ஏனென்றால் புனிதமான அவனதும் மைதிலியினதும் நட்பை அவள் கேவலப்ப்டுத்திய விதம் அப்படி.ஆனால் இப்படி நிஷாவின் பக்கம் நெருங்க விடமாட்டான் என்று கனவிலும் நினைக்கவில்லை. இருந்தாலும் தான் செய்த தவறுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவள் மனம் தயாரிகிவிட்டது.

காதல் என்றாலே கஷ்டம்தானே.காதலில் மட்டுமே கஷ்டங்கள் கூட பசுமையான ஒரு அமைதியை கொடுக்கும்.இந்த சுகமான சுமையை அவள் ஏற்றுக்கொள்ள தயாராகிய அதே வேலை....
அவள் ஏன் அர்விந்த் மீது ஆரம்பத்தில் இருந்தே கோபமாக இருந்தால் என்பதை யாரிடமும் கூறவில்லை.ஏன் ரம்யாவிடம் கூட மைதிலியின் கடந்த காலம் தெரிந்ததை கூறியவள் அர்விந்தின் மீது அவளுக்கு வந்த வெறுப்பு எதனால என்பதை தெளிவாக கூறவில்லை.

கட்டிலில் தூங்க மனம் இன்றி அவளும் கட்டிலுக்கு அடுத்த பக்கம் போர்வையை கீழே விரித்து தூங்கும் முன் மனதுக்குள்

"அர்விந்த், நான் ஏன் உங்க மேல வெறுப்பு வர்ர மாதிரி நட்ந்துகிட்டேன்னு சொன்னா ஒரு வேலை நீங்க என்ன புரிஞிச்க்கலாம். ஆனா நான் இப்போ சொல்லமாட்டேன்.விளக்கத்தினாலோ அல்லது பரிதாபத்தினாலோ என் மீது உங்களுக்கு அன்பு வராமல் எப்போ என்னை நீங்க பழைய மாதிரி விரும்புறீங்களோ அன்னைக்கு நான் சொல்ரேன்.ஐ லவ் யூ அர்விந்த்.நீ என்னை கொன்னாலும் சரி இல்ல என் கண் முன்னாடியே இன்னொரு பொண்ணுகிட்ட போனாலும் சரி. ஐ லவ் யூ பார் எவர்.நீ அப்படிலாம் பன்ன மாட்டேன்னு தெரியும்டா என் செல்ல கண்ணா.நீ என்ன தொடமாட்டியான்னு இருந்தப்போ என் கழுத்தை புடிச்ச பாரு அது ஒன்னே போதும்டா என் ஆயுசுக்கும்.நீ என்னை என்ன வேனா பன்னிக்கோடா ,நான அத சந்தோசமா ஏத்துப்பேன், ஐ லவ் யூ அர்விந்த்" என்றவள் அப்படியே உறங்கிப் போனால்.

---------------------------------
ப்ரெண்ட்ஸ் என்னைப்பொருத்தவரை இது ஒரு மொக்க அப்டேட். பழைய மாதிரி எழுத டிரை பன்றேன். ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா படிங்க.. தவறுகளை கண்டிப்பா சுட்டிக்காட்டுங்க. நல்லா இல்லையா வோட் பன்னாதீங்க..
ஆனா கண்டிப்பா கொமண்ட்ஸ் போடுங்க. அப்போதான் எனக்கு நான் விடும் தவறுகள் புரியும்..

நன்றி

***🙂மர்யமின்👨‍👧தந்தை🙂***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro