26
ப்ரியாவின் ஆபீஸ் அறைக்கு இரண்டு கதவுகள்.ஒன்று விசிட்டர்ஸ் வருவதற்கு முன் பக்கமும் ,ரிசப்சன் ஏரியாவில் இருந்து நேரடியாக வருவதற்கு இன்னொரு கதவும் இருந்தது.ரம்யாவும் அர்விந்தும் ரம்யா நுழைந்த முன் கதவால் வெளியேற நடந்த அனைத்தையும் சங்கீதாவும் ரேனுவும் மற்ற கதவருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
ரேனு உடனே அவ்விடத்தை விட்டு தன் இருக்கைக்கு செல்ல சங்கீதாவோ புயலென ப்ரியாவின் அறைக்குள் நுழைந்தா.
"ஏண்டி உன் மனசுல நீ என்ன பெரிய உலக அழகின்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா.என்னத்த நினைச்சு நீ அப்படி பேசின.ஆமா இந்த ஆபீஸ்ல 18 பொண்ணுங்க இருந்தும் எவளாவது ஒருத்திகிட்ட அர்விந்த் தப்பா பேசிருக்கானாடி.ஆனா நீ ஏதோ மறைக்குற.இல்லன்னா எதுக்கு நீ நேத்தைக்கு அவன் தலை குனியிரத பார்த்து குரூரமா சிரிக்கனும்.நான் பார்த்தேன் ப்ரியா.நீ இல்லைன்னு பொய் சொல்லாத" என்றவளை ப்ரியா
"லூசாடி நீங்கள்ளாம்.அவன் என்னடான்னா நான் அவன காதலிக்கல்லயா என்று கேட்கிறான்.நீ என்னடான்னா அவன பார்த்து குரூரமா சிரிச்சேன்னு சொல்ர.ஆமா. உங்களுக்கு எல்லாம் என்ன பைத்தியாமா பிடிச்சிருக்கு.ஏன் இப்படி கற்பனையா யோசிக்கிறீங்க" ப்ரியா
"போதும் நிறுத்து ப்ரியா.இந்த கம்பனில யாருக்குமே ஜாப்ப ரிசைன் பன்னும் போது நோட்டீஸ் பீரியட் கொடுக்கனும்னு ரூல்ஸ் கிடையாது.ஆனா நீ அவனுக்கு 6 மாசம் போட்டிருக்க.எனக்கு அப்பவே ஏன் இவ இப்படி போட்டான்னு ஒரு சந்தேகம் வந்துச்சு.ஆனா இன்னைக்குதான் அது ஏன்னு தெளிவா தெரிஞ்சது.உனக்கு அவன கானர் பன்னனும்.அவன அங்க இங்க அசையவிடாம ஒரு கையாளாகதவனா நிக்கவைக்கனும்.அதானே" சங்கீதா
" சட் அப் சங்கீதா.நான் ஒன்னும் அவனுக்கு மட்டும் இதை செய்யல.இனிமே யார ஹயர் பன்னாலும் இதுதான் ரூல்ஸ்னு நினைச்சிருக்கேன்"என்றவளை
"அப்படியா.அப்படின்னா இந்த ரூல்சை HR லீசாக்கு அனுப்பினத காட்டு நான் நம்புறேன்.சும்மா போடி.நீ ஏதோ ப்ளான் பன்னி அவனுக்கு இப்படி பன்னிட்டு.ச்சே உன்னைப்போல ஒருத்தியோட இவ்வளவு நாளும் ப்ரெண்டா இருந்ததை நினைக்கும் போது எனக்கு அருவருப்பா இருக்குடி.அர்விந்த் டெல்லில நடந்த எல்லாமே சொன்னான்.அதெல்லாம் இல்லைன்னு சொல்ல போறியா" என்றவளுக்கு பதில் கூற ப்ரியா வாய் எடுக்க படாரென்று கதவை திறந்து உள்ளே ரேனு வந்து ப்ரியாவின் மேசையில் ஒரு கவரை தூக்கி வீசினாள்.
"சீ ப்ரியா.நான் என்னோட ஜாப்ப ரிசைன் பன்றேன்.இப்பவே.இந்த நிமிசமே.எனக்கு நீங்க 6 மாசம் நோட்டீஸ் பீரியட் எல்லாம் சொல்ல முடியாது.இப்போ நீ என்னோட முதலாளி கிடையாது.ஒன்னு சொல்ரேன் கேட்டுக்க.ஆமா அர்விந்த் என்ன பன்னான் உனக்கு.டெல்லி கூட்டி போய் தப்பா நடந்துகிட்டானா இல்ல வேற ஏதும் செஞ்சானா.உன்னோட செயற்பாடுகளால நீ அவன காதலிக்குற மாதிரி ஒரு நிலமைய ஏற்படுத்திட்டு அவன இப்படி கேவலப்டுத்துற.உனக்கு தெரியுமா அன்னைக்கு சங்கீதா வீட்டுல வெச்சி எனக்கு அவன் மேல காதல் வந்தது.என்ன உனக்கு அன்னைக்கு அடிபட்டதுல எல்லாமே தலகீழா மாறிடிச்சு.ஆனா நீ எல்லாமே ஏதோ ப்ளான் பன்னி செஞ்சிட்டு.....ஏண்டி அன்னைக்கு ஹாஸ்பிடல்ல ஏதோ உன் குழதையை கைல வெச்சிகிட்டு இருக்குற மாதிரி நிஷாவ யார்கிட்டயும் கொடுக்காம இருந்த.ஓஹ் நீ அவனையும் அவன் பொண்ணையும் ரொம்ப நேசிக்கிறேன்னு காட்ட உனக்கு ஒரு சான்ஸ்.நீ அத யூஸ் பன்னிக்கிட்டேல்ல" என்றவள் ப்ரியாவின் கண்களின் நிஷாவை பற்றி கூறியதும் லேசாக கண்ணீர் வருவதை கண்ட ரேனு
"இனியும் இப்படி நீ அழுது நடிச்சு யார ஏமாத்தப்போற.நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடி.உன்ன விட நான் பணக்காரினு உனக்கு தெரியும் .ஆனா நான் ஏன் இந்த ரிசப்சனிஸ்ட் வேலைக்கு சேர்ந்தேன்னும் உனக்கு தெரியும்.ஆனா இங்க வரும் வெளி ஆளுங்களுக்கு என்ன பத்தி தெரியாது.என் கிட்ட பேச வார ஆம்பிளைங்கள்ள பல பேரு என்ன ஒரு ரிசப்சனிஸ்ட்டா கேவலமா பார்ப்பனுங்க.ஆனா என் பேக்ரவுண்ட் பத்தி தெரியாம என்னையும் கௌரவமா பார்த்த ஒரே ஆளுடி அவன்.அவன போய் அம்மா இல்லாத பிள்ளைய காட்டி பொண்ணுங்களை வளைச்சு போடுறவன்னு சொல்லிட்டியே.ச்ச்சீ நீ எல்லாம்.....இனிமே நீயாச்சும் உன் கம்பனியாச்சும்..குட் பை " என்று கூறிவிட்டு வெளியேற திரும்பிய வேலை ப்ரியாவின் செல்போன் சினுங்க அதை எடுத்தவள் காதில் வைத்து
"சொல்லு கௌசிக்....."
.........
"இல்ல..இன்னும் அது பத்தி பேசல்ல..இங்க சின்னதொரு பிரச்சினை...."
........
"ஒன்னும் ப்ராப்ளம் இல்ல .நீ போய்ட்டு வெடிங் அன்னைக்கு முதல் நாள் வா.இட்ஸ் ஒக்கே.நான் பார்த்துக்கிறேன்"
என்றவளை சங்கீதாவும் ரேனுவும் ஏதோ ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்தனர்.
உடனே ரேனுவிடம் திரும்பிய சங்கீதா"ஹேய் லூசாடி நீ.இவளுக்காக நீ எதுக்கு உன் ஜாப்ப ரிசைன் பன்னனும்.நாளைக்கு இது இவ கம்பனி கிடையாது.அர்விந்த் இந்த கம்பனியோட ஈக்குவல் பார்ட்னர்.அதான் இவ தங்கச்சியே சொல்லிட்டாலே.ஹாஹா.பார்த்தியா கடவுளோட வேலய.இவ அவன் லைப் பார்ட்னரா வருவான்னு நம்ம எதிர்பார்த்தா கடைசில அவன் இவ கம்பனிக்கே பார்ட்னர் ஆகிட்டான்.நீ ரிசைன் பன்னிட்டு எங்கயும் போகாத.அர்விந்த் இங்க முதலாளியா வரும் போது நாம அவனுக்கு சபோர்ட்டா இருக்கனும் " என்று கூறியவளின் கருத்தை ஆமோதித்த ரேனு சரி என்று கூறிவிட்டு அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு சென்றனர்.
கொஞ்ச நேரத்தில் என்ன நடந்தது என்று புரியாமல் ப்ரியா கலங்கி நிற்க ஒரு மணி நேரத்திற்குள் தன் தங்கை,தன் ஆருயிர் தோழி ,தன்னை மிகவும் உயர்வாக கருதிய ஒருத்தி என மூவர் மேலும் தனக்கிருந்த உறவு சுக்கு நூறாகிப்போனதை என்னி வருந்தினால்.இருந்தாலும் கடைசியில் என்ன நடந்தாலும் நானா இல்ல இவங்களான்னு பார்க்கலாம் என்று மனதுக்குள் சபதமிட்டவள் தன் இருக்கையில் கண்மூடி அடுத்து வரும் நாளில் எப்படி பிரச்சினையை சமாளிப்பது என்று சிந்திக்கலானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro